என் மலர்
நீலகிரி
- நீலகிரி மாவட்டத்திற்கு அதிகனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
- நீலகிரி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் நாளை நீலகிரி, கோவை மாவட்டங்களுக்கு சென்னை வானிலை ஆய்வு மையம் அதிகனமழைக்கான ரெட் அலர்ட் விடுத்துள்ளது.
இதனையொட்டி நீலகிரி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல் நீலகிரி மாவட்டத்துக்கு அதி கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால், அனைத்து சுற்றுலாத் தலங்களும் இன்று ஒருநாள் மூடப்படும் என்று மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
- நீலகிரி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
- நீலகிரி மாவட்டத்திலுள்ள சுற்றுலா தலங்களும் நாளை ஒரு நாள் மூடப்படும் என அறிவிப்பு.
தமிழகத்தில் நாளை நீலகிரி, கோவை மாவட்டங்களில் அதிகனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
அதிகனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ள நிலையில், பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல், நீலகிரி மாவட்டத்திலுள்ள சுற்றுலா தலங்களும் நாளை ஒரு நாள் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
- ஜப்பான் நாட்டின் தேசிய மலரான செர்ரி மரங்கள், நீலகிரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் அதிகளவு காணப்படுகிறது.
- மரங்களில் செர்ரி மலர்கள் ஆகஸ்ட் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை பூத்து குலுங்கும்.
கோத்தகிரி:
சுற்றுலாவாசிகளின் சொர்க்க பூமியான நீலகிரி மாவட்டத்தில் பல்வேறு நாடுகளில் காணப்படும் மரங்கள், அரிய வகை மலர்செடிகள் மற்றும் மூலிகை செடிகள் ஆகியவை அதிகளவில் காணப்படுகிறது. ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் வெளிநாடுகளில் இருந்து பல்வேறு தாவர நாற்றுகளை நீலகிரிக்கு கொண்டு வந்து பயிரிட்டனர்.
ஐரோப்பிய நாடுகளான ஆஸ்திரேலியா, ஜப்பானில் நிலவும் காலநிலை இங்கும் நிலவுவதால், அந்த நாடுகளில் காணப்படும் மரங்கள், தாவரங்கள் மற்றும் மலர்கள் ஆகியவை அதிகளவில் நடவு செய்யப்பட்டன.
அதிலும் குறிப்பாக ஜப்பான் நாட்டின் தேசிய மலரான செர்ரி மரங்கள், நீலகிரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் அதிகளவு காணப்படுகிறது. அவை தற்போது கொத்து-கொத்தாக பூத்து குலுங்க தொடங்கி உள்ளது.
2-வது சுவிட்சர்லாந்து என்று அழைக்கப்படும் கோத்தகிரி பகுதியில் அதிகமான குளிர் நிலவுவதால், இங்கு செர்ரி வகை பூ மரங்கள் நீரோடைகள் உள்ளிட்ட பகுதிகளில் அதிகமாக காணப்படுகிறது.
நீலகிரி மாவட்டத்தில் அக்டோபர் மாதம் தொடங்கி பனிக்காலம் வரை சாலையோரங்களில் அழகாக இலைகள் இன்றி நிற்கும் மரங்களில் செர்ரி மலர்கள் ஆகஸ்ட் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை பூத்து குலுங்கும்.
கோத்தகிரி பகுதியில் செர்ரி வகை பூ மரங்கள் அதிகமாக இருப்பதால், இங்கு வரும் சுற்றுலா பயணிகள் இந்த மரங்களின் முன்பாக குடும்பத்தினருடன் நின்று செல்போனில் பரவசத்துடன் புகைப்படம் எடுத்து செல்கின்றனர்.
- பொதுமக்களை திரண்டு வந்ததை பார்த்த யானை அங்குள்ள தேயிலை தோட்டத்துக்குள் புகுந்து மீண்டும் வனத்துக்குள் சென்று விட்டது.
- காட்டு யானை மிதித்து மூதாட்டி பலியான சம்பவம், அந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்களிடம் பீதியை ஏற்படுத்தி உள்ளது.
ஊட்டி:
நீலகிரி மாவட்டம் பந்தலூர் நெல்லியாளம் டேன்டே குடியிருப்பை சேர்ந்தவர் லட்சுமி (வயது 70). இவர் இன்று அதிகாலை நேரத்தில் தண்ணீர் எடுப்பதற்காக குடத்துடன் வீட்டுக்கு வெளியே வந்தார்.
அப்போது வனத்தில் இருந்து வெளியேறிய ஒற்றை காட்டு யானை திடீரென டேன்டீ குடியிருப்புக்கு வந்தது. இதனை பார்த்து லட்சுமி அதிர்ச்சி அடைந்தார். பின்னர் அவர் யானையிடம் இருந்து தப்பிக்க ஓட்டம் பிடித்தார்.
இருந்தபோதிலும் மூதாட்டி லட்சுமியை சுற்றி வளைத்த யானை தும்பிக்கையால் பிடித்து கீழே தள்ளியது. பின்னர் அவரை சரமாரியாக மிதித்தது. இதில் படுகாயம் அடைந்த லட்சுமி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பின்னர் பெரிதாக சத்தம் எழுப்பி காட்டு யானையை விரட்டும் முயற்சிகளை மேற்கொண்டனர்.
பொதுமக்களை திரண்டு வந்ததை பார்த்த யானை அங்குள்ள தேயிலை தோட்டத்துக்குள் புகுந்து மீண்டும் வனத்துக்குள் சென்று விட்டது.
நெல்லியாளம் டேன்டீ குடியிருப்பு பகுதியில் காட்டு யானை மிதித்து மூதாட்டி பலியான சம்பவம், அந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்களிடம் பீதியை ஏற்படுத்தி உள்ளது.
தொடர்ந்து வனத்துறையினர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து யானையின் தடயங்களை ஆய்வு செய்தனர். பின்னர் மூதாட்டியை கொன்றுவிட்டு தப்பி சென்ற யானையை கண்காணிக்கும் பணிகளை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.
இதுகுறித்து வனத்துறையினர் கூறுகையில், வனத்துக்குள் உணவு பற்றாக்குறை காரணமாக காட்டு யானைகள் குடியிருப்புப் பகுதிக்கு வந்து செல்கின்றன. எனவே மலைஅடிவார பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும். நள்ளிரவிலோ, அதிகாலையிலோ வீட்டில் இருந்து வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும் என்று தெரிவித்து உளளனர்.
நெல்லியாளம் டேன்டீ குடியிருப்பு பகுதியில் மனித-விலங்கு மோதலை தடுக்கும் நடவடிக்கைகளில் வனத்துறையினர் தீவிர கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
- சாலையோர வியாபாரிகள், பாதசாரிகள் மற்றும் பள்ளி-கல்லூரி மாணவர்கள் ஆகியோர் கடும் குளிரால் பாதிக்கப்பட்டனர்.
- விடுமுறை தினமான இன்று அங்கு வந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
ஊட்டி:
நீலகிரி மாவட்டம் குன்னூா், கோத்தகிரி உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது.
இன்று நீலகிரி, கோவைக்கு ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து நீலகிரி மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது.
ஊட்டியில் நேற்று காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. பின்னர் மாலை நேரத்தில் கனமழை கொட்டி தீர்த்தது.
இதனால் ஊட்டி பஸ் நிலையம், பிங்கா் போஸ்ட், சேரிங்கிராஸ் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள சாலைகளில் மழை நீா் வெள்ளம்போல பெருக்கெடுத்து ஓடியது. இதனால் பணி முடிந்து வீடு திரும்பியவா்கள் மற்றும் பள்ளி-கல்லூரி மாணவா்கள் அவதிக்கு உள்ளாகினர்.
கோத்தகிரி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த 2 நாட்களுக்கும் மேலாக பகல் நேரங்களில் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. ஆனாலும் மாலை நேரங்களில் மிதமான குளிருடன் கூடிய காலநிலை நிலவியது.
இந்த நிலையில் நேற்று காலை முதல் வெயிலின் தாக்கம் குறைந்து காணப்பட்டது. தொடர்ந்து பிற்பகலில் கட்டபெட்டு, பெட்டட்டி, வெஸ்ட்புரூக், பாண்டியன் பார்க், ஒரசோலை, தாந்தநாடு உள்ளிட்ட பகுதிகளில் சாரல் மழை பெய்தது. இது மாலை நேரம் வரை தொடர்ந்து நீடித்தது. இதன்காரணமாக அந்த பகுதியில் கடுங்குளிர் நிலவியது. இதன் காரணமாக சாலையோர வியாபாரிகள், பாதசாரிகள் மற்றும் பள்ளி-கல்லூரி மாணவர்கள் ஆகியோர் கடும் குளிரால் பாதிக்கப்பட்டனர்.
நீலகிரி மாவட்டத்தில் பெய்து வரும் கனமழை மற்றும் பலத்த காற்று காரணமாக வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள பைன்பாரஸ்ட், அவலாஞ்சி உள்ளிட்ட சுற்றுலா தலங்கள் இன்று ஒருநாள் மூடப்படுவதாக வனத்துறை அறிவித்துள்ளது. அதன்படி அங்கு சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படவில்லை.
விடுமுறை தினமான இன்று அங்கு வந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். மற்ற சுற்றுலா தலங்கள் வழக்கம் போல திறந்து இருந்தன. அங்கு சுற்றுலா பயணிகள் குவிந்து, தங்கள் பொழுதை கழித்தனர்.
- எடக்காடு பகுதிக்கு வந்த சிறுத்தை பொதுமக்களை நேரடியாக அச்சுறுத்தவில்லை.
- காடுகளுக்கு அருகிலுள்ள சாலை வழியாக விலங்குகள் பயணிக்க வாய்ப்பு உள்ளது.
ஊட்டி:
நீலகிரி மாவட்ட வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ஒரு சிறுத்தை அதிகாலை நேரத்தில் ஊட்டி அருகே உள்ள எடக்காடு பகுதிக்கு வந்தது.
பின்னர் அங்குள்ள சாலையில் சிறிது நேரம் நடமாடியது. தொடர்ந்து அந்த சிறுத்தை சாலையோர பாலத்தில் ஏறி நடந்தபடி இரைதேடி நோட்டமிட்டது.
இதனை அந்த வழியாக சென்ற வாகனஓட்டிகள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். அவர்களில் ஒரு சிலர் ரோட்டை கடந்து பாலத்தில் அமர்ந்திருந்த சிறுத்தையை வீடியோ எடுத்து சமூகவலைதளத்தில் பகிர்ந்தனர். இந்த காட்சிகள் தற்போது வைரலாகி வருகிறது.
நீலகிரி எடக்காடு பகுதியில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக வெளியான தகவலால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.
எடக்காடு பகுதிக்கு வந்த சிறுத்தை பொதுமக்களை நேரடியாக அச்சுறுத்தவில்லை. இருப்பினும் அந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் விழிப்புடன் இருப்பது அவசியம்.
மேலும் காடுகளுக்கு அருகிலுள்ள சாலை வழியாக விலங்குகள் பயணிக்க வாய்ப்பு உள்ளது. எனவே எவரும் அருகே சென்று புகைப்படம் எடுக்க வேண்டாம்.
உடனடியாக வனத்துறையின் அவசர எண்களுக்கு தகவல் அளிக்க வேண்டும். இரவு மற்றும் அதிகாலை நேரங்களில் எடக்காடு பகுதி வழியாக செல்வோர் அதிக கவனத்துடன் பயணிக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
- மழையால் சாலைகளில் தண்ணீர் ஆறாக பெருக்கெடுத்து ஓடியது.
- கனமழையால் பொன்னானி, சோலாடி ஆறுகளுக்கு நீர்வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
ஊட்டி:
நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக அவ்வப்போது லேசான சாரல் மழை பெய்து வருகிறது. நேற்று காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது.
அதனை தொடர்ந்து சாரல் மழை பெய்ய தொடங்கியது. ஊட்டி, குன்னூர், கூடலூர், கோத்தகிரி, பந்தலூர் உள்ளிட்ட மாவட்டத்தின் அனைத்து இடங்களிலும் பரவலாக மழை பெய்தது.
குன்னூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான வெலிங்டன், ஓட்டுப்பட்டறை, அருவங்காடு, கொலகொம்பை, காட்டேரி உள்ளிட்ட பகுதிகளில் ஒரு மணி நேரத்திற்கும மேலாக இடியுடன் கூடிய கனமழை கொட்டி தீர்த்தது. இந்த மழையால் சாலைகளில் தண்ணீர் ஆறாக பெருக்கெடுத்து ஓடியது.
மழையுடன் சூறாவளி காற்றும் வீசியது. இதனால் மலைப்பாதையில் வாகன ஓட்டிகள் மிகுந்த எச்சரிக்கையுடன் வாகனங்களை இயக்கி சென்றனர். விடிய விடிய கொட்டி தீர்த்த மழையால் அடிக்கடி மின்தடையும் ஏற்பட்டது.
இதேபோல் கோத்தகிரி மற்றும் ஊட்டி சுற்றுவட்டார பகுதிகளிலும் கனமழை பெய்தது. இரவிலும் மழைநீடித்தது அங்குள்ள முக்கிய சாலைகளிலும் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கி நின்றது. இதனால் வாகன ஓட்டிகளும், பாதசாரிகளும் மிகவும் சிரமம் அடைந்தனர்.
பந்தலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள உப்பட்டி, பொன்னானி, நெலாக்கோட்டை, பிதர்காடு, பாட்டவயல் அம்பலமூலா உள்ளிட்ட பகுதிகளிலும் காற்றுடன் கூடிய பலத்த மழை பெய்தது.
இந்த மழைக்கு அய்யன்கொல்லியில் இருந்து காரக்கொல்லி வழியாக கையுன்னி செல்லும் சாலையில் மின் கம்பிகள் மீது மரம் முறிந்து விழுந்தது. இதனால் அந்த பகுதிகளில் மின்தடை ஏற்பட்டது.
மேலும் மரம் விழுந்ததால் போக்குவரத்தும் தடைபட்டது. தகவல் அறிந்ததும் மின்வாரியத்துறையினர் விரைந்து வந்து மரத்தை அகற்றி மின் கம்பிகளை சீரமைத்தனர். கனமழையால் பொன்னானி, சோலாடி ஆறுகளுக்கு நீர்வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
மழையுடன் கடும் குளிரும் நிலவுவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
- மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டி நோக்கி மலை ரெயில் புறப்பட்டு வந்தது.
- யானை தண்டவாளத்தை விட்டு நகராமல் சிறிது நேரம் அந்த பகுதியிலேயே சுற்றி திரிந்தது.
குன்னூர்:
மேட்டுப்பாளையம், சத்தியமங்கலம், சிறுமுகை ஆகிய சமவெளி பகுதிகளில் வெயிலின் தாக்கம் அதிகம் காணப்படுவதால் காட்டு யானைகள் உணவு தட்டுப்பாடு காரணமாக நீலகிரி மாவட்டத்தை நோக்கி படையெடுத்து வருகின்றன.
மேற்கு தொடர்ச்சி மலைக்கு இடம்பெயர்ந்து வந்த ஒரு காட்டு யானை குன்னூர்-மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலை, கே.என்.ஆர்., மரப்பாலம் ஆகிய பகுதிகளில் முகாமிட்டு வந்தது.
அந்த யானை இன்று காலை மரப்பாலம் பகுதிக்கு வந்தது. பின்னர் அங்குள்ள தண்டவாள பகுதியில் சுற்றி திரிந்தது. இந்நிலையில் மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டி நோக்கி மலை ரெயில் புறப்பட்டு வந்தது. அப்போது மரப்பாலம் பகுதியில் தண்டவாள பாதையில் ஒற்றை காட்டு யானை நிற்பது தெரிய வந்தது.
இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த ரெயில் பைலட் உடனடியாக பிரேக் போட்டு ரெயிலை நிறுத்தினார். அதன்பிறகும் அந்த யானை தண்டவாளத்தை விட்டு நகராமல் சிறிது நேரம் அந்த பகுதியிலேயே சுற்றி திரிந்தது. பின்னர் ஒருவழியாக மீண்டும் வனப்பகுதிக்குள் சென்றுவிட்டது. அதன்பிறகு மேட்டுப்பாளையம் மலை ரெயில் மீண்டும் புறப்பட்டு குன்னூரை நோக்கி சென்றது.
மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு செல்லும் வழியில் மரப்பாலம் பகுதி தண்டவாளத்தில் நின்றிருந்த காட்டு யானையை சுற்றுலா பயணிகள் ஆர்வம் கலந்த அதிர்ச்சியுடன் கண்டு மகிழ்ந்தனர்.
- ஊட்டி ஊரக போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயா தலைமையிலான போலீசார் இதுதொடர்பாக விசாரித்தனர்.
- கடந்த ஆண்டு ஜூன் மாதம் முதல் தான் ஊட்டி அருகே உள்ள அரசு பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வந்துள்ளார்.
ஊட்டி:
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள ஹோப் பார்க் பகுதியில் வசித்து வந்தவர் செந்தில்குமார் (வயது50). இவர் ஊட்டி அருகே உள்ள ஒரு அரசு பள்ளியில் அறிவியல் ஆசிரியராக வேலை பார்த்து வந்தார்.
அந்த பள்ளியில் 6-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு இவர் அறிவியல் வகுப்பு எடுத்து வந்தார்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு அந்த பள்ளியில் பாலியல் கல்வி குறித்து போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். அப்போது உடலில் நல்ல தொடுதல், கெட்ட தொடுதல் குறித்து மாணவிகளுக்கு விளக்கம் அளித்தனர்.
விழிப்புணர்வு பயிற்சி வகுப்பு முடிந்ததும் அந்த பள்ளியில் 6-ம் வகுப்பு படிக்கும் 12 வயது மாணவி ஒருவர் போலீசாரிடம், எங்கள் பள்ளியில் அறிவியல் ஆசிரியாக வேலை பார்த்து வரும் செந்தில்குமார் என்பவர் உடலில் தொடக்கூடாத இடங்களில் தொட்டு பாலியல் தொல்லை கொடுத்ததாக தெரிவித்தார்.
அவர் இதுபோன்று பல மாணவிகளையும் தொடக்கூடாத இடங்களில் தொட்டு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். ஒரு சில நேரங்களில் மாணவிகளுக்கு முத்தம் கொடுத்ததாகவும் கூறப்படுகிறது.
அந்த பள்ளியில் படித்த 21 மாணவிகள் தங்களுக்கு அறிவியல் ஆசிரியர் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக புகார் அளித்தனர்.
இதனால் அதிர்ச்சியான போலீசார் இதுகுறித்து உயர் அதிகாரிகளுக்கும், குழந்தைகள் நலப்பிரிவு அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து ஊட்டி ஊரக போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயா தலைமையிலான போலீசார் இதுதொடர்பாக விசாரித்தனர்.
விசாரணையில் முடிவில் ஆசிரியர் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது உறுதியானது. இதையடுத்து அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஊட்டியில் உள்ள கிளை ஜெயிலில் அடைத்தனர்.
தொடர்ந்து போலீசார் மேற்கொண்ட விசாரணையில், செந்தில்குமார் கடந்த 23 ஆண்டுகளாக தமிழகத்தின் பல்வேறு இடங்களிலும் அறிவியல் ஆசிரியராக பணிபுரிந்துள்ளார்.
கடந்த ஆண்டு ஜூன் மாதம் முதல் தான் ஊட்டி அருகே உள்ள அரசு பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வந்துள்ளார்.
மேலும் இதுதொடர்பாக சில மாணவிகள் ஏற்கனவே இவர் மீது புகார் அளிக்க முன்வந்துள்ளனர். இதனை அறிந்த அவர் அந்த மாணவிகளை மிரட்டியதால் அவர்கள் புகார் கொடுக்க முன்வரவில்லை என்பதும் விசாரணையில் தெரியவந்தது.
இவர் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் பணியாற்றி உள்ளதால், முன்பு பணியாற்றிய பள்ளிகளிலும் மாணவிகளுக்கு இவர் பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளரா? என்பது குறித்து விசாரணை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. போலீசார் மற்றும் குழந்தைகள் நலப்பிரிவு அதிகாரிகள் குழுவினர் இணைந்து இந்த விசாரணையை மேற்கொள்ள உள்ளனர்.
பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக ஆசிரியர் கைது செய்யப்பட்ட சம்பவம் நீலகிரி மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- நிழற்குடைக்குள் நின்றிருந்த கரடி திடீரென சாலையில் வேகமாக ஓடி வந்தது.
- கரடி சர்வசாதாரணமாக சாலையில் ஓடுவதும், நடப்பதுமாக இருந்தது.
குன்னூர்:
குன்னூர் அருகே வெலிங்டன் ராணுவ முகாம் பகுதி உள்ளது. இங்கு ஏராளமானோர் வசித்து வருகின்றனர். நேற்று இரவு வனத்தை விட்டு வெளியேறிய கரடி ஒன்று ராணுவ முகாம் பகுதியில் உள்ள குடியிருப்புக்குள் வந்தது.
ஊருக்குள் வந்த கரடி, அந்த பகுதியில் உள்ள சாலையில் சிறிது நேரம் நடந்து சென்றது. சில சமயங்களில் சாலையில் அங்கும் இங்குமாக ஓடியபடி இருந்த கரடி அங்குள்ள நிழற்குடைக்குள் சென்று நின்று கொண்டது.
அந்த சமயம் அவ்வழியாக வாகனங்கள் சென்றன. ஆனால் கரடி சர்வசாதாரணமாக சாலையில் ஓடுவதும், நடப்பதுமாக இருந்தது. கரடி நின்றதை பார்த்த வாகன ஓட்டிகள் மிகுந்த கவனத்துடன் அந்த சாலையை கடந்து சென்றனர்.
நிழற்குடைக்குள் நின்றிருந்த கரடி திடீரென சாலையில் வேகமாக ஓடி வந்தது. அங்கு ஒரு நுழைவு வாயில் அருகே வந்ததும் நின்று விட்டது. அந்த நுழைவு வாயில் திறந்த நிலையில் கிடந்தது.
அதன் அருகே வந்த கரடி, நுழைவாயில் கதவின் மீது ஏறி, இறங்கி விளையாடி கொண்டிருந்தது.
சிறிது நேரம் கரடி இதுபோன்று செய்து கொண்டிருந்தது. பின்னர் கதவை திறந்து கொண்டு வெளியே வந்து, அங்கிருந்து நகர்ந்து சென்றது.
குழந்தைகள் போல கரடி கேட்டின் மீது ஏறி, இறங்கி விளையாடியதை அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் வியப்புடன் பார்த்து தங்களது செல்போனிலும் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டனர். இந்த காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
- ஊட்டி, மஞ்சூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மழை பெய்ய தொடங்கியது.
- வாகன ஓட்டிகள் தங்கள் வாகனத்தின் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி செல்கின்றனர்.
ஊட்டி:
நீலகிரி மாவட்டத்தில் கடந்த மாதம் பலத்த காற்றுடன் கனமழை கொட்டி தீர்த்தது. இந்த மழையால் பல இடங்களில் மண்சரிவு மற்றும் மரங்களும் முறிந்து விழுந்தன.
அதன்பின்னர் சற்று மழை ஓய்ந்திருந்தது. கடந்தவாரம் முதல் மீண்டும் மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. ஊட்டி, கூடலூர், மஞ்சூர் உள்ளிட்ட பகுதிகளில் நேற்றுமுன்தினம் முதல் பலத்த சூறாவளி காற்று வீசுகிறது.
நேற்று ஊட்டி, மஞ்சூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மழை பெய்ய தொடங்கியது. சாரல் மழையாக தொடங்கி, பலத்த மழையாக வெளுத்து வாங்கியது. மழையுடன் பலத்த காற்றும் வீசியது. விடிய, விடிய கொட்டி தீர்த்த கனமழையால் நகரின் முக்கிய சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கி நின்றது.
இன்று காலையும் ஊட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மழை பெய்தது. மழையால் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ, மாணவிகள், அதிகாலையில் வேலைக்கு செல்வோர், தேயிலை தொழிலாளர்கள் பெரும் அவதியடைந்துள்ளனர்.
மழையுடன் கடும் குளிரும் நிலவுகிறது. இதனால் மாணவர்கள் சுவர்ட்டர் அணிந்தபடி பள்ளிக்கு சென்றதை காண முடிந்தது. ஆட்டோ, வேன் உள்ளிட்ட வாகன டிரைவர்கள் ஆங்காங்கே நெருப்பு மூட்டி குளிர் காய்ந்தனர்.
இரவில் மட்டும் அல்லாமல் பகலிலேயே குளிர் காணப்பட்டதால் நேற்று விடுமுறை தினம் என்றாலும் பஜார் பகுதிகளில் மக்கள் நடமாட்டம் வெகுவாக குறைந்து காணப்பட்டது. மழை காரணமாக கடும் பனிமூட்டம் காணப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் தங்கள் வாகனத்தின் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி செல்கின்றனர்.
கோவை மாவட்டத்தில் காலை முதல் மிதமான வெயில் காணப்பட்டது. மதியத்திற்கு பிறகு காலநிலை அப்படியே மாறி லேசான சாரல் மழை பெய்தது. அதனை தொடர்ந்து நள்ளிரவில் காந்திபுரம், அண்ணாசிலை, ரெயில் நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்தது. மழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான காலநிலை உள்ளது. காலையிலும் அவ்வப்போது சாரல் மழை பெய்தது.
- யானைகள் தொரப்பள்ளி-கூடலூர் சாலைக்கு வந்தன.
- போக்குவரத்து சிறிது நேரம் பாதிக்கப்பட்டது.போக்குவரத்து சிறிது நேரம் பாதிக்கப்பட்டது.
ஊட்டி:
நீலகிரி மாவட்டத்தில் சமவெளிப்பகுதியில் இருந்து காட்டு யானைகள் கூட்டம் மேற்குதொடர்ச்சி மலைக்கு இடம்பெயர்ந்து வருகின்றன.
இந்த நிலையில் 3 யானைகள் தொரப்பள்ளி–-கூடலூர் சாலைக்கு வந்தன.
இதனை முன்கூட்டியே கண்டறிந்த வனத்துறையினர் உடனடியாக சம்பவ இடத்துக்கு வந்தனர். பின்னர் சாலையின் இருபுறமும் போக்குவரத்தை நிறுத்தி காட்டு யானைகள் ரோட்டை கடப்பதற்கு வழிவகைகளை ஏற்படுத்தி கொடுத்தனர்.
தொடர்ந்து தொரப்பள்ளி–-கூடலூர் ரோட்டில் 3 யானைகளும் ஒன்றன்பின் ஒன்றாக சாலையை கடந்து வனத்துக்குள் சென்றன. இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து சிறிது நேரம் பாதிக்கப்பட்டது.
இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் கூறுகையில், "காடுகளை ஒட்டிய பகுதிகளில் யானைகளின் நடமாட்டம் மற்றும் சாலையை கடப்பது இயல்பானவை.
ஆனால் காட்டு யானைகள் சாலையை கடக்கும்போது பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்படுவதாக தெரிவித்து உள்ளனர்.






