என் மலர்
நீலகிரி
- கும்கி யானை, தமிழகம் மட்டுமின்றி கேரளா, ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில், காட்டு யானைகளை பிடிக்கும் பணியில் சிறப்பாக செயல்பட்டுள்ளது.
- வளர்ப்பு யானைகள் ஓய்வு பெறுவது, வனத்துறையை சோகமடைய செய்துள்ளது.
ஊட்டி:
நீலகிரி மாவட்டம், முதுமலை, தெப்பக்காடு, அபயாரண்யம் முகாம்களில், 28 வளர்ப்பு யானைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன.
தற்போது, 58 வயது பூர்த்தி அடைந்த கும்கி யானை மற்றும் தந்தம் இல்லாத ஆண் யானை (மக்னா) மூர்த்தி ஆகியவை இம்மாதத்துடன் பணி ஓய்வு பெறுகின்றன.
கும்கி யானை, தமிழகம் மட்டுமின்றி கேரளா, ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில், காட்டு யானைகளை பிடிக்கும் பணியில் சிறப்பாக செயல்பட்டுள்ளது. ஆந்திரா அரசு விருது வழங்கி கவுரவித்து உள்ளது. மக்னா யானை மூர்த்தியை, 1998 ஜூலை 12-ந் தேதி, கூடலுார் புளியாம்பாறை அருகே மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர்.
இந்த யானை, தமிழக, கேரளா பகுதியில் 22க்கும் மேற்பட்டவர்களை தாக்கி கொன்றுள்ளது. இதை 35 வயதில் பிடித்து, வளர்ப்பு யானையாக மாற்றினர். முகாமில் சாதுவாக உலா வருகிறது. இந்த வளர்ப்பு யானைகள் ஓய்வு பெறுவது, வனத்துறையை சோகமடைய செய்துள்ளது.
வனத்துறையினர் கூறுகையில், 'ஒய்வு பெற்ற பின், இவை எவ்வித பணிகளிலும் ஈடுபடாது. வனத்துறை சார்பில், அதற்கான உணவுகள் வழக்கம் போல் வழங்கப்படும்' என்றனர்.
- இந்த சாலையை பொதுமக்கள் மட்டுமின்றி, தேயிலை தோட்ட தொழிலாளர்களும் பயன்படுத்தி வருகின்றனர்.
- அத்தியாவசிய பொருட்களை ஏற்றி செல்லும் வாகனங்கள், பிற வாகனங்கள் பழுதடைந்த சாலையின் நடுவே நின்று விடுகிறது.
பந்தலூர்
பந்தலூர் அருகே மழவன் சேரம்பாடியில் இருந்து கொளப்பள்ளி, டேன்டீ ரேஞ்ச் எண்.2, காவயல் வழியாக புஞ்சகொல்லிக்கு சாலை செல்கிறது. இந்த சாலையை பொதுமக்கள் மட்டுமின்றி, தேயிலை தோட்ட தொழிலாளர்களும் பயன்படுத்தி வருகின்றனர். அப்பகுதி மக்கள் அத்தியாவசிய பொருட்கள் வாங்கவும், ரேஷன் கடைக்கு வந்து செல்லவும் மழவன் சேரம்பாடி வழியாக கொளப்பள்ளி, குறிஞ்சி நகர், அய்யன்கொல்லிக்கு வந்து செல்கிறார்கள்.
இந்தநிலையில் மழவன் சேரம்பாடி முதல் புஞ்சகொல்லி வரை சாலை பெயர்ந்து குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது. தற்போது பெய்து வரும் மழையால் குழிகளில் தண்ணீர் தேங்கி, குளம்போல் காணப்படுகிறது. இதனால் அவசர தேவைக்கு வாகனங்கள் செல்ல முடியாத நிலை உள்ளது. மேலும் அத்தியாவசிய பொருட்களை ஏற்றி செல்லும் வாகனங்கள், பிற வாகனங்கள் பழுதடைந்த சாலையின் நடுவே நின்று விடுகிறது.
இந்த சாலையை சீரமைக்க கோரி பொதுமக்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்தனர். இருப்பினும், இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் பள்ளி மாணவ-மாணவிகள் நடந்து செல்ல முடியாமல் அவதியடைந்து வருகின்றனர். இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது:-
மழவன் சேரம்பாடியில் இருந்து புஞ்சகொல்லி வரை செல்லும் சாலையில் காட்டு யானைகள் நடமாட்டம் உள்ளது. சாலை பழுதடைந்து உள்ளதால், யானைகள் துரத்தினால் கூட ஓட முடியாத அவல நிலை இருக்கிறது. குழிகளில் தண்ணீர் நிரம்பி இருப்பதால், மேலும் குழிகள் பெரிதாகி வருகிறது. எனவே, குண்டும், குழியுமான சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
- மலைச்சரிவுகளில் தோட்டக்கலை பயிர்களை அதிகளவில் பயிரிட உதவுகிறது.
- There is a risk of soil erosion in an area of 68 thousand hectares due to rainfall.
ஊட்டி:
நீலகிரி மாவட்டம் ஊட்டியில் உள்ள இந்திய மண் மற்றும் நீர் வளப்பாதுகாப்பு நிறுவனம் சார்பில், விவசாயிகளுக்கு 'மலைப்பகுதிகளில் மண் அரிப்பை தடுக்கும் விவசாய முறைகள்' குறித்த பயிற்சி முகாம் நேற்று நடந்தது. முகாமில் முதன்மை விஞ்ஞானி மணிவண்ணன், விவசாயிகளுக்கு மலைப்பகுதிகளில் மண் அரிப்பை தடுக்கும் விவசாய முறைகள் குறித்து விளக்கம் அளித்தார். தொடர்ந்து அவர் பேசும்போது கூறியதாவது:-
நீலகிரியில் மண் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல் காய்கறி சாகுபடி செய்ததால், மாவட்டத்தில் சராசரியாக 20 முதல் 40 டன் மண் இழப்பு ஏற்பட்டு உள்ளது. இங்கு நிலவும் சூழல், மலைச்சரிவுகளில் தோட்டக்கலை பயிர்களை அதிகளவில் பயிரிட உதவுகிறது. காலநிலை மாற்றத்தின் தாக்கம் காரணமாக ஒழுங்கற்ற மழைப்பொழிவு உள்ளதுடன், அபாயகரமான வகையில் மண் அரிப்பு ஏற்படுகிறது.
அதிக மழைப்பொழிவு நீலகிரியில் அதிக மழைப்பொழிவால் 68 ஆயிரம் ஹெக்டர் பரப்பளவில் மண் அரிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. இதனால் வளமான மண் இழப்பு மற்றும் மகசூல் குறைவு ஏற்படுகிறது. வடிகால் வாய்க்கால் மற்றும் நீர்நிலைகளில் வண்டல் மண் படிகிறது. இதனால் நீர்நிலைகளின் கொள்ளளவு குறைவதோடு, வெள்ளம் ஏற்படுகிறது.
இந்திய மண் மற்றும் நீர் பாதுகாப்பு நிறுவனம் மூலம் நடத்தப்பட்ட ஆய்வுப்படி, படிமட்டங்கள் முறையில் உருளைக்கிழங்கு பயிரிடப்பட்டு விளைச்சலை அதிகரித்து உள்ளது. மேலும் 50 சதவீதம் நீரோட்டம் குறைந்து, 98 சதவீதம் மண் இழப்பும் குறைந்து உள்ளது. எனவே, விவசாயத்தில் மண் அரிப்பு பிரச்சினை மற்றும் கட்டுப்பாட்டு நடைமுறைகள் குறித்து விவசாயிகள் இடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவது அவசியம். இவ்வாறு அவர் கூறினார். முகாமில் 375 விவசாயிகளுக்கு 15 சுற்றுகளில் பயிற்சி அளிக்கப்படுகிறது.
- பா்லியாறு போன்ற பகுதிகளில் அரசு மற்றும் தனியாருக்கு சொந்தமான தோட்டங்கள் உள்ளது.
- மேட்டுப்பாளையம் மலைப் பாதையில் அவ்வப்போது யானைகள் கூட்டம் வந்து செல்கின்றன.
ஊட்டி
நீலகிரி மாவட்டம், குன்னூா் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளான ஹில்குரோவ், குரும்பாடி, பா்லியாறு போன்ற பகுதிகளில் அரசு மற்றும் தனியாருக்கு சொந்தமான தோட்டங்கள் உள்ளது.
இங்கு தோட்டங்களில் உள்ள பலா மரங்களில் பலாப் பழங்கள் விளைந்துள்ளன. இவற்றை உண்பதற்காக குன்னூா்- மேட்டுப்பாளையம் மலைப் பாதையில் அவ்வப்போது யானைகள் கூட்டம் வந்து செல்கின்றன.
எனவே, சுற்றுலா வாகன ஓட்டிகள், இருசக்கர வாகனத்தில் செல்பவா்கள் மிகவும் கவனமுடன் இந்த சாலையில் பயணிக்க வேண்டும் என்று குன்னூா் வனத் துறையினா் அறிவுறுத்தியுள்ளனா்.
- யானைகள், புலி, சிறுத்தை, காட்டெருமை, கரடி போன்ற வன விலங்குகளின் எண்ணிக்கை தற்போது அதிகரித்துள்ளது.
- புலிகளும் அடிக்கடி சுற்றுலா பயணிகள் கண்களில் படுகிறது.
ஊட்டி:
நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்திற்குட்பட்ட மசினகுடி, பொக்கா–புரம்,சிங்காரா, மாயார், தெப்பக்காடு, கார்குடி போன்ற பகுதிகளில் காட்டு யானைகள், புலி, சிறுத்தை, காட்டெருமை, கரடி போன்ற வன விலங்குகளின் எண்ணிக்கை தற்போது அதிகரித்துள்ளது.
இப்பகுதிகளில் அவ்வப்போது மழை பெய்து வருவதால், முதுமலை புலிகள் காப்பகம் தற்போது பசுமையாக காட்சியளிக்கிறது.இதனால், சாலை–யோரங்களிலேயே வனவிலங்குகள் அதிகளவு வலம் வருகின்றன. குறிப்பக, மசினகுடி - தெப்பக்காடு சாலை, தெப்பக்காடு -கூடலூர் சாலையில் காட்டு யானைகள் அதிகளவு வலம் வருகின்றன.
அதேபோல், புலிகளும் அடிக்கடி சுற்றுலா பயணிகள் கண்களில் படுகிறது. இது சுற்றுலா பயணிகளை ஆச்சிரியத்திற்குள்ளாக்கி வருகிறது.
கடந்த மாதம் பெய்த மழையால் தற்போது மசினகுடி மற்றும் முதுமலை வனங்கள் பச்சை பசேல் என காட்சியளிக்கிறது. இதனால், யானைகள், மான்கள் கூட்டம் கூட்டமாக வலம் வருகின்றன. குறிப்பாக, மசினகுடி - தெப்பக்காடு சாலையில் அதிகளவு மான் கூட்டங்கள் காணப்படுகிறது. அதேபோல், யானைகளும் அடிக்கடி வலம் வருகின்றன. இவைகளை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து செல்வது மட்டுமின்றி, வாகனங்களில் இருந்தவாறு புகைப்படமும் எடுத்துச் செல்கின்றனர்.
- நாடு முழுவதும் உள்ள வன உயிரின காப்பகத்தின் கரையோரம் இருந்து 1 கிலோ மீட்டர் தூரம் சூழல் உணர்திறன் மண்டலமாக அறிவித்தது.
- உண்ணாவிரத போராட்டத்தையொட்டி அங்கு பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.
ஊட்டி
நாடு முழுவதும் உள்ள வன உயிரின காப்பகத்தின் கரையோரம் இருந்து 1 கிலோ மீட்டர் தூரம் சூழல் உணர்திறன் மண்டலமாக அறிவித்து நிரந்தர கட்டிடங்கள் கட்ட உச்ச நீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பித்தது. இது தொடர்பாக மாநில அரசுகள் 3 மாதத்தில் அறிக்கைகள் சமர்ப்பிக்கும் படி தெரிவித்தது.
இந்த நிலையில் முதுமலை புலிகள் காப்பகத்தின் கரையோரம் உள்ள மசினகுடி, ஸ்ரீமதுரை, நெலாக்கோட்டை ஊராட்சிகளில் வசிக்கும் மக்கள் இத்திட்டத்தால் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
சூழல் உணர்திறன் மண்டலத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தும், மாநில அரசு உடனடியாக மேல்முறையீடு செய்ய வலியுறுத்தி கூடலூர், பந்தலூர் தாலுகாக்களில் வியாபாரிகள் தங்களது கடைகளில் கருப்புக் கொடிகளை கட்டி போராட்டம் நடத்தினர்.
இந்த நிலையில் தமிழக அரசு மற்றும் மத்திய அரசு ஆகியவற்றின் கவனத்தை ஈர்க்கும் வகையில் இன்று கூடலூர் காந்தி மைதானத்தில் வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்ற உண்ணாவிரத போராட்டம் நடந்தது.இதில் திரளானவனர்கள் பங்கேற்றனர்.இதேபோல் இப்பிரச்னையால் பெரிதும் பாதிக்கப்பட்ட முதுமலை புலிகள் காப்பக எல்லையில் உள்ள ஸ்ரீமதுரை ஊராட்சி கிராம மக்கள் ஊராட்சி அலுவலகம் முன்பு தங்களது உண்ணாவிரத போராட்டம் நடத்தினர்.
உண்ணாவிரத போராட்டத்தையொட்டி அங்கு பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.
இதுகுறித்து போராட்டத்தில் ஈடுபட்ட–வர்கள் கூறுகையில்,சூழல் உணர் திறன் மண்டலத்தால் ஆயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்படுவார்கள். இப்பகுதி மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் வகையில் மாநில அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
- கோத்தகிரி, கொடநாடு, கீழ் கோத்தகிரி, அரவேணு, சோலூர் மட்டம் உள்ளிட்ட பகுதிகளிலும் மழை கொட்டியது.
- சிங்காநல்லூர், ராமநாதபுரம், கவுண்டம்பாளையம், பாப்பநாயக்கன் பாளையம், உக்கடம் உள்ளிட்ட பகுதிகளில் சாரல் மழை பெய்தது.
குன்னூர்:
நீலகிரி மாவட்டம் குன்னூர் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் கடந்த சில தினங்களாகவே பகல் நேரங்களில் வெயிலும், இரவு நேரத்திலும் சாரல் மழையும் பெய்தது. அவ்வப்போது பலத்த மழையும் பெய்து வந்தது. இதனால் அங்கு இதமான காலநிலை நிலவியது.
நேற்று காலை மிதமான வெயில் அடித்தது. இரவில் குன்னூர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளான ஒட்டுப்பட்டறை, வண்டிச்சோலை, வெலிங்டன், அருவங்காடு உள்ளிட்ட பகுதிகளில் பலத்த மழை பெய்தது. இரவு தொடங்கி இன்று அதிகாலை வரை விடிய விடிய கனமழை கொட்டி தீர்த்தது.
இதன் காரணமாக குன்னூர் பஸ் நிலைய சாலை, ஊட்டி-குன்னூர் சாலை, ஊட்டி-மேட்டுப்பாளையம் சாலை உள்பட நகரில் உள்ள முக்கிய சாலைகள் அனைத்திலும் தண்ணீர் ஆறாக பெருக்கெடுத்து ஓடியது.
குன்னூர் பஸ் நிலைய பகுதி, வெலிங்டன், ஊட்டி சாலை, பிளாக் பிரிட்ஜ் பகுதிகளில் சாலை பணி நடந்து வருகிறது.
நேற்றிரவு பெய்த மழையால் அந்த பகுதியில் உள்ள சாலைகளில் பள்ளம் ஏற்பட்டு தண்ணீர் தேங்கியது. இதேபோல் மேல்குன்னூர், ஒட்டுப்பட்டறை பகுதிகளிலும் சாலைகளில் பள்ளம் ஏற்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமம் அடைந்தனர்.
கோத்தகிரி, கொடநாடு, கீழ் கோத்தகிரி, அரவேணு, சோலூர் மட்டம் உள்ளிட்ட பகுதிகளிலும் மழை கொட்டியது. ஊட்டி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் லேசான சாரல் மழை பெய்தது.
நீலகிரியில் தற்போது வானம் மப்பும் மந்தாரமுமாக காட்சியளிக்கிறது. பனிமூட்டம் மற்றும் மேக மூட்டத்துடன் இதமான காலநிலை நிலவி வருகிறது. வாகன ஓட்டிகள் முகப்பு விளக்கை எரியவிட்டபடியே வாகனத்தை ஓட்டி செல்கின்றனர். மழை பெய்வதால் கடும் குளிரும் நிலவுகிறது.
கோவை மாநகரில் நேற்று மதியத்திற்கு பிறகு வானத்தில் கருமேகங்கள் சூழ்ந்து மழை பெய்வது போன்றே காட்சி அளித்தது. அத்துடன் குளிர்ந்த காற்றும் வீசியதால் ஒரு ரம்மியமான காலநிலை நிலவியது.
மாலையில் சிங்காநல்லூர், ராமநாதபுரம், கவுண்டம்பாளையம், பாப்பநாயக்கன் பாளையம், உக்கடம் உள்ளிட்ட பகுதிகளில் சாரல் மழை பெய்தது.
நள்ளிரவில் ரெயில் நிலையம், அண்ணாசாலை, காந்திபுரம், டவுன்ஹால் உள்பட மாநகரில் பல இடங்களில் பலத்த மழை பெய்தது. 2 மணி நேரத்திற்கும் மேலாக இந்த மழை நீடித்தது. இதன் காரணமாக அவினாசி சாலை, திருச்சி சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.
மழைக்கு அவினாசி சாலையில் உள்ள ரெயில்வே பாலத்தின் கீழ் பகுதியில் தண்ணீர் குளம்போல் தேங்கி நின்றது. இதனால் அந்த வழியாக வாகனங்கள் செல்வது நிறுத்தப்பட்டது.
தண்ணீர் தேங்கிய தகவல் அறிந்ததும் கோவை மாநகராட்சி கமிஷனர் பிரதாப் தலைமையிலான அதிகாரிகள் சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டனர். பின்னர் ஊழியர்கள் வரவழைக்கப்பட்டு, அதிநவீன எந்திரத்தின் மூலம் தண்ணீர் வெளியேற்றப்பட்டது.
இதேபோல் லங்கா கார்னர் பாலம், வடகோவை மேம்பால பகுதிகளிலும் தண்ணீர் தேங்கி நின்றது. இதனால் அந்த வழியாக வாகனங்கள் செல்வதில் சிரமம் ஏற்பட்டது. உடனடியாக மாநகராட்சி ஊழியர்கள் விரைந்து, வந்து தண்ணீரை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
- மீன் மற்றும் கோழி இறைச்சி புதியதாகவும், தரமாகவும் உள்ளதா? என ஆய்வு செய்தனர்.
- தமிழக அரசால் தடை செய்யப்பட்ட சுமார் அரைக்கிலோ புகையிலைப் பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
ஊட்டி
நீலகிரி மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் டாக்டர் சுரேஷ், உணவு பாதுகாப்பு அலுவலர் சிவராஜ், மாவட்ட குழு உறுப்பினர் ராஜன் மற்றும் அலுவலர்கள் கோத்தகிரி மார்க்கெட் பகுதியில் உள்ள மீன் மற்றும் கோழி இறைச்சி கடைகளுக்கு சென்று அங்கு விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ள மீன் மற்றும் கோழி இறைச்சி புதியதாகவும், தரமாகவும் உள்ளதா? பாதுகாப்பான முறையில் சுகாதாரமாக வைக்கப்பட்டுள்ளதா என ஆய்வு செய்தனர்.
தொடர்ந்து மார்க்கெட், பஸ்நிலையம், ராம்சந்த் சதுக்கம், காமராஜர் சதுக்கம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள மளிகைக்கடை மற்றும் பேக்கரிகளில், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பாட்டில்களில் குளிர்பானங்கள், குடிநீர் விற்பனை செய்யப்படுகிறதா, உணவுப் பொருட்களின் தயாரிப்பு தேதி மற்றும் காலாவதியாகும் தேதி அச்சிடப்பட்டு உள்ளதா? உரிய தரம் மற்றும் நிர்ணயிக்கப்பட்ட எடையுடன் பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா என சோதனை மேற்கொண்டனர்.
இதேபோல் ஜலீல் என்பவரது பெட்டிக்கடையில் விற்பனை செய்வதற்காக வைக்கப்பட்டிருந்த தமிழக அரசால் தடை செய்யப்பட்ட சுமார் அரைக்கிலோ புகையிலைப் பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அதைப் பறிமுதல் செய்த அதிகாரிகள் கடையின் உரிமையாளருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் வித்திதனர்.
அதே பகுதியில் உள்ள மற்றொரு கடையில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கவர்களை வைத்திருந்த கடையின் உரிமையாளருக்கு ரூ.2 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், உணவு பொருட்கள் விற்பனை செய்யும் அனைத்து கடை உரிமையாளர்களும் உணவு பாதுகாப்பு உரிமம் கட்டாயம் பெற வேண்டும்.
அவ்வாறு உரிமம் இல்லாமல் உணவுப் பொருட்கள் விற்பனை செய்வது கண்டறியப்பட்டால் அவர்களுக்கு 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தனர்.
- கூடலூரில் கடைகள், வணிக நிறுவனங்களில் வியாழக்கிழமை கருப்புக் கொடியேற்றப்பட்டது.
- முதுமலை புலிகள் காப்பக வெளிமண்டல பரப்பை விரிவாக்கம் செய்ய உச்ச நீதிமன்றம் கொடுத்திருந்த கெடு முடியும் நிலையில் உள்ளது
ஊட்டி
முதுமலைப் புலிகள் காப்பக வெளிமண்டல பரப்பை விரிவாக்கம் செய்ய உச்ச நீதிமன்றம் கொடுத்திருந்த கெடு முடியும் நிலையில் உள்ளது.
இதற்கு தமிழக அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என்று வெள்ளை அறிக்கை வெளியிடவேண்டும் என்று வலியுறுத்தி கூடலூா் சட்டப் பேரவை தொகுதி வணிகா்கள் சங்கத்தின் கூட்டமைப்பு சாா்பில் கடைகளில் கருப்புக் கொடி ஏற்றப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
அதனடிப்படையில் கடைகளில் கருப்புக் கொடியேற்றப்பட்டது. அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து வணிகா் சங்கங்களின் கூட்டமைப்பை கூட்டி முடிவெடுக்கப்படும் என்று நிா்வாகிகள் தெரிவித்தனா். மசினகுடி பகுதியில் வாடகை வாகனங்கள் மற்றும் ஜீப்புகளிலும் கருப்புக்கொடி கட்டப்பட்டிருந்தன
- 17 வயது சிறுமியை கர்ப்பமாக்கியதாக போலீஸ் நிலையத்தில் பெற்றோர் தரப்பில் புகார் செய்யப்பட்டது.
- சிறுமியை காதலிப்பதாக கூறி ஏமாற்றி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்
ஊட்டி
கூடலூர் அருகே மசினகுடி பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமியை கர்ப்பமாக்கியதாக கூடலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் பெற்றோர் தரப்பில் புகார் செய்யப்பட்டது.
இதைத் தொடர்ந்துபோலீசார் விசாரணை நடத்தினர். அப்போது மசினகுடி பகுதியைச் சேர்ந்த ஆனந்த் (வயது 25) என்பவர் சிறுமியை காதலிப்பதாக கூறி ஏமாற்றி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதில் அந்த சிறுமி 3 மாத கர்ப்பமானது தெரிய வந்தது.
இதைத்தொடர்ந்து அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுசீலா போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து ஆனந்தை கைது செய்தார்.
- 200 கிராம் கஞ்சாவும் பறிமுதல் செய்யப்பட்டது.
- போலீசார் கக்கநல்லா சோதனை சாவடியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
ஊட்டி
நீலகிரி மாவட்டம் மசினகுடி போலீசாருக்கு, கர்நாடகாவில் இருந்து கஞ்சா கடத்தி வரப்படுவதாக ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் போலீசார் மசினகுடி பகுதிகளில் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
மசினகுடி இன்ஸ்பெக்டர் தலைமையிலான போலீசார் கக்கநல்லா சோதனை சாவடியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அந்த வழியாக வந்த வாகனங்களை தீவிர சோதனை செய்து, அதன்பின்னரே உள்ளே அனுமதித்தனர்.
அப்போது அந்த வழியாக வந்த அரசு பஸ்சில் ஏறியும் போலீசார் சோதனை மேற்கொண்டனர். பஸ்சில் இருந்த வாலிபர் ஒருவரின் நடவடிக்கையில் போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது.
இதையடுத்து அவரை பிடித்து சோதனை செய்தனர். அவரிடம் 200 கிராம் கஞ்சா இருந்தது தெரியவந்தது. இது தொடர்பாக அவரிடம் விசாரித்தபோது முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தார்.
போலீசார் அவரை போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரித்தனர். விசாரணையில், அவரது பெயர் வசந்த்(21) என்பதும், கர்நாடகாவில் இருந்து கஞ்சாவை கடத்தி வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து 200 கிராம் கஞ்சாவும் பறிமுதல் செய்யப்பட்டது.
- கவுன்சிலர்கள் தங்களது தேவை குறித்து அதிகாரிகளிடம் முறையிட்டால் அவர்கள் கண்டு கொள்வதில்லை
- நகராட்சியில் தெருவிளக்குகள் எரிவதில் பல்வேறு பிரச்சினைகள் உள்ளன.
ஊட்டி
ஊட்டி நகரசபை கூட்டம் அதன் தலைவா் வாணீஸ்வரி தலைமையில் நடந்தது. கூட்டத்தில் ஆணையா் காந்திராஜன், பொறியாளா் இளங்கோவன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.
கூட்டத்தில் கவுன்சிலர்கள் பேசியதாவது-
ஜாா்ஜ்: கவுன்சிலா்கள் பெயரை பயன்படுத்தி நகராட்சி அதிகாரிகள் கடைகள் மற்றும் வணிக வளாகங்களில் பணம் வசூல் செய்கின்றனா். இதை தடுக்க வேண்டும்.
வனிதா: வளா்ச்சிப் பணிகள் சம்பந்தமாக பொக்லைன் எந்திரம் உள்ளிட்ட விஷயங்களை நகராட்சி நிா்வாகத்திடம் கேட்டால் உடனடியாக கிடைப்பதில்லை.
ரஜினி: எட்டின்ஸ் சாலையில் அலங்காா் பகுதியிலுள்ள மழை நீா் கால்வாய் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படாமல் இருப்பதால் தண்ணீா் வீடுகளுக்குள் செல்கிறது. முருகன் நகா் பகுதியில் தெரு விளக்குகள் அமைக்க வேண்டும்.
தம்பி இஸ்மாயில்: ஹவுஸிங் யூனிட் பகுதியில் பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் காட்டெருமை, காட்டுப்பன்றி உள்ளிட்ட வனவிலங்குகள் தொல்லை அதிகமாக உள்ளது
அபுதாகீா்: நகராட்சியில் தெருவிளக்குகள் எரிவதில் பல்வேறு பிரச்சினைகள் உள்ளன. அரசு உயா் அதிகாரிகள் ஆய்வுக்கு வரும்போது கவுன்சிலா்களுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.
ரவி: எல்க்ஹில் பகுதியில் அண்மையில் பெய்த மழை காரணமாக வீடுகளுக்குள் மண் புகுந்துள்ளது.
மேரி புளோரினா மாா்ட்டின்: டெண்டா் விடுவது குறித்து கவுன்சிலா்களிடம் கருத்து கேட்கப்படுகிறது. ஆனால் நகராட்சி கையேட்டில் எந்த டெண்டரும் வருவதில்லை.
ரகுபதி: எச்.எம்.டி. பகுதியில் உள்ள ஆபத்தான மரங்களை அகற்ற வேண்டும்.
செல்வராஜ்: 32-வது வாா்டில் பழுதடைந்து குழாய்களை மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஜெயலட்சுமி: குப்பை அள்ள வாகனங்கள் முறையாக வருவதில்லை.
குமாா்: வி.சி.காலனி பகுதியில் முறையான சாலை வசதி இல்லாததால் ஆம்புலன்ஸ் உள்ளிட்ட வாகனங்கள் செல்வதில் சிக்கல் ஏற்படுகிறது.
துணைத் தலைவா் ரவிக்குமாா்: புதிதாக கட்டப்படும் குடியிருப்புகளுக்கான அனுமதியை மாவட்ட கலெக்டரிடம் இருந்து பெறப்படும் முறையை மாற்றி நகராட்சி பகுதிக்குள் நகராட்சி நிா்வாகமே அனுமதியளிக்கும் வகையில் மாற்றம் செய்ய வேண்டும்.
கவுன்சிலர்கள் தங்களது தேவை குறித்து அதிகாரிகளிடம் முறையிட்டால் அவர்கள் கண்டு கொள்வதில்லை. மக்கள் பிரதிநிதிகளான கவுன்சிலர்களை அவர்கள் அவமானப்படுத்துகின்றனர் என்று கவுன்சிலர்கள் குற்றம் சாட்டி ஆணையாளரிடம் காரசார வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். கவுன்சி லர்களுக்கும் அதிகா ரிகளுக்கும் சரியான ஒருங்கி ணைப்பு இல்லாததால் நகராட்சி வளர்ச்சி பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.






