என் மலர்tooltip icon

    நீலகிரி

    • நீலகிரி மாவட்ட காவல் துறை சாா்பாக ஊட்டியில் கொடி அணிவகுப்பு நடத்தப்பட்டது.
    • 170 காவலா்கள் இந்த கொடி அணிவகுப்பில் பங்கேற்றனா்.

    ஊட்டி, :

    விநாயகா் சதுா்த்தியை முன்னிட்டு, நீலகிரி மாவட்ட காவல் துறை சாா்பாக ஊட்டியில் கொடி அணிவகுப்பு நடத்தப்பட்டது.

    காந்தல் முக்கோணம் முதல் பென்னட் மாா்க்கெட் வழியாக ரோகிணி ஜங்ஷன் வரையிலும், லாலி இன்ஸ்டிடியூட் முதல் சேரிங் கிராஸ் வழியாக ரவுண்டானா வரையிலும் கொடி அணிவகுப்பு நடத்தப்பட்டது.

    மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளா் மோகன் நவாஸ் தலைமையில், துணை காவல் கண்காணிப்பாளா்கள், ஆய்வாளா்கள், சாா்பு ஆய்வாளா்கள் என 170 காவலா்கள் இந்த கொடி அணிவகுப்பில் பங்கேற்றனா்.

    • நீலகிரி மாவட்ட காவல் துறை சாா்பாக ஊட்டியில் கொடி அணிவகுப்பு நடத்தப்பட்டது.
    • 170 காவலா்கள் இந்த கொடி அணிவகுப்பில் பங்கேற்றனா்.

    ஊட்டி, :

    விநாயகா் சதுா்த்தியை முன்னிட்டு, நீலகிரி மாவட்ட காவல் துறை சாா்பாக ஊட்டியில் கொடி அணிவகுப்பு நடத்தப்பட்டது.

    காந்தல் முக்கோணம் முதல் பென்னட் மாா்க்கெட் வழியாக ரோகிணி ஜங்ஷன் வரையிலும், லாலி இன்ஸ்டிடியூட் முதல் சேரிங் கிராஸ் வழியாக ரவுண்டானா வரையிலும் கொடி அணிவகுப்பு நடத்தப்பட்டது.

    மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளா் மோகன் நவாஸ் தலைமையில், துணை காவல் கண்காணிப்பாளா்கள், ஆய்வாளா்கள், சாா்பு ஆய்வாளா்கள் என 170 காவலா்கள் இந்த கொடி அணிவகுப்பில் பங்கேற்றனா்.

    • திராவிட மாடல் பயிற்சி பாசறை கூட்டம் கூடலூரில் உள்ள திருமண மண்டபத்தில் நடந்தது.
    • கொள்கை பரப்பு இணைச் செயலாளர் ராஜீவ் காந்தி திராவிட இயக்க வரலாறு எனும் தலைப்பிலும் கருத்துரையாற்றினார்.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்ட தி.மு.க இளைஞரணி சார்பில் கூடலூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட திராவிட மாடல் பயிற்சி பாசறை கூட்டம் கூடலூரில் உள்ள திருமண மண்டபத்தில் மாவட்ட இளைஞரணி செயலாளர் இமயம் சசிகுமார் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட துணை அமைப்பாளர் நவபுல் அனைவரையும் வரவேற்றார்.

    மாவட்ட செயலாளர் பா.மு.முபாரக் தொடக்க உரையாற்றி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார், மாவட்ட துணை அமைப்பாளர்கள் பாபு, நாகராஜ், உமாநாத் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் தி.மு.க செய்தி தொடர்பு இணை செயலாளர் தமிழன் பிரசன்னா மாநில சுயாட்சி எனும் தலைப்பிலும், கொள்கை பரப்பு இணைச் செயலாளர் ராஜீவ் காந்தி திராவிட இயக்க வரலாறு எனும் தலைப்பிலும் கருத்துரையாற்றினர்.

    இதில் முன்னாள் கூடலூர் சட்டமன்ற உறுப்பினர் திராவிடமணி, தலைமை செயற்குழு உறுப்பினர் பாண்டியராஜ், மாவட்ட ஊராட்சி தலைவர் பொன்தோஸ், ஒன்றிய நகர செயலாளர்கள் லியாகத் அலி, இளஞ்செழியன் பாபு, சிவானந்தராஜா, சேகர், சுஜேஷ், முன்னாள் நகர செயலாளர்கள் காசிலிங்கம், ராஜேந்திரன், பொதுக்குழு உறுப்பினர்கள் ராஜா, சதக்கத்துல்லா, பேரூர் கழக செயலாளர்கள் சின்னவர், சுப்பிரமணி, நகராட்சி தலைவர்கள் பரிமளா, சிவகாமி, பேரூராட்சி தலைவர்கள் சித்ராதேவி, வள்ளி, மாவட்ட அணிகளின் அமைப்பாளர்கள் ஆலன், ரெனால்டு, மகேஸ்வரன் உட்பட கழக நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் திரளாக கலந்துகொண்டனர். இளைஞர் அணியினர் 400-க்கும் மேற்பட்டவர்கள் திரளாக கலந்துகொண்டனர். முடிவில் நெல்லியாளம் நகர துணை அமைப்பாளர் சூசைராஜ் நன்றி கூறினார்.

    • விபத்தில் சிக்கிய ராணுவ அதிகாரிகளுக்கு நஞ்சப்பசத்திரம் பகுதி மக்கள் பல்வேறு உதவிகளை செய்தனா்.
    • 100-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பங்கேற்று மருத்துவ ஆலோசனைகள், மருந்துகளை பெற்று சென்றனா்.

    ஊட்டி, :

    நீலகிரி மாவட்டம், குன்னூா் நஞ்சப்பசத்திரம் பகுதியில் கடந்த ஆண்டு டிசம்பா் 8-ந் தேதி நிகழ்ந்த ஹெலிகாப்டா் விபத்தில் முப்படை தளபதி விபின் ராவத் உள்ளிட்ட 12 ராணுவ அதிகாரிகள் உயிரிழந்தனா்.

    அந்த நேரத்தில் விபத்தில் சிக்கிய ராணுவ அதிகாரிகளுக்கு நஞ்சப்பசத்திரம் பகுதி மக்கள் பல்வேறு உதவிகளை செய்தனா்.

    இதனைத் தொடா்ந்து நஞ்சப்பசத்திரம் கிராமத்தினை ஓராண்டுக்கு ராணுவத்தினா் தத்தெடுத்து, அவா்களுக்கு மருத்துவம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தர உறுதியளித்தனா்.

    அதன்படி, தென்னக ராணுவ மையம் சாா்பில் ராணுவ மருத்துவா்கள் மூலம் மாதமாதம் மருத்துவ முகாம் நடைபெற்று வருகிறது.அந்த வகையில் இந்த மாதத்திற்கான மருத்துவ முகாம் நேற்று நஞ்சப்பசத்திரம் பகுதியில் நடந்தது.முகாமில் 100-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பங்கேற்று மருத்துவ ஆலோசனைகள், மருந்துகளை பெற்று சென்றனா்.

    • மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மிதமானது முதல் கனமழை வரை கொட்டி தீர்த்தது.
    • சாலைகளில் தேங்கிய தண்ணீரால், வாகனங்கள் ஊர்ந்தபடியே வந்தன.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில தினங்களாகவே மழை பெய்து வருகிறது. நேற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மிதமானது முதல் கனமழை வரை கொட்டி தீர்த்தது.

    ஊட்டி மற்றும் அதன்சுற்றுப்புற பகுதிகளான காந்தல் உள்பட பல்வேறு பகுதிகளிலும் காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. அதனை தொடர்ந்து மழை பலத்த மழை பெய்தது.

    இதனால் ஊட்டி சேரிங்கிராஸ் சாலை, கலெக்டர் அலுவலக சாலை மற்றும் தாவரவியல் பூங்கா செல்லும் சாலை என அனைத்து பகுதிகளிலும் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.

    தொடர் மழையால், சாலைகளிலும் வாகனங்கள் மெதுவாக ஊர்ந்து சென்றதால், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.ஊட்டிக்கு சுற்றுலா வந்த பயணிகள், மழையில் நனைந்தபடியே சுற்றுலா தலங்களை கண்டு ரசித்தனர். குன்னூர், கோத்தகிரி மற்றும் சுற்றுப்புற பகுதிகளிலும் சாரல் மழை பெய்தது.

    கோவை மாவட்டத்திலும் சில தினங்களாக சிதோஷ்ண நிலையே நிலவி வருகிறது. பகல் வேளையிலும் வெயில் இல்லாமல், குளிர்ச்சியான காலநிலையே நிலவி வருகிறது. அவ்வப்போது மழையும் பெய்தது.

    நேற்று நள்ளிரவில் கோவை மாநகர் பகுதிகளான காந்திபுரம், உக்கடம், பாப்பநாயக்கன்பாளையம், ராமநாதபுரம், காந்திமாநகர், சீரநாயக்கன்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக மழை கொட்டி தீர்த்தது.

    இதனால் பல பகுதிகளில்தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கியது. சாலைகளிலும் தண்ணீர் பெருக்கெடுத்தது. சாலைகளில் தேங்கிய தண்ணீரால், வாகனங்கள் ஊர்ந்தபடியே வந்தன. இதனால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்தனர்.

    பெரியநாயக்கன்பா ளையம் பகுதியில் கொட்டி தீர்த்த மழையால், அங்குள்ள பாலத்திற்கு கீழே தண்ணீர் தேங்கியது. இதனால் அந்த வழியாக சென்ற வாகனங்கள் தண்ணீரில் சிக்கி கொண்டனர். சிலர் வாகனங்களை தள்ளியபடியே சென்றனர்.

    புறநகர் பகுதியான மேட்டுப்பாளையம், காரமடை, பொள்ளாச்சி சுற்றுவட்டார பகுதிகளிலும் மழை பெய்தது. இந்த மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    • ஊட்டி-கோத்தகிரி சாலையில் தொட்டபெட்டா மலைசிகரம் உள்ளது.
    • மலையில் இருந்து குதிக்கும் பரபரப்பு வீடியோ காட்சிகள் வெளியாகின.

    கவுண்டம்பாளையம்:

    நீலகிரி மாவட்டம் ஊட்டி-கோத்தகிரி சாலையில் தொட்டபெட்டா மலைசிகரம் உள்ளது. நேற்றுவிடுமுறை தினம் என்பதால் ஏராளமான சுற்றுலா பயணிகள் அங்கு குவிந்து இருந்தனர்.

    அவர்கள் அங்கிருந்தபடி இயற்கையின் அழகையும், பள்ளத்தாக்கையும் பார்வையிட்டு ரசித்து கொண்டிருந்தனர்.அப்போது மூதாட்டி ஒருவர் காட்சிகோபுரத்திற்கு கீழ் பகுதியில், பாறைகள் நிறைந்த ஆபத்தான சரிவு பகுதியில் நின்றிருந்தார்.

    இதனை பார்த்த சுற்றுலா பயணிகள், சத்தம் போட்டு அவரை அங்கிருந்து வருமாறு கத்தினர். ஆனால் அவர் எதனையும் காதில் வாங்கி கொள்ளாமல், அங்கேயே நின்றிருந்தார்.சிறிது நேரத்தில், மூதாட்டி திடீரென பாறையில் இருந்து 500 அடி பள்ளத்திற்குள் குதித்தார். இதனை அங்கிருந்த சுற்றுலா பயணி ஒருவர் பார்த்து வீடியோ எடுத்துள்ளார்.

    பின்னர் அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. இதை பார்த்த பலரும் அதிர்ச்சியடைந்தனர். இந்த வீடியோவை பார்த்து தேனாடுகம்பை போலீசார், தீயணைப்பு படையினருடன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

    பின்னர் வனத்துறையினர் உதவியுடன் பள்ளத்தாக்கு பகுதியில் கயிறு கட்டி இறங்கி உடலை தேடும் பணியில் ஈடுபட்டனர். அப்போது 500அ அடி பள்ளத்தில் அவரது உடல் இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து கீழே சென்று, மூதாட்டியின் உடலை மேலே கொண்டு வரும் பணிகளில் ஈடுபட்டனர்.

    பின்னர் மாலையில் மூதாட்டியின் உடலை தொட்டில் கட்டி மேலே கொண்டு வந்தனர். தொடர்ந்து உடல் பிரேத பரிசோதனைக்காக ஊட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மேலும் மூதாட்டி குதித்த இடத்தில் இருந்து ஒரு கைப்பையை கைப்பற்றினர். அதில் ரூ.16,500 மற்றும் ஆதார் கார்டு இருந்தது.

    இதுகுறித்து தேனாடுகம்பை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணையில், தற்கொலை செய்து கொண்டது கோவை தடாகம் கணுவாய் ராகவேந்திரா நகர் பகுதியை சேர்ந்த நல்லதம்பி என்பவரின் மனைவி லீலாவதி(62) என்பது தெரியவந்தது.

    தொடர்ந்து அவர் எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என்பது குறித்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், மூதாட்டி லீலாவதி 2 திருமணம் செய்தவர். அவர் தனது முதல் கணவரை கடந்த 30 வருடங்களுக்கு முன்பு பிரிந்து 2-வதாக நல்லதம்பி என்பவரை திருமணம் செய்து கணுவாய் பகுதியில் வாழ்ந்து வந்தார்.இதற்கிடையே நல்லதம்பியும் இறந்துவிடவே லீலா வதியை, நல்லதம்பியின் அக்கா மகன் தனது வீட்டில் வைத்து பராமரித்து வந்தார்.

    இந்த நிலையில் லீலாவதி தான் தனியாக வசித்து கொள்கிறேன் என்று கூறி, அதே பகுதியில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து வசித்தார். ஆனாலும் யாரிடமும் பேசுவதில்லை. கணவர் இறந்த பின்பு யாரிடமும் பேசாமல் தனிமையிலும், மன வருத்தத்திலேயுமே லீலாவதி இருந்ததாக கூறப்படுகிறது.

    சம்பவத்தன்று தனது கணவரின் அக்கா மகனை சந்தித்து, தான் வீட்டை காலி செய்து விட்டேன். இந்த பணத்தை வைத்து கொள் என வீட்டிற்கு கொடுத்த அட்வான்ஸ் பணத்தை கொடுத்துள்ளார்.

    பின்னர் வெளியில் சென்று விட்டு வருவதாக கூறி சென்றுள்ளார். ஆனால் நீண்ட நேரமாக வரவில்லை. தற்போது பாறையில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டதும், போலீசாரின் தெரியவந்துள்ளது. மன அழுத்தத்தில் தற்கொலை செய்து கொண்டிருப்பதாக கூறப்படுகிறது. இருப்பினும் அதுதான் காரணமா? வேறு ஏதாவது என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • தீயணைப்பு வீரர்கள் மூதாட்டியை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.
    • 350 அடி பள்ளத்தில் மூதாட்டி படுகாயங்களுடன் உயிரிழந்து கிடந்தார்.

    ஊட்டி :

    தமிழகத்தில் உயர்ந்த மலைச்சிகரமாக நீலகிரி மாவட்டம் ஊட்டி தொட்டபெட்டா மலைச்சிகரம் உள்ளது. நேற்று வார விடுமுறை என்பதால் மலைச்சிகரத்தில் சுற்றுலா பயணிகள் பலர் இயற்கை அழகை கண்டு ரசித்துக்கொண்டிருந்தனர். அப்போது ஒரு மூதாட்டி தடுப்பை தாண்டி சென்றார். அங்கு நின்ற சுற்றுலா பயணிகள் அபாயகரமான பகுதிக்கு செல்ல வேண்டாம் என்று கூறி கூச்சலிட்டனர். இதற்கிடையே கண்ணிமைக்கும் நேரத்தில் மூதாட்டி தொட்டபெட்டா மலைச்சிகரத்தில் இருந்து பள்ளத்தில் குதித்தார்.

    இதுகுறித்து தகவல் அறிந்த ஊட்டி தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு சென்று மூதாட்டியை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

    தொடர்ந்து ஒரு மணி நேர தேடுதலுக்கு பின்னர் மலைச்சிகரத்தில் இருந்து 350 அடி பள்ளத்தில் விழுந்த மூதாட்டி படுகாயங்களுடன் உயிரிழந்து கிடந்ததை பார்த்தனர். அவரது உடலை மீட்டு தொட்டில் கட்டி மலை உச்சிக்கு கொண்டு வந்தனர். பின்னர் பிரேத பரிசோதனைக்காக உடல் அனுப்பி வைக்கப்பட்டது.

    விசாரணையில், அவர் கோவை தடாகம் ராகவேந்திரா நகரை சேர்ந்த நடராஜ் என்பவரின் மனைவி லீலாவதி(வயது62) என்பது தெரிவந்தது. அவர் தற்கொலை செய்யும் முன்பு ஆதார் கார்டை வைத்து விட்டு பள்ளத்தில் குதித்து உள்ளார். இருப்பினும், தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் தெரியவில்லை. இதுகுறித்து போலீசார் வழக்கப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • நீலகிரியில் பச்சை தேயிலைக்கு மாற்று பயிராக கொய்மலர்கள் சாகுபடி செய்யப்படுகிறது.
    • கொய்மலர்கள் கர்நாடகாவுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது

    அரவேணு:

    கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு நீலகிரி மாவட்டம் கோத்தகிரி பகுதியில் கொய் மலர்கள் சாகுபடி செய்யப்பட்டது. ஒரே செடியில் வெள்ளை, ஊதா, இளஞ்சிவப்பு ஆகிய 3 நிறங்களில் மலர்கள் பூக்கும்.

    இந்த மலர்களுக்கு வெளிநாடுகள், வெளி மாநிலங்களில் அதிக வரவேற்பு உள்ளது. கொரோனா காலத்தில் கொய்மலர் விற்பனை கடும் வீழ்ச்சியடைந்தது. இதனால் கார்னேசனுக்கு மாற்றாக, கொத்துக் கொத்தாக வளரும் ஐட்ரோஜென்யா மலர்களை புதியதாக சாகுபடி செய்ய தொடங்கினர்.

    இதன் மூலம் கணிசமான லாபம் கிடைத்து வருகிறது. நீலகிரியில் பச்சை தேயிலைக்கு மாற்று பயிராக ஊட்டி, கோத்தகிரி பகுதிகளில் கார்னேசன், ஜர்பரா, லில்லியம் உள்ளிட்ட கொய்மலர்கள் சாகுபடி செய்யப்படுகிறது.

    இதுகுறித்து விவசாயி மேகநாதன் கூறியதாவது:- குடில்களில், மண்ணிற்கு பதிலாக, தேங்காய் நார், உரங்கள் அடங்கிய கலவையில் இறக்குமதி செய்யப்பட்ட ஐட்ரோஜென்யா மலர் நாற்றுகளை நடவு செய்து பராமரிக்கப்படுகிறது.

    ஓராண்டில் மலர்கள் பூக்க தொடங்கும்.

    தொடர்ந்து 20 ஆண்டுகள் வரை பயனளிக்கும். தற்போது ஆடி மாதம் முடிந்து விழாக்கள் மற்றும் சுப நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. இதில் மேடை அலங்காரத்தில் மலர்கள் முக்கிய பங்கு வகிக்கிறது. இதனால் ஐட்ரோஜென்யா ஒரு மலருக்கு ரூ.100 கொள்முதல் விலை கிடைக்கிறது.

    ஒரே செடியில் 3 நிறங்களில் பூக்களை வளர வைத்து பறிக்க முடியும். வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யும் இந்த மலர்களின் விலை அதிகமாக உள்ளது.

    இங்கு சாகுபடி செய்யப்படும் மலர்கள் மிக குறைந்த விலையில் கிடைக்கிறது.

    இதனால் ஐட்ரோ ஜென்யா மலர்களுக்கு அதிக தேவை உள்ளது. இந்த வகை மலர்களை சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு லாபம் கிடைக்க வாய்ப்பு உள்ளது. இந்த மலர்களை அறுவடை செய்து கர்நாடக மாநிலம் பெங்களூருவுக்கு விற்பனைக்காக அனுப்பி வருகிறோம்.

    சீசன் காரணமாக கொய் மலர்களின் தேவை சந்தையில் மேலும் அதிகரிக்கும். இவ்வாறு அவர் கூறினார்.ஐட்ரோஜென்யா ஒரு மலர் ரூ.100-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் இந்த மலர்கள் கோத்தகிரியில் இருந்து கர்நாடகாவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகின்றன.

    • காளான் வளர்ப்பு , கம்ப்யூட்டர் டேலி போன்ற முப்பது வகையான தொழில் பயிற்சி பற்றிய தகவல்கள் வழங்கப்பட்டது.
    • மானியங்கள் குறித்து மகளிர் சுய உதவி பெண்களுக்கு எடுத்து கூறப்பட்டது.

    அரவேணு,

    கொணவக்கரை, ஜக்கனாரை ஆகிய இரு ஊராட்சி உட்பட்ட யூ.என்.சி எஸ் மூலம் உருவாக்கப்பட்ட மகளிர் சுய உதவிக் குழு உள்ள பெண்களுக்கான தொழில் முனைவோர் பயிற்சி முகாம் நடைபெற்றது.

    கூட்டத்தில் கனரா வங்கி தொழிற் பயிற்சி இயக்குனர், மாவட்ட தொழில் மைய மேலாளர் வாழ்வாதார திட்ட ஒருங்கிணைப்பாளர் மற்றும் மகளிர் சுய உதவிக் குழு பெண்கள் கலந்து கொண்டனர். கனரா வங்கி தொழில் பயிற்சி நிலையம் மூலம் தையல் பயிற்சி, மெழுகுவர்த்தி, சோப்பு ஆயில், பினாயில், சாக்லேட் ,காளான் வளர்ப்பு , கம்ப்யூட்டர் டேலி போன்ற முப்பது வகையான தொழில் பயிற்சி பற்றிய தகவல்கள் வழங்கப்பட்டது.

    மாவட்ட தொழில் மையம் மூலம் எந்தவிதமான தொழில்களுக்கு கடன் வழங்கப்படுகிறது ஒவ்வொரு தொழிற்கும் எவ்வளவு கடன் கொடுக்கப்படுகிறது அதற்கான மானியங்கள் எவ்வளவு வழங்கப்படும் என்று மகளிர் சுய உதவி பெண்களுக்கு எடுத்துரைத்தார்.

    வாழ்வாதார திட்ட ஒருங்கிணைப்பாளர் மூலம் மகளிர் சுய உதவி குழுவின் முக்கியத்துவம் ,பி எல் எம் மூலம் கிடைக்கக்கூடிய சலுகைகள், வங்கி கடன்கள், சுய உதவி பெண்கள் தொழில் செய்வதன் முக்கியத்துவம் பற்றி எடுத்துரைக்கப்பட்டது.

    • விழிப்புணர்வு பணியில் சிறப்பாக செயல்பட்டோருக்கு பரிசுகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
    • நகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு பரிசுகள் பாராட்டு சான்றிதழ்கள் வழங்கி கவுரவிக்க பட்டனர்

    ஊட்டி:

    நெல்லியாளம் நகராட்சியில் "நமது குப்பை நமது பொறுப்பு" தூய்மை பணிக்கான மக்கள் இயக்கம் விழிப்புணர்வு பணியில் சிறப்பாக செயல்பட்டோருக்கு பரிசுகள் வழங்கும் நிகழ்ச்சி நகராட்சி தலைவர் சிவகாமி தலைமையில் நடைபெற்றது.

    நகராட்சி பொறியாளர் சிவகுமார், கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்று சூழல் பாதுகாப்பு மைய செயலாளர் சிவசுப்பிரமணியம் ஆகியோர் பேசினார்கள்.

    நமது குப்பை, நமது பொறுப்பு விழிப்புணர்வு பணிகளில் சிறப்பாக செயல்பட்ட தன்னார்வ அமைப்புகள் , கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மையம், மகாத்மா காந்தி பொது சேவை மையம், புனித சேவியர் பெண்கள் உயர்நிலை பள்ளி, உப்பட்டி, பந்தலூர், தேவாலா, நாடுகாணி நகர வியாபாரிகள், குடும்ப தலைவிகள், மாணவர்கள் மற்றும் நகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு பரிசுகள் பாராட்டு சான்றிதழ்கள் வழங்கி கவுரவிக்க பட்டனர். நகராட்சி சுகாதார ஆய்வாளர் பாலகுமாரன் வரவேற்றார் தூய்மை பணி ஒருங்கிணைப்பாளர் பிரகாஷ் நன்றி கூறினார்.

    நகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு பரிசுகள் பாராட்டு சான்றிதழ்கள் வழங்கி கவுரவிக்க பட்டனர்

    • திராவிட மாடல் பயிற்சி பாசறை கூட்டம் குன்னூரில்நடைபெற்றது
    • கூட்டத்தில் மாநில சுயாட்சி எனும் தலைப்பில் கழக செய்தி தொடர்பு இணை செயலாளர் தமிழன் பிரசன்னா உரையாற்றினார்.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம் குன்னூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட திராவிட மாடல் பயிற்சி பாசறை கூட்டம் குன்னூரில்நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் இமயம் சசிகுமார் தலைமை தாங்கினார். மாநில சிறுபான்மை பிரிவு துணை செயலாளர் அன்வர்கான் அனைவரையும் வரவேற்றார்.

    மாவட்ட செயலாளர் பா.மு.முபாரக், வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன், மாவட்ட துணை அமைப்பாளர்கள் உமாநாத், நௌபல், பாபு, நாகராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் மாநில சுயாட்சி எனும் தலைப்பில் கழக செய்தி தொடர்பு இணை செயலாளர் தமிழன் பிரசன்னா, திராவிட இயக்க வரலாறு எனும் தலைப்பில் வழக்கறிஞர் ராஜீவ் காந்தி பேசினர்.

    இதில் குன்னூர் நகர செயலாளர் ராமசாமி, தலைமை செயற்குழு உறுப்பினர் ராஜூ, ஒன்றிய செயலாளர்கள் நெல்லை கண்ணன், பிரேம்குமார், பீமன், லாரன்ஸ், பொதுக்குழு உறுப்பினர்கள் சதக்கத்துல்லா, வெங்கடேஷ், மாவட்ட சிறுபான்மை பிரிவு அமைப்பாளர் முபாரக், குன்னூர் நகராட்சி தலைவர் ஷீலா கேத்ரின், கோத்தகிரி ஊராட்சி ஒன்றிய தலைவர் ராம்குமார், பேரூர் செயலாளர்கள் முத்து, ரமேஷ், சஞ்சீவ்குமார், காளிதாஸ் உட்பட குன்னூர் தொகுதிக்கு உட்பட்ட அனைத்து நகர,ஒன்றிய, பேரூர் கழக இளைஞர் அணி அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், இளைஞர் அணியினர் 600-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். முடிவில் குன்னூர் நகர செயலாளர் ராமசாமி நன்றி கூறினார்.

    • கரடி, காட்டெருமை, சிறுத்தை, கடமான் போன்ற வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன.
    • சில வாகன ஓட்டிகள் சிறுத்தையை செல்போனில் வீடியோ எடுத்தனர்.

    ஊட்டி:

    ஊட்டியை சுற்றி தொட்ட பெட்டா, கவர்னர்சோலை, கேர்ன்ஹில், உள்ளிட்ட அடர்ந்த வனப்பகுதிகள் உள்ளன. இங்கு கரடி, காட்டெருமை, சிறுத்தை, கடமான் போன்ற வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன.

    வனப்பகுதியில் இருந்து உணவு மற்றும் தண்ணீரை தேடி வனவிலங்குகள் குடியிருப்புகளுக்கு புகுந்து வருகின்றது. இந்தநிலையில் நேற்று ஊட்டி-கூடலூர் தேசிய நெடுஞ்சாலை பைக்காரா பகுதியில் சிறுத்தை ஒன்று நடமாடியது.

    தொடர்ந்து சிறுத்தை சாலையை கடக்க முயற்சி செய்தது. அப்போது வாகனங்கள் வந்து கொண்டு இருந்ததால், வாகனங்கள் செல்லும் வரை சாலையோரத்திலேயே நின்றது. மேலும் வாகன ஓட்டிகள் அச்சம் அடைந்தனர். சில வாகன ஓட்டிகள் சிறுத்தையை செல்போனில் வீடியோ எடுத்தனர்.

    பின்னர் சிறுத்தை வனப்பகுதிக்குள் சென்று மறைந்தது. இந்த காட்சி சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. இதுகுறித்து வனத்துறையினர் கூறுகையில், சிறுத்தை உள்ளிட்ட வனவிலங்குகள் சாலையில் நிற்கும் போது வாகனங்களை விட்டு கீழே இறங்கக்கூடாது. வனவிலங்குகள் அருகே செல்வதை தவிர்க்க வேண்டும் என்றனர்.

    ×