நெல்லியாளம் நகராட்சியில் பரிசு வழங்கும் விழா

விழிப்புணர்வு பணியில் சிறப்பாக செயல்பட்டோருக்கு பரிசுகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.நகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு பரிசுகள் பாராட்டு சான்றிதழ்கள் வழங்கி கவுரவிக்க பட்டனர்
நெல்லியாளம் நகராட்சியில்  பரிசு வழங்கும் விழா
Published on

ஊட்டி:

நெல்லியாளம் நகராட்சியில் "நமது குப்பை நமது பொறுப்பு" தூய்மை பணிக்கான மக்கள் இயக்கம் விழிப்புணர்வு பணியில் சிறப்பாக செயல்பட்டோருக்கு பரிசுகள் வழங்கும் நிகழ்ச்சி நகராட்சி தலைவர் சிவகாமி தலைமையில் நடைபெற்றது.

நகராட்சி பொறியாளர் சிவகுமார், கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்று சூழல் பாதுகாப்பு மைய செயலாளர் சிவசுப்பிரமணியம் ஆகியோர் பேசினார்கள்.

நமது குப்பை, நமது பொறுப்பு விழிப்புணர்வு பணிகளில் சிறப்பாக செயல்பட்ட தன்னார்வ அமைப்புகள் , கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மையம், மகாத்மா காந்தி பொது சேவை மையம், புனித சேவியர் பெண்கள் உயர்நிலை பள்ளி, உப்பட்டி, பந்தலூர், தேவாலா, நாடுகாணி நகர வியாபாரிகள், குடும்ப தலைவிகள், மாணவர்கள் மற்றும் நகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு பரிசுகள் பாராட்டு சான்றிதழ்கள் வழங்கி கவுரவிக்க பட்டனர். நகராட்சி சுகாதார ஆய்வாளர் பாலகுமாரன் வரவேற்றார் தூய்மை பணி ஒருங்கிணைப்பாளர் பிரகாஷ் நன்றி கூறினார்.

நகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு பரிசுகள் பாராட்டு சான்றிதழ்கள் வழங்கி கவுரவிக்க பட்டனர்

X

Maalai Malar
www.maalaimalar.com