search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "POLICE FLAG PARADE"

    • போலீசார் மற்றும் ஊர்க்காவல் படையினர் என 1500 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.
    • 500-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட உள்ளன.

    அரவேணு

    விநாயகர் சதுர்த்தி விழா நாளை கொண்டாடப்பட உள்ளது.

    நீலகிரி மாவட்டத்தில் இந்து முன்னணி சார்பில் ஊட்டி நகர பகுதிகள், கூடலூர், பந்தலூர், குன்னூர், கோத்தகிரி உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 315 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட உள்ளன.

    ஊட்டியில் பூசாரிகள் பேரவை சார்பில் 40, சிவசேனா சார்பில் 15, கோத்தகிரியில் அனுமன் சேனா சார்பில் 30 என மாவட்டம் முழுவதும் 500-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட உள்ளன. இதுதவிர பல்வேறு கிராம பகுதிகளில் பொதுமக்கள் சார்பில் சிலைகள் வைக்கப்பட உள்ளன.

    பூசாரிகள் பேரவை சார்பில் வருகிற 3-ந் தேதியும், மாவட்டம் முழுவதும் 4-ந் தேதியும் விநாயகர் சிலை ஊர்வலங்கள் நடைபெற உள்ளன.

    விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு தமிழ்நாடு சிறப்பு காவல்படை போலீசார் மற்றும் ஊர்க்காவல் படையினர் என 1500 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். மேலும் வெளி மாவட்ட போலீசாரும் நீலகிரிக்கு வரவழைக்கப்பட்டு உள்ளனர். இவர்கள் ஊட்டி, கூடலூர், கோத்தகிரி, குன்னூர், பந்தலூர் ஆகிய பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

    பாதுகாப்பு பணியில் ஈடுபடும் போலீசார் ஊட்டி, கோத்தகிரி உள்ளிட்ட இடங்களில் கொடி அணிவகுப்பு நடத்தினர். ஊட்டியில் தாவரவியல் பூங்கா சாலையில் தொடங்கிய கொடி அணிவகுப்பு, சேரிங்கிராஸ், கமர்சியல் சாலை, அப்பர் பஜார், மெயின் பஜார் வழியாக மத்திய பஸ்நிலையத்தை அடைந்தது. கோத்தகிரி டானிங்டன் பகுதியில் வஜ்ரா வாகனத்துடன் தொடங்கிய கொடி அணிவகுப்பு காமராஜர் சதுக்கம், ராம்சந்த் சதுக்கம், மார்க்கெட் சாலை வழியாக சென்று பஸ் நிலையத்தை அடைந்தது. குன்னூரில் சிம்ஸ் பூங்கா பகுதியில் தொடங்கிய கொடி அணிவகுப்பு லாலி ஆஸ்பத்திரி கார்னர், மவுண்ட் ரோடு வழியாக பஸ்நிலையம் வரை நடந்தது. இதில் போலீசார் துப்பாக்கி ஏந்தியபடி சென்றனர்.

    • நீலகிரி மாவட்ட காவல் துறை சாா்பாக ஊட்டியில் கொடி அணிவகுப்பு நடத்தப்பட்டது.
    • 170 காவலா்கள் இந்த கொடி அணிவகுப்பில் பங்கேற்றனா்.

    ஊட்டி, :

    விநாயகா் சதுா்த்தியை முன்னிட்டு, நீலகிரி மாவட்ட காவல் துறை சாா்பாக ஊட்டியில் கொடி அணிவகுப்பு நடத்தப்பட்டது.

    காந்தல் முக்கோணம் முதல் பென்னட் மாா்க்கெட் வழியாக ரோகிணி ஜங்ஷன் வரையிலும், லாலி இன்ஸ்டிடியூட் முதல் சேரிங் கிராஸ் வழியாக ரவுண்டானா வரையிலும் கொடி அணிவகுப்பு நடத்தப்பட்டது.

    மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளா் மோகன் நவாஸ் தலைமையில், துணை காவல் கண்காணிப்பாளா்கள், ஆய்வாளா்கள், சாா்பு ஆய்வாளா்கள் என 170 காவலா்கள் இந்த கொடி அணிவகுப்பில் பங்கேற்றனா்.

    • காவல்துறை கொடி அணி வகுப்பு நடைபெற்றது.
    • விநாயகர் சதுர்த்தியை விழாவை முன்னிட்டு நடந்தது

    கரூர்:

    விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு கரூரில் காவல்துறை கொடி அணி வகுப்பு நடைபெற்றது.

    வரும் 31-ந் தேதி விநாயகர் சதுர்த்தி விழா நடைபெறுகிறது. இதனையொட்டி இந்து அமைப்புகள் சார்பில் மாவட்டத்தின் பலவேறு இடங்களில் ஏராளமான விநாயகர் சிலைகள் நிறுவப்பட்டு 3ம் நாள் கரூர் 80 அடி சாலைக்கு எடுத்து வரப்பட்டு அங்கிருந்து ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு காவிரியில் கரைக்கப்படுகிறது.

    கடந்தாண்டு விநாயகர் சிலை நிறுவும்போது விரும்ப தகாத ஒரு சில சம்பங்கள் ஏற்பட்டன.அதனால், நடப்பாண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கரூர் மாவட்ட காவல்துறை சார்பில் கொடி அணி வகுப்பு நடைபெற்றது.

    கரூர் 80 அடி சாலையில்கொடி அணி வகுப்பை ஏடிஎஸ்பி கீதாஞ்சலி தொடங்கிவைத்து அணி வகுப்பில் பங்கேற்றார். கோவை சாலை, பேருந்து நிலைய ரவுண்டானா, ஜவஹர் பஜார், தலைமை அஞ்சல் நிலையம் வழியாக 5 ரோட்டில் கொடி அணி வகுப்பு நிறைவு பெற்றது.

    பாதுகாப்பு கவச உடை, தலைகவசம் அணிந்து, பாதுகாப்பு தடுப்பு, குச்சி ஏந்தியும், அதிரடி படையினர், தாலுகா போலீஸார், ஆயுதப்படையினர் உள்ளிட்ட 300க்கும் மேற்பட்ட போலீஸார் கொடி அணி வகுப்பில் சென்றனர்.

    ×