ஊட்டியில் விநாயகர் சதுர்த்தியையொட்டி போலீஸ் கொடி அணிவகுப்பு

நீலகிரி மாவட்ட காவல் துறை சாா்பாக ஊட்டியில் கொடி அணிவகுப்பு நடத்தப்பட்டது.170 காவலா்கள் இந்த கொடி அணிவகுப்பில் பங்கேற்றனா்.
ஊட்டியில் விநாயகர் சதுர்த்தியையொட்டி போலீஸ் கொடி அணிவகுப்பு
Published on

ஊட்டி, :

விநாயகா் சதுா்த்தியை முன்னிட்டு, நீலகிரி மாவட்ட காவல் துறை சாா்பாக ஊட்டியில் கொடி அணிவகுப்பு நடத்தப்பட்டது.

காந்தல் முக்கோணம் முதல் பென்னட் மாா்க்கெட் வழியாக ரோகிணி ஜங்ஷன் வரையிலும், லாலி இன்ஸ்டிடியூட் முதல் சேரிங் கிராஸ் வழியாக ரவுண்டானா வரையிலும் கொடி அணிவகுப்பு நடத்தப்பட்டது.

மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளா் மோகன் நவாஸ் தலைமையில், துணை காவல் கண்காணிப்பாளா்கள், ஆய்வாளா்கள், சாா்பு ஆய்வாளா்கள் என 170 காவலா்கள் இந்த கொடி அணிவகுப்பில் பங்கேற்றனா்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com