என் மலர்
உள்ளூர் செய்திகள்

நீலகிரிக்கு கஞ்சா கடத்திய வாலிபர் கைது
- 200 கிராம் கஞ்சாவும் பறிமுதல் செய்யப்பட்டது.
- போலீசார் கக்கநல்லா சோதனை சாவடியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
ஊட்டி
நீலகிரி மாவட்டம் மசினகுடி போலீசாருக்கு, கர்நாடகாவில் இருந்து கஞ்சா கடத்தி வரப்படுவதாக ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் போலீசார் மசினகுடி பகுதிகளில் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
மசினகுடி இன்ஸ்பெக்டர் தலைமையிலான போலீசார் கக்கநல்லா சோதனை சாவடியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அந்த வழியாக வந்த வாகனங்களை தீவிர சோதனை செய்து, அதன்பின்னரே உள்ளே அனுமதித்தனர்.
அப்போது அந்த வழியாக வந்த அரசு பஸ்சில் ஏறியும் போலீசார் சோதனை மேற்கொண்டனர். பஸ்சில் இருந்த வாலிபர் ஒருவரின் நடவடிக்கையில் போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது.
இதையடுத்து அவரை பிடித்து சோதனை செய்தனர். அவரிடம் 200 கிராம் கஞ்சா இருந்தது தெரியவந்தது. இது தொடர்பாக அவரிடம் விசாரித்தபோது முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தார்.
போலீசார் அவரை போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரித்தனர். விசாரணையில், அவரது பெயர் வசந்த்(21) என்பதும், கர்நாடகாவில் இருந்து கஞ்சாவை கடத்தி வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து 200 கிராம் கஞ்சாவும் பறிமுதல் செய்யப்பட்டது.






