கூடலூர் அருகே சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபர் கைது

17 வயது சிறுமியை கர்ப்பமாக்கியதாக போலீஸ் நிலையத்தில் பெற்றோர் தரப்பில் புகார் செய்யப்பட்டது. சிறுமியை காதலிப்பதாக கூறி ஏமாற்றி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்
கூடலூர் அருகே சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபர் கைது
Published on

ஊட்டி

கூடலூர் அருகே மசினகுடி பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமியை கர்ப்பமாக்கியதாக கூடலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் பெற்றோர் தரப்பில் புகார் செய்யப்பட்டது.

இதைத் தொடர்ந்துபோலீசார் விசாரணை நடத்தினர். அப்போது மசினகுடி பகுதியைச் சேர்ந்த ஆனந்த் (வயது 25) என்பவர் சிறுமியை காதலிப்பதாக கூறி ஏமாற்றி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதில் அந்த சிறுமி 3 மாத கர்ப்பமானது தெரிய வந்தது.

இதைத்தொடர்ந்து அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுசீலா போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து ஆனந்தை கைது செய்தார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com