என் மலர்tooltip icon

    நாமக்கல்

    • நாமக்கல் மாவட்டம் நல்லூர் அருகே நல்லியாம் பாளையம் காட்டுவலவு பகுதியை சேர்ந்தவர் ரத்தினம்.
    • மோட்டார் சைக்கிளில் மாட்டுத் தீவனம் வாங்கு வதற்காக வீட்டில் இருந்து கந்தம்பாளையம் பகுதிக்கு திருச்செங்கோடு- பரமத்தி சாலையில் சென்று கொண்டிருந்தார்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் நல்லூர் அருகே நல்லியாம் பாளையம் காட்டுவலவு பகுதியை சேர்ந்தவர் ரத்தினம் (60). இவர் தனது மோட்டார் சைக்கிளில் மாட்டுத் தீவனம் வாங்கு வதற்காக வீட்டில் இருந்து கந்தம்பாளையம் பகுதிக்கு திருச்செங்கோடு- பரமத்தி சாலையில் சென்று கொண்டிருந்தார்.

    அதிவேகமாக வந்த கார்

    அப்போது அந்தப் பகு

    தியில் உள்ள ஒரு பெட்ரோல்

    பங்கில் பெட்ரோல் போடு வதற்காக திரும்பியபோது பரமத்திவேலூரில் இருந்து திருச்செங்கோடு நோக்கி அதிவேகமாக வந்த கார் ரத்தினம் ஓட்டி சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் ரத்தினம் நிலை தடுமாறி மோட்டார் சைக்கிளுடன் கீழே விழுந்தார்.

    பலத்த காயமடைந்த அவரை அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு திருச்செங்கோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் ரத்தினம் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    கைது

    இதுகுறித்து ரத்தினத்தின் மனைவி வசந்தி(54) நல்லூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜ் காரை அதிக வேகமாக ஓட்டி வந்து விபத்து ஏற்படுத்திய திருச்செங்கோடு அருகே ஆலாங்குறைகாடு பகுதியைச் சேர்ந்த பிரதீப்குமார் என்பவர் மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர். மேலும் காரை பறிமுதல் செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • நன்செய்இடையாறு காவிரி ஆற்றின் வடகரை யில் அமைந்துள்ள அரசமர பிள்ளையார், மாசி பெரி யண்ணசாமி மற்றும் கன்னி மார் கோவில் மகா கும்பாபி ஷேகம் நடைபெற்றது.
    • விழாவை முன்னிட்டு சனிக்கிழமை காலை 8- மணிக்கு விநாயகர் வழிபாடு, புண்யா கம் கணபதி ஹோமம், நவநாயகர் யாகம், மகாலட்சுமி யாகம் மற்றும் பூர்ணாகுதி யும், மாலை 5- மணிக்கு முளைப்பாரி அழைத்தலும் நடைபெற்றது.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அருகே உள்ள நன்செய்இடையாறு காவிரி ஆற்றின் வடகரை யில் அமைந்துள்ள அரசமர பிள்ளையார், மாசி பெரி யண்ணசாமி மற்றும் கன்னி மார் கோவில் மகா கும்பாபி ஷேகம் நடைபெற்றது.

    விழாவை முன்னிட்டு சனிக்கிழமை காலை 8- மணிக்கு விநாயகர் வழிபாடு, புண்யா கம் கணபதி ஹோமம், நவநாயகர் யாகம், மகாலட்சுமி யாகம் மற்றும் பூர்ணாகுதி யும், மாலை 5- மணிக்கு முளைப்பாரி அழைத்தலும் நடைபெற்றது.

    மாலை 6- மணிக்கு வாஸ்து பூமி பூஜை, கும்ப அலங்காரம், முதல் காலயாக பூஜை, கோபுர கலசம் வைத்தல், மருந்து சாத்துதலும் நடைபெற்றது. நேற்று அதிகாலை 5.30 மணிக்கு மேல் இரண்டாம் காலயாக பூஜை, சபர்சாகுதி, தீபாராதனை யும், 7 மணிக்கு மேல் அரசமர விநாயகர், மாசி பெரியண்ண சாமி மற்றும் கன்னிமார்கள் கோவில் கும்பாபிஷேகம் நடை பெற்றது.

    அதனைத் தொடர்ந்து மகா அபிஷே கம், தசதானம், கோபூஜை நடைபெற்றது.

    கும்பாபிஷேகம்

    இதில் சுற்று வட்டார பகுதியை சேர்ந்த ஏராள மான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

    கும்பாபிஷேக விழாவில் கலந்து கொண்ட பக்தர்க ளுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் நன்செய்இடையாறு மற்றும் சுற்று வட்டார பகு திகளைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    விழாவிற்கான ஏற்பாடு களை நன்செய் இடையாறு மாசி பெரியண்ணசாமி கோவில் பரம்பரை அறங்கா வலர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.

    • நாமக்கல் மாவட்டம் நாமகிரிப்பேட்டை ஒன்றியம் நாரைக்கிணறு ஊராட்சி நேரு நகரில் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.
    • குடிநீர் ஏற்பாடு செய்து தர வலியுறுத்தியும் நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில் இன்று காலை நேரு நகரை சேர்ந்த பெண்கள் காலி குடங்களுடன் திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்டம் நாமகிரிப்பேட்டை ஒன்றியம் நாரைக்கிணறு ஊராட்சி நேரு நகரில் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இங்குள்ள மக்கள் பெரும்பாலும் விவசாய மற்றும் பல்வேறு கூலி வேலைகளுக்கு செல்கின்றனர்.

    இந்நிலையில் நேரு நகரில் கடந்த 2 வருடங்களாக தண்ணீர் வினியோகம் இல்லாமல் அவதிபட்டு வருகின்றனர்.

    இதனால் தண்ணீருக்காக 2 கிலோ மீட்டர் தூரம் வரை நடந்து செல்லும் நிலை உள்ளது. மேலும் குடிநீர் வண்டி ரூ.500 வரை கொடுத்து தண்ணீர் வாங்க வேண்டிய நிலை உள்ளது.

    தர்ணா போராட்டம்

    எனவே கூலி வேலைக்கு செல்வதால் குடிநீரை பணம் கொடுத்து வாங்க முடியாத நிலை உள்ளதாகவும், குடிநீர் ஏற்பாடு செய்து தர வலியுறுத்தியும் நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில் இன்று காலை நேரு நகரை சேர்ந்த பெண்கள் காலி குடங்களுடன் திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த நல்லிபாளையம் போலீசார் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் அவர்களை சமாதானப்படுத்தி மனு அளிக்க அனுப்பி வைத்தனர்.

    இச்சம்பவத்தால் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

    • வாகன ஓட்டுநர் உரிமம் வழங்க கோரி காது கேளா மற்றும் வாய் பேச இயலாத மாற்றுதிறனாளிகள் நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    • காதொளி கருவி கொண்டு மருத்துவர் ஆலோசனைப்படி வருகிற புதன்கிழமை முகாம் அமைத்து ஓட்டுநர் உரிமம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர்.

    நாமக்கல்:

    வாகன ஓட்டுநர் உரிமம் வழங்க கோரி காது கேளா மற்றும் வாய் பேச இயலாத மாற்றுதிறனாளிகள் நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதை அறிந்த நாமக்கல் ஆர்.டி.ஓ. சரவணன், நாமக்கல் வடக்கு வட்டார போக்குவரத்து அலுவலர் முருகேசன், நல்லிபாளையம் இன்ஸ்பெக்டர் சுமதி, மாற்றுத் திறனாளிகள் நல அலுவலக செயல்திறன் உதவியாளர் சுமதி ஆகியோர் அங்கு வந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினர்.

    அப்போது காதொளி கருவி இருந்தும் வட்டார அலுவலகத்தில் வாகன ஓட்டுநர் உரிமம் வழங்க மறுப்பதாக மாற்றுத் திறனாளிகள் குற்றம் சாட்டினர்.

    இதனையடுத்து காதொளி கருவி கொண்டு மருத்துவர் ஆலோசனைப்படி வருகிற புதன்கிழமை முகாம் அமைத்து ஓட்டுநர் உரிமம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர்.

    • பெரியசாமி உடல் பிரேத பரிசோதனைக்கு பிறகு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது.
    • விசாரணையில் கள்ளக்காதலனுடன் சேர்ந்து தனது கணவரை கொன்றதாக பிரேமா அதிர்ச்சி தகவலை போலீசாரிடம் தெரிவித்தார்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் மோகனூர் அருகே ஒருவந்தூர் ஊராட்சி செல்லிபாளையம் காலனியை சேர்ந்தவர் பெரிய சாமி (37), கட்டிட மேஸ்திரி. இவருடைய மனைவி பிரேமா. இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.

    கடந்த 23-ந் தேதி அதிகாலை 2 மணி அளவில் செல்லிப்பாளையம் பகுதியில் ஒரு வளையில் சென்ற போது எதிரே வந்த வாகனம் மோதி பெரியசாமி இறந்ததாகவும், பிரேமா காயமின்றி தப்பியதாகவும் கூறப்பட்டது.

    இந்த சம்பவம் தொடர்பாக மோகனூர் போலீசார் விபத்து வழக்குப்பதிவு செய்தனர். பெரியசாமி உடல் பிரேத பரிசோதனைக்கு பிறகு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது.

    இதனிடையே பிரேமா மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. பிரேமாவின் நடவடிக்கையை போலீசார் கண்காணித்தனர். அப்போது கணவர் இறந்த பிறகும் பிரேமா மகிழ்ச்சியாக இருந்தது தெரிய வந்தது. உடனே போலீசார் பிரேமாவிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் கள்ளக்காதலனுடன் சேர்ந்து தனது கணவரை கொன்றதாக பிரேமா அதிர்ச்சி தகவலை போலீசாரிடம் தெரிவித்தார். மேலும் அவர் அளித்த பரபரப்பு வாக்குமூலம் வருமாறு:-

    எனது கணவர் பெரியசாமி கட்டிட மேஸ்திரியாக வேலை பார்த்து வந்தார். இதில் கிடைக்கும் வருமானத்தில் 2 குழந்தைகளையும் கவனிக்க முடியவில்லை. இதனால் நான் மோகனூரில் உள்ள பேக்கரியில் வேலைக்கு சேர்ந்தேன்.

    அப்போது அங்கு பணியாற்றி வந்த ஒருவருடன் கடந்த 4 மாதங்களாக பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் எங்களுக்குள் நெருக்கத்தை ஏற்படுத்தியது. இதனை அறிந்த எனது கணவர் என்னை கண்டித்தார். மேலும் பேக்கரிக்கு வந்து சத்தம் போட்டார். அப்படி இருந்தும் அவருடன் கள்ளக்காதலை என்னால் விட முடியவில்லை.

    இதனிடையே அந்த பேக்கரியில் இருந்து என்னையும், கள்ளக்காதலனையும் வேலையை விட்டு நிறுத்திவிட்டனர். இதனால் நான் வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்தேன். செல்போனில் மட்டுமே கள்ளக்காதலனுடன் பேசி வந்தேன்.

    இருப்பினும் நேரில் சந்திக்க முடியாததால் இருவரும் தவித்து வந்தோம். எனவே பெரியசாமியை கொலை செய்தால் மட்டுமே இருவரும் சந்தோசமாக வாழ முடியும் என 2 பேரும் நினைத்தோம். இது தொடர்பாக நானும், கள்ளக்காதலனும் சேர்ந்து பெரியசாமியை கொலை செய்து விபத்து நடந்தது போல் நாடகமாட முடிவு செய்தோம். திட்டமிட்டபடி சம்பவத்தன்று நள்ளிரவு காது வலிக்கிறது என நான் கணவரிடம் கூறினேன். அவர் என்னை மோகனூரில் உள்ள ஆஸ்பத்திரிக்கு மோட்டார்சைக்கிளில் அழைத்து சென்றார்.

    இது பற்றி கள்ளக்காதலனுக்கு தகவல் கொடுத்தேன். மோகனூர் செல்லும் வழியில் ஒரு வளைவில் கள்ளக்காதலன் நின்று கொண்டிருந்தார். அவர், பெரியசாமி மோட்டார் சைக்கிள்களை தடுத்து நிறுத்தி சரமாரியாக தாக்கினார். இதில் காயம் அடைந்த பெரியசாமி சம்பவ இடத்திலேயே இறந்தார். பின்னர் கள்ளக்காதலன் தப்பி சென்றுவிட்டார். அதன்பிறகு உறவினர்களிடம் வாகனம் ஒன்று மோதி கணவர் இறந்துவிட்டதாக தகவல் கொடுத்தேன். இதனால் உறவினர்களுக்கு என் மீது சந்தேகம் ஏற்படவில்லை. ஆனால் போலீசாரின் ரகசிய கண்காணிப்பில் நான் சிக்கிக் கொண்டேன். இவ்வாறு அவர் போலீசாரிடம் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.

    பிரேமாவை கைது செய்த போலீசார் பெரியசாமி கொலையில் வேறு யாருக்காவது தொடர்பு இருக்கிறதா? என்பது குறித்து விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர். மேலும் தலைமறைவான கள்ளக்காதலனை போலீசார் பல்வேறு இடங்களில் தீவிரமாக தேடி வருகின்றனர்.

    கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவரை மனைவி திட்டமிட்டு கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

    • நாமக்கல்லில் இருந்து முட்டையின் ஏற்றுமதி கணிசமாக குறைந்து பல கோடி முட்டைகள் தேக்கம் அடைந்துள்ளன.
    • தொடர்ந்து முட்டை விலை 30 காசுகள் குறைந்துள்ளதால் பண்ணையாளளர்கள் கவலை அடைந்துள்ளனர்.

    நாமக்கல்:

    நாமக்கல், சேலம், ஈரோடு, பெருந்துறை, கோவை உள்ளிட்ட நாமக்கல் மண்டலத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோழிப்பண்ணைகள் உள்ளன.

    இங்கு 8 கோடி முட்டைக்கோழிகள் வளர்க்கப்படுகின்றன. தினசரி சுமார் 6 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த முட்டைகள் தமிழக அரசின் சத்துணவு திட்டத்திற்கு போக மீதம் உள்ள முட்டைகள் கேரளா மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் வடமாநிலங்களுக்கும் அதிக அளவில் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

    தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு (என்.இ.சி.சி.) தினசரி பண்ணையில் ரொக்க விற்பனைக்கு மைனஸ் இல்லாத முட்டை விலையை அறிவித்து வருகிறது. கடந்த 3 மாதங்களுக்கு முன்பு அதிகபட்சமாக நாமக்கல் மண்டலத்தில் ஒரு முட்டை 560 காசுகள் வரை விற்பனையானது. பின்னர் படிப்படியாக குறைந்து கடந்த 23-ந்தேதி ஒரு முட்டை விலை ரூ.4.60 ஆக இருந்தது.

    26-ந்தேதி முட்டை விலை 10 பைசா குறைக்கப்பட்டு ரூ.4.50 ஆக நிர்ணயம் செய்யப்பட்டது. தொடர்ந்து நேற்று மேலும் 20 காசுகள் குறைந்து முட்டை விலை 430 காசுகளாக நிர்ணயிக்கப்பட்டது. இன்றும் அதே விலை நீடிக்கிறது. தொடர்ந்து முட்டை விலை 30 காசுகள் குறைந்துள்ளதால் பண்ணையாளளர்கள் கவலை அடைந்துள்ளனர்.

    முட்டை விலை சரிவுக்கான காரணம் குறித்து பண்ணையாளர்கள் கூறியதாவது:- நாமக்கல்லில் இருந்து கேரளாவுக்கு 1 கோடிக்கும் அதிகமாக முட்டைகள் ஏற்றுமதி செய்யப்படுகிறது . கேராளாவில் நாளை (29-ந் தேதி) ஓணம் பண்டிகை கொண்டாடப்படுவதால் கடந்த சில நாட்களாக கேரளாவில் முட்டையின் நுகர்வு குறைந்துள்ளது. இதனால் நாமக்கல்லில் இருந்து முட்டையின் ஏற்றுமதி கணிசமாக குறைந்து பல கோடி முட்டைகள் தேக்கம் அடைந்துள்ளன. ஓணம் பண்டிகை முடிந்ததும் மீண்டும் ஏற்றுமதி உயரும் போது முட்டை விலை அதிகரிக்க வாய்ப்புள்ளது என்றனர்.

    இதேபோல் பிராய்லர் கோழி உயிருடன் ஒரு கிலோ ரூ.110 ஆக நீடிக்கிறது. முட்டைக்கோழி ஒரு கிலோ ரூ.83 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக பிராய்லர் கோழி மற்றும் முட்டை கோழி விலைகளில் எந்த மாற்றமும் செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    • கரும்புகளை வெட்டிச் செல்வதற்காக மோகனூரில் உள்ள சேலம் கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு விவசாயிகள் பதிவு
    • பதிவு செய்யாத விவசாயிகள் உள்ளூர் பகுதிகளில் செயல்பட்டு வரும் வெல்லம் தயாரிக்கும் ஆலை உரிமையாளர்களுக்கு விற்பனை செய்கின்றனர்

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா அண்ணா நகர், நெட்டை யாம்பாளையம், கொந்த ளம், பொன்மலர்பாளையம், சேளூர், பிலிக்கல்பாளையம், சாணார்பா ளையம், பிலிக்கல்பாளையம், குன்னத்தூர், வடகரை யாத்தூர், ஜேடர்பாளையம்,

    கொத்தமங்கலம், சிறுநல்லிக்கோவில், ஜமீன் எளம்பிள்ளை, குரும்பல மகாதேவி ,சோழ சிராமணி, திடுமல், சின்னாம்பாளையம், சோழசிராமணி, அய்யம்பாளையம், கபி லர்மலை, பரமத்தி வேலூர்,

    பாண்டமங்கலம், நன்செய் இடையாறு உள்ளிட்ட பகுதிகளில் ஆயிரக்க ணக்கான ஏக்கரில் கரும்பு பயிர் செய்யப்பட்டுள்ளது. இப்பகுதிகளில் விளையும் கரும்புகளை வெட்டிச் செல்வதற்காக மோகனூரில் உள்ள சேலம் கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு விவ

    சாயிகள் பதிவு செய்துள்ளனர். பதிவு செய்யாத விவசாயிகள் உள்ளூர் பகுதிகளில் செயல்பட்டு வரும் வெல்லம் தயாரிக்கும் ஆலை உரிமையாளர்களுக்கு விற்பனை செய்கின்றனர்.

    கரும்புகளை வாங்கிய ஆலை உரிமையாளர்கள் கரும்புகளை சாறு பிழிந்து பாகு ஆக்கி உருண்டை வெல்லம், அச்சு வெல்லம் மற்றும் நாட்டுச் சர்க்கரை ஆகியவற்றை தயார் செய்கின்றனர். பின்னர் அவற்றை 30 கிலோ கொண்ட சிப்பங்களாக கட்டி, பிலக்கல்பாளை யத்தில் உள்ள வெல்ல ஏல சந்தைக்கு கொண்டு வரு கின்றனர். ஒவ்வொரு வாரமும் சனி மற்றும் புதன்கிழமைகளில் வெல்ல ஏலச் சந்தையில் ஏலம் நடைபெறுகிறது.

    வெல்லத்தை ஏலம் எடுப்பதற்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், வெளிமாநிலங்களில் இருந்தும் வியாபாரிகள் வந்து வெல்லத்தை ஏலம் எடுத்துச் செல்கின்றனர். கடந்த வாரம் நடைபெற்ற ஏலத்தில் 30 கிலோ கொண்ட உருண்டை வெல்லம் சிப்பம் ஒன்று ரூ.1,300- வரையிலும், அச்சு வெல்லம் சிப்பம் ஒன்று ரூ.1,300 வரையிலும் ஏலம் போனது. நேற்று நடைபெற்ற ஏலத்தில் உருண்டை வெல்லம் சிப்பம் ஒன்று ரூ.1,230 வரையிலும், அச்சு வெல்லம் சிப்பம் ஒன்று1,230 வரையிலும் ஏலம் போனது. வெல்லம் உற்பத்தி அதிகரிப்பால் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது.

    • வேலூர் பேரூராட்சி அலுவலகம் முன்பு அமர்ந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    • கவுன்சிலர் மீது பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்தால் மட்டுமே பணிக்கு செல்வோம் என கூறியும், பாது காப்பு கேட்டும் பணியை புறக்க ணித்து பேரூராட்சி அலுவலகத்தை மீண்டும் முற்றுகை யிட்டனர்.

    பரமத்தி வேலூர்:

    வேலூர் பேரூராட்சியில் உள்ள தூய்மை பணியாளர்கள் நேற்று முன்தினம் குப்புச்சிபாளையம் 6- வது வார்டு பகுதியில் பெண் மற்றும் ஆண் தூய்மை பணி யாளர்கள் முட்செடிகளுக்கு தீவைத்து அருகில் பரவாமல் பார்த்துக் கொண்டு இருந்ததாக கூறப்படுகிறது.

    அப்போது அங்கு வந்த தி.மு.க வைச் சேர்ந்த 6-வது வார்டு உறுப்பினர் பெண் தூய்மை பணியாளர்களை உங்களை இங்கு யார் தீவைக்க சொன்னது என்று கூறி பெண் தூய்மை பணியா ளர்களை ஆபாச வார்த்தைகளால் பேசியதாக தெரிகிறது. இதனை கண்டித்து நேற்று முன்தினம் தூய்மை பணியாளர்கள் வேலூர் பேரூராட்சி அலுவலகம் முன்பு அமர்ந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து அங்கு வந்த வேலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் இந்திராணி தூய்மை பணியாளர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி தரக்குறைவாக பேசிய வார்டு உறுப்பினர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார். இதனை யடுத்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மை பணியாளர்கள் நேற்று முன்தினம் இரவு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

    போலீசில் புகார்

    இந்த நிலையில் நேற்று காலை 5- மணிக்கு பணிக்கு வந்த தூய்மை பணியாளர்கள் காலை 10-மணி வரை தூய்மை பணியில் ஈடுபட்ட னர். பின்னர் கவுன்சிலர் மீது பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்தால் மட்டுமே பணிக்கு செல்வோம் என கூறியும், பாது காப்பு கேட்டும் பணியை புறக்க ணித்து பேரூராட்சி அலுவலகத்தை மீண்டும் முற்றுகை யிட்டனர். பின்னர் வேலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் இந்திராணி, அவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி உங்க ளுடைய கோரிக்கையை மனுவாக எழுதிக் கொடுங்கள் அதன்மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததன் அடிப்படையில் தூய்மை பணி யாளர்கள் போலீஸ் நிலையத்திற்கு சென்று புகார் மனு எழுதிக் கொடுத்து அங்கிருந்து கலைந்து சென்றனர்.

    • கரும்புகளை வெட்டிச் செல்வதற்காக மோகனூரில் உள்ள சேலம் கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு விவ சாயிகள் பதிவு
    • பதிவு செய்யாத விவசாயிகள் உள்ளூர் பகுதிகளில் செயல்பட்டு வரும் வெல்லம் தயாரிக்கும் ஆலை உரிமையாளர்களுக்கு விற்பனை செய்கின்றனர்

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா அண்ணா நகர், நெட்டை யாம்பாளையம், கொந்த ளம், பொன்மலர்பாளையம், சேளூர், பிலிக்கல்பாளையம், சாணார்பா ளையம், பிலிக்கல்பாளையம், குன்னத்தூர், வடகரை யாத்தூர், ஜேடர்பாளையம்,

    கொத்தமங்கலம், சிறுநல்லிக்கோவில், ஜமீன் எளம்பிள்ளை, குரும்பல மகாதேவி ,சோழ சிராமணி, திடுமல், சின்னாம்பாளையம், சோழசிராமணி, அய்யம்பாளையம், கபி லர்மலை, பரமத்தி வேலூர்,

    பாண்டமங்கலம், நன்செய் இடையாறு உள்ளிட்ட பகுதிகளில் ஆயிரக்க ணக்கான ஏக்கரில் கரும்பு பயிர் செய்யப்பட்டுள்ளது. இப்பகுதிகளில் விளையும் கரும்புகளை வெட்டிச் செல்வதற்காக மோகனூரில் உள்ள சேலம் கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு விவ

    சாயிகள் பதிவு செய்துள்ளனர். பதிவு செய்யாத விவசாயிகள் உள்ளூர் பகுதிகளில் செயல்பட்டு வரும் வெல்லம் தயாரிக்கும் ஆலை உரிமையாளர்களுக்கு விற்பனை செய்கின்றனர்.

    கரும்புகளை வாங்கிய ஆலை உரிமையாளர்கள் கரும்புகளை சாறு பிழிந்து பாகு ஆக்கி உருண்டை வெல்லம், அச்சு வெல்லம் மற்றும் நாட்டுச் சர்க்கரை ஆகியவற்றை தயார் செய்கின்றனர். பின்னர் அவற்றை 30 கிலோ கொண்ட சிப்பங்களாக கட்டி, பிலக்கல்பாளை யத்தில் உள்ள வெல்ல ஏல சந்தைக்கு கொண்டு வரு கின்றனர். ஒவ்வொரு வாரமும் சனி மற்றும் புதன்கிழமைகளில் வெல்ல ஏலச் சந்தையில் ஏலம் நடைபெறுகிறது.

    வெல்லத்தை ஏலம் எடுப்பதற்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், வெளிமாநிலங்களில் இருந்தும் வியாபாரிகள் வந்து வெல்லத்தை ஏலம் எடுத்துச் செல்கின்றனர். கடந்த வாரம் நடைபெற்ற ஏலத்தில் 30 கிலோ கொண்ட உருண்டை வெல்லம் சிப்பம் ஒன்று ரூ.1,300- வரையிலும், அச்சு வெல்லம் சிப்பம் ஒன்று ரூ.1,300 வரையிலும் ஏலம் போனது. நேற்று நடைபெற்ற ஏலத்தில் உருண்டை வெல்லம் சிப்பம் ஒன்று ரூ.1,230 வரையிலும், அச்சு வெல்லம் சிப்பம் ஒன்று1,230 வரையிலும் ஏலம் போனது. வெல்லம் உற்பத்தி அதிகரிப்பால் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது.

    • மில்லில் பரமத்திவேலூர் அருகே வடுகபாளையத்தை சேர்ந்த ராஜேந்தி ரன் கடந்த 5 ஆண்டாக வாடிக்கையாளராக உள்ளார்.
    • ஆத்திரமடைந்த ராஜேந்திரன் பிரேம்குமாரின் தலையில் அரிவாளால் வெட்டினார்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே பாப்பிநாயக்கன்பட்டி பகுதியை சேர்ந்தவர் பிரேம்குமார் (26). இவர் புல்லாகவுண்டம்பட்டியில் செயல்பட்டு வரும் தனியார் ஆயில் மில்லில் மேலாளராக உள்ளார். இந்த மில்லில் பரமத்திவேலூர் அருகே வடுகபாளையத்தை சேர்ந்த ராஜேந்தி ரன் கடந்த 5 ஆண்டாக வாடிக்கையாளராக உள்ளார். இதனால் மில்லில் வரவு, செலவு கணக்கு வைத்திருந்தார்.

    இந்நிலையில் ராஜேந்திரன் பாக்கி கணக்கில் ரூ.12 ஆயிரம் கடனாக எழுதப்பட்டு இருந்தது. இதுகுறித்து அறிந்த ராஜேந்திரன் ஆயில் மில்லுக்கு வந்து, தகாத வார்த்தைகளால் மேலாளர் பிரேம்குமாரை திட்டி உள்ளார்.

    அரிவாள் வெட்டு

    இந்த நிலையில் பணி முடித்துவிட்டு பிரேம்குமார் ராஜேந்திரனின் வீட்டிற்கு சென்றுள்ளார்.

    அப்போது இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த ராஜேந்திரன் பிரேம்குமாரின் தலையில் அரிவாளால் வெட்டினார்.

    இதில் பலத்த காயமடைந்த பிரேம்குமாரை அருகில் இருந்தவர்கள் மீட்டு திருச்செங்கோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்த சம்பவம் குறித்து பிரேம்குமார் வேலகவுண்டம்பட்டி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து ராஜேந்திரனை கைது செய்து நாமக்கல் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • விதிமுறைகளை மீறி அனுமதி பெறாமல் வைத்திருந்த பிளக்ஸ் பேனர்களை அகற்ற செயல் அலுவலர்கள் உத்தரவிட்டனர்.
    • இனிவரும் காலங்களில் பேரூராட்சி பகுதிகளில் அனுமதி இன்றி விளம்பர பிளக்ஸ் பேனர்கள் வைக்கப்பட்டால் அவர்கள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்பட்டு அபராதம் விதிக்கப்படும் என செயல் அலுவலர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர், பரமத்தி, பொத்தனூர் ஆகிய பகுதிகளில் விதிமுறைகளை மீறி அனுமதி பெறாமல் வைத்திருந்த பிளக்ஸ் பேனர்களை அகற்ற செயல் அலு வலர்கள் உத்தரவிட்டனர்.

    அதன் பேரில் பரமத்தி, பரமத்திவேலூர், பொத்த னூர் ஆகிய பகுதிகளில் அனுமதி இல்லாமல் வைத்திருந்த சுமார் 50க்கும் மேற்பட்ட பிளக்ஸ் பேனர்களை பேரூராட்சி ஊழியர்கள் அகற்றினார்கள். இனிவரும் காலங்களில் பேரூராட்சி பகுதிகளில் அனுமதி இன்றி விளம்பர பிளக்ஸ் பேனர்கள் வைக்கப்பட்டால் அவர்கள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்பட்டு அபராதம் விதிக்கப்படும் என செயல் அலுவலர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    • திருச்செங்கோடு மண்டல அளவிலான இளையோர் மாணவர்களுக்கான தடகளப் போட்டி திருச்செங்கோடு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில் தொடங்கியது.
    • வெற்றி பெறும் மாணவர்கள் மாவட்ட அளவில் நடக்க உள்ள தடகளப் போட்டிகளில் கலந்து கொண்டு விளையாடுவார்கள் என நிர்வாகிகள் தெரிவித்தனர்.

    திருச்செங்கோடு:

    நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு மண்டல அளவிலான இளையோர் மாணவர்களுக்கான தடகளப் போட்டி திருச்செங்கோடு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில் தொடங்கியது.

    திருச்செங்கோடு ஈஸ்வரன் எம்.எல்.ஏ., பி.ஆர்.டி நிறுவனங்களின் மேலாண்மை இயக்குனர் மற்றும் நாமக்கல் மாவட்ட தடகள சங்க துணைத் தலைவர் பரந்தாமன் ஆகியோர் போட்டிகளை தொடங்கி வைத்தனர்.

    17 மற்றும் 19 வயதுக்கு உட்பட்டோருக்கான 1500, 800 மீட்டர் ஓட்டப்பந்தயம், 14 வயதுக்கு உட்பட்டோ ருக்கான 600 மீட்டர் ஓட்டப்பந்தயம், 14, 17, 19 வயதுக்கு உட்பட்டோ ருக்கான 100, 200, 400 மீட்டர் ஓட்டம் மற்றும் 400 மீட்டர் தடை தாண்டுதல் ஓட்டம், வட்டு எறிதல், 19 வயதுக்கு உட்பட்டோ ருக்கான நீளம் தாண்டுதல், 400 மீட்டர் தடை தாண்டுதல் ஓட்டம், 14, 17 வயதுக்கு உட்பட்டோருக்கான நீளம் தாண்டுதல் என்பது போன்ற 14 பிரிவுகளில் போட்டிகள் நடக்க உள்ளது.

    இந்தப் போட்டிகளில் மண்டல அளவில் உள்ள 32 பள்ளிகளை சேர்ந்த 1,258 மாணவர்கள் கலந்து கொண்டனர்.

    இதில் வெற்றி பெறும் மாணவர்கள் மாவட்ட அளவில் நடக்க உள்ள தடகளப் போட்டிகளில் கலந்து கொண்டு விளையாடுவார்கள் என நிர்வாகிகள் தெரிவித்தனர்.

    ×