முதல் முறையாக மூட்டு மாற்று அறுவை சிகிச்சை செய்து டாக்டர்கள் சாதனை

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அருகே உள்ள வீரணம்பாளையத்தை சேர்ந்தவர் சீரங்கன் ( 65). இவர் இடது முழங்கால் வலி காரணமாக தொடர்ந்து பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தார். பரமத்தி வேலூர் அரசு மருத்துவமனையில் அனைத்து மூட்டு வலிக்கும் சிறப்பான முறையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதால் பொதுமக்கள் இந்த வாய்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என டாக்டர்கள் தெரிவித்தனர்.
பரமத்தி வேலூர் அரசு மருத்துவமனையில் முதல் முறையாக மூட்டுமாற்று அறுவை சிகிச்சை செய்த டாக்டர் கோகுல் தலைமையிலான டாக்டர்களை  படத்தில் காணலாம்.
பரமத்தி வேலூர் அரசு மருத்துவமனையில் முதல் முறையாக மூட்டுமாற்று அறுவை சிகிச்சை செய்த டாக்டர் கோகுல் தலைமையிலான டாக்டர்களை படத்தில் காணலாம்.
Published on

பரமத்திவேலூர்:

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அருகே உள்ள வீரணம்பாளையத்தை சேர்ந்தவர் சீரங்கன் ( 65). இவர் இடது முழங்கால் வலி காரணமாக தொடர்ந்து பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் குணமாகவில்லை. இந்த நிலையில் பரமத்தி வேலூர் அரசு மருத்துவமனையில் முழங்கால் வலி காரணமாக மருத்துவ பரிசோதனைக்கு சென்றார். அவரை பரிசோதனை செய்த டாக்டர் கோகுல் தலைமையிலான குழுவினர் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை செய்வதற்கான ஏற்பாடுகளை செய்தனர். இதையடுத்து அரசு மருத்துவமனையில் உள்ள டாக்டர்கள் குழுவினர் சீரங்கனுக்கு மூட்டு மாற்று அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக செய்து முடித்தனர். மூட்டு மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்ட சீரங்கன் நலமுடன் வீடு திரும்பியுள்ளார். பரமத்தி வேலூர் அரசு மருத்துவமனையில் அனைத்து மூட்டு வலிக்கும் சிறப்பான முறையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதால் பொதுமக்கள் இந்த வாய்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என டாக்டர்கள் தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com