என் மலர்
நாமக்கல்
- கிருஷ்ணகிரி, ஓசூர் உள்ளிட்ட பகுதிகளில் வட மாநிலத்தை சேர்ந்த கொள்ளையர்கள் இரு சக்கர வாகனத்தில் சென்று செயின் பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
- இதையடுத்து முன்னெச்ச ரிக்கை நடவ டிக்கையாக சேலம், நாமக்கல் பகுதிக ளில் போலீசார் விடிய, விடிய வாகன சோதனையில் ஈடுபட்டு உள்ளனர்.
நாமக்கல்:
கிருஷ்ணகிரி, ஓசூர் உள்ளிட்ட பகுதிகளில் வட மாநிலத்தை சேர்ந்த கொள்ளையர்கள் இரு சக்கர வாகனத்தில் சென்று செயின் பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதையடுத்து முன்னெச்ச ரிக்கை நடவ டிக்கையாக சேலம், நாமக்கல் பகுதிக ளில் போலீசார் விடிய, விடிய வாகன சோதனையில் ஈடுபட்டு உள்ளனர்.
வாகன சோதனை
நாமக்கல் எம்.மேட்டுப்பட்டி, நல்லிபா ளையம் சாலை சந்திப்பு உள்ளிட்ட பகுதிகளில் நாமக்கல் டி.எஸ்.பி தன்ராஜ் அறிவுறுத்தலின்படி போலீசார் தீவிர வாகன தணிக்கை மேற்கொண்ட னர்.
அப்போது கிருஷ்ணகிரி பகுதியில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் புகைப்படத்தை கொண்டு விசாரணை நடத்தினர். மேலும் வாகன சோதனை சாவடிகளில் உள்ள சி.சி.டி.வி கேமிரா மூலமும் கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்தி உள்ளனர்.
இது குறித்து நாமக்கல் டி.எஸ்.பி. தன்ராஜ் கூறுகையில், வடமாநில கொள்ளையர்களை கண்காணிக்க சோதனை சாவடியில் கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் ரோந்து வாகனங்கள் மூலமும் தீவிர கண்கா ணிப்பு பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றார்.
- நாமக்கல்லில், வட்ட லாரி பாடி பில்டர் அசோசியேசன் பொதுக்குழு கூட்டம் சங்க தலைவர் தங்கவேல் தலைமையில் நடைபெற்றது.
- கூட்டத்தில் கடந்த 40 ஆண்டாக சங்கத் தின் மேலாளராக பணியாற்றி ஓய்வுபெற்ற கோவிந்தராஜ் கவுர விக்கப்பட்டார்.
நாமக்கல்:
நாமக்கல்லில், வட்ட லாரி பாடி பில்டர் அசோசியேசன் பொதுக்குழு கூட்டம் சங்க தலைவர் தங்கவேல் தலைமையில் நடைபெற்றது.
செயலாளர் மனோ கரன் வர வேற்றார். துணைத்த லைவர்ராஜூ முன்னிலை வகித்தார். கூட்டத்தில், முறை யாக ஜி.எஸ்.டி. லைசென்ஸ் மற்றும் பதிவு சான்றுபெற்று, தொழில் செய்யும் லாரி பாடிகட்டும் நிறுவனங்கள், மூலப்பொருட்கள் வாங்க, தொழில் வணிகத்துறை மூலம் 125 லட்சம் முதல் 1 கோடி வரை அடமானம் இல்லாத கடன் வழங்க வேண்டும். நாமக்கல் நகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்க முதலைப்பட்டியில் புதிய பேருந்து நிலையம் அமைக்கப்பட்டு வருகிறது. இந்த பணிகளை விரைவாக முடித்து மக்கள் பயன் பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன.
கூட்டத்தில் கடந்த 40 ஆண்டாக சங்கத் தின் மேலாளராக பணியாற்றி ஓய்வுபெற்ற கோவிந்தராஜ் கவுர விக்கப்பட்டார். கூட்டத்தில் சங்க பொருளாளர் ராமலிங்கம், கவுரிஅம்மன் தியாகராஜன், ஆடிட்டர் ரவி, வக்கீல் கார்த்தி கேயன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
- கடந்த 26-ந் தேதி இரவு குடும்பத்தினர் அனைவரும் சாப்பிட்டு விட்டு தூங்க சென்றனர்.
- மறுநாள் காலை எழுந்து பார்த்தபோது தூங்கிக் கொண்டிருந்த நவீனாவை காணவில்லை.
பரமத்தி வேலூர்:
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே ஆயிபா ளையம் தேவேந்திரன் தெரு பகுதியை சேர்ந்தவர் ராஜா, இவரது மனைவி லட்சுமி. இவர்களது மூத்த மகள் கவிதா (30), இளைய மகள் நவீனா (26) இவர் பொறியியல் கல்லூரி பட்டதாரி.
மூத்த மகள் கவிதாவை வேலகவுண்டன்பட்டி அருகே உள்ள முசிறி காட்டுக்காடு தேவேந்திரன் தெருவை சேர்ந்த முருகேசன் என்பவருக்கு திருமணம் செய்து வைத்தனர்.
இந்நிலையில் கவிதா வின் தங்கை நவீனா கடந்த 2 வாரமாக தனது
அக்கா கவிதா வீட்டில் தங்கி இருந்தார். இந்நிலை யில் கடந்த 26-ந் தேதி இரவு குடும்பத்தினர் அனைவரும் சாப்பிட்டு விட்டு தூங்க சென்றனர். மறுநாள் காலை எழுந்து பார்த்தபோது தூங்கிக் கொண்டிருந்த நவீனாவை காணவில்லை.
இது குறித்து கவிதா தனது தாய் லட்சுமிக்கு தகவல் தெரிவித்துள்ளார். லட்சுமி உறவினர்கள் வீடுகளிலும், நண்பர்கள் வீடுகளிலும் மற்றும் பல்வேறு பகுதிகளுக்கும் சென்று தேடிப்பார்த்துள்ளார். ஆனால் நவீனாவை கண்டு பிடிக்க முடியவில்லை.
இதுகுறித்து லட்சுமி வேலகவுண்டன்பட்டி போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கங்காதரன் வழக்கு பதிவு செய்து நவீனா இரவில் எங்காவது தானாகவே சென்று விட்டாரா? அல்லது இரவு நேரத்தில் வெளியில் வந்த போது எவராவது கடத்திச் சென்று விட்டனரா? என்று தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
- போலீஸ்நிலையப் பணிகளை கவனிக்க உதவி ஆய்வாளர் ஒருவர், தேவை படுகிறது.
- பொதுமக்கள் புகார் மனு கொண்டு வந்தால், சம்பந்தப்பட்ட எதிரியை அழைத்து வரக் கூட போலீசார் இருப்பது இல்லை.
குமாரபாளையம்:
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் போலீஸ் நிலையம் இடைப்பாடி சாலையில், பாறையூர், பள்ளிபாளையம் சாலையில் குப்பாண்டபாளையம், சேலம் சாலையில் 4 வழிச்சாலை, மேற்கில் பவானி காவிரி ஆற்றின் பாலம் ஆகியவை எல்லையாக உள்ளது.
தொழில் நிறுவனங்கள்
மிகப்பெரிய பரப்பளவு கொண்ட இந்த பகுதியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட விசைத்தறி கூடங்கள்,
500-க்கும் மேற்பட்ட சாயப்பட்டறை கள், இதர தொழில் நிறுவனங்கள், அரசு, மற்றும் தனியார் கல்வி நிறுவனங்கள், சேலம்-கோவை புறவழிச்சாலையில் இரவு பகலாக செல்லும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் என குமாரபாளையம் போலீஸ் நிலையத்தின் எல்லை விரிவடைந்து கிடக்கிறது.
குமாரபாளையம் நகராட்சி பகுதி தவிர தட்டான்குட்டை, குப்பாண்டபாளையம், பல்லக்காபாளையம் ஆகிய 3 ஊராட்சி பகுதிகளும் உள்ளன. நகராட்சியில் சுமார் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் தொகையும், 3 ஊராட்சிகளில் சேர்ந்து மேலும் ஒரு லட்சம் மக்கள் தொகை என சுமார் 2 லட்சம் மக்கள் தொகை கொண்ட பகுதியாகவும் , குமாரபாளையம் போலீஸ் நிலையம் அதிகார வரம்புக்குள் இருந்து வருகின்றன.
கூடுதல் போலீஸ்
இந்நிலையில்,போலீஸ் நிலையத்தில் நுழைவு வாயில் காவலர், எழுத்தர், நீதிமன்றத்துக்கான தலைமைக்காவலர், ஆய்வாளரின் வாகன டிரைவர், புறவழிச்சாலையில் இரு போலீசார், போலீஸ்நிலையப் பணிகளை கவனிக்க உதவி ஆய்வாளர் ஒருவர், தேவை படுகிறது. சமீப காலமாக அத்தியாவசிய பணிகளில் போலீசார் இல்லாமல் எழுத்தர், தன் பணியுடன் போலீஸ்(சென்ட்ரி) பணியை கவனிக்கிறார். அதிக பட்சம் 4 அல்லது 5 பேர் மட்டுமே இருக்க வேண்டிய நிலையில் 2 போலீசார் மட்டுமே பணியில் இருக்கக்கூடிய நிலை இருந்து வருகிறது.
பொதுமக்கள் அதிருப்தி
பொதுமக்கள் புகார் மனு கொண்டு வந்தால், சம்பந்தப்பட்ட எதிரியை அழைத்து வரக் கூட போலீசார் இருப்பது இல்லை. புகார் கொடுக்க வரும் பொதுமக்கள் அதிருப்திக்கு ஆளாகும் நிலை உள்ளது. போலீஸ் நிலையத்தில் இருக்கும் போலீசார் எண்ணிக்கை பார்த்தால் சுமார் 40 பேர் இருப்பதாகக்கூறப்படு கிறது. ஆனால் அதிக பட்சம் 5 பேருக்கு மேல் இருப்பது இல்லை.
ஆகவே போதிய அளவில் புதிய போலீசாரை நியமித்து சட்ட ஒழுங்கு குற்றங்களை தடுக்கவும் பொதுமக்களுக்கு பாதுகாப்பு வழங்கவும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- வேலூர் அரசு மருத்துவமனையில் புற நோயாளிகள் பிரிவு, ரத்த சுத்திகரிப்பு பிரிவு, சமையலறை, அறுவை சிகிச்சை பிரிவு உள்பட பல்வேறு பிரிவுகளில் ஆய்வு மேற்கொண்டார்.
- மாணவர்கள் தங்கியுள்ள ஆதிதிராவிடர் நல மாணவர்கள் விடுதியில் அடிப்படை வசதிகள் குறித்து கேட்டறிந்து ஆய்வு மேற்கொண்டார்.
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம், பரமத்தி அருகே உள்ள ராசம்பாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அரசு செயலாளரும், மாவட்ட கண்காணிப்பு அலுவலருமான குமரகுருபரன் கலெக்டர் டாக்டர் உமா முன்னிலையில் முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டத்தின் கீழ் உணவு சமைக்கப்படும் பொருள் வைப்பறை மற்றும் சமைய லறையை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
அதனைத் தொடர்ந்து வேலூர் அரசு மருத்துவமனையில் புற நோயாளிகள் பிரிவு, ரத்த சுத்திகரிப்பு பிரிவு, சமையலறை, அறுவை சிகிச்சை பிரிவு உள்பட பல்வேறு பிரிவுகளில் ஆய்வு மேற்கொண்டார்.
மேலும், மருந்துகள் இருப்பு, நோயாளிகளுக்கு வழங்கப்படும் மருத்துவ சிகிச்சைகள் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார். தொடர்ந்து, வேலூர் பேரூராட்சியில் 24 மாணவர்கள் தங்கியுள்ள ஆதிதிராவிடர் நல மாணவர்கள் விடுதியில் அடிப்படை வசதிகள் குறித்து கேட்டறிந்து ஆய்வு மேற்கொண்டார்.
மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை சார்பில் ரூ.28 லட்சம் மதிப்பீட்டில் பொத்தனூர் பேரூராட்சி, வெங்கமேடு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் கட்டி முடிக்கப்பட்டு திறப்பு விழாவிற்கு தயார் நிலையில் உள்ள 2 கூடுதல் வகுப்பறை களை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
ஒழுங்குமுறை விற்பனைக்கூடம்
பரமத்தி வேலூர் ஒழுங்கு முறை விற்பனைக்கூடத்தில் 25 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட குளிர்பதன சேமிப்பு கிடங்கி, ஊரக கிடங்கி ஆகியவற்றை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
சேமித்து வைக்கப்படும் வேளாண் விளைப்பொருட் கள் அதற்கு வழங்கப்படும் ஆதார விலை, ஏல முறை நடவடிக்கைகள் குறித்து வேளாண் அலுவலரிடம் விரிவாக கேட்டறிந்தார்.
தொடர்ந்து குமரகுருபரன் பரமத்தி வேலூர் தாசில்தார் அலுவலகத்தில் ஆய்வு மேற் கொண்டு அரசு நலத்திட்ட உதவிகள் குறித்து பெறப்பட்ட விண்ணப்பங்களின் நிலை குறித்து கேட்டறிந்தார். மேலும் கலைஞரின் மகளிர் உரிமைத் திட்டம் மூலம் பெறப்பட்ட விண்ணப்பங்களின் கள ஆய்வு பணிகள் குறித்து ஆலோசனை மேற்கொண்டார். பரமத்தி வேலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஆய்வு மேற்கொண்டு, ஒன்றிய அளவில் நடைபெறும் வளர்ச்சித்திட்ட பணிகள் குறித்து அலுவலர்களிடம் கேட்டறிந்தார். மேலும், நடை பெற்று வரும் வளர்ச்சித்திட்ட பணிகளை விரைந்து முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டுமென அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். தொடர்ந்து பரமத்தி வேலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு புதிதாக கட்டப்பட்டுள்ள அலுவலக கட்டடத்தை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
மேலும், நாமக்கல் நகராட்சி யில் புதியதாக கட்டப்பட்டுள்ள நூலகம் மற்றும் அறிவு சார் மையத்தினை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். பின்னர் நாமக்கல் தெற்கு வட்டார போக்குவரத்து அலுவலகத்தை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு ஓட்டுநர் உரிமம், போக்குவரத்து ஆவண சான்றுகள், வாகன பதிவு உள்ளிட்டவை வழங்கப் பட்ட விபரங்கள் குறித்து வட்டார போக்குவரத்து அலுவலரிடம் விரிவாக கேட்டறிந்தார்.
இந்த ஆய்வுகளின் போது, மாவட்ட வருவாய் அலுவலர் டாக்டர் சுமன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் சிவக்குமார், நாமக்கல் ஆர்.டி.ஓ. சரவணன், மகளிர் திட்ட இயக்குநர் பிரியா, வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகம் துணை இயக்குநர் நாசர், மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் முருகன், கலெக்டர் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) முருகன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை செயற்பொறியாளர் குமார் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
- நாமக்கல் மாவட்டம், வேலகவுண்டம்பட்டி அருகே உள்ள இளநகர் அருகே கட்டிப்பாளை யத்தைச் சேர்ந்தவர் பாலுசாமி (50). பால் வியாபாரி.
- சம்பவத்தன்று இரவு இவர் மாவுரெட்டிப்பட்டி அருகே வடுகபாளையத்தில் உள்ள முனியப்ப சாமி கோவில் திருவிழாவிற்கு சென்றார்.
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம், வேலகவுண்டம்பட்டி அருகே உள்ள இளநகர் அருகே கட்டிப்பாளை யத்தைச் சேர்ந்தவர் பாலுசாமி (50). பால் வியாபாரி. சம்பவத்தன்று இரவு இவர் மாவுரெட்டிப்பட்டி அருகே வடுகபாளையத்தில் உள்ள முனியப்ப சாமி கோவில் திருவிழாவிற்கு சென்றார். பின்னர் மீண்டும் வீட்டுக்கு செல்ல தனது மொபட்டில் வந்து கொண்டு இருந்தார். அப்போது அவருக்கு பின்னால் மொபட்டில் வந்த அடையாளம் தெரியாத இருவரில் பின்னால் அமர்ந்து வந்த ஒருவர் கட்டையால் பாலுசாமியை தாக்கி விட்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர். இதில் படுகாயமடைந்த அவர் உடனடியாக அவரது உறவினர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளார். அங்கு வந்த அவரது உறவினர்கள் அவரை காப்பாற்றி நாமக்கல்லில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு பாலுசாமி சிகிச்சை பெற்று வருகிறார். சம்பவம் குறித்து வேலகவுண்டம் பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து பாலுசாமியை கட்டையால் தாக்கிவிட்டு தலைமறைவான நபர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பரமத்தி நகருக்குள் வந்த கார் ஒன்று நிலை தடுமாறி சாலை ஓரத்தில் நின்று கொண்டிருந்த சாந்தி மீது மோதியூள்ளது.
- இதில் அவருக்கு தலையில் பலத்த அடிபட்டு படுகாயம் அடைந்த சாந்தியை காப்பாற்றி கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
பரமத்தி வேலூர்:
கரூர் மாவட்டம், புகளூர் அருகே உள்ள செம்படாபாளையத்தை சேர்ந்தவர் நல்லசாமி (52 ) பைனான்ஸ் ஒன்றில் மேனேஜராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி சாந்தி (47) இவர்கள் இருவரும் கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 8-ந் தேதி பரமத்தி அங்காளம்மன் கோவிலுக்கு செல்லும் சாலையில் ஓரமாக நின்று கொண்டிருந்தனர். அப்போது பரமத்தி நகருக்குள் வந்த கார் ஒன்று நிலை தடுமாறி சாலை ஓரத்தில் நின்று கொண்டிருந்த சாந்தி மீது மோதியூள்ளது. இதில் அவருக்கு தலையில் பலத்த அடிபட்டு படுகாயம் அடைந்த சாந்தியை காப்பாற்றி கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சம்பவம் குறித்து பரமத்தி போலீசார் வழக்கு பதிவு செய்து காரை ஓட்டி வந்து விபத்தை ஏற்படுத்திய தலைமை காவலர் சுப்பிரமணி (50) என்பவரை கைது செய்தனர்.இந்த விபத்து குறித்த வழக்கு பரமத்தி சார்பு நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில் காரை ஓட்டி வந்து விபத்தை ஏற்படுத்திய தலைமை காவலருக்கு பரமத்தி சார்பு நீதிமன்ற நீதிபதி கண்ணன் ஓராண்டு சிறை தண்டனையும், ரூ.500 அபராதம் விதித்து உத்தரவிட்டார். காரை ஓட்டி வந்து விபத்தை ஏற்படுத்திய தலைமை காவலருக்கு நீதிமன்றம் ஓராண்டு சிறை விதிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தலைமை காவலர் கடைசியாக வேலகவுண்டம்பட்டி போலீஸ் நிலையத்தில் பணியாற்றி வந்தார்.
- குமாரபாளையத்தில் ரம்மி மோகத்தால் வீட்டில் இருந்த 1.60 லட்சம் பணத்துடன் தொழிலாளி மாயமானார்.
- மனைவி போலீசில் புகார்
குமாரபாளையம்:
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் காவேரி நகர் பூசாரிக்காடு பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் (34). இவரது மனைவி கார்த்திகா (29). இருவரும் கூலி வேலைக்கு சென்று வருகின்றனர்.
மணிகண்டன் ரம்மி விளையாட்டில் அதிக ஈடுபாடு கொண்டிருந்தார். இதனால் அதிக பணத்தையும் இழந்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் மணிகண்டன் திடீரென மாயமானார். அவரை எங்கு தேடியும் கிடைக்காத நிலையில் மணிகண்டனின் மனைவி கார்த்திகா குமார பாளையம் போலீசில் இதுகுறித்து புகார் அளித்தார். அந்த புகாரில் கடந்த 27-ந் தேதி முதல் தனது கணவரை காணவில்லை எனவும், போகும்போது வீட்டில் இருந்த ரூ.1 லட்சத்து 60 ஆயிரம் பணத்தை எடுத்து சென்று விட்டதாகவும் தெரிவித்துள்ளார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் மணிகண்டனை தேடி வருகின்றனர்.
- கலைஞர் நூற்றாண்டு விழாவையொட்டி லத்துவாடி அறிஞர் அண்ணா அரசு கலை கல்லூரி சார்பில் மாரத்தான் போட்டி நாமக்கல்லில் நடைபெற்றது.
- நாமக்கல் தெற்கு அரசு மேல்நிலைப்பள்ளி முன்பு மாரத்தான் தொடங்கியது.
நாமக்கல்:
கலைஞர் நூற்றாண்டு விழாவையொட்டி லத்துவாடி அறிஞர் அண்ணா அரசு கலை கல்லூரி சார்பில் மாரத்தான் போட்டி நாமக்கல்லில் நடைபெற்றது.
கல்லூரி முதல்வர் ராஜா முன்னிலை வகித்தார். நாமக்கல் தெற்கு அரசு மேல்நிலைப்பள்ளி முன்பு மாரத்தான் தொடங்கியது. இப்போட்டியினை நாமக்கல் ரோட்டரி கிளப் தலைவர் ராகேஷ், நகராட்சி தலைவர் கலாநிதி ஆகியோர் கொடி அசைத்து தொடங்கி வைத்தனர். ஆண்- பெண்களுக்கு தனித்தனியாக போட்டிகள் நடத்தப்பட்டன.
5 கிலோமீட்டர் தூரம் நடைபெற்ற போட்டி, நாமக்கல் தெற்கு அரசு மேல்நிலைப்பள்ளியில் தொடங்கி கொண்டி செட்டி பட்டி வழியாக அறிஞர் அண்ணா அரசு கலை கல்லூரியை வந்தடைந்தது.
இப்போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசாக ரொக்கத்தொகை மற்றும் பங்கேற்ற அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டன. இப்போட்டியில் 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
- நாமக்கல் மண்டல அளவிலான முட்டைகள் தரமாகவும், விலை சற்று குறைவாகவும் இருப்பதால் ஏற்றுமதி அதிகரித்து வருகிறது.
- ஓமன் நாட்டில் இந்திய முட்டைக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் உள்ளதால் அங்கு ஏற்றுமதியானது சற்று தடைபட்டுள்ளது.
நாமக்கல்:
நாமக்கல் மண்டலத்தில் 1,100 கோழிப்பண்ணைகள் மூலம் நாள்தோறும் 5.50 கோடி முட்டைகள் உற்பத்தியாகின்றன. இவற்றில் தமிழகம் மற்றும் பிற மாநிலங்களுக்கும், சத்துணவுக்கும் 4.50 கோடி முட்டைகள் வீதம் அனுப்பப்படுகின்றன. மீதமுள்ள ஒரு கோடி முட்டைகள் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகின்றன.
தற்போதைய நிலையில் ஓமன், கத்தார், துபாய், சவுதி அரேபியா உள்பட 9 வளைகுடா நாடுகளுக்கு மாதந்தோறும் 5 கோடி முட்டைகள் வீதம் அனுப்பப்படுகின்றன.
மலேசியா, சிங்கப்பூருக்கு 50 லட்சம் முட்டைகள் ஏற்றுமதி செய்யப்பட்ட நிலையில் பல்வேறு நிர்வாக காரணங்களால் அங்கு ஏற்றுமதி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. இதற்கிடையே கடந்த 4 மாதங்களாக இலங்கைக்கு மாதந்தோறும் 1.50 கோடி முட்டைகள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
நாமக்கல் மண்டல அளவிலான முட்டைகள் தரமாகவும், விலை சற்று குறைவாகவும் இருப்பதால் ஏற்றுமதி அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் இருந்து மாதந்தோறும் 30 கண்டெய்னர் முட்டைகள் ஏற்றுமதி செய்யப்பட்ட நிலையில் தற்போது கூடுதலாக 15 கண்டெய்னர்கள் வீதம் அனுப்பப்படுகிறது. வரும் டிசம்பர் மாதம் வரையில் இந்த ஏற்றுமதி தடையின்றி நடைபெறுவதற்கு வாய்ப்பு உள்ளது.
இதுகுறித்து அகில இந்திய முட்டை ஏற்றுமதியாளர்கள் சங்கச் செயலாளர் வல்சன் பரமேஸ்வரன் கூறியதாவது:-
இலங்கையில் முட்டையின் தேவை அதிகரித்துள்ளதால் நாமக்கல் மண்டலத்தில் இருந்து மாதந்தோறும் கூடுதலாக 15 கண்டெய்னர்கள் வீதம் (ஒரு கண்டெய்னரில் 5 லட்சம் முட்டைகள்) அதாவது சுமார் 70 லட்சம் முட்டைகள் அனுப்பப்பட்டு வருகின்றன. வளைகுடா நாடுகளுக்கு மாதம் 5 கோடி முட்டைகள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
ஓமன் நாட்டில் இந்திய முட்டைக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் உள்ளதால் அங்கு ஏற்றுமதியானது சற்று தடைபட்டுள்ளது. இலங்கைக்கு தடையின்றி முட்டை அனுப்பும் பணி நடைபெற்று வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
- பிரேமாவின் நடவடிக்கையில் போலீசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது.
- பிரேமாவை கைது செய்து நாமக்கல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சேலம் மகளிர் கிளை சிறையில் அடைக்கப்பட்டார்.
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம் மோகனூர் அருகே ஒருவந்தூர் ஊராட்சி செல்லிபாளையம் காலனியை சேர்ந்தவர் பெரியசாமி (வயது 37), கட்டிட மேஸ்திரி. இவருடைய மனைவி பிரேமா. கடந்த 23-ந் தேதி அதிகாலை 2 மணி அளவில் செல்லிப்பாளையம் பகுதியில் பெரியசாமி விபத்தில் இறந்ததாக கூறப்பட்டது. இது குறித்து மோகனூர் போலீசார் விபத்து வழக்குப்பதிவு செய்தனர். பிரேமாவின் நடவடிக்கையில் போலீசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது.
இதையடுத்து போலீசார் பிரேமாவிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். அதில், பிரேமா கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவரை கொலை செய்தது தெரியவந்தது. மேலும் பிரேமா, போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில் நான் மோகனூரில் உள்ள பேக்கரிக்கு வேலைக்கு சென்று வந்தேன். அப்போது அங்கு வேலை பார்த்த நந்திகேசவன் (25) என்பவருடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. இதை கணவர் பெரியசாமி கண்டித்தார். இதனால் சம்பவத்தன்று மோகனூர் அருகே செல்லிப்பாளையம் பகுதியில் வைத்து அவரை நந்திகேசவன் தனது நண்பருடன் சேர்ந்து கொலை செய்தார். அதன்பிறகு உறவினர்களிடம் வாகனம் மோதி கணவர் இறந்து விட்டதாக நாடகம் ஆடினேன். ஆனால் போலீசார் கண்டுபிடித்து விட்டனர் என பரபரப்பு வாக்குமூலம் அளித்தார்.
தொடர்ந்து பிரேமாவை கைது செய்து நாமக்கல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சேலம் மகளிர் கிளை சிறையில் அடைக்கப்பட்டார்.
இதையடுத்து தலைமறைவாக இருந்த கள்ளக்காதலன் நந்திகேசவன் மற்றும் கொலைக்கு உடந்தையாக இருந்த பேக்கரியில் வேலை செய்த அவரது நண்பர் ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் தாலுகா குன்னத்தூர் பகுதியை சேர்ந்த தனுஷ் (21) ஆகிய இருவரையும் மோகனூர் போலீசார் தேடி வந்தனர்.
இந்த நிலையில் மோகனூர் அடுத்த வாங்கல் பிரிவு ரோடு அருகே நின்றுகொண்டு இருந்த நந்திகேசவனையும், தனுஷையும் மோகனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் தங்கவேல் தலைமையிலான போலீசார் கைது செய்தனர். பின்னர் இருவரும் நாமக்கல் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
குமாரபாளையம்
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே சேலம் - கோவை புறவழிச்சாலை, சிவசக்தி நகரில் வசிப்பவர் சுசீலா (வயது 45). சம்பவத்தன்று தனது தந்தைக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் அவருக்கு மருத்துவம் பார்க்க தனது 2 1/2 பவுன் நகையை அடகு வைப்பதற்ாக ஒரு பையில் வைத்துக் கொண்டு வங்கிக்கு சென்று கொண்டிருந்தார். புறவழிச்சாலை தனியார் அபார்ட்மெண்ட் பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தபோது அவரை பின்தொடர்ந்து இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர் சுசீலா கையில் இருந்த பையை பிடுங்கிக் கொண்டு தப்பியோடி விட்டார். இதுகுறித்து குமாரபாளையம் போலீசில் சுசீலா புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்த விசாரணை நடத்தி வருகின்றனர்.






