வேலகவுண்டன்பட்டி அருகே பட்டதாரி இளம் பெண் மாயம்

கடந்த 26-ந் தேதி இரவு குடும்பத்தினர் அனைவரும் சாப்பிட்டு விட்டு தூங்க சென்றனர். மறுநாள் காலை எழுந்து பார்த்தபோது தூங்கிக் கொண்டிருந்த நவீனாவை காணவில்லை.
வேலகவுண்டன்பட்டி அருகே பட்டதாரி இளம் பெண் மாயம்
Published on

பரமத்தி வேலூர்:

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே ஆயிபா ளையம் தேவேந்திரன் தெரு பகுதியை சேர்ந்தவர் ராஜா, இவரது மனைவி லட்சுமி. இவர்களது மூத்த மகள் கவிதா (30), இளைய மகள் நவீனா (26) இவர் பொறியியல் கல்லூரி பட்டதாரி.

மூத்த மகள் கவிதாவை வேலகவுண்டன்பட்டி அருகே உள்ள முசிறி காட்டுக்காடு தேவேந்திரன் தெருவை சேர்ந்த முருகேசன் என்பவருக்கு திருமணம் செய்து வைத்தனர்.

இந்நிலையில் கவிதா வின் தங்கை நவீனா கடந்த 2 வாரமாக தனது

அக்கா கவிதா வீட்டில் தங்கி இருந்தார். இந்நிலை யில் கடந்த 26-ந் தேதி இரவு குடும்பத்தினர் அனைவரும் சாப்பிட்டு விட்டு தூங்க சென்றனர். மறுநாள் காலை எழுந்து பார்த்தபோது தூங்கிக் கொண்டிருந்த நவீனாவை காணவில்லை.

இது குறித்து கவிதா தனது தாய் லட்சுமிக்கு தகவல் தெரிவித்துள்ளார். லட்சுமி உறவினர்கள் வீடுகளிலும், நண்பர்கள் வீடுகளிலும் மற்றும் பல்வேறு பகுதிகளுக்கும் சென்று தேடிப்பார்த்துள்ளார். ஆனால் நவீனாவை கண்டு பிடிக்க முடியவில்லை.

இதுகுறித்து லட்சுமி வேலகவுண்டன்பட்டி போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கங்காதரன் வழக்கு பதிவு செய்து நவீனா இரவில் எங்காவது தானாகவே சென்று விட்டாரா? அல்லது இரவு நேரத்தில் வெளியில் வந்த போது எவராவது கடத்திச் சென்று விட்டனரா? என்று தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com