என் மலர்
நாமக்கல்
- பரிசோதனை செய்த டாக்டர்கள் ஷாலினி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
- போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா கூடச்சேரி அருகே மேலப்பட்டி பகுதியை சேர்ந்தவர் குணசேகரன் (41). இவர் அப்பகுதியில் உள்ள ஒரு கோழி பண்ணையில் மேலாளராக பணியாற்றி வருகிறார்.
இவரது மகள் ஷாலினி (13). இவர் வசந்தபுரத்தில் உள்ள தனியார் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார்.
இந்நிலையில் சம்பவத்தன்று தேர்வில் மதிப்பெண் குறைந்துவிட்டதாக குணசேகரன் மனைவி தீபா மகள் ஷாலினியை திட்டியுள்ளார்.
இதனால் மனமுடைந்த ஷாலினி பள்ளிக்கு சென்று விட்டு மாலை வீட்டிற்கு வந்துள்ளார்.
அப்போது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கு மாட்டிக் கொண்டார். வெளியே சென்று விட்டு வீட்டிற்கு வந்த தீபா ஷாலினி தூக்கில் தொங்கிக் கொண்டிருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
பின்னர் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் ஷாலினியை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் பரமத்திவேலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் ஷாலினி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதை கேட்டு பெற்றோர் கதறி துடித்தனர்.
இதுகுறித்து குணசேகரன் நல்லூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- நாமக்கல் மாணிக்கம்பா ளையத்தை அடுத்த இடுப்பு லியை சேர்ந்தவர் செந்தில்குமார் (35). இவர் தனியார் கோழிப்பண் ணையில் மேலாளராக பணியாற்றி வந்தார்.
- தெரியாத வாகனம் ஒன்று செந்தில்கு மார் ஓட்டிச் சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டது.
நாமக்கல்:
நாமக்கல் மாணிக்கம்பா ளையத்தை அடுத்த இடுப்பு லியை சேர்ந்தவர் செந்தில்குமார் (35).
இவர் தனியார் கோழிப்பண் ணையில் மேலாளராக பணியாற்றி வந்தார்.
இந்நிலையில் நேற்று நாமக்கல்லில் இருந்து இடுப்புலிக்கு மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். அப்போது எர்ணாபுரம் சாலையில் வரும்போது அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று செந்தில்கு மார் ஓட்டிச் சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டது.
இதில் பலத்த காயம் அடைந்த செந்தில்குமாரை அருகில் இருந்தவர்கள் மீட்டு நாமக்கல்லில் உள்ள தனியார் மருத்துவனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த செந்தில்குமார் இன்று காலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த விபத்து குறித்து நல்லிபாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.
- நாமக்கல்லை தலைமை யிடமாக கொண்டு தென் மண்டல எஸ்.பி.ஜி. டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கம் செயல்பட்டு வருகிறது.
- எல்.பி.ஜி. கியாஸ் டேங்கர் லாரிகள் ஐ.ஓ.சி., பி.பி.சி., எச்.பி.சி. ஆகிய 3 ஆயில் நிறுவனங்களுடன் வாடகை ஒப்பந்தம் ஏற்படுத்தி கொண்டு சமையல் எரிவாயுவை எடுத்து செல்லும் பணியில் ஈடுபட்டு வருகின்றன.
நாமக்கல்:
நாமக்கல்லை தலைமை யிடமாக கொண்டு தென் மண்டல எஸ்.பி.ஜி. டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கம் செயல்பட்டு வருகிறது. சங்க உறுப்பினர்களின் எல்.பி.ஜி. கியாஸ் டேங்கர் லாரிகள் ஐ.ஓ.சி., பி.பி.சி., எச்.பி.சி. ஆகிய 3 ஆயில் நிறுவனங்களுடன் வாடகை ஒப்பந்தம் ஏற்படுத்தி கொண்டு சமையல் எரிவாயுவை எடுத்து செல்லும் பணியில் ஈடுபட்டு வருகின்றன.
டெண்டர் நீட்டிக்க கோரிக்கை
இதற்காக 5 ஆண்டுக்கு ஒரு முறை ஆயில் நிறுவனங்கள் டெண்டர் மூலம் எல்.பி.ஜி. டேங்கர் லாரிகளுக்கு வேலைவாய்ப்பு அளிக்கிறது. தற்போது நடைமுறையில் உள்ள டெண்டர் 2023 ஆகஸ்ட் மாதத்துடன் முடிவடைந்து இருந்ததால் டெண்டரை மேலும் 3 ஆண்டுக்கு நீட்டிக்க வேண்டும் என சங்கம் சார்பில் ஆயில் நிறுவன உயர் அதிகாரிகளிடம் கடந்த ஆண்டு கோரிக்கை வைக்கப்பட்டது.
இது தொடர்பாக மத்திய இணை அமைச்சர் முருகன், பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை ஆகியோரை சந்தித்தும் அடிக்கடி சங்க நிர்வாகிகள் கோரிக்கை மனு அளித்து வந்தனர். இந்த நிலையில் 3 ஆயில் நிறுவனங்களும் தற்போது நடைமுறையில் உள்ள டெண்டர் காலத்தை மேலும் 2 ஆண்டுகளுக்கு நீட்டிப்பு செய்து கடந்த மார்ச் மாதம் உத்தரவிட்டிருந்தது.
ஒப்பந்தம் கையெழுத்து
நேற்றுடன் நடைமுறையில் உள்ள டெண்டர் முடிவடைந்துள்ளதால் கால நீட்டிப்பு செய்யப்பட்ட ஒப்பந்தத்துக்கு ஐ.ஓ.சி. ஆயில் நிறுவன உயர் அதிகாரிகள் கையெழுத்திட நேற்று நாமக்கல் வந்தனர்.
செல்லப்பம்பட்டியில் உள்ள எல்.பி.ஜி. டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்க பெட்ரோல் பங்க் வளாகத்தில் ஆயில் நிறுவன உயர் அதிகாரிகள் சங்கத்தலைவர் எஸ்.எல்.எஸ்.சுந்தர்ராஜன் முன்னிலையில் சங்க உறுப்பினர்களின் வாகனங்களுக்கு ஒப்பந்த காலத்தை மேலும் 2 ஆண்டுகளுக்கு நீட்டிப்பு செய்து கடிதம் வழங்கினர்.
பின்னர் தென்மண்டல எல்.பி.ஜி. டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் சுந்தர்ரான் நிருபர்களிடம் கூறியிருப்பதாவது:-
சங்கத்தின் சார்பில் கியாஸ் டேங்கர் லாரிகளுக்கான வாடகை டெண்டர் காலத்தை நீட்டிக்க வேண்டும் என மத்திய இணை அமைச்சர் முருகன், பா.ஜ. தலைவர் அண்ணாமலை ஆகியோரை நேரில் சந்தித்து கோரிக்கை வைத்தோம். அது ஏற்கப்பட்டு 2 ஆண்டுகள் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. அதன்படி ஆயில் நிறுவனங்கள் 2025-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் வரை ஒப்பந்த காலத்தை நீட்டிப்பு செய்துள்ளது.
இதன் மூலம் தென் மண்டலம் மற்றும் பிற மண்டலங்களில் இயக்கப்படும் 7,500 எல்.பி.ஜி. வாகனங்களுக்கு ஒப்பந்த காலம் மேலும் 2 ஆண்டுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதற்காக மத்திய அரசுக்கு சங்கத்தின் சார்பில் நன்றி தெரிவித்து கொள்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- நாமக்கல் மாவட்டம் பர மத்தி அருகே உள்ள கீழ்சாத் தம்பூர் கிராமத்தில் வன்னி மர கணபதி, செல்லாண் டியம்மன், கருப்பண்ண சுவாமி, மதுரை வீர சாமி, புற்றுக்கண் நாகராஜா உள்ளிட்ட பரிவார கோவில்க ளின் மகா கும்பாபிஷேக விழா நாளை மறுநாள் (3-ந் தேதி) நடைபெறுகிறது.
- நேற்று (31-ந் தேதி)காலை 8 மணிக்கு அக்னி சங்கிரகண மும், தீர்த்த சங்கிரகணமும், மாலை 5 மணிக்கு முளைப்பாரி அழைத்தலும் மாலை முதல் கால யாக பூஜையும் நடைபெற்றது.
பரமத்தி வேலூர்:
நாமக்கல் மாவட்டம் பர மத்தி அருகே உள்ள கீழ்சாத் தம்பூர் கிராமத்தில் வன்னி மர கணபதி, செல்லாண் டியம்மன், கருப்பண்ண சுவாமி, மதுரை வீர சாமி, புற்றுக்கண் நாகராஜா உள்ளிட்ட பரிவார கோவில்க ளின் மகா கும்பாபிஷேக விழா நாளை மறுநாள் (3-ந் தேதி) நடைபெறுகிறது.
விழாவை முன்னிட்டு கடந்த 28-ந் தேதி இரவு கிராம சாந்தியும், 29-ந் தேதி காலை 7-மணிக்கு விநாயகர் வழி பாடு, கணபதி ஹோமம், நவநாயகர் யாகம், தீபாரா தனையும், மாலை 6- மணிக்கு பஞ்ச காவ்யம், வாஸ்து பூஜையும், 30-ந் தேதி காலை 7- மணிக்கு சாந்தி ஹோமம்,திரவ்யாகுதி மற்றும் பூர்ணாகுதியும், மாலை 6- மணிக்கு சுதர்சன யாகம், மகாலட்சுமி யாகமும் நடைபெற்றது.
நேற்று (31-ந் தேதி)காலை 8 மணிக்கு அக்னி சங்கிரகண மும், தீர்த்த சங்கிரகணமும், மாலை 5 மணிக்கு முளைப்பாரி அழைத்தலும் மாலை முதல் கால யாக பூஜையும் நடைபெற்றது.
இன்று வெள்ளிக்கிழமை காலை பக்தர்கள் காவிரி ஆற்றுக்கு சென்று புனித நீராடி யானை, குதிரை, ஒட்டகம், பசு ஆகியவற்றுடன் தீர்த்த குடங்களுடன் எடுத்து வரும் நிகழ்ச்சியும், சலங்கை ஆட்டமும், இரண்டாம் கால யாக பூஜையும், மாலை 6 மணிக்கு மேல் மூன்றாம் கால யாக பூஜையும், கோபுர கலசம் வைத்தல் மற்றும் விமான கண் திறப்பும், ஈசன் வள்ளி கும்மி மற்றும் கொங்கு ஒயிலாட்டம் நடைபெறுகிறது.
நாளை (2-ந் தேதி) காலை ஐந்தாம் கால யாக பூஜையும், இரவு அஷ்ட பந்தன மருந்து சாற்றுதலும், நாட்டுப்புற கலை நிகழ்ச்சி யும் நடைபெறுகிறது.
நாளை மறுநாள் (3-ந் தேதி) காலை 5-மணிக்கு விநாயகர் வழிபாடு, பஞ்சகவ்யம், பிம்பசுத்தியும், 9-மணிக்கு யாத்ரா தானம், கடம் புறப்பாடும், 9.30 மணிக்கு விமான ராஜ கோபுர மகா கும்பா பிஷேகமும், 10-மணிக்கு வன்னிமர கணபதி, செல்லாண்டி யம்மன், கருப்பண்ணசாமி, மதுரை வீர சாமி, புற்றுக்கண் நாக ராஜா உள்ளிட்ட அனைத்து பரிவார மூல மூர்த்திகளுக்கு மகா கும்பாபிஷேகமும் நடைபெறுகிறது. அதனை தொடர்ந்து மகா அபிஷே கம், தசதானம், தசதரிசனம், கோபூஜை மற்றும் பிரசாதம் வழங்கும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.
விழாவிற்கான ஏற்பாடு களை கீழ்சாத்தம்பூர் செல்லாண்டியம்மன் கோவில் பரம்பரை தர்ம கர்த்தா, கோவில் நிர்வாக குழுவினர் மற்றும் விலை யங்குலக் குடிப்பாட்டு பங்காளிகள் செய்து வருகின்றனர்.
- 107 வாக னங்களுக்கு சோதனை அறிக்கை வழங்கப்பட்டது.
- அதில் 15 சொந்த வாகனங்கள் வாடகை வாகனங்களாக இயக்கப்பட்டது சோதனை யில் உறுதி செய்யப்பட்டது.
ராசிபுரம்:
நாமக்கல் கலெக்டர் உமா உத்தரவின் பேரில் நாமக்கல் வடக்கு வட்டார போக்குவரத்து அலுவலர் முருகேசன் தலைமையில் ராசிபுரம் மோட்டார் வாகன ஆய்வாளர் நித்யா ராசிபுரம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த மாதம் வாகன தணிக்கை செய்தார்.
அப்போது 107 வாக னங்களுக்கு சோதனை அறிக்கை வழங்கப்பட்டது. அதில் 15 சொந்த வாகனங்கள் வாடகை வாகனங்களாக இயக்கப்பட்டது சோதனை யில் உறுதி செய்யப்பட்டது. இதையொட்டி அந்த 15 வாகனங்களும் சிறைபிடிக்கப்பட்டது. சிறைபிடிக்கப்பட்ட வாகனங்களுக்கு அபராத தொகை மற்றும் சாலை வரியாக ரூ. 2 லட்சத்து 67 ஆயிரம் வசூலிக்கப்பட்டது. இதர வாகனங்களுக்கு சாலை வரியாக ரூ.65 ஆயிரத்து 300-ம், இணக்க கட்டணமாக ரூ.5 லட்சத்து 52 ஆயிரத்து 500-ம் நிர்ணயிக்கப்பட்டது.
இந்த தகவலை ராசி புரம் மோட்டார் வாகன ஆய்வா ளர் நித்யா தெரிவித்தார்.
- ராசிபுரம் மற்றும் சுற்று வட்டாரங்களில் லேசான மழை பெய்தது.
- இரவு நேரத்தில் குளிர்ந்த சீதோஷ்ண நிலை நிலவியது. மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
ராசிபுரம்:
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பகுதியில் கடந்த சில நாட்களாக பகல் நேரத்தில் அக்னி நட்சத்திர வெயில் போல் அடித்து வந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் ராசிபுரம் மற்றும் சுற்று வட்டாரங்களில் லேசான மழை பெய்தது. நேற்று பகல் நேரத்தில் வெயில் வாட்டி வதைத்தது.
பகல் நேரத்தில் வெயிலின் தாக்கம் அதிக அளவில் காணப்பட்ட போதிலும் நேற்று இரவு ராசிபுரம் ஆண்டகளூர்கேட், காக்காவேரி, குருக்கபுரம் மசக்காளிப்பட்டி, புதுப்பாளையம், கட்டனாச்சம்பட்டி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் கனமழை பெய்தது. இதன் காரணமாக வயல்களிலும் ஆங்காங்கே உள்ள பள்ளங்களிலும் தண்ணீர் தேங்கி நின்றது. இரவு நேரத்தில் குளிர்ந்த சீதோஷ்ண நிலை நிலவியது. மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
- விவசாய மேம்பாட்டுக் குழுவிற்கு முன் பருவ மற்றும் பின் பருவ பயிற்சி திட்டம்’’ குறித்து ஆவல்நாய்க்கன்பட்டி கிராம வேளாண் முன்னேற்றக் குழுவிற்கு விவசாயிகள் பயிற்சி வழங்கப்பட்டது.
- உழவன் செயலி பயன்களை விளக்கமளித்து பதிவேற்றம் செய்தும் நன்றி கூறி இப்பயிற்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
நாமக்கல் வட்டார வேளாண்மைத்துறையின் மூலம் செயல்படுத்தப்படும் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை (அட்மா) திட்டத்தின் கீழ் மாநில வேளாண் வளர்ச்சித் திட்டம் மூலம் 'கிராம அளவிலான விவசாய மேம்பாட்டுக் குழுவிற்கு முன் பருவ மற்றும் பின் பருவ பயிற்சி திட்டம்'' குறித்து ஆவல்நாய்க்கன்பட்டி கிராம வேளாண் முன்னேற்றக் குழுவிற்கு விவசாயிகள் பயிற்சி வழங்கப்பட்டது. அதுசமயம் வேளாண்மை உதவி இயக்குநர் சித்ரா விவசாயிகளின் வருமானத்தை அதிகரித்து அவர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்திட பல்வேறு முன்னோடித் திட்டங்களில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கி ணைந்த வேளாண்மை வளர்ச்சித் திட்டம், முதல்-அமைச்சரின் மானாவாரி நில மேம்பாட்டு இயக்கம், தமிழ்நாடு சிறுதானிய இயக்கம், ஒருங்கிணைந்த பண்ணையம், பயறு பெருக்குத் திட்டம் உள்பட பல முன்னோடி நலத்திட்டங்கள் செயல்படுத்தபடுகிறது. மேலும் முக்கிய திட்டங்களில் உள்ள இடை வெளியினை குறைக்கும் வகையில் விவசாயிகளின் உடனடித் தேவைகளைப் பூர்த்தி செய்திடவும் அவர்க ளின் வருமானத்தை உயர்த்திடவும் பல்வேறு கூறுகளை உள்ளடக்கிய "மாநில வேளாண்மை வளர்ச்சித் திட்டம்" கலை ஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சித் திட்டத்தில் ஒருங்கிணைந்து செயல்படுத்தப்படுகின்றது என்று விளக்கமளித்து பயிற்சி வழங்கினார். இதில் உடன் உதவி வேளாண்மை அலுவலர் பெரியசாமி துறைசார்ந்த மானியத்திட்டங்களை எடுத்துக்கூறினார். அட்மா திட்ட உழவனின் நண்பன் நந்தகுமார் அட்மா திட்ட செயல்பாடுகள் மற்றும் இக்குழுவின் செயல்பாடுகள் குறித்து எடுத்து கூறினார். அட்மா திட்ட வட்டாரத் தொழில்நுட்ப மேலாளர். ரமேஷ் மற்றும் உதவி தொழில் நுட்ப மேலாளர். கவிசங்கர் ஆகியோர் வருகைபுரிந்த விவசாயி களுக்கு உழவன் செயலி பயன்களை விளக்கமளித்து பதிவேற்றம் செய்தும் நன்றி கூறி இப்பயிற்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
- நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூர் திருஞா னசம்பந்தர் மடாலயத்தில் நடராஜர் அபிஷேகம் காலை 8 மணி முதல் மதியம் 12 மணி வரை நடைபெற்றது.
- 18 வகையான வாசனைத் திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது
நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூர் திருஞா னசம்பந்தர் மடாலயத்தில் நடராஜர் அபிஷேகம் காலை 8 மணி முதல் மதியம் 12 மணி வரை நடைபெற்றது. தேவாரம் - திருவாசகம் ஓதலுடன் சிவகாமசுந்தரி உடனாகிய நடராஜ பெருமா னுக்கு பால், தயிர் ,பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள், திருமஞ்சனம், பஞ்சாமிர்தம் ,தேன், விபூதி ,கரும்புச்சாறு உள்ளிட்ட 18 வகையான வாசனைத் திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது .பின்னர் சிறப்பு அலங்காரத்தில் சிவகாமசுந்தரி உடனாகிய நடராஜ பெருமான் பக்தர்க ளுக்கு காட்சி அளித்தார். மதியம் 1 மணிக்கு மகேஸ்வர பூஜை நடைபெற்றது. அதைத் தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்ன தானம் வழங்கப்பட்டது.
- தமிழக விவசாயிகள் நெல் உற்பத்தி செலவினங்களை ஒப்பிடும்போது, தமிழக அரசு இப்போது அறிவித்துள்ள, நெல்லுக்கான ஆதார விலையுடன் வ ழங்கும் ஊக்கத்தொகை மிகவும் குறைவாக உள்ளது.
- எனவே இதை உயர்த்தி வழங்க தமிழக முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நாமக்கல்:
நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் வேலுசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
2023-–24ம் ஆண்டிற்கு, நெல்லுக்கு உண்டான குறைந்தபட்ச ஆதார விலையாக சாதாரண ரக நெல் குவிண்டாலுக்கு ரூ. 2,183 எனவும், சன்ன ரக நெல் குவிண்டாலுக்கு, ரூ, 2,203 என மத்திய அரசு கொள்முதல் விலை நிர்ணயம் செய்துள்ளது.
தமிழக அரசு தமிழகத்தில் தற்போது திறக்கப்பட்ட நேரடி நெல் கொள்முதல் நிலையம் விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யும் நெல் குவிண்டால் ஒன்றுக்கு உண்டான ஆதரவு விலையுடன், தமிழக அரசின் ஊக்கத்தொகையாக, சாதாரண நெல் குவிண்டாலுக்கு ரூ. 82 கூடுதலாகவும், சன்னரக நெல் குவிண்டாலுக்கு ரூ. 107 கூடுதலாகவும் அறிவித்து விலை நிர்ணயம் செய்துள்ளது.
தமிழக அரசு அறிவித்த விலைப்படி, சாதாரண ரக நெல் குவிண்டாலுக்கு, ஊக்கத்தொகையுடன் ரூ. 2,265, சன்னரக நெல் குவிண்டாலுக்கு, ஊக்கத்தொகையுடன் ரூ. 2,310 என, செப். 1 முதல் அமல்படுத்தப்படும் என்று அறிவித்துள்ளது.
2021 சட்டசபை தேர்தலின் போது, தி.மு.க., தமிழகத்தில் ஆட்சிக்கு வந்தவுடன், விவசாயிகளின் நலன் கருதி, நெல்லுக்கு ஆதார விலை குவிண்டால் ஒன்றுக்கு ரூ. 2,500 வழங்கப்படும் என தேர்தல் வாக்குறுதி வழங்கப்பட்டுள்ளது.
தி.மு.க. அரசு ஆட்சி பொறுப்பேற்று 2 ஆண்டுகள் முடிவடைந்து மூன்றாம் ஆண்டு நடந்து வருகிறது. தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டபடி நெல்லுக்கு உண்டான விலை அறிவிக்காதது, தமிழக விவசாயிகளுக்கு மிகப்பெரிய ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 3 ஆண்டுகளாக நெல் உற்பத்தி செலவை ஒப்பிடும்போது, வேலை ஆட்கள் கூலி மிகவும் அதிகப்படியாக உயர்ந்துள்ளது. பெட்ரோல், டீசல் விலை பல மடங்கு அதிகரித்துள்து. மேலும், உரம், மருந்து அதன் மூலப்பொருட்கள் ஏற்றிவரும் வாகன வாடகையும், பல மடங்கு உயர்ந்துள்ளது.
தமிழக விவசாயிகள் நெல் உற்பத்தி செலவினங்களை ஒப்பிடும்போது, தமிழக அரசு இப்போது அறிவித்துள்ள, நெல்லுக்கான ஆதார விலையுடன் வ ழங்கும் ஊக்கத்தொகை மிகவும் குறைவாக உள்ளது. எனவே இதை உயர்த்தி வழங்க தமிழக முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
- நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர், பகுதிகளில் 7 மணிக்கு மேல் திடீரென சாரல் மழை பெய்ய ஆரம்பித்தது.
- அதனைத் தொடர்ந்து மழை சற்று வேகமாக பெய்ய ஆரம்பித்தது.
நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர், நன்செய் இடையாறு, பாலப்பட்டி, மோகனூர், பொத்தனூர், பாண்டமங்கலம், வெங்கரை, பரமத்தி, பொன்மலர்பாளையம், கொந்தளம், சேளூர், பிலிக்கல் பாளையம், குன்னத்தூர், ஆனங்கூர், வடகரையாத்தூர், கொத்தமங்கலம், சோழசிராமணி, பெருங்குறிச்சி, மணியனூர், கபிலர்மலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நேற்று இரவு சுமார் 7 மணிக்கு மேல் திடீரென சாரல் மழை பெய்ய ஆரம்பித்தது. அதனைத் தொடர்ந்து மழை சற்று வேகமாக பெய்ய ஆரம்பித்தது. இதன் காரணமாக தார் சாலை வழியாக சென்று கொண்டிருந்த இருசக்கர வாகன ஓட்டிகள், பொதுமக்கள் நனைந்து கொண்டு அவதிப்பட்டு சென்றனர். அதேபோல் சாலை ஓரங்களில் போடப்பட்டிருந்த கட்டில் கடைகள், சிற்றுண்டி கடைகள் மற்றும் பல்வேறு கடைக்காரர்கள் மழையின் காரணமாக வியாபாரம் செய்ய முடியாமல் அவதிப்பட்டனர். தொடர்ந்து வெயில் வாட்டி வதைத்த நிலையில் 2 நாட்களாக பெய்து வரும் மழையின் காரணமாக வெப்ப சீதோசன நிலை மாறி குளிர்ச்சியான சீதோசன நிலை ஏற்பட்டுள்ளது. மழையின் காரணமாக பயிர்கள் துளிர் விடும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
- நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா வெங்கரை பேரூராட்சி அலுவலகம் அருகில் உள்ள தென்னை மரத்திலும் காவிரி ஆற்றுக்கு செல்லும் வழியில் உள்ள ஒரு தென்னை மரத்திலும் ஏராளமான மலைத்தேனீக்கள் கூடு கட்டி இருந்தது.
- மலைத்தேனீக்கள் அந்த வழியாக செல்பவர்களை தீண்டி அச்சுறுத்தி வந்தது.
நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா வெங்கரை பேரூராட்சி அலுவலகம் அருகில் உள்ள தென்னை மரத்திலும் காவிரி ஆற்றுக்கு செல்லும் வழியில் உள்ள ஒரு தென்னை மரத்திலும் ஏராளமான மலைத்தேனீக்கள் கூடு கட்டி இருந்தது.
மலைத்தேனீக்கள் அந்த வழியாக செல்பவர்களை தீண்டி அச்சுறுத்தி வந்தது. அந்த பகுதியை சேர்ந்தவர்கள் வேலாயுதம்பாளையம் தீயணைப்பு துறையினரிடம் புகார் மனு கொடுத்து மலைத்தேனீக்களை அகற்றி தருமாறு கோரிக்கை விடுத்தனர். அதன் அடிப்படையில் தீயணைப்பு துறை நிலைய அலுவலர் சரவணன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சம்பந்தப்பட்ட பகுதிகளுக்கு விரைந்து சென்று அங்கு கூடு கட்டி இருந்த மலைத்தேனீக்களை தண்ணீரை பீய்ச்சி அடித்து அகற்றினார்கள். இதனால் அந்த பகுதி பொதுமக்கள் நிம்மதி அடைந்தனர்.
- இரவு நேரங்களில் இந்த விளக்குகள் ஒளிர்வதால் இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் நிலை தடுமாறி அவதிப்படுகிறார்கள்.
- திருச்செங்கோட வட்டார போக்குவரத்து அலுவலர் (பொறுப்பு) சரவணன் ஆய்வாளர் பாமாப்பி ரியாஆகியோர் அதிரடியாக திருச்செங் கோடு பஸ் நிலையத்தில் திடீர் சோதனை மேற்கொண்டனர்.
திருச்செங்கோடு:
திருச்செங்கோடு வழியாக செல்லும் பல பஸ்களிலும், தொலைதூரம் செல்லும் சில அரசு பஸ்களிலும் முன்பக்க கண்ணாடிகளில் ஒளிரும் வண்ணவிளக்குகள் கொண்ட பட்டைகள் பொருத்தியிப்பதாகவும் இரவு நேரங்களில் இந்த விளக்குகள் ஒளிர்வதால் இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் நிலை தடுமாறி அவதிப் படுவ தாக வந்த புகாரை அடுத்து
திருச்செங்கோட வட்டார
போக்குவரத்து அலுவலர்
(பொறுப்பு) சரவணன்
ஆய்வாளர் பாமாப்பி ரியாஆகியோர் அதிரடியாக திருச்செங் கோடு பஸ் நிலையத்தில் திடீர் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது10-க்கும் மேற்பட்ட தனியார் மற்றும் அரசு பஸ்களில் இருந்த வண்ணவிளக்கு பட்டைகளை அகற்றி னார்கள். பஸ் எண் வழித்தடம் மற்றும் டிரைவர், கண்டக்டர் உரிமங்களை பெற்று பதிவு செய்து கொண்டதோடு இந்த முறை அறிவுறுத்துவதோடு அடுத்த முறை பிடிபட்டால் டிரைவர் மற்றும் கண்டக்டர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தனர்.






