என் மலர்
உள்ளூர் செய்திகள்

ராசிபுரம் பகுதியில் கனத்த மழை- வயல்களில் தண்ணீர் தேங்கியது
- ராசிபுரம் மற்றும் சுற்று வட்டாரங்களில் லேசான மழை பெய்தது.
- இரவு நேரத்தில் குளிர்ந்த சீதோஷ்ண நிலை நிலவியது. மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
ராசிபுரம்:
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பகுதியில் கடந்த சில நாட்களாக பகல் நேரத்தில் அக்னி நட்சத்திர வெயில் போல் அடித்து வந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் ராசிபுரம் மற்றும் சுற்று வட்டாரங்களில் லேசான மழை பெய்தது. நேற்று பகல் நேரத்தில் வெயில் வாட்டி வதைத்தது.
பகல் நேரத்தில் வெயிலின் தாக்கம் அதிக அளவில் காணப்பட்ட போதிலும் நேற்று இரவு ராசிபுரம் ஆண்டகளூர்கேட், காக்காவேரி, குருக்கபுரம் மசக்காளிப்பட்டி, புதுப்பாளையம், கட்டனாச்சம்பட்டி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் கனமழை பெய்தது. இதன் காரணமாக வயல்களிலும் ஆங்காங்கே உள்ள பள்ளங்களிலும் தண்ணீர் தேங்கி நின்றது. இரவு நேரத்தில் குளிர்ந்த சீதோஷ்ண நிலை நிலவியது. மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
Next Story






