என் மலர்tooltip icon

    நாமக்கல்

    • நாமக்கல் நகராட்சியில் 39 வார்டுகள் உள்ளன. இப்பகுதிகளில் மழைக்கால நோய் பரவாமல் தடுக்கும் வகையில் தொடர்ச்சியாக வார்டு வாரியாக சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது.
    • நாமக்கல் நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் மழைக்கால நோய் பரவாமல் தடுக்கும் வகையில் வீதி, வீதியாக கொசு மருந்து அடிக்கும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது.

    நாமக்கல்:

    நாமக்கல் நகராட்சியில் 39 வார்டுகள் உள்ளன. இப்பகுதிகளில் மழைக்கால நோய் பரவாமல் தடுக்கும் வகையில் தொடர்ச்சியாக வார்டு வாரியாக சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது.

    நாமக்கல் நகரை பொறுத்த வரை கடந்த வாரத்தில் பலத்த மழை பெய்தது. இதனால் நகரின் பல்வேறு இடங்கங்களில் மழைநீர் தேங்கியது.

    கொசுப்புழு ஒழித்தல்

    இதையடுத்து நாமக்கல் நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் மழைக்கால நோய் பரவாமல் தடுக்கும் வகையில் வீதி, வீதியாக கொசு மருந்து அடிக்கும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது.

    மேலும் வீடு, வீடாக சென்று கொசு மருந்து அடித்தல், கொசுப்புழு ஒழித்தல் உள்ளிட்ட பணிகளில் நகராட்சி பணியாளர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள். இந்த பணி வாரம் தோறும் வார்டு வாரியாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    தினமும் 45 பணியாளர்கள் நோய் தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகம் ஏற்பட்ட 12 இடங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன.

    நகராட்சி ஆணையாளர் சென்னுகிருஷ்ணன் உத்தரவின்படி நகராட்சி பணியாளர்கள் மற்றும் தற்காலிக பணியாளர்கள் தண்ணீரில் கொசுப்புழு உற்பத்தியாகாமல் பார்த்து கொள்ளும்படி அறிவுறுத்தி வருகிறார்கள். மேலும், வீடுகளின் முன்புறம் உள்ள தொட்டிகளில் தேங்கியுள்ள தண்ணீரை அகற்றும்படி அறிவுறுத்தி வருகிறார்கள்.

    டெங்கு

    இதுகுறித்து நகராட்சி துப்புரவு ஆய்வாளர் திருமூர்த்தி கூறுகையில் மழைக் காலங்களில் கொசுவால் ஏற்படும் நோய்களை தடுக்க நகராட்சி பகுதியில் தொடர்ச்சியாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    நல்ல தண்ணீரில் உற்பத்தியாகும் கொசுக்கள் மூலம் டெங்கு பரவுகிறது. இதுதொடர்பாக மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி கொசு உற்பத்தியை தடுக்க மருந்து தெளிக்கப்படுகிறது. பொதுமக்கள் தங்கள் குடியிருப்பு பகுதியில் தண்ணீர் தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

    இதன் மூலம் டெங்கு பரவலை தடுக்க முடியும் என்றார்.

    • நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுக்கா நன்செய் இடையாறு காவேரி ஆற்றங்கரை அருகே உள்ள மூங்கில் வனத்து சங்கிலி கருப்பண்ணசாமி கோவில் திருவிழா நடைபெற்றது.
    • நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை கிடா வெட்டுதல் நிகழ்ச்சியும், பழி பூஜையும் நடைபெற்றது. அதனை தொடர்ந்து பகல் 12 மணி அளவில் அசைவ பூஜை நடைபெற்றது.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுக்கா நன்செய் இடையாறு காவேரி ஆற்றங்கரை அருகே உள்ள மூங்கில் வனத்து சங்கிலி கருப்பண்ணசாமி கோவில் திருவிழா நடைபெற்றது. விழாவை முன்னிட்டு கடந்த வெள்ளிக்கிழமை அன்று இரவு சங்கிலி கருப்பண்ணசாமி, பொன்னாச்சி அம்மன், வள்ளி தெய்வானை சமேத சுப்ரமணியர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. நேற்றுமுன்தினம் சனிக்கிழமை காலை சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் காவிரி ஆற்றுக்கு சென்று புனித நீராடி தீர்த்தக் குடங்களுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு தீர்த்தக் குடங்களுடன் மேள தாளங்கள் முழங்க ஊர்வலமாக கோவிலை வந்தடைந்தனர். அதனைத் தொடர்ந்து பச்சை பூஜையும்,அபிஷேக ஆராதனையும் நடைபெ ற்றது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை கிடா வெட்டுதல் நிகழ்ச்சியும், பழி பூஜையும் நடைபெற்றது. அதனை தொடர்ந்து பகல் 12 மணி அளவில் அசைவ பூஜை நடைபெற்றது. இதில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சங்கிலி கருப்பண்ணசாமி மற்றும் பரிவார தெய்வங்களை தரிசனம் செய்து அருள் பெற்றனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. அதனை தொடர்ந்து பக்தர்களுக்கு அசைவ அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவுக்கான ஏற்பாடுகளை ஆலய திருப்புணிகுழு, குடிப்பட்டு மக்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.

    • அடையாளம் தெரியாத 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் வீட்டுக்குள் இருந்து வேகமாக ஓடி உள்ளார்.
    • வீட்டில் பீரோவில் வைத்திருந்த நகைகளை பார்த்தபோது 3 பவுன் தங்கச் செயின், 2 பவுன் தங்க கைச்செயின் என மொத்தம் 5 பவுனை திருடி சென்றிருப்பது தெரிய வந்தது.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம் எம். ராசாம்பாளையம் பகுதியைச்சேர்ந்தவர் பாவாயி (57).இவர் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 12-ந் தேதி அன்று இரவு 9 மணி அளவில் தூங்கி கொண்டிருந்தார். அப்போது அடையாளம் தெரியாத 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் வீட்டுக்குள் இருந்து வேகமாக ஓடி உள்ளார்.

    அதை பார்த்த பாவாயி திருடன், திருடன் என்று சத்தம் போட்டுள்ளார். ஆனால் அதற்குள் அந்த வாலிபர் தப்பி ஓடி மறைந்து விட்டார். பாவாயி வீட்டில் பீரோவில் வைத்திருந்த நகைகளை பார்த்தபோது 3 பவுன் தங்கச் செயின், 2 பவுன் தங்க கைச்செயின் என மொத்தம் 5 பவுனை திருடி சென்றிருப்பது தெரிய வந்தது.

    இது குறித்து பாவாயி மோகனூர் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீஸ் சப் -இன்ஸ்பெக்டர் நடராஜன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தார்.

    இந்நிலையில் விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே நெடுங்குளம் ஈஸ்வரி அம்மன் கோவில் தெரு பகுதியைச் சேர்ந்த ராஜா என்பவரது மகன் சதீஷ்குமார் (31) என்பவரை கைது செய்து ஏற்கனவே சிறையில் அடைத்தனர்.

    இந்நிலையில் தீவிர விசாரணை நடத்தியதில் மற்றொரு குற்றவாளியான நாமக்கல் வீசாணம் வீனஸ் காலனியைச் சேர்ந்த சக்திவேல் மகன் மணிபாரதி (24) என்பவரை நேற்று கைது செய்து அவரிடம் இருந்து 10 பவுன் தங்க நகைகளை பறிமுதல் செய்து நாமக்கல் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு நீதிபதியின் உத்தரவின் பேரில் சிறையில் அடைக்கப்பட்டார்.

    • குழுக்கூட்டத்திற்கு விவசாயிகள் ஆலோசனைக் குழு உறுப்பினர்கள், உழவனின் நண்பர்கள் மற்றும் தொழில் நுட்ப வல்லுநர்கள் பங்கேற்றனர்.
    • துறை சார்ந்த பயிற்சிகள், இடுபொருள் குறித்தும், உழவர் சந்தை, சேமிப்பு கிடங்கு குறித்தும் வருகை புரிந்த விவசாயிகள் ஆலோசனைக்குழு உறுப்பினர்களுக்கும் உழவனின் நண்பர்களுக்கும்விரிவாக விளக்கமளிக்கப்பட்டது.

    நாமக்கல்:

    நாமக்கல் ஊராட்சி ஒன்றிய கூட்டரங்கில் வட்டார தொழில் நுட்ப வல்லுநர்கள் குழு, மற்றும் வட்டார விவசாயிகள் ஆலோசனைக்குழு கூட்டம் நடைபெற்றது.

    நாமக்கல் வட்டார தொழில் நுட்ப வல்லுநர்கள் குழு திட்ட ஒருங்கிணைப்பாளர் மற்றும் வேளாண்மை உதவி இயக்குநர் சித்ரா முன்னிலை வகித்தார்.

    விவசாயிகள் ஆலோசனைக் குழுத் தலைவர் பழனிவேல், தலைமைவகித்தார். குழுக்கூட்டத்திற்கு விவசாயிகள் ஆலோசனைக் குழு உறுப்பினர்கள், உழவனின் நண்பர்கள் மற்றும் தொழில் நுட்ப வல்லுநர்கள் பங்கேற்றனர்.

    கூட்டத்தில் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை திட்டத்தின் செயல்பாடுகள் திட்டநோக்கம், திட்டத்தின் வாயிலாக விவசாயிகளுக்கு சென்றடையும் தொழில் நுட்பங்கள் குறித்தும், பயிற்சி, கண்டுணர்வு பயணம், செயல்விளக்கம், பண்ணைப்பள்ளி, போன்ற திட்டப்பணிகள் குறித்தும் விரிவாக விளக்கமளிக்கப்பட்டது.

    மேலும் வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை, கால்நடை பராமரிப்புத் துறை, வேளாண்மை பொறியியல் துறை, பட்டுவளர்ச்சித் துறை, வேளாண்மை விற்பனை மற்றும் வணிகத் துறையின் மூலம் வழங்கப்படும் மானியத் திட்டங்கள் வழங்கப்படும் தடுப்பூசி முகாம்கள், கால்நடைகளுக்கு ஏற்படும் நோய்கள் மற்றும் தடுப்பு முறைகள். துறை சார்ந்த பயிற்சிகள், இடுபொருள் குறித்தும், உழவர் சந்தை, சேமிப்பு கிடங்கு குறித்தும் வருகை புரிந்த விவசாயிகள் ஆலோசனைக்குழு உறுப்பினர்களுக்கும் உழவனின் நண்பர்களுக்கும்விரிவாக விளக்கமளிக்கப்பட்டது.

    கூட்டத்தில் நாமக்கல் வட்டார வேளாண்மை அலுவலர் மோகன், கால்நடை உதவி மருத்துவர், வெள்ளைசாமி, பட்டு உதவி ஆய்வாளர் ஜெயலட்சுமி, வேளாண்மை விற்பனை மற்றும் வணிகத்துறை உதவி வேளாண்மை அலுவலர் மலர்கொடி, ஆகியோர் பங்கேற்று துறை சார்ந்த மானியத்திட்டங்கள், தொழில்நுட்பம் சார்ந்த சந்தேகங்களுக்கு விளக்கமளித்தனர்.

    மேலும் அட்மா திட்ட வட்டார தொழில் நுட்ப மேலாளர் ரமேஷ் உதவி தொழில் நுட்ப மேலாளர் கவிசங்கர் அட்மா திட்ட பணியின் முன்னேற்றம் குறித்தும் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்தும் அதன் செயல்பாடுகள் குறித்தும், உழவன் செயலி செயல்பாடுகள், பயன்கள் குறித்தும் விளக்கமளித்தார்.

    • நாமக்கல் மாவட்டம் வளப்பூர் நாடு பஞ்சாயத்து பகுதியில் ஆகாய நீர்வீழ்ச்சி அமைந்துள்ளது. மூலிகைகள் அடங்கிய சுற்றுலாத்தலமாக கொல்லிமலை விளங்கி வருகிறது.
    • கொல்லிமலை பகுதியில் தொடர்ந்து 5 நாட்களாக மழை பெய்து வருவதால் கொல்லிமலை பகுதியில் உள்ள ஆறுகளில் நீர் வரத்து அதிகரித்துள்ளது.

    கொல்லிமலை:

    கொல்லிமலை ஆகாய நீர்வீழ்ச்சிக்கு சுற்றுலா பயணிகள் செல்லவும் குளிக்கவும் தடை விதிக்கப்பட்டு வனத்துறையினர் அறிவித்துள்ளனர்.

    நாமக்கல் மாவட்டம் வளப்பூர் நாடு பஞ்சாயத்து பகுதியில் ஆகாய நீர்வீழ்ச்சி அமைந்துள்ளது. மூலிகைகள் அடங்கிய சுற்றுலாத்தலமாக கொல்லிமலை விளங்கி வருகிறது.

    இது கடல் மட்டத்திலிருந்து 1350 அடி உயரத்தில் அமைந்துள்ளது. 300 அடி உயரத்தில் இருந்து தண்ணீர் ஊற்றும் ஆகாய கங்கை நீர்வீழ்ச்சிக்கு செல்ல 1200 படிக்கட்டுகளை கடந்து செல்ல வேண்டும்.

    தற்போது கொல்லிமலை பகுதியில் தொடர்ந்து 5 நாட்களாக மழை பெய்து வருவதால் கொல்லிமலை பகுதியில் உள்ள ஆறுகளில் நீர் வரத்து அதிகரித்துள்ளது.

    ஆகாய கங்கை நீர்வீழ்ச்சியிலும் நீர்வரத்து அதிகரித்து உள்ளதால் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்புக் கருதி நீர்வீழ்ச்சிக்கு சுற்றுலா பயணிகள் செல்லவும் குளிக்கவும் வனத்துறை அதிகாரிகள் தடை விதித்துள்ளனர்.

    • கூட்டுறவு கடன் சங்கத்தில் 5 பவுனுக்கு கீழ் தங்க நகை அடமானம் வைத்து கடன் பெற்றவர்களுக்கு கடன் முழுமையாக தள்ளு படி செய்து கடந்த 2021 ல் தமிழக அரசு உத்தரவிட்டது.
    • பேளுக்குறிச்சி கூட்டுறவு சடன் சங்கத்தில் மொத்தம் 311 நகைக்கடன் காரர்கள் இந்த திட்டத்தில் பயனாளிகளாக கண்டறியப்பட்டனர்.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் துணை பதிவாளர் கர்ணன், கடந்த 2 தினங்களுக்கு முன்பு மாவட்ட லஞ்ச ஒழிப்பு துறையில் ஒரு புகார் மனு கொடுத்தார். அந்த மனுவில் கூறி இருப்பதாவது-

    சேந்தமங்கலம் தாலுகா பேளுக்குறிச்சியில் உள்ள தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கத்தில் கோவிந்தராஜ் (55) என்பவர் கடந்த 2021 ஆண்டு முதல் பொறுப்பு செயலாளராக பணியாற்றி வருகிறார்.

    தமிழகத்தில் உள்ள கூட்டுறவு கடன் சங்கத்தில் 5 பவுனுக்கு கீழ் தங்க நகை அடமானம் வைத்து கடன் பெற்றவர்களுக்கு கடன் முழுமையாக தள்ளு படி செய்து கடந்த 2021 ல் தமிழக அரசு உத்தரவிட்டது. 2021 மார்ச் 31-ந் தேதி வரை கடன் பெற்றவர்களுக்கு மட்டும் இந்த சலுகை என அரசு அறிவித்திருந்தது.

    பேளுக்குறிச்சி கூட்டுறவு சடன் சங்கத்தில் மொத்தம் 311 நகைக்கடன் காரர்கள் இந்த திட்டத்தில் பயனாளிகளாக கண்டறியப்பட்டனர். கடந்த ஆண்டு மார்ச் மாதம் செயலாளராக (பொறுப்பு) பணியாற்றிய கோவிந்தராஜ் சங்க உறுப்பினர் யுவராணியிடம் ரூ. 4 ஆயிரம் லஞ்சம் கொடுத்தால் அவரது பெயரில் 29.1.2021 ந் தேதியில் 30 கிராம் தங்க நகையை வைத்து பெறப்பட்ட 99 ஆயிரம் கடனை தள்ளுபடி செய்து தருவதாக கூறி உள்ளார். மேலும் அதே சங்கத்தில் நகை கடன் பெற்றிருந்த கீர்த்தனா, சீனிவாசன், சந்திரா, பெருமாள், மற்றும் சிலம்பரசன் ஆகியோரிடமும் நகைக்கடன் தள்ளுபடி சான்றிதழ் வழங்க லஞ்சம் கேட்டுள்ளார். மேலும் கந்த சாமி என்பவரிடம் நகைக்கடன் தள்ளுபடி செய்ய கடந்த 28.3.2022 அன்று ரூ.1500 லஞ்சமாக பெற்றுள்ளார். எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி இருந்தார்.

    இந்த புகார் குறித்து மாவட்ட லஞ்ச ஒழிப்பு துறை டி.எஸ்.பி. சுபாஷினி விசாரணை நடத்தினார். இதையடுத்து கோவிந்தராஜ் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து அவரை கைது செய்யும் நடவடிக்கையில் லஞ்ச ஒழிப்பு போலீசார் இறங்கி உள்ளனர். 

    • விவசாயிகள் சார்பில் ஒருங்கிணைப்பு குழு அமைக்கப்பட்டு பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
    • விவசாயிகள் இன்று ஒன்று திரண்டு கஞ்சி தொட்டி திறந்து போராட்டம் நடத்தினர்.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்டம் மோகனூர் தாலுகா வளையப்பட்டி, என்.புதுப்பட்டி, அரூர் ஆகிய பகுதிகளை ஒருங்கிணைத்து சிப்காட் தொழிற்சாலை அமைக்க அரசு அறிவிப்பு வெளியிட்டது.

    இந்த நிலையில் சிப்காட் தொழிற்சாலைக்கு அந்த பகுதியை சேர்ந்த விவசாயிகள் நிலங்களை கொடுக்க மறுப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வருகின்றனர். மேலும் சிப்காட் தொழிற்சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் சார்பில் ஒருங்கிணைப்பு குழு அமைக்கப்பட்டு பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

    இந்த நிலையில் சிப்காட் தொழிற்சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து என்.புதுப்பட்டி, வளையப்பட்டி, அரூர், லத்துவாடி ஆகிய பகுதியை சேர்ந்த விவசாயிகள் இன்று ஒன்று திரண்டு கஞ்சி தொட்டி திறந்து போராட்டம் நடத்தினர்.

    விவசாய முன்னேற்ற கழகத்தின் மாநில பொது செயலாளர் பாலசுப்பிரமணியம், பா.ஜ.க. மாவட்ட தலைவர் சத்தியமூர்த்தி, கொ.ம.தே.க. விவசாய பிரிவு ஒருங்கிணைந்த மாவட்ட செயலாளர் ரவி, சிப்காட் எதிர்ப்பு குழு தலைவர் ராம்குமார், சரவணன், பழனிவேல், கொ.ம.தே.க. ஒன்றிய செயலாளர் சிவகுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    • முட்டை விலை மேலும் 15 பைசா குறைக்கப்பட்டு ஒரு முட்டையின் பண்ணைக்கொள்முதல் விலை 400 காசுகளாக குறைக்கப்பட்டது.
    • முட்டைக்கோழி ஒரு கிலோ ரூ. 83 ஆக தென்னிந்திய கோழிப்பண்ணையாளர்கள் சங்கம் நிர்ணயித்துள்ளது.

    நாமக்கல்:

    நாமக்கல், சேலம், ஈரோடு, பெருந்துறை, கோவை உள்ளிட்ட நாமக்கல் மண்டலத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோழிப்பண்ணைகள் உள்ளன. இங்கு சுமார் 6 கோடி முட்டைக் கோழிகள் வளர்க்கப்படுகின்றன.

    தினசரி சுமார் 5 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகிறது. தமிழக அரசின் சத்துணவு திட்டத்திற்கும், வெளிநாட்டிற்கு ஏற்றுமதிக்கும் போக மீதமுள்ள முட்டைகள், கேரளா உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கும், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும் விற்பனைக்காக தினசரி லாரிகளில் அனுப்பி வைக்கப்படுகின்றன.

    தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு (என்.இ.சி.சி.) கடந்த மே மாதம் முதல் தினசரி பண்ணைகளில் ரொக்க விற்பனைக்கு, மைனஸ் இல்லாத முட்டை விலையை அறிவித்து வருகிறது. இதை அனைத்து பண்ணையாளர்களும் கடைபிடித்து வருகின்றனர். கடந்த ஆகஸ்ட் 29-ந் தேதி ஒரு முட்டை விலை ரூ. 4.30-ல் இருந்து ரூ. 4.35 ஆக நிர்ணயிக்கப்பட்டது.

    இந்நிலையில், நேற்று முன்தினம் நடைபெற்ற, என்.இ.சி.சி. கூட்டத்தில் முட்டை விலை 20 பைசா குறைக்கப்பட்டு, ஒரு முட்டையின் விலை ரூ.4.15 ஆக நிர்ணயிக்கப்பட்டது. நேற்று மாலை நடைபெற்றக் கூட்டத்தில் முட்டை விலை மேலும் 15 பைசா குறைக்கப்பட்டு ஒரு முட்டையின் பண்ணைக்கொள்முதல் விலை 400 காசுகளாக குறைக்கப்பட்டது.

    இதை அனைத்து பண்ணையாளர்களுக்கு தவறாமல் கடைபிடிக்க வேண்டும் என்றும், என்இசிசி விலையை விட முட்டை விலையை குறைத்து விற்பனை செய்ய வேண்டாம் எனவும், என்இசிசி மற்றும் தமிழ்நாடு கோழிப்பண்ணை யாளர்கள் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

    பிராய்லர் கோழி உயிருடன் ஒருகிலோ ரூ. 122 ஆக பிசிசி அறிவித்துள்ளது. முட்டைக்கோழி ஒரு கிலோ ரூ. 83 ஆக தென்னிந்திய கோழிப்பண்ணை யாளர்கள் சங்கம் நிர்ணயித்துள்ளது.

    • நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே அன்னை சத்யா நகரில் வசிப்பவர் பிரகாஷ் (33). அதே பகுதியை சேர்ந்தவர் மோகன்ராஜ் (25). இருவரும் லாரி டிரைவர்கள்.
    • பிரகாஷ் குமாரபாளையம் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி பிரகாஷ் மனைவியின் அண்ணன் மோகன்ராஜை கைது செய்தனர்.

    குமாரபாளையம்:

    நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே அன்னை சத்யா நகரில் வசிப்பவர் பிரகாஷ் (33). அதே பகுதியை சேர்ந்தவர் மோகன்ராஜ் (25). இருவரும் லாரி டிரைவர்கள்.

    மோகன்ராஜின் தங்கையை பிரகாஷ் திருமணம் செய்த நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக தற்போது கணவன்-மனைவி இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகிறார்கள்.

    சரமாரி தாக்குதல்

    இந்த நிலையில் நேற்று மாலை பிரகாஷ் மற்றும் அவரது தம்பி சுரேஷ் ஆகியோர் மோகன்ராஜின் வீட்டின் அருகே வந்தனர். அப்போது அங்கு குடிபோதை யில் நின்று கொண்டிருந்த மோகன்ராஜ் உன்னால் தான் என் தங்கை வாழ்க்கை வீணாகிப் போனது எனக் கூறி கீழே கிடந்த கல்லை எடுத்து பிரகாஷை சரமாரி யாக தாக்கினார். இதில் பிரகாஷ் மண்டை உடைந்தது.

    இதையடுத்து பிரகாஷ் மற்றும் சுரேஷ் ஆகியோர் சத்தம்போடவே மோகன்ராஜ் அங்கிருந்து ஓடிவிட்டார். அக்கம் பக்கத்தினர் பிரகாஷை மீட்டு குமாரபாளையம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    மேலும் இதுகுறித்து பிரகாஷ் குமாரபாளையம் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி பிரகாஷ் மனைவியின் அண்ணன் மோகன்ராஜை கைது செய்தனர்.

    • நாமக்கல் மாவட்டம் வேல கவுண்டன் பட்டி உப்பிலியர் தெருவை சேர்ந்தவர் கார்த்திக் தனக்கு வயிற்று வலி அதிக மாக இருப்பதாகவும் இருப்பி னும் வேலைக்கு சென்று வருவதாகவும் வீட்டில் கூறிவிட்டு சென்றுள்ளார்.
    • இந்நிலையில் மாலை அந்தப் பகுதியை சேர்ந்த ரவி என்பவர் கோவிந்தனுக்கு போன் செய்து உனது மகன் கார்த்திக் புத்தூர் அருகே ஒரு ஓடையில் உள்ள மரத்தில் தூக்கு போட்டு இறந்த நிலையில் இருப்பதாக தெரிவித்துள்ளார்.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம் வேல கவுண்டன் பட்டி உப்பிலியர் தெருவை சேர்ந்தவர் கோவிந்தன் (78) கூலித்தொழிலாளி. இவ ரது மகன் கார்த்திக் (24) இவர் கட்டிட மேஸ்திரி. இவரது

    மனைவி சரண்யா( 20). இவர்கள் கார்த்திக்கின் தந்தை கோவிந்தன் வீட்டுக்கு அருகிலேயே குடியிருந்து வந்தனர்.

    இந்நிலையில் கார்த்திக் தனக்கு வயிற்று வலி அதிக மாக இருப்பதாகவும் இருப்பி னும் வேலைக்கு சென்று வருவதாகவும் வீட்டில் கூறிவிட்டு சென்றுள்ளார். இந்நிலையில் மாலை அந்தப் பகுதியை சேர்ந்த ரவி என்பவர் கோவிந்தனுக்கு போன் செய்து உனது மகன் கார்த்திக் புத்தூர் அருகே ஒரு ஓடையில் உள்ள மரத்தில் தூக்கு போட்டு இறந்த நிலையில் இருப்பதாக தெரிவித்துள்ளார்.

    தகவல் அறிந்த கோவிந்தன் மற்றும் அவரது குடும்பத்தினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்த்து கார்த்திக்கின் உடலை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இது குறித்து கோவிந்தன் வேல கவுண்டன்பட்டி போலீசில் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் கைலேஷ்வரன் வழக்கு பதிவு செய்து உடலை

    கைப்பற்றி பிரேத பரிசோ தனைக்காக நாமக்கல் அரசு

    மருத்துவக் கல்லூரி மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனார்.

    • நாமக்கல் மாவட்டத்தில் மின் நிறுத்த அறிவிப்பு மின்துறை வெளியிட்டுள்ளது. அதன்படி வருகிற 8- ந் தேதி
    • காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் நிறுத்தம் செய்ய உள்ளதாக அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்டத்தில் மின் நிறுத்த அறிவிப்பு மின்துறை வெளியிட்டுள்ளது. அதன்படி வருகிற 8- ந் தேதி மெட்டல்லா, ஆனங்கூர், சமயசங்கிலி, 12- ந் தேதி நல்லூர், சோழசிராமணி, ஜேடர்பாளையம், மல்லசமுத்திரம், 14 -ந் தேதி நாமகிரிப்பேட்டை, இளநகர், இமல்லி, கொமரபாளையம், பள்ளிபாளையம், வெப்படை, உப்புபாளையம், 16- ந் தேதி சேந்தமங்கலம், பரமத்திவேலூர், முசிறி, 19- ந் தேதி வளையப்பட்டி, திருச்செங்கோடு, உஞ்சனை, 20- ந் தேதி ராசிபுரம், எஸ்.வாழவந்தி, நாமக்கல், 21 - ந் தேதி காளப்பநாயக்கன்பட்டி, எருமப்பட்டி, கபிலர்மலை, பருத்திபள்ளி, வில்லிபாளையம், 26- ந் தேதி கெட்டிமேடு, பள்ளக்காபாளையம், ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் நிறுத்தம் செய்ய உள்ளதாக அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • பரிசோதனை செய்த டாக்டர்கள் ஷாலினி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா கூடச்சேரி அருகே மேலப்பட்டி பகுதியை சேர்ந்தவர் குணசேகரன் (41). இவர் அப்பகுதியில் உள்ள ஒரு கோழி பண்ணையில் மேலாளராக பணியாற்றி வருகிறார்.

    இவரது மகள் ஷாலினி (13). இவர் வசந்தபுரத்தில் உள்ள தனியார் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார்.

    இந்நிலையில் சம்பவத்தன்று தேர்வில் மதிப்பெண் குறைந்துவிட்டதாக குணசேகரன் மனைவி தீபா மகள் ஷாலினியை திட்டியுள்ளார்.

    இதனால் மனமுடைந்த ஷாலினி பள்ளிக்கு சென்று விட்டு மாலை வீட்டிற்கு வந்துள்ளார்.

    அப்போது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கு மாட்டிக் கொண்டார். வெளியே சென்று விட்டு வீட்டிற்கு வந்த தீபா ஷாலினி தூக்கில் தொங்கிக் கொண்டிருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

    பின்னர் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் ஷாலினியை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் பரமத்திவேலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் ஷாலினி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதை கேட்டு பெற்றோர் கதறி துடித்தனர்.

    இதுகுறித்து குணசேகரன் நல்லூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×