என் மலர்
நாமக்கல்
- திருச்செங்கோடு அரசு மருத்து வமனையில் கண் தொடர்பான பிரிவு தொடங்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.
- குறுகிய காலத்தில் 150 க்கும் மேற்பட்ட கண் புரை அறுவை சிகிச்சைகளை செய்து பொதுமக்களுக்கு சேவை ஆற்றி வருகின்றனர்.
திருச்செங்கோடு:
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அரசு மருத்து வமனையில் கண் தொடர்பான பிரிவு தொடங்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.
குறுகிய காலத்தில் 150 க்கும் மேற்பட்ட கண் பு ரை அறுவை சிகிச்சைகளை செய்து பொதுமக்களுக்கு சேவை ஆற்றி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக திருச்செங்கோடு அரசு மருத்துவமனை சார்பாக அன்னை தெரசா நினைவு தினத்தை ஒட்டி கண் தானம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் அரசு மருத்துவமனையில் இருந்து முக்கிய வீதிகள் வழியாக விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இந்த பேரணியை திருச்செங்கோடு மருத்துவமனை முதன்மை மருத்துவ அலுவலர் செந்தில்குமார் தொடங்கி வைத்தார் மருத்துவர் மகேஸ்வ ரன், செவிலியர் வசந்தாமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். முக்கிய வீதிகள் வழியாக வந்த பேரணி இறுதியாக அரசு மருத்துவமனையை அடைந்தது. சுமார் 100 விவேகானந்தா செவிலியர் பயிற்சி கல்லூரி மாணவிகள் இந்த பேரணியில் பங்கேற்று கண்தானம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் பதாகைகளை ஏந்திய படி பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
அனைவரும் கண்தானம் செய்ய வேண்டும் அவ்வாறு செய்தால் கண் இல்லாதவர்கள் என்ற பேச்சுக்கே இடமில்லை என்பதை வலியுறுத்தும் விதமாக விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள். முன்னதாக அன்னை தெரசாவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் அவரது உருவப்படத்திற்கு மருத்துவர்களும் செவிலியர்களும் மலர் தூவி மரியாதை செய்தனர்.
- டிராக்டரின் முன்பக்க 2 டயர்கள் மற்றும் பின்பக்க டயர் ஒன்றும், டிராக்டர் என்ஜினும் எரிந்துள்ளது.
- சம்பவ இடத்திற்கு கைரேகை நிபுணர்களும் வரவழைக்கப்பட்டு கைரேகைகளை பதிவு செய்து ஆய்வு செய்து வருகின்றனர்.
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா ஜேடர்பாளையம் அருகே உள்ள வி.கரபாளையத்தில் கடந்த மார்ச் 11-ந்தேதி ஆடு மேய்க்க சென்ற பட்டதாரி இளம்பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்து கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக வெல்லம் ஆலை கொட்டைகையில் பணிபுரிந்து வந்த கரூர் மாவட்டத்தை சேர்ந்த 17 வயது சிறுவன் கைது செய்யப்பட்டான்.
இந்த நிலையில் இளம்பெண் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய உண்மையான குற்றவாளிகளை கண்டுபிடிக்கக் கோரி அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் தொடர்ந்து பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர்.
இந்த நிலையில் வடமாநில தொழிலாளர்கள் பணிபுரியும் ஆலை கொட்டகைகள், டிராக்டர்கள், குடிசைகள், பள்ளி பேருந்து போன்றவற்றிற்கு தீ வைப்பு சம்பவங்கள், குளத்தில் விஷம் கலந்தது என அடுக்கடுக்கான வன்முறை சம்பவங்கள் 2 மாதங்களாக நடைபெற்று வந்தது. கடந்த மே மாதம் 13-ந்தேதி முத்துசாமி என்பவருக்கு சொந்தமான ஆலை கொட்டகையில் மர்மநபர்கள் புகுந்து தொழிலாளர்கள் மீது மண்எண்ணெய் பாட்டில்களை வீசி தீவைத்தனர். இதில் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த ராஜேஷ் என்பவர் உயிரிழந்தார்.
இந்த சூழலில் புதுப்பாளையம் பகுதியில் முருகேசன் என்பவருக்கு சொந்தமான வாழை தோப்பில் சுமார் 500-க்கும் மேற்பட்ட வாழை மற்றும் பாக்கு மரங்கள் வெட்டி சாய்க்கப்பட்டது. மேலும் பொத்தனூர் பகுதியை சேர்ந்த எல்.ஐ.சி முகவர் சவுந்தர்ராஜன் என்பவருக்கு சொந்தமான சின்னமருதூர் பகுதியில் 3 ஏக்கர் நிலத்தில் நடப்பட்டிருந்த சுமார் 3200 பாக்கு மரங்கள் மர்மநபர்களால் வெட்டிச் சாய்க்கப்பட்டன.
இந்த நிலையில் நேற்று இரவு ஜேடர்பாளையம் வடக்கு தோட்டத்தை சேர்ந்த கருப்பண்ணன் மகன் சுப்பிரமணி (42) என்பவருக்கு சொந்தமான தோட்டத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டிராக்டரை மர்மநபர்கள் தீ வைத்து எரித்து விட்டு தப்பி சென்றுள்ளனர். இதில் டிராக்டரின் முன்பக்க 2 டயர்கள் மற்றும் பின்பக்க டயர் ஒன்றும், டிராக்டர் என்ஜினும் எரிந்துள்ளது.
இதே போல் அதே பகுதியை சேர்ந்த பெரியசாமி(70) என்பவரது தோட்டத்தில் பயிர் செய்திருந்த மரவள்ளி கிழங்கு செடிகளையும், அதே பகுதியைச் சேர்ந்த வீரமணி(42) என்பவருக்கு சொந்தமான வாழை மரங்களையும் மர்மநபர்கள் வெட்டி சாய்த்துள்ளனர்.
சம்பவ இடத்தில் போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணா தலைமையில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ராஜு, துணை போலீஸ் சூப்பிரண்டுகள், இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் போலீசார் கொண்ட குழுவினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் சம்பவ இடத்திற்கு கைரேகை நிபுணர்களும் வரவழைக்கப்பட்டு கைரேகைகளை பதிவு செய்து ஆய்வு செய்து வருகின்றனர்.
ஜேடர்பாளையம் பகுதி முழுவதும் 600-க்கும் மேற்பட்ட போலீசார் இரவு பகலாக பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வரும் நிலையில் மீண்டும் அசம்பாவித சம்பவம் நடைபெற்றுள்ளது அப்பகுதி பொதுமக்களிடையே மிகுந்த பரபரப்பையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
- பாண்டமங்கலத்தை சேர்ந்தவர் குணசேகரன் (55) கூலி தொழிலாளி. இவரது மனைவி ராதா. இவர்களுக்கு ஐயப்பன், விக்னேஸ்வரன் என்ற 2 மகன்கள் உள்ளனர்.
- இந்த நிலையில் நேற்று முன்தினம் மது குடித்து விட்டு வீட்டிற்கு நடந்து சென்ற போது நிலைதடுமாறி கீழே விழுந்து படுகாயம் அடைந்தார்.
நாமக்கல்:
நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா பாண்டமங்கலத்தை சேர்ந்தவர் குணசேகரன் (55) கூலி தொழிலாளி. இவரது மனைவி ராதா. இவர்களுக்கு ஐயப்பன், விக்னேஸ்வரன் என்ற 2 மகன்கள் உள்ளனர். குணசேகரன் அடிக்கடி மது குடித்து விட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் மது குடித்து விட்டு வீட்டிற்கு நடந்து சென்ற போது நிலைதடுமாறி கீழே விழுந்து படுகாயம் அடைந்தார். இதை பார்த்த அவ்வழியாக வந்தவர்கள் உடனடியாக ஆம்புலன்ஸ் வர வழைக்கப்பட்டு அவரை காப்பாற்றி பரமத்தி வேலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு அங்கு சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி குணசேகரன் உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து பரமத்திவேலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- சனாதனம் கலாசாரம் வேறு, இந்து மதம் என்பது வேறு.
- ராவிடர்களும், திராவிட இயக்கங்களும் இந்து மதத்திற்கு எதிரானவர்கள் அல்ல.
கோவை:
மதுரையில் வருகிற 15-ந் தேதி மதுரையில் அண்ணா பிறந்தநாள் விழா மாநாடு நடக்கிறது. இது தொடர்பான கோவை மண்டல நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் சித்தாபுதூரில் உள்ள ம.தி.மு.க அலுவலகத்தில் நடந்தது. இதில் கட்சியின் முதன்மை செயலாளர் துரை வைகோ கலந்து கொண்டார்.
பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-
சனாதனம் கலாசாரம் வேறு, இந்து மதம் என்பது வேறு. திராவிடர்களும், திராவிட இயக்கங்களும் இந்து மதத்திற்கு எதிரானவர்கள் அல்ல. வட நாட்டில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதை திரித்து திராவிட இயக்கங்கள் இந்துகளுக்கு எதிரி போல சித்தரித்து வருகிறார்கள்.
பாராளுமன்ற தேர்தல் வருவதால் மத்திய அரசின் குறைகளை மறைக்கவும், திசை திருப்பவும் இதை செய்கிறார்கள். எதிர்கட்சிகளின் இந்தியா கூட்டணியை பார்த்து ஆளுங்கட்சிக்கு பயம் வந்திருப்பதால், மத ரீதியாக காழ்ப்புணர்ச்சியை உருவாக்க பார்க்கிறார்கள்.
அன்பே சிவம் என்பது தான் இந்து மதம். ஆனால் அயோத்தியில் உள்ள ஒரு சாமியார் உதயநிதியின் தலைக்கு விலை பேசி ஒரு தலிபான் போல செயல்பட்டு உள்ளார்.
உதயநிதி பேச்சை திரித்து இந்து மதத்திற்கும், இந்து மதத்தை பின்பற்று பவர்களுக்கும் தி.மு.க, மற்றும் இந்தியா கூட்டணியினர் எதிரானவர்கள் என்ற கருத்தை உருவாக்க பார்க்கிறார்கள். இந்த பொய் பிரசாரத்தை முறியடிக்கும் வகையில் மம்தா பானர்ஜி, அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோர் பேசி உள்ளனர்.
தி.மு.க. ஆட்சி குறித்து எங்களுக்கு எந்த குறைபாடும் தெரியவில்லை. எதிர்கட்சி தலைவர் என்பதால் எடப்பாடி பழனிசாமி தி.மு.க. ஆட்சி மீது குறை சொல்லியுள்ளார். ஒரே நாடு, ஒரே தேர்தல் சாத்தியப்படாது. இந்தியா கூட்டணியில் குழப்பத்தை உருவாக்க இதை கொண்டு வருகிறார்கள். மின் கட்டண உயர்விற்கு மாநில அரசுகள் காரணம் அல்ல. மத்திய அரசு தான் காரணம். பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
- பட்டாவில் பெயர் நீக்கம் செய்ய ஜெகநாதனிடம் கிராம நிர்வாக அலுவலர் தீபா ரூ.25 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளார்.
- துறை ரீதியான நடவடிக்கை எடுத்த திருச்செங்கோடு உதவி கலெக்டர் சுகந்தி தீபாவை சஸ்பெண்டு செய்து உத்தரவிட்டார்.
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா பாண்டமங்கலம் பகுதியை சேர்ந்தவர் விஸ்வநாதன். இவரது மனைவி தீபா (43) கபிலர்மலை ஊராட்சி ஒன்றியம் கொந்தளம் ஊராட்சியில் கிராம நிர்வாக அலுவலராக வேலை பார்த்து வந்தார்.
இந்த நிலையில் அதே பகுதியை சேர்ந்த விவசாயி ஜெகநாதன் (45) என்பவர் பட்டாவில் உள்ள பூர்வீக சொத்தில் இருந்து பெயர் நீக்கம் செய்ய ஊராட்சி நிர்வாக அலுவலகத்தில் விண்ணப்பித்தார். பட்டாவில் பெயர் நீக்கம் செய்ய ஜெகநாதனிடம் கிராம நிர்வாக அலுவலர் தீபா ரூ.25 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளார்.
இதுகுறித்து ஜெகநாதன் நாமக்கல் லஞ்ச ஒழிப்பு துறை போலீசில் அளித்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் நல்லம்மாள் மற்றும் போலீசார் தீபாவை நேற்று முன்தினம் கைது செய்து சேலம் பெண்கள் கிளை சிறையில் அடைத்தனர்.
தொடர்ந்து அவர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுத்த திருச்செங்கோடு உதவி கலெக்டர் சுகந்தி தீபாவை சஸ்பெண்டு செய்து உத்தரவிட்டார்.
- லஞ்சம் கொடுக்க விரும்பாத ஜெகநாதன் இதுகுறித்து நாமக்கல் லஞ்ச ஒழிப்பு துறை போலீசில் புகார் அளித்தார்.
- மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத் துறை இன்ஸ்பெக்டர் நல்லம்மாள் மற்றும் போலீசார் தீபாவை கைது செய்தனர்.
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா பாண்டமங்கலம் பகுதியை சேர்ந்தவர் விஸ்வநாதன்.
இவரது மனைவி தீபா (43). இவர் கபிலர்மலை ஊராட்சி ஒன்றியம் கொந்தளம் ஊராட்சியில் கிராம நிர்வாக அலுவலராக வேலை பார்த்து வந்தார்.
இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த விவசாயி ஜெகநாதன் (45) என்பவர் பட்டாவில் உள்ள பூர்வீக சொத்தில் இருந்து பெயர் நீக்கம் செய்ய ஊராட்சி நிர்வாக அலுவலகத்தில் விண்ணப்பித்தார்.
இதையடுத்து கிராம நிர்வாக அலுவலர் தீபா, பட்டாவில் பெயர் நீக்கம் செய்ய ஜெகநாதனிடம் ரூ.25 ஆயிரம் லஞ்சம் கேட்டதாக தெரிகிறது. ஆனால் லஞ்சம் கொடுக்க விரும்பாத ஜெகநாதன் இதுகுறித்து நாமக்கல் லஞ்ச ஒழிப்பு துறை போலீசில் புகார் அளித்தார்.
இதன் பேரில் லஞ்ச ஒழிப்பு போலீசார் ரசாயன பவுடர் தடவிய ரூபாய் நோட்டுகளை ஜெகநாதனிடம் கொடுத்து அதனை கிராம நிர்வாக அலுவலரிடம் கொடுக்குமாறு அனுப்பி வைத்தனர்.
அதன்படி நேற்று மதியம் ஜெகநாதன் கொந்தளம் கிராம நிர்வாக அலுவலகத்துக்கு சென்றார். அங்கிருந்த தீபாவிடம் ரசாயன பவுடர் தடவிய ரூ.25 ஆயிரத்தை கொடுத்தார். அதை வாங்கிய தீபா தனது மொபட்டிற்குள் பணத்தை வைத்துவிட்டு வந்தார்.
அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத் துறை இன்ஸ்பெக்டர் நல்லம்மாள் மற்றும் போலீசார் தீபாவை கைது செய்தனர்.
தொடர்ந்து தீபா மொபட்டில் வைத்திருந்த பணத்தை கைப்பற்றியதுடன் மொபட்டையும் பறிமுதல் செய்தனர்.
பின்னர் அவரை நாமக்கல் லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்துக்கு போலீசார் அழைத்து சென்று விசாரணை நடத்தினர். இதைதொடர்ந்து தீபாவை நாமக்கல் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சேலம் பெண்கள் கிளை சிறையில் போலீசார் அடைத்தனர். மேலும் அவர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் இன்று நாமக்கல் லஞ்ச ஒப்பு துறை போலீசார் தீபாவின் வீட்டிற்கு சென்று சோதனை நடத்தி விசாரணை நடத்துகின்றனர்.
- சுமித் குமார் பஸ்சில் மதுரை நோக்கி சென்று கொண்டிருந்தார்.
- வட மாநில தொழிலாளி பஸ்சில் இருந்து தேசிய நெடுஞ்சாலையில் கீழே விழுந்து பலியானார்.
பரமத்திவேலூர்
ஜார்க்கண்ட் மாநிலம் சார்ட்பார்வா பாலமு, மணிகா ரப்டா பகுதியைச் சேர்ந்தவர் சுமித் குமார். இவர் மதுரை பகுதியில் உள்ள ஒரு பில்டிங் காண்ட்ராக்டரிடம் வேலை செய்து வந்தார்.
அந்த காண்டாக்ட் நிறுவனத்திற்கு மேலும் ஆட்கள் தேவைப்படுவதாக அந்த நிறுவனத்தினர் கூறியதை அடுத்து சுமித்குமார் ஜார்கண்ட் மாநிலம் சென்று 18 பேர்களை வேலைக்கு அழைத்துக் கொண்டு நேற்றுமுன்தினம் சேலத்தில் இருந்து மதுரை அரசு போக்குவரத்துக் கழகத்திற்கு சொந்தமான அரசு பஸ்சில் மதுரை நோக்கி சென்று கொண்டிருந்தார்.
நேற்று முன்தினம் இரவு அரசு பஸ் நாமக்கல்லில் இருந்து கரூர் நோக்கி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் நன்செய் இடையாறு செல்லும் மேம்பாலம் பகுதியில் சென்று கொண்டிருந்த போது பஸ்சில் பயணம் செய்த வட மாநில தொழிலாளி அரசு பஸ்சில் இருந்து தேசிய நெடுஞ்சாலையில் கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே பலியானார்.
பஸ்சில் இருந்து உடன் வந்தவர்கள் ஒருவர் கீழே விழுந்து விட்டார் பஸ்சை நிறுத்துங்கள் என அவருடன் வந்தவர்கள் சத்தமிட்டுள்ளனர். சத்தம் கேட்டு ஓட்டுநர் பஸ் நிறுத்தி பஸ்சில் வந்த 18 பேர்களையும் கீழே இறக்கி விட்டு போலீசாருக்கு தகவல் தெரிவிக்காமல் சென்று விட்டார்.
தகவல் அறிந்து அங்கு வந்த பரமத்தி வேலூர் போலீசார் பஸ்சில் இருந்து கீழே விழுந்து பலியான வட மாநிலத் தொழிலாளர் உடலை மீட்டு வேலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் பஸ்சில் இருந்து பலியான வடமொநிவ தொழிலாளர் யார் என்பது குறித்து போலீசார் நடத்தி விசாரணையில் ஜார்க்கண்ட் மாநிலம், சார்பார்வா பாலமு, மணிகா ரப்டா பகுதியை சேர்ந்த சார்க் புய்யான் (52) என்பது தெரிய வந்தது. இதனையடுத்து அவரது உடலை போலீசார் மீட்டு வேலூர் அரசு மருத்து வமனையில் சேர்த்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் அரசு பஸ் ஓட்டுனர் திண்டுக்கல் பகுதியைச் சேர்ந்த ராஜசேகரன் (49) மற்றும் நடத்துனர் மதுரை, கூடல் நகர் பகுதியில் சேர்ந்த ஜெயகிருஷ்ணன் (42) ஆகிய இருவரிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாமக்கல்
நாமக்கல் மாவட்ட தேசிய காசநோய் ஒழிப்புத் திட்டத்தின் சார்பில் பள்ளிபாளையம் ஒன்றியம் களி யனூர் ஊராட்சிக்குட்பட்ட ஆவத்திபாளையம் குடி யிருப்பு பகுதியில் உள்ள மக்களுக்கு காசநோய் பாதிப்பு அறிகுறிகள் உள்ளதா என கண்டறிய பரிசோதனை நடந்தது.
நடமாடும் அதிநவீன டிஜிட்டல் எக்ஸ்ரே கருவி மூலம் சளி பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது. இதையடுத்து பொதுமக்களுக்கு காசநோய் பற்றிய விழிப்புணர்வு அளிக்கப் பட்டது. இந்த நிகழ்ச்சியில் நாமக்கல் மாவட்ட காச நோய் துறை துணை இயக்கு னர் வாசுதேவன், மருத்துவ அலுவலர் திவ்யா, களிய னூர் ஊராட்சி தலைவர் ரவிகுழந்தைவேல், துணை தலைவர் வெங்கடேசன் மற்றும் சுகாதார துறை அதி காரிகள் கலந்து கொண்டனர்.
- வரதம்மாள் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு இறந்து விட்டார்.
- பாண்டியன் கீழ்பா லப்பட்டிக்கு வந்து தாயாருக்கு இறுதி சடங்கு செய்து விட்டு தங்கையுடன் தங்கி இருந்தார்.
பரமத்திவேலூர்
நாமக்கல் மாவட்டம் மோகனூர் அருகே கொமரா பாளையம் ஊராட்சி கீழ்பாலப்பட்டி பகுதியை சேர்ந்தவர் செல்லமுத்து. இவருடைய மனைவி வரதம்மாள். செல்லமுத்து கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இவர்களுக்கு பாண்டியன் (55) என்ற மகனும், சியாமளா (48) என்ற மகளும் உள்ளனர்.
கூலி தொழிலாளியான பாண்டியனுக்கு திருமண மாகி 2 மனைவிகளுடன் மணப்பள்ளி பகுதியில் வசித்து வந்தார். சியாமளா விற்கு திருமணமாகி கணவ ருடன் ஏற்பட்ட தகராறு காரணமாக அவரை பிரிந்து தாய் வரதம்மாள் வீட்டில் வாழ்ந்து வருகிறார்.
இந்த நிலையில் வர தம்மாள் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு இறந்து விட்டார். இதனால் பாண்டியன் கீழ்பா லப்பட்டிக்கு வந்து தாயாருக்கு இறுதி சடங்கு செய்து விட்டு தங்கையுடன் தங்கி இருந்தார். இதனிடையே அண்ணன், தங்கை இருவருக்கும் மது குடிக்கும் பழக்கம் உள்ளது. தாய் இறந்த நாளில் இருந்து அடிக்கடி இருவரும் ஒன்றாக மது குடித்து வந்தனர். அதன்படி நேற்றும் ஒன்றாக அமர்ந்து மது குடித்துள்ளனர்.
அடித்துக் கொலை
அப்போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதன்பின்னர் பாண்டியன் போதையில் தூங்கி விட்டார். எனினும் ஆத்திரத்தில் இருந்த சியாமளா வீட்டில் இருந்த அடுப்பு ஊதும் இரும்பு குழ லால் பாண்டியன் தலையில் ஓங்கி அடித்தார். இதில் பலத்த காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார்.
இதையடுத்து சியாமளா பாண்டியன் மகன் தனபால் என்பவரிடம் உனது தந்தை கீழே தவறி விழுந்து இறந்து விட்டதாக தெரிவித்தார். இதனால் பதறியடித்து கொண்டு தனபால் கீழ்பா லப்பட்டிக்கு வந்து தந்தையின் உடலை பார்த்து கதறி அழுதா ர். தலையில் காயம் இருந்ததால் சந்தேகம் அடைந்த அவர் மோகனூர் போலீசில் புகார் கொடுத்தார்.
சிறையில் அடைப்பு
அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் தங்கவேல் வழக்கு பதிவு செய்து சம்பவ
இடத்திற்கு சென்று பாண்டியன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோ தனைக்காக நாமக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இதுகுறித்து விசாரணை நடத்திய போலீசார் பாலப்பட்டி பஸ் நிறுத்தத்தில் நின்ற சியாமளாவை கைது செய்தனர். பின்னர் அவரை நாமக்கல் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
- 98 வீடுகள் நீதிமன்ற உத்தரவுப்படி கடந்த ஆண்டு இடித்து அகற்றம்
- எதிர்ப்பு தெரிவித்து வீடுகள் இடிக்கப் பட்ட இடத்திற்கு அருகி லேயே இடம் ஒதுக்க வேண்டும் என அங்கு வசித்தவர்கள் கூறி வந்தனர்.
நாமக்கல்
நாமக்கல் மாவட்டம் ஜேடர்பாளையம் சரளை மேடு காமராஜர் நகரில் ஆக்கிரமித்து கட்டப்பட்ட 98 வீடுகள் நீதிமன்ற உத்த ரவுப்படி கடந்த ஆண்டு இடித்து அகற்றப்பட்டது.
மாற்று இடம்
அப்போது அங்கு வசித்த மக்களுக்கு மாற்று இடம் ஒதுக்கி தருவதாக அதி காரிகள் தெரிவித்து இருந்தனர். இதையடுத்து சுமார் 10 கிலோமீட்டர் தொலைவில் மாற்று இடம் ஒதுக்கப்பட்டது.இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வீடுகள் இடிக்கப் பட்ட இடத்திற்கு அருகி லேயே இடம் ஒதுக்க வேண்டும் என அங்கு வசித்தவர்கள் கூறி வந்த னர். இது தொடர்பாக கடந்த வாரம் பரமத்தி வேலூர் தாசில்தார் அலுவ லகத்தில் நடத்தப்பட்ட பேச்சு வார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை.
வாயில் கருப்பு துணி கட்டி
இந்த நிலையில் நேற்று சுமார் 50-க்கும் மேற்பட் டோர் வாயில் கருப்பு துணி கட்டி நாமக்கல் கலெக்டர் அலுவலகம் வந்தனர்.மாற்று இடம் வழங்கப்ப டாததை கண்டித்து தங்களது ரேஷன் கார்டு, ஆதார் கார்டு மற்றும் வாக்காளர் அடையாள அட்டைகளை திரும்ப ஒப்படைக்க வந்ததாக தெரிவித்தனர்.இது குறித்து அவர்கள் கூறுகையில், மாற்று இடம் தருவதாக கூறிய அதி காரி கள். எங்களது ஊராட்சியில் இடம் ஒதுக்கவில்லை. மேலும் ஆக்கிரமிப்பும் முழுமையாக அகற்றப்பட வில்லை என்றனர். இதை யடுத்து அவர்களை அதி காரிகள் சமாதானப்படுத்தி மனு அளிக்க அனுப்பி வைத்தனர்.
- நிலத்தை விற்பது தொடர்பாக தாய், மகன் இருவருக்கும் இடையே பிரச்சனை இருந்து வந்தது.
- சொத்து பிரச்சினை தொடர்பாக தாய், மகன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா ஜேடர்பாளையம் அருகே உள்ள மணல்மேடு பகுதியை சேர்ந்தவர் பாவாயி (வயது 75). இவரது மகன் ராசு (55). விவசாயி.
இந்த நிலையில் பாவாயிக்கு சொந்தமான நிலம் அப்பகுதியில் உள்ளது. இந்த நிலத்தை விற்பது தொடர்பாக தாய், மகன் இருவருக்கும் இடையே பிரச்சனை இருந்து வந்தது.
நிலத்தை விற்பதற்கு பாவாயி கையெழுத்திட மறுத்து விட்டதாக கூறப்படுகிறது. இதனால் ராசு கடும் விரக்தி அடைந்தார்.
இதனிடையே சொத்தை விற்பதற்கு கையெழுத்து கேட்டு ராசு அடிக்கடி தகராறு செய்து வந்ததால் மனம் உடைந்த பாவாயி நேற்று இரவு வீட்டின் ஒரு அறையில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தாய் தூக்கில் தொங்கிக் கொண்டிருந்ததை பார்த்த அவரது மகன் ராசு அதிர்ச்சியில் உறைந்தார். தாயின் உடலை பார்த்து கதறி அழுதார்.
தனது தாய் உயிரை மாய்த்து விட்டார், இனிமேல் நான் வாழ்வதை விட சாவதே மேல் என முடிவு செய்த ராசு வீட்டில் வைத்திருந்த விஷ மாத்திரையை சாப்பிட்டார். இதனால் வயிறு வலிக்கவே சத்தம் போட்டு ராசு கதறினார்.
சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் ஓடிவந்து பார்த்தபோது ராசு வாயில் நுரை தள்ளியவாறு மயங்கி கிடந்தார்.
உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் ராசுவை நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் ஏற்கனவே ராசு இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதையடுத்து ஜேடர்பாளையம் போலீசார், பாவாயி உடலை மீட்டு பரமத்தி வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இன்ஸ்பெக்டர் ரவி வழக்குப் பதிவு செய்து தாய்-மகன் தற்கொலைக்கு வேறு ஏதேனும் காரணங்கள் உள்ளனவா? என தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்.
சொத்து பிரச்சினை தொடர்பாக தாய், மகன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
- பிராய்லர் கோழி உயிருடன் ஒரு கிலோ ரூ. 122 ஆக பிசிசி அறிவித்துள்ளது.
- முட்டைக்கோழி ஒரு கிலோ ரூ. 83 ஆக தென்னிந்திய கோழிப்பண்ணையாளர்கள் சங்கம் நிர்ணயித்துள்ளது.
நாமக்கல்:
நாமக்கல், சேலம், ஈரோடு, பெருந்துறை, கோவை உள்ளிட்ட நாமக்கல் மண்டலத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோழிப்பண்ணைகள் உள்ளன.
இங்கு சுமார் 6 கோடி முட்டைக் கோழிகள் வளர்க்கப்படுகின்றன. தினசரி சுமார் 5 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகிறது. தமிழக அரசின் சத்துணவு திட்டத்திற்கும், வெளிநாட்டிற்கு ஏற்றுமதிக்கும் போக மீதமுள்ள முட்டைகள், கேரளா உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கும், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும் விற்பனைக்காக தினசரி லாரிகளில் அனுப்பி வைக்கப்படுகின்றன.
தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு (என்இசிசி) கடந்த மே மாதம் முதல் தினசரி பண்ணைகளில் ரொக்க விற்பனைக்கு மைனஸ் இல்லாத முட்டை விலையை அறிவித்து வருகிறது. இதை அனைத்து பண்ணையாளர்களும் கடைபிடித்து வருகின்றனர். கடந்த செப். 2-ந்தேதி ஒரு முட்டையின் விலை ரூ. 4.15-ல் இருந்த 15 பைசா குறைக்கப்பட்டு ரூ. 4.00 ஆக நிர்ணயம் செய்யப்பட்டது.
இந்த நிலையில் நேற்று மாலை நடைபெற்ற கூட்டத்தில், முட்டை விலை 20 பைசா உயர்த்தப்பட்டு, ஒரு முட்டையின் பண்ணைக்கொள்முதல் விலை ரூ.4.20ஆக நிர்ணயிக்கப்பட்டது.
முட்டை விலை குறைந்ததால், ஒரு சில பண்ணைகளில் வியாபாரிகள் என்இசிசி விலையை விட மைனஸ் விலைக்கு முட்டையை கேட்டுள்ளனர்.
இதைத்தொடர்ந்து தமிழ்நாடு கோழிப்பண்ணையாளர்கள் சங்கம் மூலம் பல லட்சம் முட்டைகள் என்இசிசி விலைக்கு கொள்முதல் செய்யப்பட்டு வடமாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதனால் முட்டை விற்பனை விறுவிறுப்படைந்துள்ளது.
என்இசிசி விலையை விட முட்டை விலையை குறைத்து விற்பனை செய்ய வேண்டாம் என என்இசிசி மற்றும் தமிழ்நாடு கோழிப்பண்ணையாளர்கள் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
முக்கிய நகரங்களில் ஒரு முட்டையின் விலை (பைசாவில்) : சென்னை 475, பர்வாலா 477, பெங்களூர் 460, டெல்லி 483, ஹைதராபாத் 440, மும்பை 485, மைசூர் 460, விஜயவாடா 475, ஹொஸ்பேட் 420, கொல்கத்தா 555.
பிராய்லர் கோழி உயிருடன் ஒரு கிலோ ரூ. 122 ஆக பிசிசி அறிவித்துள்ளது. முட்டைக்கோழி ஒரு கிலோ ரூ. 83 ஆக தென்னிந்திய கோழிப்பண்ணையாளர்கள் சங்கம் நிர்ணயித்துள்ளது.






