நிலை தடுமாறி கீழே விழுந்து கூலிதொழிலாளி சாவு

பாண்டமங்கலத்தை சேர்ந்தவர் குணசேகரன் (55) கூலி தொழிலாளி. இவரது மனைவி ராதா. இவர்களுக்கு ஐயப்பன், விக்னேஸ்வரன் என்ற 2 மகன்கள் உள்ளனர்.இந்த நிலையில் நேற்று முன்தினம் மது குடித்து விட்டு வீட்டிற்கு நடந்து சென்ற போது நிலைதடுமாறி கீழே விழுந்து படுகாயம் அடைந்தார்.
நிலை தடுமாறி கீழே விழுந்து கூலிதொழிலாளி சாவு
Published on

நாமக்கல்:

நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா பாண்டமங்கலத்தை சேர்ந்தவர் குணசேகரன் (55) கூலி தொழிலாளி. இவரது மனைவி ராதா. இவர்களுக்கு ஐயப்பன், விக்னேஸ்வரன் என்ற 2 மகன்கள் உள்ளனர். குணசேகரன் அடிக்கடி மது குடித்து விட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் மது குடித்து விட்டு வீட்டிற்கு நடந்து சென்ற போது நிலைதடுமாறி கீழே விழுந்து படுகாயம் அடைந்தார். இதை பார்த்த அவ்வழியாக வந்தவர்கள் உடனடியாக ஆம்புலன்ஸ் வர வழைக்கப்பட்டு அவரை காப்பாற்றி பரமத்தி வேலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு அங்கு சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி குணசேகரன் உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து பரமத்திவேலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com