search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "village administration officer"

    • லஞ்சம் கொடுக்க விரும்பாத ஜெகநாதன் இதுகுறித்து நாமக்கல் லஞ்ச ஒழிப்பு துறை போலீசில் புகார் அளித்தார்.
    • மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத் துறை இன்ஸ்பெக்டர் நல்லம்மாள் மற்றும் போலீசார் தீபாவை கைது செய்தனர்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா பாண்டமங்கலம் பகுதியை சேர்ந்தவர் விஸ்வநாதன்.

    இவரது மனைவி தீபா (43). இவர் கபிலர்மலை ஊராட்சி ஒன்றியம் கொந்தளம் ஊராட்சியில் கிராம நிர்வாக அலுவலராக வேலை பார்த்து வந்தார்.

    இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த விவசாயி ஜெகநாதன் (45) என்பவர் பட்டாவில் உள்ள பூர்வீக சொத்தில் இருந்து பெயர் நீக்கம் செய்ய ஊராட்சி நிர்வாக அலுவலகத்தில் விண்ணப்பித்தார்.

    இதையடுத்து கிராம நிர்வாக அலுவலர் தீபா, பட்டாவில் பெயர் நீக்கம் செய்ய ஜெகநாதனிடம் ரூ.25 ஆயிரம் லஞ்சம் கேட்டதாக தெரிகிறது. ஆனால் லஞ்சம் கொடுக்க விரும்பாத ஜெகநாதன் இதுகுறித்து நாமக்கல் லஞ்ச ஒழிப்பு துறை போலீசில் புகார் அளித்தார்.

    இதன் பேரில் லஞ்ச ஒழிப்பு போலீசார் ரசாயன பவுடர் தடவிய ரூபாய் நோட்டுகளை ஜெகநாதனிடம் கொடுத்து அதனை கிராம நிர்வாக அலுவலரிடம் கொடுக்குமாறு அனுப்பி வைத்தனர்.

    அதன்படி நேற்று மதியம் ஜெகநாதன் கொந்தளம் கிராம நிர்வாக அலுவலகத்துக்கு சென்றார். அங்கிருந்த தீபாவிடம் ரசாயன பவுடர் தடவிய ரூ.25 ஆயிரத்தை கொடுத்தார். அதை வாங்கிய தீபா தனது மொபட்டிற்குள் பணத்தை வைத்துவிட்டு வந்தார்.

    அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத் துறை இன்ஸ்பெக்டர் நல்லம்மாள் மற்றும் போலீசார் தீபாவை கைது செய்தனர்.

    தொடர்ந்து தீபா மொபட்டில் வைத்திருந்த பணத்தை கைப்பற்றியதுடன் மொபட்டையும் பறிமுதல் செய்தனர்.

    பின்னர் அவரை நாமக்கல் லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்துக்கு போலீசார் அழைத்து சென்று விசாரணை நடத்தினர். இதைதொடர்ந்து தீபாவை நாமக்கல் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சேலம் பெண்கள் கிளை சிறையில் போலீசார் அடைத்தனர். மேலும் அவர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

    இந்நிலையில் இன்று நாமக்கல் லஞ்ச ஒப்பு துறை போலீசார் தீபாவின் வீட்டிற்கு சென்று சோதனை நடத்தி விசாரணை நடத்துகின்றனர்.

    • 1௦௦-க்கும் மேற்பட்டவர்கள் குடியிருந்து வருகின்றனர்.
    • வீடுகளை காலி செய்ய வேண்டும் என கூறியதாக கூறப்படுகிறது.

    பல்லடம் :

    பல்லடம் அருகே துத்தாரிபாளையம் என்ற பகுதியில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் குடியிருந்து வருகின்றனர். இந்த நிலையில் கிராம நிர்வாக அலுவலர் ஒருவர் அங்கு குடியிருப்பவர்களிடம் இந்த இடம் நீரோடை பகுதியாக உள்ளது. எனவே வீடுகளை காலி செய்ய வேண்டும் என கூறியதாக கூறப்படுகிறது. இதையடுத்து அவரை சிறை பிடித்து பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    தகவல் அறிந்து சம்பவ இடம் சென்ற பல்லடம் தாசில்தார் நந்தகோபால், காம நாயக்கன்பாளையம் போலீசார் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி கிராம அலுவலரை மீட்டனர். இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.

    • பண்ருட்டி அருகே கிராமநிர்வாக அலுவலர் அலுவலகம் முன்பு பொது மக்கள் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
    • தகவல் அறிந்ததும் போலீசார்சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி வட்டம் வல்லம் கிராமத்தில் கிராமநிர்வா கஅலுவலர்அலுவலகம் உள்ளது இந்த கிராம நிர்வாக அலுவலர்அலுவலகம் நடுகுப்ப ம்கிராமத்திற்குமாற்றபட உள்ளதாக கிராமஊழியர்ஒருவர் தனதுமுகநூலில்பதிவிட்டு இருந்ததாககூறப்படுகிறது. ஆத்திரமடைந்தகிராம மக்கள்,கிராமநிர்வாக அலுவலர்அலுவலகம் முன்பு திரண்டனர். பின்னர்வல்லம்சாலையில் சாலைமறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு திடீர் பரபரப்பு ஏற்பட்டது.

    இது பற்றிய தகவல் அறிந்ததும் பண்ருட்டி தாசில்தார்சிவாகார்த்தி கேயன்,பண்ருட்டிபோலீஸ் இன்ஸ்பெக்டர்சந்திரன் மற்றும்முத்தாண்டிகுப்பம் போலீசார்சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். கிராம நிர்வாகஅலுவலர் அலுவலகத்தை மாற்றுவதற்காக எந்த உத்தரவும் பிறப்பிக்கப்ப டவில்லைவதந்திகளை யாரும் நம்ப வேண்டாம் என பொதுமக்களிடம் தாசில்தார் விலக்கிகூறினார். இதனை தொடர்ந்து பொது மக்கள்போராட்டத்தை விளக்கி க்கொ ண்டனர்இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது

    எடப்பாடி அருகே கணவர் கொடுத்த புகாரின் பேரில் பெண் கிராம நிர்வாக அலுவலர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    எடப்பாடி:

    எடப்பாடி அருகே உள்ள வெள்ளரிவெள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட சப்பானிபட்டி கிராமத்தை சேர்ந்தவர் சுகுணா (வயது 35). இவர் எடப்பாடி வருவாய் வட்டத்தில் கிராம நிர்வாக அலுவலராக பணிபுரிந்து வருகிறார். இவரது கணவர் அண்ணாமலை (42) டெய்லராக பணிபுரிந்து வருகிறார். இந்த தம்பதிக்கு 2 மகன்கள் உள்ளனர்.

    கிராம நிர்வாக அலுவலர் என்ற முறையில் சுகுணா அலுவலக வேலையாகவும், ஆய்வு பணிக்காகவும் பல இடங்களுக்கு சென்று வருவது வழக்கம்.

    இது கணவர் அண்ணாமலைக்கு பிடிக்கவில்லை. இதனால் கணவன்- மனைவிக்கும் இடையே பலமுறை மனவருத்தமும், கருத்து வேறுபாடும் ஏற்பட்டு, அவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் அண்ணாமலை பூலாம்பட்டி போலீஸ் நிலையத்தில் தனது மனைவி மீது பரபரப்பு புகார் அளித்துள்ளார். அந்த புகாரில், கடந்த சில தினங்களுக்கு முன் இரவு நேரத்தில் சுகுணா தனக்கு சாப்பாடு கொடுத்தார். அந்த சாப்பாட்டினை சாப்பிட்டபின், தான் மயக்கமடைந்து கட்டிலில் சாய்ததாகவும், தொடர்ந்து தன்னை கட்டிப்போட்ட சுகுணா தலையணையால் அழுத்தி, ஊசியால் குத்த முயன்றதாகவும், அப்போது அவரிடமிருந்து உயிர் தப்பி வந்ததாகவும் கூறியிருந்தார். எனவே மனைவி மீது நடவடிக்கை எடுத்து என்னை காப்பாற்றும்படி கூறியிருந்தார்.

    அதன்பேரில் பூலாம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு கிராம நிர்வாக அலுவலர் சுகுணாவிடம் தொடர்ந்து விசாரனை மேற்கொண்டு வருகின்றனர். #tamilnews
    ×