கிராம நிர்வாக அதிகாரியை சிறைப்பிடித்த பொதுமக்கள்

1௦௦-க்கும் மேற்பட்டவர்கள் குடியிருந்து வருகின்றனர்.வீடுகளை காலி செய்ய வேண்டும் என கூறியதாக கூறப்படுகிறது.
கிராம நிர்வாக அலுவலரிடம் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்ட காட்சி.
கிராம நிர்வாக அலுவலரிடம் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்ட காட்சி.
Published on

பல்லடம் :

பல்லடம் அருகே துத்தாரிபாளையம் என்ற பகுதியில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் குடியிருந்து வருகின்றனர். இந்த நிலையில் கிராம நிர்வாக அலுவலர் ஒருவர் அங்கு குடியிருப்பவர்களிடம் இந்த இடம் நீரோடை பகுதியாக உள்ளது. எனவே வீடுகளை காலி செய்ய வேண்டும் என கூறியதாக கூறப்படுகிறது. இதையடுத்து அவரை சிறை பிடித்து பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்து சம்பவ இடம் சென்ற பல்லடம் தாசில்தார் நந்தகோபால், காம நாயக்கன்பாளையம் போலீசார் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி கிராம அலுவலரை மீட்டனர். இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.

X

Maalai Malar
www.maalaimalar.com