வீட்டில் இருந்த 1.60 லட்சம் பணத்துடன் தொழிலாளி மாயம்

குமாரபாளையத்தில் ரம்மி மோகத்தால் வீட்டில் இருந்த 1.60 லட்சம் பணத்துடன் தொழிலாளி மாயமானார். மனைவி போலீசில் புகார்
வீட்டில் இருந்த 1.60 லட்சம் பணத்துடன் தொழிலாளி மாயம்
Published on

குமாரபாளையம்:

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் காவேரி நகர் பூசாரிக்காடு பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் (34). இவரது மனைவி கார்த்திகா (29). இருவரும் கூலி வேலைக்கு சென்று வருகின்றனர்.

மணிகண்டன் ரம்மி விளையாட்டில் அதிக ஈடுபாடு கொண்டிருந்தார். இதனால் அதிக பணத்தையும் இழந்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் மணிகண்டன் திடீரென மாயமானார். அவரை எங்கு தேடியும் கிடைக்காத நிலையில் மணிகண்டனின் மனைவி கார்த்திகா குமார பாளையம் போலீசில் இதுகுறித்து புகார் அளித்தார். அந்த புகாரில் கடந்த 27-ந் தேதி முதல் தனது கணவரை காணவில்லை எனவும், போகும்போது வீட்டில் இருந்த ரூ.1 லட்சத்து 60 ஆயிரம் பணத்தை எடுத்து சென்று விட்டதாகவும் தெரிவித்துள்ளார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் மணிகண்டனை தேடி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com