என் மலர்
உள்ளூர் செய்திகள்

சித்தி விநாயகர் ஆலயத்தில் சிறப்பு அபிஷேக ஆராதனை
- பக்தர்கள் காவிரி ஆற்றுக்கு சென்று புனித நீராடி தீர்த்த குடங்களுக்கு சிறப்பு அபிஷேகம்
- மலர்களால் அலங்கா ரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்ட ப்பட்டது.
பரமத்தி வேலூர்
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் கவுண்டம்பாளையம் சித்தி விநாயகர் ஆல யத்தில் 8 -வது ஆண்டு விழாவை முன்னிட்டு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.
8-வது ஆண்டு விழா முன்னிட்டு சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள் காவிரி ஆற்றுக்கு சென்று புனித நீராடி தீர்த்த குடங்களுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு தீர்த்தக் குடும்பத்துடன் மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக கோவிலை வந்தடைந்தனர்.
சித்தி விநாயகருக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள், திருமஞ்சனம், பஞ்சாமிர்தம், தேன், விபூதி, கரும்புச்சாறு உள்ளிட்ட 18 வகையான வாசனைத் திர வியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து மலர்களால் அலங்கா ரம் செய்யப்பட்டு தீபா ராத னை காட்ட ப்பட்டது. இதில் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொ ண்டு சித்தி விநாயக ரை தரி சனம் செய்து அருள் பெற்ற னர். பக்தர்க ளுக்கு பிரசாதம் மற்றும் அன்ன தானம் வழங்கப்பட்டது. சித்தி விநா யகரின் 8-வது ஆண்டு விழா முன்னிட்டு ஒயி லாட்டம் நிகழ்ச்சி நடை பெற்றது.






