என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "there was a spark on the country’s explosives."

    • கண்ணன் குடியிருக்கும் வீட்டின் 3-வது தளத்தில் கோவில் திருவிழாவிற்கு கொடுப்பதற்காக பட்டாசுகளை (நாட்டு வெடிகளை) வைத்தி ருந்தார்.
    • தீயணைப்பு மீட்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

    ராசிபுரம்

    நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் டவுன் வி.நகர் பகுதியில் வசிப்பவர் கந்தசாமி மகன் கண்ணன் (வயது 45). இவரது மனைவி சுபித்ரா (40). இவர்களுக்கு அஸ்வர்த்தினி (17), அனிஷ்கா (10) என்ற 2 மகள்கள் உள்ளனர்.

    வெடி தயாரிப்பாளர்

    கண்ணன் கோவில் திரு விழாக்களுக்கு தேவையான மிகவும் சத்ததுடன் வெடிக்க கூடிய நாட்டு வெடிகள், உயரமாக சென்று பல வண்ணங்களில் வெடிக்கும் வண்ண வெடிகள் போன்ற வற்றை தயாரித்து விற்பனை செய்து வருகிறார். இவர் ராசிபுரம் தட்டான் குட்டை ஏரி அருகில் உள்ள முனி யப்பன் கோவில் பகுதி பட்டணம் ரோட்டில் உரி மத்துடன் பட்டாசு குடோன் வைத்துள்ளார்.

    பயங்கர சப்தத்துடன் வெடித்தது

    இந்த நிலையில் கண்ணன் குடியிருக்கும் வீட்டின் 3-வது தளத்தில் கோவில் திருவிழாவிற்கு கொடுப்பதற்காக பட்டாசுகளை (நாட்டு வெடிகளை) வைத்தி ருந்தார். நேற்று இரவு சுமார் 8.15 மணியளவில் வீட்டில் இருந்து வெளியே வந்துள்ளார்.அப்போது அவர் கொசுவை அடிப்பதற்காக கொசு பேட்டை விசிறி உள்ளார். இதில் எதிர்பாராத விதமாக நாட்டு வெடிகள் மீது தீப்பொறியானது பட்டது. இதில் பயங்கர சப்தத்துடன் வீட்டில் வைக்கப்பட்டு இருந்த நாட்டு வெடி வெடித்தது. இதனால் இடி விழுந்தது போல் சப்தம் கேட்டுள்ளது.தொடர்ந்து அந்த பகுதியில் கரும்புகை பரவியது. இதை கண்ட அக்கம் பக்கத்தினர் ஓட்டம் பிடித்தனர்.மேலும் இதுகுறித்து ராசிபுரம் போலீசார் மற்றும் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் அளிக்கப்பட்டது. அதன்பேரில் தீயணைப்பு மீட்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். தொடர்ந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

    தீக்காயம்

    இந்த விபத்தில் கண்ண னுக்கு கைகள், முதுகு பகுதி, தலையில் பலத்த தீக்காயம் ஏற்பட்டது. அவரை மீட்ட வீரர்கள் ராசிபுரம் அரசு ஆஸ்பத்தி ரிக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வீட்டிற்குள் இருந்த கண்ண னின் மனைவி, மகள்கள் எந்தவித காயமும் இன்றி உயிர் தப்பினர். தீயணைப்பு படையினர் அவர்களை கயிறு மூலம் பத்திரமாக மீட்டனர்.

    ரூ.6 ஆயிரம் மதிப்பு

    பட்டாசு வெடித்ததில் தீப்பிழம்பு 100 அடி உயரத்திற்கு தெரிந்தது. சம்பவ இடத்தில் ஆயி ரக்கணக்கான பொதுமக்கள் திரண்டதால் அந்தப் பகுதி யில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சுமார் 1 மணி நேரம் போராடி தீயணைப்பு படையினர் தீயை அணைத்தனர். இதில் ரூ.6 ஆயிரம் மதிப்புள்ள நாட்டு வெடிகள் தீக்கிரையாயின.சம்பவ இடத்திற்கு ராசி புரம் தாசில்தார் சரவணன், போலீஸ் இன்ஸ்பெக்டர் சுகவனம், சப்-இன்ஸ்பெக்டர் தங்கம் மற்றும் போலீசார் விரைந்து சென்று விசா ரணை நடத்தினர். போலீசார் போக்குவரத்தை சரி செய்தனர். வெடி விபத்து காரணமாக 1 மணி நேரத்திற்கு மேலாக அந்த பகுதியில் மின்சாரம் நிறுத்தப்பட்டது.

    கலெக்டர் விசாரணை

    விபத்து குறித்து தகவல் அறிந்து கலெக்டர் உமா சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை நடத்தி னார். ராசிபுரம் அரசு ஆஸ்பத்திரியில் தீக்காயங்க ளுடன் சிகிச்சை பெற்று வரும் கண்ணனை நேரில் சந்தித்து விவரம் கேட்டறிந்து ஆறுதல் கூறினார். அப்போது அவர் டாக்டர்க ளிடம் நல்ல முறையில் சிகிச்சை அளிக்கும்படி கூறினார்.இதுகுறித்து கலெக்டர் உமா கூறுகையில், கண்ணன் அவரது வீட்டில் உரிமம் இல்லாத இடத்தில் பட்டாசு வைத்துள்ளார். திடீரென்று பட்டாசு வெடித்ததில் அவருக்கு 30 சதவீதத்திற்கு தீக்காயங்கள் ஏற்பட்டுள்ளது. ராசிபுரம் அரசு ஆஸ்பத்தி ரியில் அவருக்கு நல்ல தரமான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.அவர் உரிமம் இல்லாத இடத்தில் பட்டாசு வைத்தி ருந்தது பற்றி அதிகாரிகள் விசாரணை நடத்தி வரு கின்றனர். விசாரணைக்கு பிறகுதான் எவ்விதமான நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை கூற முடியும் என்றார்.ராசிபுரம் டி.எஸ்.பி. (பொறுப்பு) முத்துக்கிருஷ் ணன் மற்றும் போலீசார் விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×