என் மலர்tooltip icon

    நாமக்கல்

    • சி.சி.டி.வி. கேமரா பதிவை பார்த்தபோது இளைஞர் ஒருவர் இருசக்கர வாகனத்தை எடுத்து செல்வது பதிவாகி இருந்தது. அதன் அடிப்படையில் போலீசார் குற்றவாளியை தேடி வருகின்றனர்.
    • இதே போல கடந்த 25-ந் தேதி நாமக்கல் சேலம் சாலையில் தனசேகரன் என்பவருக்கு சொந்தமான கடைக்கு வந்த 4 பெண்கள் கடையில் ஊழியர் இல்லாத நேரத்தை பயன்படுத்தி முந்திரி, உளுந்தம், பருப்பு உள்ளிட்ட பொருட்களை திருடி சென்றனர்.

    நாமக்கல்:

    நாமக்கல் அருகே வசந்தபுரத்தை சேர்ந்தவர் செல்வராசு. இவர் நாமக்கல் கடை வீதியில் உள்ள நகைக்கடையில் பணிபுரிந்து வருகிறார். கடந்த 26-ந் தேதி பணிக்கு வந்த செல்வராசு தனது இருசக்கர வாகனத்தை கடைக்கு முன்பு நிறுத்தினார். அப்போது இரு சக்கர வாகனத்தின் சாவியை எடுக்காமல் கடைக்கு சென்றார்.

    பணி முடிந்ததும் இருசக்கர வாகனத்தை எடுக்க வந்தபோது அதை காணவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். நாமக்கல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    சி.சி.டி.வி. கேமரா பதிவை பார்த்தபோது இளைஞர் ஒருவர் இருசக்கர வாகனத்தை எடுத்து செல்வது பதிவாகி இருந்தது. அதன் அடிப்படையில் போலீசார் குற்றவாளியை தேடி வருகின்றனர்.

    இதே போல கடந்த 25-ந் தேதி நாமக்கல் சேலம் சாலையில் தனசேகரன் என்பவருக்கு சொந்தமான கடைக்கு வந்த 4 பெண்கள் கடையில் ஊழியர் இல்லாத நேரத்தை பயன்படுத்தி முந்திரி, உளுந்தம், பருப்பு உள்ளிட்ட பொருட்களை திருடி சென்றனர்.

    இவை அங்குள்ள சி.சி.டி.வி கேமராவில் பதிவாகி உள்ளது. இதுதொடர்பான புகாரின் பேரில் சி.சி.டி.வி. கேமராவில் பதிவான 4 பெண்களை போலீசார் தேடி வருகிறார்கள்.

    • ஆர்.பி.புதூரை சேர்ந்தவர் சுரேஷ்(வயது45), டிரைவர். இவரது மனைவி அங்கம்மாள் 12 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார்.
    • இந்த நிலையில் நேற்று வழக்கம்போல கஸ்தூரியை பார்க்க சுரேஷ் சென்றார். அதன்பிறகு வீடு திரும்பவில்லை.

    சேந்தமங்கலம்:

    நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் அருகே உள்ள ஆர்.பி.புதூரை சேர்ந்தவர் சுரேஷ்(வயது45), டிரைவர். இவரது மனைவி அங்கம்மாள் 12 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இந்த நிலையில் சுரேசுக்கும் பொட்டிரெட்டிபடிட் பகுதியை சேர்ந்த கஸ்தூரி(60) என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது.

    இது நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. அடிக்கடி கஸ்தூரி வீட்டுக்கு செல்வதை சுரேஷ் வழக்கமாக கொண்டி ருந்தார். இந்த நிலையில் நேற்று வழக்கம்போல கஸ்தூரியை பார்க்க சுரேஷ் சென்றார். அதன்பிறகு வீடு திரும்பவில்லை.

    இந்த நிலையில் சுரேஷ் கீழே விழுந்து இறந்து விட்டதாக கஸ்தூரியின் மகன் சந்த்ரு(20) என்பவர் சுரேசின் தந்தை சுப்பிரமணிக்கு போனில் தகவல் கூறியுள்ளார். ஆனால் சுப்பிரமணி அதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.

    இந்த நிலையில் காரில் வந்த மர்ம நபர்கள் சுரேஷ் உடலை சுப்பிரமணியின் வீட்டு அருகே வைத்துவிட்டு சென்றனர். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. உடனே இதுபற்றி சேந்தமங்கலம் போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

    போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சுரேசின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு நாமக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். சுரேசின் தலையில் காயங்கள் உள்ளன. எனவே மர்ம நபர் கள் சுரேசை அடித்து கொலை செய்திருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.

    இது தொடர்பாக போலீ சார் தொடர்ந்து விசாரித்து வருகிறார்கள். இந்த சம்பவத்தில் கஸ்தூரியின் மகன் சந்த்ருவுக்கு தொடர்பு இருக்கிறதா என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பள்ளிபாளையம் காவேரி ஆர்.எஸ்.பகுதியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது.
    • இன்று காலை பள்ளியை திறக்க ஊழியர்கள் வந்தனர்.

    பள்ளிபாளையம்:

    நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் காவேரி ஆர்.எஸ்.பகுதியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. இங்கு இரவு காவலாளியாக நடராஜ்(வயது78) என்பவர் வேலை செய்து வந்தார். நேற்று இரவு இவர் வழக்கம்போல பணியில் இருந்தார்.

    இன்று காலை பள்ளியை திறக்க ஊழியர்கள் வந்தனர். அப்போது நடராஜ் ரத்த காயங்களுடன் மர்மமான முறையில் பிணமாக கிடந்தார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர்கள் பள்ளிபாளையம் போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர்.

    போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். நள்ளிரவில் யாரோ மர்ம நபர்கள் பள்ளிக்குள் புகுந்து காவலாளி நடராஜை வெட்டி கொலை செய்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.

    இதனிடையே பள்ளியில் காவலாளி கொலை செய்யப்பட்டதாக அப்பகுதி முழுவதும் தகவல் பரவியது. இதனால் அங்கு ஏராளமான பொதுமக்களும், பள்ளி குழந்தைகளின் பெற்றோரும் கூடினார்கள். இதன் காரணமாக அங்கு பெரும் பரபரப்பு உண்டானது.

    இந்த சம்பவத்தை அடுத்து பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. பள்ளியில் ஏராளமான போலீசார் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டனர். நடராஜை கொலை செய்த மர்ம நபர்கள் யார்? கொலையாளீகள் உருவம் அப்பகுதியில் கண்காணிப்பு காமிராக்களில் பதிவாகி உள்ளதா? கொலைக்கான காரணம் என்ன என்று போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    சம்பவம் நடந்த பள்ளிக்கு தடவியல் நிபுணர்கள் வந்து தடயங்களை சேகரித்தனர். போலீஸ் மோப்பநாயும் வரவழைக்கப்பட்டது. கொலை செய்யப்பட்ட நடராஜ்சுக்கும் வேஎறு யாருக்கும் முன்விரோதம் உள்ளதா? என்றும் விசாரணை நடந்து வருகிறது.

    இந்த பள்ளியில் இரவுநேரங்களில் சமூக விரோதிகள் புகுந்து மது அருந்துவது உள்ளிட்ட செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளனர். அதுபோல நேற்று இரவு வந்த மர்ம நபர்கள் நடராஜை கொலை செய்திருக்கலாம் என்று போலீசார் சந்தேக்கின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர்கள் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கை களை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.
    • ஆர்ப்பாட்டத்திற்கு அங்கன்வாடி ஊழியர்கள் சங்க ஒன்றிய தலைவர் சவுமியா தலைமை வகித்தார்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா பரமத்தியில் தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர்கள் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கை களை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு அங்கன்வாடி ஊழியர்கள் சங்க ஒன்றிய தலைவர் சவுமியா தலைமை வகித்தார். ஒன்றிய செயலா ளர் மதி வள்ளி, ஒன்றிய பொருளாளர் துர்கா ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் சிறப்பு அழைப்பாளர்களாக தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்க மாவட்ட தலைவர் ராஜேந்திர பிரசாத், சி.ஐ.டி.யு மாவட்ட செயலாளர் வேலுசாமி, தமிழ்நாடு பேரூராட்சி ஊழியர்கள் சங்க மாவட்ட பொருளாளர் அண்ணாதுரை ஆகியோர் கலந்துகொண்டு ஆர்ப்பாட்டம் குறித்து விளக்கிப் பேசினர்.

    இதில், மிக குறைவாக இருக்கும் குழந்தைகள் மையங்களை மினி மையம் ஆக்குவதையும், 5 குழந்தை களுக்கு குறைவாக இருக்கும் மினி மையங்களை பிரதான மையத்தோடு இணைக்கும் திட்டத்தினை கைவிட வேண்டும்.

    அங்கன்வாடி பணியா ளர்கள் கூடுதல் பொறுப்பாக 2 அல்லது 3 மையங்களை கவனித்துக் கொள்வதால் மன உளைச்ச லுக்கு ஆளாகி வருகிறார்கள். அதனை சரி செய்ய வேண்டும். உடனடி யாக காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும். பள்ளி, கல்லூரி களுக்கு கோடை விடுமுறை விடுவது போல் அங்கன் வாடி மையங்க ளுக்கும் ஒரு மாத கால விடுமுறை விட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் செய்தனர். ஆர்ப்பாட்டத்தில் பர மத்தி ஒன்றிய சுற்று வட்டார பகுதி களை சேர்ந்த அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியா ளர்கள் கலந்து கொண்டனர்.

    • மானிய விலையில் 16 லிட்டர் கொள்ளளவு கொண்ட பேட்டரி ஸ்பிரேயர் வழங்கப்பட்டு வருகிறது.
    • இன்னும் 25 பேட்டரி ஸ்பிரேயர் இருப்பு உள்ளது.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா கபிலர்மலை வட்டார வேளாண்மை துறை சார்பில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் ஆனங்கூர், வடகரையாத்தூர், சிறுநல்லிக்கோவில், சுள்ளிபாளையம், குப்பிரிக்காபாளையம் ஆகிய கிராமங்களுக்கு மானிய விலையில் 16 லிட்டர் கொள்ளளவு கொண்ட பேட்டரி ஸ்பிரேயர் வழங்கப்பட்டு வருகிறது.

    இன்னும் 25 பேட்டரி ஸ்பிரேயர் இருப்பு உள்ளது. எனவே தேவைப்படும் விவசாயிகள் தங்களது ஆதார் அட்டை நகல், ரேசன் கார்டு நகல், சிட்டா, போட்டோ-1 ஆகியவற்றை கபிலர் மலை வேளாண்மை துறை அலுவலகத்தில் கொடுத்து வேளாண் துறையின் மூலம் பெற்றுக் கொள்ளலாம்.

    மேலும் கபிலர்மலை வட்டார வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் விவசாயிகளுக்கு மாங்கன்றுகள் வழங்கப்பட உள்ளது. தேவையான விவசாயிகள் கபிலர்மலை வட்டார வேளாண்மை அலுவலகத்திற்கு வந்து பெற்று கொள்ளலாம்.

    மாங்கன்றுகள் பெற ஆதார் நகல், ரேசன் நகல், சிட்டா, போட்டோ 2 ஆகியவற்றை வேளாண்மை அலுவலகத்தில் கொண்டு வந்து கொடுத்து மாங்கன்றுகளை பெற்றுக் கொள்ளலாம் என கபிலர்மலை வேளாண்மை உதவி இயக்குனர் ராதாமணி தெரிவித்துள்ளார்.

    • கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.1.47 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு 60 கான்கிரீட் தளங்கள், கான்கிரீட் மேற்கூரைகளுடன், அனைத்து அடிப்படை‌ வசதிகளுடன் அமைக்க பணிகள் தொடங்கப்பட உள்ளது.
    • இதற்காக பரமத்திவேலூர் பழைய தற்காலிக பஸ் நிலையம் பகுதிக்கு வாரச்சந்தையை இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக பேரூராட்சி நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டது.

    பரமத்திவேலூர்:

    –நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் பேரூராட்சி சார்பில் ஞாயிற்றுக்கிழமை தோறும் வாரசந்தை நடைபெற்று வருகிறது.

    இந்த வாரச்சந்தைக்கு வேலூர், குப்புச்சி பாளையம், பொய்யேரி, ஒழுகூர்பட்டி, படமுடி பாளையம், பொத்தனூர், வேலாயுதம்பாளையம், கட்டிபாளையம், தவுட்டுப்பாளையம் மற்றும் சுற்று வட்டாரப் பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் தங்கள் விளை நிலங்களில் விளையும் காய்கறிகளை கொண்டு வருகின்றனர்.

    மேலும் வியாபாரிகளும் இந்த வாரச்சந்தைக்கு தானியங்கள், காய்கறிகள் உள்ளிட்ட பொதுமக்களுக்கு தேவையான அனைத்து பொருட்களையும் கொண்டு வருகின்றனர்.

    இந்த வாரச்சந்தையில் அடிப்படை வசதிகள் எதுவும் இல்லை. இதனை கருத்தில் கொண்டு வேலூர் பேரூராட்சி நிர்வாகம் சார்பில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.1.47 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு 60 கான்கிரீட் தளங்கள், கான்கிரீட் மேற்கூரைகளுடன், அனைத்து அடிப்படை வசதிகளுடன் அமைக்க பணிகள் தொடங்கப்பட உள்ளது.

    இதற்காக பரமத்திவேலூர் பழைய தற்காலிக பஸ் நிலையம் பகுதிக்கு வாரச்சந்தையை இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக பேரூராட்சி நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டது.

    இந்த நிலையில் தற்போது உள்ள வாரச்சந்தை பகுதியில் இடவசதி போதுமானதாக உள்ளது. அதில் மேற்கூரை அமைத்து கட்டிடம் கட்டினால் எங்களுக்கு இட வசதி பற்றாக்குறை ஏற்படும்.

    வாரச்சந்தையில் கடைகள் வைத்திருக்கும் அனைத்து வியாபாரிகள் மற்றும் விவசாயிகளுக்கும் கடைகள் கட்டிதர இயலாது என கூறி புதிதாக கடைகள் கட்ட எதிர்ப்பு தெரிவித்து பேரூராட்சி அலுவலகத்தை விவசாயிகள் திடீரென முற்றுகையிட்டனர்.

    அதனை தொடர்ந்து பேரூராட்சி செயல் அலுவலர் செல்வக்குமார், சந்தை வியாபாரிகளை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் விரைவில் தற்போதுள்ள சந்தை பகுதி அனைத்து வசதிகளுடன் கான்கிரீட் மேற்கூரை, கான்கிரீட் தளங்கள் அமைக்கப்பட உள்ளது. இதில் அனை வருக்கும் இடம் ஒதுக்கி தரப்படும்.

    தற்காலிகமாக இடமாற்றம் செய்யப்பட உள்ள சந்தை பகுதியிலும் அனைத்து வியாபாரி களுக்கும் இடம் ஒதுக்கி தரப்படும் என தெரிவித் ததன் அடிப்படையில் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட வியாபாரிகள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

    • முட்டை விலை கடந்த சில நாட்களாக 450 காசுகளாக நீடிக்கிறது.
    • நாமக்கல்லிலும் முட்டை விலை 450 காசுகளாகவே தொடர்வது என்று முடிவெடுக்கப்பட்டது.

    நாமக்கல்:

    நாமக்கல் மண்டலத்தில் 8 கோடிக்கும் அதிகமான முட்டை கோழிகள் வளர்க்கப்படுகின்றன. அதன் மூலம் தினமும் 6 கோடிக்கு அதிகமான முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த முட்டைகள் உலகம் முழுவதும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

    இந்த நிலையில் முட்டை விலை கடந்த சில நாட்களாக 450 காசுகளாக நீடிக்கிறது. உற்பத்தி செலவு அதிகமாவதால் முட்டை வியாபாரிகள் நஷ்டம் அடைவதாக கூறி வருகிறார்கள். இதற்கு இடையே தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-

    நாளை ஸ்ரீராம நவமி முடிவடைவதால், ஹைதராபாத், விஜயவாடா, ஹோஸ்டபேட், பர்வாலா உள்ளிட்ட அனைத்து மண்டலங்களிலும் முட்டை விற்பனை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.

    அதனால் அனைத்து மண்டலங்களும் இனி விலை குறைப்பதில்லை என்று ஏகமனதாக முடிவு எடுக்கப்பட்டதாக தெரிவித்ததன் தொடர்ச்சியாக நாமக்கல்லிலும் முட்டை விலை 450 காசுகளாகவே தொடர்வது என்று முடிவெடுக்கப்பட்டது.

    வரும் நாட்களில் முட்டை விற்பனை அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால் பண்ணையாளர்கள் அறிவிக்கப்படும் மைனசுக்கு மேல் கொடுக்க வேண்டியது இல்லை.

    பண்ணைகளில் முட்டை இருப்பு பெரிய அளவில் இல்லாத காரணத்தினாலும், கடும் வெயில் காரணமாக உற்பத்தி சற்று குறைந்துள்ளதாலும் இனிவரும் நாட்களில் அறிவிக்கப்பட்ட மைனசுக்கு மேல் முட்டை விற்க வேண்டிய அவசியம் இல்லை.எனவே பண்ணையாளர்கள் சந்தை நிலவரத்தை அனுசரித்து அதிக மைனசிற்கு விற்காமல் நல்ல விலைக்கு முட்டையை விற்று பயனுடைய கேட்டுக்கொள்கிறோம்.

    இவ்வாறு தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு அறிவித்துள்ளது.

    • மதுபோதையில் வீட்டிற்கு வந்ததால், கணவன், மனைவி இடையே தகராறு ஏற்பட்டது.
    • திடீரென்று தூக்குப் போட்டுக் கொண்டார். பேபி வீட்டிற்கு திரும்பியபோது கணவன் தூக்கில் தொங்கியதை பார்த்து அதிர்ச்சியடைந்தார்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா மங்களமேடு பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 45). கூலித் தொழிலாளி. இவரது மனைவி பேபி (40). இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.

    செல்வராஜ் வேலைக்கு சென்று விட்டு வரும்போ தெல்லாம் மது அருந்திவிட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. நேற்றும் செல்வராஜ் மதுபோதையில் வீட்டிற்கு வந்ததால், கணவன், மனைவி இடையே தகராறு ஏற்பட்டது.

    இதை பார்த்த செல்வராஜின் மூத்த மகள், கோபித்துக் கொண்டு வெளியே சென்று விட்டார். இதையடுத்து மகளை தேடி பேபியும் சென்றுள்ளார்.

    அந்த நேரத்தில் வீட்டில் தனியாக இருந்த செல்வராஜ் திடீரென்று தூக்குப் போட்டுக் கொண்டார். பேபி வீட்டிற்கு திரும்பியபோது கணவன் தூக்கில் தொங்கியதை பார்த்து அதிர்ச்சியடைந்தார். அக்கம் பக்கத்தினர் உதவியுடன் பரமத்தி வேலூர் அரசு மருத்துவமனைக்கு செல்வராஜை கொண்டு சென்றார்.

    அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் செல்வராஜ் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து பரமத்திவேலூர் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கம் சார்பாக 10 அம்ச கோரிக்கை களை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.
    • இதில் 200-க்கும் மேற்பட்ட அங்கன்வாடி பணியாளர்கள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.

    ராசிபுரம்:

    நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் புதிய பஸ் நிலையம் அருகில் அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கம் சார்பாக 10 அம்ச கோரிக்கை களை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சிவகாமி தலைமை தாங்கினார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் சார்பில் ஸ்ரீதர் பேசினார். இதில் 200-க்கும் மேற்பட்ட அங்கன்வாடி பணியாளர்கள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.

    • ராசிபுரத்தில் தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தினர் வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு பெருந்திரள் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
    • இதில் 200-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

    ராசிபுரம்:

    தமிழ்நாடு தொடடக்கப் பள்ளி ஆசிரியர் மன்றம் சார்பில் பள்ளி ஆசிரியர் பணி பாதுகாப்பு சட்டத்தினை தமிழ்நாடு அரசு விரைந்து நிறை வேற்றிட வலியுறுத்தி, ராசிபுரம் வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு பெருந்திரள் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

    ஆசிரியர்கள் தாக்கப்படு வதும், பல்வேறு பிரச்சினைகளை சந்தித்து வரும் ஆசிரியர்களுக்கு பணி பாதுகாப்பு சட்டத்தினை உடனடியாக நிறைவேற்ற கோரியும் இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.

    மாவட்டத் தலைவர் ஜெயக்குமார் தலைமை தாங்கினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநில பொருளாளர் முருக செல்வராசன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினார். இதில் 200-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

    • தன்னார்வலர்களுக்கான 6-வது மாவட்ட மாநாட்டை நேற்று வோர்ட் நிறுவனம், தமிழ்நாடு அல்லியன்ஸ் மற்றும் டான்போஸ்கோ அன்பு இல்லம் இணைந்து நாமக்கல்லில் நடத்தின.
    • புதிய தொழிலாளர் சட்டங்கள் பற்றி தன்னார்வலர்களுக்கு பயிற்சி அளித்தார்.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்டத்தில் 150 கிராமங்களில் வோர்ட் தொண்டு நிறுவனம், டான்போஸ்கோ அன்பு இல்லத்தினர் குழந்தைகள் மற்றும் வளர் இளம் பெண்கள் மேம்பாடு-பாதுகாப்பு பணிகள், நூற்பாலைகளில் பணியாற்றும் வட மாநில தொழிலாளர்கள் நலன் சார்ந்த பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த பணியில் ஈடுபடும் தன்னார்வலர்களுக்கான 6-வது மாவட்ட மாநாட்டை நேற்று வோர்ட் நிறுவனம், தமிழ்நாடு அல்லியன்ஸ் மற்றும் டான்போஸ்கோ அன்பு இல்லம் இணைந்து நாமக்கல்லில் நடத்தின.

    நாமக்கல் மாவட்ட சட்ட பணிகள் ஆணைக்குழு செயலாளரும், சார்பு நீதிபதியுமான விஜயபாஸ்கர் தலைமை தாங்கி, வோர்ட் மற்றும் தொன்போஸ்கோ நிறுவன செயல்பாட்டு புகைப்பட கண்காட்சியை தொடங்கி வைத்து, சிறந்த தன்னார்வலர்களுக்கு விருதுகள் வழங்கி பேசினார். இதில் நாமக்கல் மாவட்ட சமூக நலத்துறை அலுவலர் கீதா, குழந்தை தொழிலாளர் திட்ட அலுவலர் அந்தோணி ஜெனிட், குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் சதீஷ்குமார், சி.எஸ்.சி. மேலாளர் மாணிக்கவாசகம் ஆகியோர் பேசினர். மாநாட்டில் தமிழ்நாடு அல்லியன்ஸ் நிறுவனர் பாலமுருகன், புதிய தொழிலாளர் சட்டங்கள் பற்றி தன்னார்வலர்களுக்கு பயிற்சி அளித்தார்.

    இதில் திட்ட ஆலோசகர் கிருஷ்ணமூர்த்தி, தமிழ்நாடு அல்லியன்ஸ் திட்ட ஒருங்கிணைப்பாளர் சிபிஜா, வோர்ட் நிறுவனம், தமிழ்நாடு அல்லியன்ஸ் மற்றும் டான்போஸ்கோ அன்பு இல்ல பணியாளர்கள், தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக வோர்ட் நிறுவன இயக்குனர் ரெனிடா சரளா வரவேற்றார். தொன்போஸ்கோ நிறுவன இயக்குனர் காஸ்மீர் ராஜ் நன்றி கூறினார்.

    • லாரியை போலீசார் தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர்.
    • போலீசார் லாரியையும், எருமை மாடுகளையும் பறிமுதல் செய்தனர்.

    ராசிபுரம்:

    நாமக்கல் மாவட்டம், நாமகிரிப்பேட்டை போலீஸ் நிலையம் அருகே போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டுக்கொண்டி ருந்தனர். அப்போது அந்த வழியாக முழுவதுமாக மூடப்பட்டிருந்த நிலையில் வந்த லாரியை போலீசார் தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அதில் 36 எருமை மாடுகளை ஏற்றிச் சென்றது தெரியவந்தது.

    இந்த எருமை மாடுகள் ஆந்திர மாநிலத்தில் இருந்து திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்திற்கு விற்பனைக்காக கொண்டு சென்றது தெரியவந்தது. இதையடுத்து, போலீசார் லாரியையும், எருமை மாடுகளையும் பறிமுதல் செய்தனர்.

    இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×