என் மலர்
உள்ளூர் செய்திகள்

கொலை செய்யப்பட்ட சுரேஷ்.
சேந்தமங்கலம் அருகே கள்ளக்காதலி வீட்டுக்கு சென்ற டிரைவர் அடித்துக்கொலை?
- ஆர்.பி.புதூரை சேர்ந்தவர் சுரேஷ்(வயது45), டிரைவர். இவரது மனைவி அங்கம்மாள் 12 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார்.
- இந்த நிலையில் நேற்று வழக்கம்போல கஸ்தூரியை பார்க்க சுரேஷ் சென்றார். அதன்பிறகு வீடு திரும்பவில்லை.
சேந்தமங்கலம்:
நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் அருகே உள்ள ஆர்.பி.புதூரை சேர்ந்தவர் சுரேஷ்(வயது45), டிரைவர். இவரது மனைவி அங்கம்மாள் 12 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இந்த நிலையில் சுரேசுக்கும் பொட்டிரெட்டிபடிட் பகுதியை சேர்ந்த கஸ்தூரி(60) என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது.
இது நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. அடிக்கடி கஸ்தூரி வீட்டுக்கு செல்வதை சுரேஷ் வழக்கமாக கொண்டி ருந்தார். இந்த நிலையில் நேற்று வழக்கம்போல கஸ்தூரியை பார்க்க சுரேஷ் சென்றார். அதன்பிறகு வீடு திரும்பவில்லை.
இந்த நிலையில் சுரேஷ் கீழே விழுந்து இறந்து விட்டதாக கஸ்தூரியின் மகன் சந்த்ரு(20) என்பவர் சுரேசின் தந்தை சுப்பிரமணிக்கு போனில் தகவல் கூறியுள்ளார். ஆனால் சுப்பிரமணி அதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.
இந்த நிலையில் காரில் வந்த மர்ம நபர்கள் சுரேஷ் உடலை சுப்பிரமணியின் வீட்டு அருகே வைத்துவிட்டு சென்றனர். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. உடனே இதுபற்றி சேந்தமங்கலம் போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சுரேசின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு நாமக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். சுரேசின் தலையில் காயங்கள் உள்ளன. எனவே மர்ம நபர் கள் சுரேசை அடித்து கொலை செய்திருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.
இது தொடர்பாக போலீ சார் தொடர்ந்து விசாரித்து வருகிறார்கள். இந்த சம்பவத்தில் கஸ்தூரியின் மகன் சந்த்ருவுக்கு தொடர்பு இருக்கிறதா என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.






