பரமத்திவேலூர் அருகே தொழிலாளி தூக்குப் போட்டு தற்கொலை

மதுபோதையில் வீட்டிற்கு வந்ததால், கணவன், மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. திடீரென்று தூக்குப் போட்டுக் கொண்டார். பேபி வீட்டிற்கு திரும்பியபோது கணவன் தூக்கில் தொங்கியதை பார்த்து அதிர்ச்சியடைந்தார்.
பரமத்திவேலூர் அருகே தொழிலாளி தூக்குப் போட்டு தற்கொலை
Published on

பரமத்திவேலூர்:

நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா மங்களமேடு பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 45). கூலித் தொழிலாளி. இவரது மனைவி பேபி (40). இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.

செல்வராஜ் வேலைக்கு சென்று விட்டு வரும்போ தெல்லாம் மது அருந்திவிட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. நேற்றும் செல்வராஜ் மதுபோதையில் வீட்டிற்கு வந்ததால், கணவன், மனைவி இடையே தகராறு ஏற்பட்டது.

இதை பார்த்த செல்வராஜின் மூத்த மகள், கோபித்துக் கொண்டு வெளியே சென்று விட்டார். இதையடுத்து மகளை தேடி பேபியும் சென்றுள்ளார்.

அந்த நேரத்தில் வீட்டில் தனியாக இருந்த செல்வராஜ் திடீரென்று தூக்குப் போட்டுக் கொண்டார். பேபி வீட்டிற்கு திரும்பியபோது கணவன் தூக்கில் தொங்கியதை பார்த்து அதிர்ச்சியடைந்தார். அக்கம் பக்கத்தினர் உதவியுடன் பரமத்தி வேலூர் அரசு மருத்துவமனைக்கு செல்வராஜை கொண்டு சென்றார்.

அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் செல்வராஜ் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து பரமத்திவேலூர் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com