என் மலர்
உள்ளூர் செய்திகள்

பரமத்தியில் அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் செய்த போது எடுத்த படம்.
பரமத்தியில் அங்கன்வாடி ஊழியர்கள், உதவியாளர்கள் ஆர்ப்பாட்டம்
- தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர்கள் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கை களை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.
- ஆர்ப்பாட்டத்திற்கு அங்கன்வாடி ஊழியர்கள் சங்க ஒன்றிய தலைவர் சவுமியா தலைமை வகித்தார்.
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா பரமத்தியில் தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர்கள் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கை களை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு அங்கன்வாடி ஊழியர்கள் சங்க ஒன்றிய தலைவர் சவுமியா தலைமை வகித்தார். ஒன்றிய செயலா ளர் மதி வள்ளி, ஒன்றிய பொருளாளர் துர்கா ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் சிறப்பு அழைப்பாளர்களாக தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்க மாவட்ட தலைவர் ராஜேந்திர பிரசாத், சி.ஐ.டி.யு மாவட்ட செயலாளர் வேலுசாமி, தமிழ்நாடு பேரூராட்சி ஊழியர்கள் சங்க மாவட்ட பொருளாளர் அண்ணாதுரை ஆகியோர் கலந்துகொண்டு ஆர்ப்பாட்டம் குறித்து விளக்கிப் பேசினர்.
இதில், மிக குறைவாக இருக்கும் குழந்தைகள் மையங்களை மினி மையம் ஆக்குவதையும், 5 குழந்தை களுக்கு குறைவாக இருக்கும் மினி மையங்களை பிரதான மையத்தோடு இணைக்கும் திட்டத்தினை கைவிட வேண்டும்.
அங்கன்வாடி பணியா ளர்கள் கூடுதல் பொறுப்பாக 2 அல்லது 3 மையங்களை கவனித்துக் கொள்வதால் மன உளைச்ச லுக்கு ஆளாகி வருகிறார்கள். அதனை சரி செய்ய வேண்டும். உடனடி யாக காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும். பள்ளி, கல்லூரி களுக்கு கோடை விடுமுறை விடுவது போல் அங்கன் வாடி மையங்க ளுக்கும் ஒரு மாத கால விடுமுறை விட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் செய்தனர். ஆர்ப்பாட்டத்தில் பர மத்தி ஒன்றிய சுற்று வட்டார பகுதி களை சேர்ந்த அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியா ளர்கள் கலந்து கொண்டனர்.






