என் மலர்
உள்ளூர் செய்திகள்

பள்ளி முன்பாக கூடிநின்ற பொதுமக்கள்.
பள்ளிபாளையத்தில் பயங்கரம் அரசு பள்ளிக்குள் புகுந்து காவலாளி வெட்டிக்கொலை
- பள்ளிபாளையம் காவேரி ஆர்.எஸ்.பகுதியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது.
- இன்று காலை பள்ளியை திறக்க ஊழியர்கள் வந்தனர்.
பள்ளிபாளையம்:
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் காவேரி ஆர்.எஸ்.பகுதியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. இங்கு இரவு காவலாளியாக நடராஜ்(வயது78) என்பவர் வேலை செய்து வந்தார். நேற்று இரவு இவர் வழக்கம்போல பணியில் இருந்தார்.
இன்று காலை பள்ளியை திறக்க ஊழியர்கள் வந்தனர். அப்போது நடராஜ் ரத்த காயங்களுடன் மர்மமான முறையில் பிணமாக கிடந்தார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர்கள் பள்ளிபாளையம் போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர்.
போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். நள்ளிரவில் யாரோ மர்ம நபர்கள் பள்ளிக்குள் புகுந்து காவலாளி நடராஜை வெட்டி கொலை செய்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.
இதனிடையே பள்ளியில் காவலாளி கொலை செய்யப்பட்டதாக அப்பகுதி முழுவதும் தகவல் பரவியது. இதனால் அங்கு ஏராளமான பொதுமக்களும், பள்ளி குழந்தைகளின் பெற்றோரும் கூடினார்கள். இதன் காரணமாக அங்கு பெரும் பரபரப்பு உண்டானது.
இந்த சம்பவத்தை அடுத்து பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. பள்ளியில் ஏராளமான போலீசார் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டனர். நடராஜை கொலை செய்த மர்ம நபர்கள் யார்? கொலையாளீகள் உருவம் அப்பகுதியில் கண்காணிப்பு காமிராக்களில் பதிவாகி உள்ளதா? கொலைக்கான காரணம் என்ன என்று போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சம்பவம் நடந்த பள்ளிக்கு தடவியல் நிபுணர்கள் வந்து தடயங்களை சேகரித்தனர். போலீஸ் மோப்பநாயும் வரவழைக்கப்பட்டது. கொலை செய்யப்பட்ட நடராஜ்சுக்கும் வேஎறு யாருக்கும் முன்விரோதம் உள்ளதா? என்றும் விசாரணை நடந்து வருகிறது.
இந்த பள்ளியில் இரவுநேரங்களில் சமூக விரோதிகள் புகுந்து மது அருந்துவது உள்ளிட்ட செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளனர். அதுபோல நேற்று இரவு வந்த மர்ம நபர்கள் நடராஜை கொலை செய்திருக்கலாம் என்று போலீசார் சந்தேக்கின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.






