search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வேலூர் பேரூராட்சி அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகையிட்டு போராட்டம்
    X

    வேலூர் பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட விவசாயிகள், வியாபாரிகள். 

    வேலூர் பேரூராட்சி அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகையிட்டு போராட்டம்

    • கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.1.47 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு 60 கான்கிரீட் தளங்கள், கான்கிரீட் மேற்கூரைகளுடன், அனைத்து அடிப்படை‌ வசதிகளுடன் அமைக்க பணிகள் தொடங்கப்பட உள்ளது.
    • இதற்காக பரமத்திவேலூர் பழைய தற்காலிக பஸ் நிலையம் பகுதிக்கு வாரச்சந்தையை இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக பேரூராட்சி நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டது.

    பரமத்திவேலூர்:

    –நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் பேரூராட்சி சார்பில் ஞாயிற்றுக்கிழமை தோறும் வாரசந்தை நடைபெற்று வருகிறது.

    இந்த வாரச்சந்தைக்கு வேலூர், குப்புச்சி பாளையம், பொய்யேரி, ஒழுகூர்பட்டி, படமுடி பாளையம், பொத்தனூர், வேலாயுதம்பாளையம், கட்டிபாளையம், தவுட்டுப்பாளையம் மற்றும் சுற்று வட்டாரப் பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் தங்கள் விளை நிலங்களில் விளையும் காய்கறிகளை கொண்டு வருகின்றனர்.

    மேலும் வியாபாரிகளும் இந்த வாரச்சந்தைக்கு தானியங்கள், காய்கறிகள் உள்ளிட்ட பொதுமக்களுக்கு தேவையான அனைத்து பொருட்களையும் கொண்டு வருகின்றனர்.

    இந்த வாரச்சந்தையில் அடிப்படை வசதிகள் எதுவும் இல்லை. இதனை கருத்தில் கொண்டு வேலூர் பேரூராட்சி நிர்வாகம் சார்பில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.1.47 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு 60 கான்கிரீட் தளங்கள், கான்கிரீட் மேற்கூரைகளுடன், அனைத்து அடிப்படை வசதிகளுடன் அமைக்க பணிகள் தொடங்கப்பட உள்ளது.

    இதற்காக பரமத்திவேலூர் பழைய தற்காலிக பஸ் நிலையம் பகுதிக்கு வாரச்சந்தையை இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக பேரூராட்சி நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டது.

    இந்த நிலையில் தற்போது உள்ள வாரச்சந்தை பகுதியில் இடவசதி போதுமானதாக உள்ளது. அதில் மேற்கூரை அமைத்து கட்டிடம் கட்டினால் எங்களுக்கு இட வசதி பற்றாக்குறை ஏற்படும்.

    வாரச்சந்தையில் கடைகள் வைத்திருக்கும் அனைத்து வியாபாரிகள் மற்றும் விவசாயிகளுக்கும் கடைகள் கட்டிதர இயலாது என கூறி புதிதாக கடைகள் கட்ட எதிர்ப்பு தெரிவித்து பேரூராட்சி அலுவலகத்தை விவசாயிகள் திடீரென முற்றுகையிட்டனர்.

    அதனை தொடர்ந்து பேரூராட்சி செயல் அலுவலர் செல்வக்குமார், சந்தை வியாபாரிகளை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் விரைவில் தற்போதுள்ள சந்தை பகுதி அனைத்து வசதிகளுடன் கான்கிரீட் மேற்கூரை, கான்கிரீட் தளங்கள் அமைக்கப்பட உள்ளது. இதில் அனை வருக்கும் இடம் ஒதுக்கி தரப்படும்.

    தற்காலிகமாக இடமாற்றம் செய்யப்பட உள்ள சந்தை பகுதியிலும் அனைத்து வியாபாரி களுக்கும் இடம் ஒதுக்கி தரப்படும் என தெரிவித் ததன் அடிப்படையில் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட வியாபாரிகள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

    Next Story
    ×