என் மலர்
நாமக்கல்
- குமாரபாளையத்தில் நாளை ஜல்லிக்கட்டுப் போட்டி நடைபெற உள்ளது.
- இதற்காக, போட்டி நடை பெறும் மைதானத்தில் வாடிவாசல் அமைக்கப்பட்டு இருப்பதை நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயாசிங், எஸ்.பி. கலைச்செல்வன் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
நாமக்கல்:
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) ஜல்லிக்கட்டுப் போட்டி நடைபெற உள்ளது. இதற்காக, போட்டி நடை பெறும் மைதானத்தில் வாடிவாசல் அமைக்கப் பட்டு இருப்பதை நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயாசிங், எஸ்.பி. கலைச்செல்வன் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
ஜல்லிக்கட்டு வீரர்கள் மைதானத்துக்குள் வருவதற்கு தனியாக பாதை அமைக்கப்பட்டு உள்ளதை யும், ஜல்லிக்கட்டு மைதா னத்தில் பார்வையாளர்கள் நுழையாமல் தடுக்கும் வகையில் பெரிய அளவில் இரும்பு தடுப்புகள் அமைக்கப்பட்டு உள்ளதை யும், காளைகள் வெளி யேறும் இடத்தில் மைதா னத்தை சுற்றிலும் இரண்ட டுக்கு தடுப்புகள் அமைக்கப் பட்டு, காளைகளை உரிமை யாளர்கள் எளிதில் பிடிக்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருப்பதையும் ஆய்வு செய்தனர்.
மேலும் ஜல்லிக்கட்டு போட்டிக்கு வரும் காளைகளை ஆய்வு செய்ய கால்நடை பராமரிப்பு துறையினருக்கு தனியாக பந்தல் அமைத்து இடம் ஒதுக்கப்பட்டு இருப்பதை யும், மருத்துவ குழுவினர் அவசர சிகிச்சை அளிக்க தனியாக இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டு இருப்பதை யும், ஜல்லிக்கட்டு காளைகள் வரும் பாதையில், பாதை முழுவதும் பந்தல் அமைக்கப்பட்டுவரும் பணி யினையும், ஆம்புலன்ஸ் வருவதற்காக தனியாக வழி ஏற்பாடு செய்யப்பட்டுள்ள தையும், பார்வையாளர்கள் அமருவதற்கும், தனியாக இடம் ஒதுக்கி ஏற்பாடுகள் செய்யப்பட்டிருப்பதையும் அவர்கள் பார்வை யிட்டார்கள்.
ஜல்லிக்கட்டு காளைகள் மற்றும் வீரர்களுக்கு பாது காப்பாக, மைதானத்தில் தேங்காய் நார் சரியான முறையில் பரப்பப்பட வேண்டும் என்றும், தேவையான ஒலிபெருக்கி அமைப்புகள் ஏற்பாடு செய்யவும், ஜல்லிக்கட்டு போட்டி நடத்த அரசு அறி வுறுத்தியுள்ள விதிமுறை களின்படி தேவையான ஏற்பாடுகளை செய்து, மாவட்ட நிர்வாகத்திற்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று ஜல்லிக்கட்டு போட்டி ஏற்பாட்டாளர்களிடம் அவர்கள் அறிவுறுத்தி னார்கள்.
நிகழ்ச்சியில், திருச்செங் கோடு கோட்டாட்சியர் கவுசல்யா, கால்நடை பராம ரிப்புத்துறை இணை இயக்கு நர் பாஸ்கர் உள்ளிட்ட பல்வேறு அரசுத்துறை அலு வலர்கள் கலந்து கொண்டனர்.
- கறிக்கோழிகள் நாடு முழுவதும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
- கறிக்கோழிக்கான விலை பல்லடத்தில் நிர்ணயம் செய்யப்படுகிறது.
நாமக்கல்:
நாமக்கல் மண்டலத்திற்கு உட்பட்ட சேலம், நாமக்கல், ஈரோடு, திருப்பூர், பல்லடம் உள்பட பல பகுதிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கறிக்கோழி பண்ணைகள் உள்ளன.
இந்த கறிக்கோழிகள் பண்ணைகள் மூலம் 25 லட்சத்திற்கும் மேற்பட்ட கறிக்கோழிகள் வளர்க்கப்படுகின்றன. இந்த கறிக்கோழிகள் நாடு முழுவதும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இதற்கான விலை பல்லடத்தில் நிர்ணயம் செய்யப்படுகிறது.
இன்று காலை பல்லடத்தில் கறிக்கோழி உற்பத்தியாளர்கள், வியாபாரிகள் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. கூட்டத்தில் கறிக்கோழி உற்பத்தி மற்றும் அதன் தேவை குறித்தும் விரிவாக ஆலோசிக்கப்பட்டது. பின்னர் கறிக்கோழி விலையை 10 ரூபாய் உயர்த்த முடிவு செய்யப்பட்டது.
அதன்படி 92 ரூபாயாக இருந்த கறிக்கோழி விலை 102 ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டது. இதே போல நாமக்கலில் நடந்த முட்டை கோழி உற்பத்தியாளர்கள் ஆலோசனை கூட்டத்தில் 72 ரூபாயாக இருந்த முட்டை கோழி விலை 70 ரூபாயாக குறைக்கப்பட்டது. முட்டை விலையில் எந்த மாற்றமும் செய்யாமல் 410 காசுகளாக நீடிக்கிறது.
- வேலை இல்லாததால் விரக்தி அடைந்தார்.
- இதனால் மனவேதனையில் தவித்த அவர், நேற்று இரவு வீட்டில் சேலையால் தூக்குப் போட்டுக்கொண்டார்.
நாமக்கல்:
நாமக்கல் பெரியப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் ரஞ்சித் (வயது 23). கூலி வேலைக்கு சென்று வந்த இவர், மேலும் தொடர்ந்து வேலை இல்லாத தால் விரக்தி அடைந்தார். இத னால் மனவேதனையில் தவித்த அவர், நேற்று இரவு வீட்டில் சேலையால் தூக்குப் போட்டுக்கொண்டார். அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு நாமக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்க னவே இறந்து விட்டதாக கூறினார்.
இது குறித்து தகவல் அறிந்த நாமக்கல் நகர போலீஸ் இன்ஸ்பெக்டர் சங்கர பாண்டி யன் மற்றும் போலீசார் சம்ப வம் குறித்து விசாரணை நடத்தினர். வேலை இல்லாத விரக்தியில் அவர் தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது. இதுகுறித்து வழக்கு பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- இந்நிலையில் கடந்த வாரத்தை விட, இந்த வாரம் வாழைத்தார்களின் விலை அதிகரித்துள்ளதால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தள்ளனர்.
- நேற்று நடைபெற்ற ஏலத்திற்கு 1500 வாழைத்தார்களை விவசாயிகள் கொண்டு வந்திருந்தனர்.
பரமத்தி வேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலுார் தாலுகா பாண்டமங்கலம், பொத்த னுார், நன்செய்இடையாறு, குப்பிச்சிபாளையம், மோ கனுார், பரமத்திவேலுார், அண்ணாநகர், பிலிக்கல்பா ளையம், ஆனங்கூர், ஜேடர்பாளையம், கொத்த மங்கலம், சிறுநல்லி கோவில், அய்யம்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதி களில் விவசாயிகள் பூவன், பச்சநாடன், கற்பூரவல்லி, ரஸ்தாளி, மொந்தன் உள்ளிட்ட பல்வேறு வகையான வாழைகளை பயிரிட்டுள்ளனர்.
வாழைத்தார்களை உள்ளூர் பகுதிகளுக்கு வரும் வியாபாரிகளுக்கும், பரமத்திவேலுாரில் செயல்பட்டு வரும் தினசரி ஏல மார்க்கெட்டிற்கும் கொண்டு வந்து விற்பனை செய்து வருகின்றனர்.
இங்கு ஏலம் எடுக்கப்ப டும் வாழைத்தார்களை, தமிழ்நாட்டில் உள்ள நாமக்கல், சேலம், ஈரோடு, கோவை, நீலகிரி, கரூர், திண்டுக்கல், மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கும், ஆந்திரா, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கும் லாரிகள் மூலம் அனுப்பி வைக்கப்படுகிறது.
இந்நிலையில் கடந்த வாரத்தை விட, இந்த வாரம் வாழைத்தார்களின் விலை அதிகரித்துள்ளதால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தள்ளனர். நேற்று நடைபெற்ற ஏலத்திற்கு 1500 வாழைத்தார்களை விவசாயிகள் கொண்டு வந்திருந்தனர். இதில் பூவன் வாழைத்தார் அதிகபட்சமாக ரூ.500-க்கும், ரஸ்தாலி வாழைத்தார் ரூ.350-க்கும், பச்சைநாடன் வாழைத்தார் ரூ.300-க்கும், கற்பூரவள்ளி வாழைத்தார் ரூ.400-க்கும், மொந்தன் வாழைக்காய் ஒன்று ரூ.5 க்கும் விற்பனையானது.
வரத்து குறைவு மற்றும் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு வீடுகளில் கனி வைத்து வழிபடுவர், கோவில் விசேஷங்கள் தொடர்ந்து வருவதால் வாழைத்தார் விலை உயர்ந்துள்ளதாக வியா பாரிகள் தெரிவித்தனர்.
- நாமக்கல் அரசு மருத்து வக்கல்லூரியில் கடந்த 2 ஆண்டுகளாக எம்.பி.பி.எஸ். படிப்பிற்கான சேர்க்கை நடைபெற்று வகுப்புகள் நடைபெற்று வருகிறது.
- நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி அலுவலகத்தை நேரில் அணுகி தெரிந்து கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
நாமக்கல்:
நாமக்கல் அரசு மருத்து வக்கல்லூரி முதல்வர் டாக்டர் சாந்தா அருள்மொ ழிதேவி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது:-
நாமக்கல் அரசு மருத்து வக்கல்லூரியில் கடந்த 2 ஆண்டுகளாக எம்.பி.பி.எஸ். படிப்பிற்கான சேர்க்கை நடைபெற்று வகுப்புகள் நடைபெற்று வருகிறது. நடப்பு 2023-24-ம் கல்வி ஆண்டில், இந்த கல்லூரியில் மருத்து வம் சாராத பட்டப்ப டிப்புகள், டிப்ளமோ மற்றும் சான்றிதழ் படிப்பு கள் தொடங்க அனுமதி வழங்கப்பட்டு, அதற்கான சேர்க்கை நடைபெற உள்ளது.
இந்த கல்வியாண்டில், 3 ஆண்டு பி.எஸ்சி பட்டப்படிப்புகளான, கதிரியக்கம் மற்றும் இமேஜிங் தொழில்நுட்பம் (ரேடியாலஜி மற்றும் இமேஜிங் டெக்னாலஜி), சுவாச சிகிச்சை (ரெஸ்பி ரேசன் தெராபி), அறுவை அரங்கம் மற்றும் மயக்க மருந்து தொழில்நுட்பம் (ஆபரேசன் தியேட்டர் மற்றும் அனெஸ்தீசியா டெக்னாலஜி), மருத்துவ ஆய்வக தொழில்நுட்பம் (மெடிக்கல் லேபாரட்டரி டெக்னாலஜி), சிக்கலான பராமரிப்பு தொழில் நுட்பம் (கிரிட்டிக்கல் கேர் டெக்னாலஜி) ஆகிய 5 இளநிலை பட்டப்படிப்பு களுக்கு சேர்க்கை நடைபெற உள்ளது.
2 ஆண்டுகள் படிக்கும் டிப்ளமோ பிரிவில், டிப்ளமோ இன் ரேடியோ டயாக்னோசிஸ் டெக்னா லஜி, டிப்ளமோ இன் மெடிக்கல் லேபாரட்டரி டெக்னாலஜி ஆகிய படிப்புகளுக்கு சேர்க்கை நடைபெற உள்ளது.
மேலும், 1 ஆண்டு படிக்கும், அவசர சிகிச்சை தொழில்நுட்பவியலாளர் (எமர்ஜென்சி கேர் டெக்னீசியன்), மயக்க மருந்து தொழில்நுட்ப வியலாளர் (அனெஸ்தீ சியா டெக்னீசியன்), ஆப ரேசன் தியேட்டர் தொழில்நுட்பவியலாளர் (ஆபரேசன் தியேட்டர் டெக்னீசியசன்), எலும்பி யல் தொழில்நுட்பவிய லளர் (ஆர்த்தோபோடிக் டெக்னீசியன்), பல்நோக்கு மருத்துவ பணியாளர் (மல்டி பர்ப்பஸ் ஆஸ்பிட்டல் ஒர்க்கர்) ஆகிய 5 சான்றிதழ் படிப்புகளுக்கும் சேர்க்கை நடைபெற உள்ளது.
இந்த பாடங்கள் சேர்க்கை சம்மந்தமான விபரங்களை https://tnmedicalselection.net என்ற வெப்சைட்டில் தெரிந்து கொண்டு விண்ணப்பிக்க லாம் அல்லது நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி அலுவலகத்தை நேரில் அணுகி தெரிந்து கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரியில் மருத்துவம் சாராத 16 படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கை
- நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
- இச்சாலையை விரைந்து சீரமைத்து தரவேண்டும் என்பதை வலியுறுத்தி கோஷம் எழுப்பப்பட்டது.
நாமக்கல்:
கொல்லிமலையில் உள்ள, வெள்ளக்கல் ஆறு முதல் ஊர்முடிப்பட்டி கிராமம் வரை செல்லும் சாலையை சீரமைக்க வலியுறுத்தி நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு மலைவாழ் மக்கள் நலச்சங்க மாவட்ட செயலாளர் தங்கராசு தலைமை வகித்தார். மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் கண்ணன் கோரிக்கைளை வலியுறுத்திப் பேசினார்.
ஆர்ப்பாட்டத்தில், கொல்லிமலை சேளூர்நாடு, வெள்ளக்கல் ஆறு முதல் ஊர்முடிப்பட்டி கிராமம் வரை உள்ள சாலை மிக மோசமான நிலையில், குண்டும் குழியுமாக உள்ளதால் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வருகிறது. இச்சாலையை விரைந்து சீரமைத்து தரவேண்டும் என்பதை வலியுறுத்தி கோஷம் எழுப்பப்பட்டது.
தொடர்ந்து சாலை அமைக்க வலியுறுத்தி கிராம மக்கள் தங்களது ரேசன் கார்டுகளை திருப்பி அளிக்க முற்பட்டனர். அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய, மாவட்ட வருவாய் அலுவலர் மணிமேகலை, கொல்லிமலைப் பகுதியில் சாலைகளை சீரமைக்க விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார். இதையேற்று மலைவாழ் மக்கள் கலைந்து சென்றனர்.
- தமிழ் புத்தாண்டை முன்னிட்டு பூக்கள் விலை உயர்ந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
- பூக்கள் விலை உயர்வ டைந்துள்ளதால் பூக்கள் பயிர் செய்துள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் மற்றும் கரூர் மாவட்டம், வேலாயுதம் பளையம் சுற்று வட்டாரப் பகுதிகளில் பல்வேறு வகையான பூக்கள் பயிர் செய்யப்பட்டுள்ளது.
இங்கு விளையும் பூக்களை விவசாயிகள் பரமத்தி வேலூரில் உள்ள பூக்கள் ஏல சந்தைகளுக்கு கொண்டு வருகின்றனர். வேலூர், ஜேடர்பாளையம், கபிலர்மலை, பரமத்தி, பாலப்பட்டி மற்றும் கரூர் மாவட்டம் வேலாயுதம்பா ளையம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த வியாபாரிகள் பூக்களை ஏலம் எடுக்க வருகின்றனர்.
கடந்த வாரம் நடைபெற்ற ஏலத்தில் குண்டுமல்லிகை கிலோ ரூ.400- க்கும், சம்பங்கி ரூ.100-க்கும், அரளி ரூ.200-க்கும், ரோஜா ரூ.200-க்கும், முல்லைப் பூ ரூ.500-க்கும், செவ்வந்திப்பூ ரூ.200-க்கும், கனகாம்பரம் ரூ.600-க்கும், காக்கட்டான் ரூ.400-க்கும் ஏலம் போனது.
தமிழ் புத்தாண்டை முன்னிட்டு நேற்று (வியாழக்கிழமை) நடைபெற்ற ஏலத்தில் குண்டு மல்லிகை கிலோ ரூ.660-க்கும், சம்பங்கி ரூ.200-க்கும், அரளி ரூ.320-க்கும், ரோஜா ரூ.260-க்கும், முல்லைப் பூ ரூ.700-க்கும், செவ்வந்திப்பூ ரூ.260-க்கும், கனகாம்பரம் ரூ.900-க்கும், காக்கட்டான் ரூ.600-க்கும் ஏலம் போனது.தமிழ் புத்தாண்டை முன்னிட்டு பூக்கள் விலை உயர்ந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர். பூக்கள் விலை உயர்வ டைந்துள்ளதால் பூக்கள் பயிர் செய்துள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.தமிழ் புத்தாண்டையொட்டி பரமத்தியில் பூக்கள் விலை உயர்வு
- செம்பேன் பூச்சி மேலாண்மை முறைகள் என்ற தலைப்பில் ஒருநாள் இலவச பயிற்சி நடைபெற உள்ளது.
- பயிற்சிக்கு வரும் விவசாயிகள் தங்களு டைய ஆதார் எண்னை கண்டிப்பாக பதிவு செய்ய வேண்டும். nama
நாமக்கல்:
நாமக்கல் வேளாண் அறிவியல் நிலைய தலைவர் டாக்டர் அழகுதுரை வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
நாமக்கல் மோகனூர் ரோட்டில், கால்நடை மருத்துவக் கல்லூரி வளா கத்தில் உள்ள வேளாண் அறிவியல் நிலையத்தில் (கே.வி.கே) வருகிற 19-ந் தேதி காலை 9.30 மணிக்கு மரவள்ளி சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு ஒருங்கிணைந்த முறையில் செம்பேன் பூச்சி மேலாண்மை முறைகள் என்ற தலைப்பில் ஒருநாள் இலவச பயிற்சி நடைபெற உள்ளது.
இப்பயிற்சியில் மரவள்ளி பயிர்களைத் தாக்கும் செம்பேன்கள், அதனைக் கட்டுப்படுத்தும் முறைகள், இயற்கை முறையில் பூச்சி மற்றும் பூஞ்சாண எதிர் உயிர் கொல்லிகளைக் கொண்டு ஒருங்கிணைந்த முறையில் மரவள்ளியில் செம்பேன் நோய் கட்டுப்படுத்துதல் குறித்து தெளிவாக பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
இந்த பயிற்சியில், மரவள்ளி சாகுபடி செய்யும் விவசாயிகள், விவசாயம் சார்ந்த களப்பணியாளர்கள், பண்ணையாளர்கள், ஊரக மகளிர், இளைஞர்கள் மற்றும் ஆர்வமுள்ள அனை வரும் கலந்து கொள்ளலாம். பயிற்சிக்கு பதிவு செய்வதில் நாமக்கல் மாவட்ட விவசாயி களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
மேலும், பயிற்சிக்கு வரும் விவசாயிகள் தங்களு டைய ஆதார் எண்னை கண்டிப்பாக பதிவு செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.
- கடந்த 11-ந் தேதி வீட்டில் தனியாக இருந்த போது, பூச்சிக்கொல்லி மருந்தை குடித்துள்ளார்.
- முதிய வரை மீட்டு திருச்செங்கோட்டில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். சிகிச்சை அளித்தும் பல னின்றி முத்துசாமி உயிரிழந்தார்.
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா நல்லூர் கந்தம்பாளையம் அருகே தேவனாம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் முத்துசாமி (வயது 61).
இவருக்கு தீராத முழங்கால் வலி இருந்து வந்தது. இதன் காரணமாக பல்வேறு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வந்தார். இருப்பினும் வலி சரியாகவில்லை. இதனால் விரக்தியில் இருந்து வந்தார்.
இந்நிலையில் கடந்த
11-ந் தேதி வீட்டில் தனியாக இருந்த போது, பூச்சிக்கொல்லி மருந்தை குடித்துள்ளார். இதனால் வயிறு எரிச்சல் ஏற்படவே சத்தம் போட்டு உள்ளார். அதைக் கேட்ட அக்கம் பக்கத்தினர், முதிய வரை மீட்டு திருச்செங்கோட்டில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவையில் உள்ள ஒரு தனியார் மருத்து வமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பல னின்றி முத்துசாமி உயிரி ழந்தார். இதுகுறித்து முத்து சாமியின் மகள் மாலதி (28) கொடுத்த புகாரின்பேரில், நல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- ஆபாசமாக படம், வீடியோ எடுத்த ஆசிரியர் பன்னீர்செல்வம் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
- இதையடுத்து ஆசிரியர் பன்னீர்செல்வத்தை, மாவட்ட கல்வி அலுவலர் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டு உள்ளார்.
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம், கீரம்பூர் அரசு உயர்நிலை பள்ளியில் மாணவிகளை ஆபாசமாக படம், வீடியோ எடுத்த ஆசிரியர் பன்னீர்செல்வம் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இதையடுத்து ஆசிரியர் பன்னீர்செல்வத்தை, மாவட்ட கல்வி அலுவலர் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டு உள்ளார்.
இந்த நிலையில் நேற்று பள்ளிக்கு வந்த மாணவ, மாணவிகளின் பெற்றோர்கள், பள்ளியின் தலைமை ஆசிரியரை இடமாற்றம் செய்யக்கோரி பள்ளியை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
தகவல் அறிந்து அங்கு வந்த பரமத்திவேலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு கலையரசன், நாமக்கல் தாசில்தார் சக்திவேல், மாவட்ட கல்வி அலுவலர் (தொடக்கப்பள்ளி) பாலசுப்பிரமணி மற்றும் திட்ட அலுவலர் பாஸ்கரன் ஆகியோர் பெற்றோர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதில், இப்பள்ளியில் படிக்கும் மாணவிகளுக்கு தகுந்த பாதுகாப்பு வழங்க வேண்டும். ஆசிரியர் செய்த தவறுகளை கண்டு கொள்ளாமல் இருந்த தலைமை ஆசிரியர் ஷர்மிளாவை இடமாற்றம் செய்ய வேண்டும். மேலும் ஆசிரியர்கள் மீது புகார் அளித்த மாணவிகள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது. மாதம் ஒரு முறை பெற்றோர்களை அழைத்து பள்ளியில் கூட்டம் நடத்த வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
கோரிக்கைகளை நிறைவேற்ற உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என உறுதியளித்ததை தொடந்து முற்றுகை போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலந்து சென்றனர்.
- கால பைரவருக்கு பங்குனி மாத தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது.
- பூக்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது.
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா கோப்பணம்பாளையத்தில் உள்ள பரமேஸ்வரர் ஆலயத்தில் கால பைரவருக்கு பங்குனி மாத தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு பால், தயிர், இளநீர், பன்னீர், சந்தனம், விபூதி, மஞ்சள், திருமஞ்சனம், தேன், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது.
அதனை தொடர்ந்து பூக்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது. இதில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு காலபைரவர், பரமேஸ்வரர், மாசாணி அம்மன், அரசாயி அம்மன், அங்காள பரமேஸ்வரி அம்மன் மற்றும் பரிவார தெய்வங்களை தரிசனம் செய்து அருள் பெற்றனர்.
அதேபோல் நன்செய் இடையாரில் உள்ள திருவேலீஸ்வரர் கோவில், பரமத்திவேலூர் காவிரி ஆற்றங்கரையில் உள்ள காசி விஸ்வநாதர் கோவில், பிலிக்கல்பாளையம் அருகே கரட்டூரில் உள்ள விஜயகிரி பழனி ஆண்டவர் கோவில், ஜேடர்பாளையம் ஈஸ்வரன் கோவில், வடகரையாத்தூர் ஈஸ்வரன் கோவில், பாண்டமங்கலம் ஈஸ்வரன் கோவில் மற்றும் பரமத்திவேலூர் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள ஈஸ்வரன் கோவிலில் பங்குனி மாத தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு காலபைரவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.
இதில் அந்தந்த பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் கலந்துகொண்டு கால பைரவரை தரிசனம் செய்து அருள் பெற்றனர்.
- கடந்த 6 மாதமாக 7-வது வார்டு சுடுகாடு பகுதியில் தனியாருக்கு சொந்த மான இடத்தில் கொட்டப்பட்டு வருகின்றன.
- குப்பைக்கு மர்ம நபர்கள் தீ வைத்து வருகின்றனர்.
தாரமங்கலம்:
தாரமங்கலம் நகராட்சியில் அன்றாடம் சேகரிக்க படும் குப்பைகள் கடந்த 6 மாதமாக 7-வது வார்டு சுடுகாடு பகுதியில் தனியாருக்கு சொந்த மான இடத்தில் கொட்டப்பட்டு வருகின்றன. சமீப காலமாக இங்கு கொட்டப்பட்டுள்ள குப்பைக்கு மர்ம நபர்கள் தீ வைத்து வருகின்றனர். இதனால் தீயில் இருந்து வெளியேறும் நச்சு புகையானது அந்த பகுதியைசேர்ந்த குடியிருப்பு முழுவதும் சூழ்ந்து கொள்வதால் மக்கள் மூச்சு திணறலால் அவதி பட்டு வந்தனர்.
இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் நேற்று 100 க்கும் மேற்பட்ட ஆண்கள் பெண்கள் ஒன்று திரண்டு தாரமங்கலம் நங்கவள்ளி சாலையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். அங்கு வந்த நகராட்சி மன்ற தலைவர் குணசேகரன். ஆணையாளர் முஸ்தபா, காவல் ஆய்வாளர் தொல்காப்பியன் ஆகியோர் பொதுமக்களை நகராட்சிக்கு அழைத்து வந்து பேச்சு வார்த்தை நடத்தினர்.
அப்போது அதிகாரிகள் இன்னும் 6 மாதத்தில் குப்பை கிடங்கு வேறு இடத்திற்கு மாற்றம் செய்யப்பட உள்ளது என்றும், குப்பைக்கு தீ வைக்கும் மர்ம நபர்களை கண்காணிப்பு கேமரா உதவியுடன் கண்டறிந்து கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்ததால் பொதுமக்கள் கலைந்து சென்றனர்.






