search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நாமக்கல் வட்டார விவசாயிகளுக்கு மரவள்ளியில் செம்பேன் நோய் கட்டுப்பாடு பயிற்சி
    X

    நாமக்கல் வட்டார விவசாயிகளுக்கு மரவள்ளியில் செம்பேன் நோய் கட்டுப்பாடு பயிற்சி

    • செம்பேன் பூச்சி மேலாண்மை முறைகள் என்ற தலைப்பில் ஒருநாள் இலவச பயிற்சி நடைபெற உள்ளது.
    • பயிற்சிக்கு வரும் விவசாயிகள் தங்களு டைய ஆதார் எண்னை கண்டிப்பாக பதிவு செய்ய வேண்டும். nama

    நாமக்கல்:

    நாமக்கல் வேளாண் அறிவியல் நிலைய தலைவர் டாக்டர் அழகுதுரை வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    நாமக்கல் மோகனூர் ரோட்டில், கால்நடை மருத்துவக் கல்லூரி வளா கத்தில் உள்ள வேளாண் அறிவியல் நிலையத்தில் (கே.வி.கே) வருகிற 19-ந் தேதி காலை 9.30 மணிக்கு மரவள்ளி சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு ஒருங்கிணைந்த முறையில் செம்பேன் பூச்சி மேலாண்மை முறைகள் என்ற தலைப்பில் ஒருநாள் இலவச பயிற்சி நடைபெற உள்ளது.

    இப்பயிற்சியில் மரவள்ளி பயிர்களைத் தாக்கும் செம்பேன்கள், அதனைக் கட்டுப்படுத்தும் முறைகள், இயற்கை முறையில் பூச்சி மற்றும் பூஞ்சாண எதிர் உயிர் கொல்லிகளைக் கொண்டு ஒருங்கிணைந்த முறையில் மரவள்ளியில் செம்பேன் நோய் கட்டுப்படுத்துதல் குறித்து தெளிவாக பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

    இந்த பயிற்சியில், மரவள்ளி சாகுபடி செய்யும் விவசாயிகள், விவசாயம் சார்ந்த களப்பணியாளர்கள், பண்ணையாளர்கள், ஊரக மகளிர், இளைஞர்கள் மற்றும் ஆர்வமுள்ள அனை வரும் கலந்து கொள்ளலாம். பயிற்சிக்கு பதிவு செய்வதில் நாமக்கல் மாவட்ட விவசாயி களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

    மேலும், பயிற்சிக்கு வரும் விவசாயிகள் தங்களு டைய ஆதார் எண்னை கண்டிப்பாக பதிவு செய்ய வேண்டும்.

    இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×