என் மலர்
நாமக்கல்
- பல்லடத்தில் கறிக்கோழி உற்பத்தியாளர்கள் மற்றும் வியாபாரிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது.
- கறிக்கோழி விலையை கிலோவுக்கு மேலும் மூன்று ரூபாய் உயர்த்த முடிவு செய்யப்பட்டது .
நாமக்கல்:
நாமக்கல் ,சேலம், ஈரோடு, திருப்பூர், பல்லடம் பகுதியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கறிக்கோழி பண்ணை உள்ளன. இந்த பண்ணைகளில் 25 லட்சத்திற்கும் மேற்பட்ட கறிக்கோழிகள் வளர்க்கப்படுகின்றன. இந்த கறிக்கோழிகள் நாடு முழுவதும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
இதற்கான விலை பல்லடத்தில் நிர்ணயம் செய்யப்படுகிறது. இந்த நிலையில் இன்று காலை பல்லடத்தில் கறிக்கோழி உற்பத்தியாளர்கள் மற்றும் வியாபாரிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது. கறிக்கோழி விலையை கிலோவுக்கு மேலும் மூன்று ரூபாய் உயர்த்த முடிவு செய்யப்பட்டது .
அதன்படி 102 ரூபாயாக இருந்தால் கறிக்கோழி விலை 105 ரூபாயாக உயர்த்தப்பட்டது. இதே போல நாமக்கலில் முட்டை கோழி உற்பத்தியாளர்கள் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் முட்டை கோழி விலையை எழுபது ரூபாயில் இருந்து 72 ரூபாயாக உயர்த்தப்பட்டது .ஆனால் முட்டை விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் 410 காசுகளாக நீடிக்கிறது.
- கரூர் செல்லும் பழைய தேசிய நெடுஞ்சாலையில் மரம் அறுப்புமில் வைத்து நடத்தி வருகிறார்.
- இந்நிலையில் மின் கசிவு காரணமாக திடீரென மரம் அறுக்கும் மில்லில் தீ விபத்து ஏற்பட்டது. அங்கு இருந்த வர்கள் தீயை அணைக்க முயற்சி செய்தனர்.
பரமத்தி வேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் பகுதியைச் சேர்ந்தவர் சாமிநாதன்( வயது 50). இவர் பரமத்தி வேலூரில் இருந்து கரூர் செல்லும் பழைய தேசிய நெடுஞ்சாலையில் மரம் அறுப்புமில் வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில் மின் கசிவு காரணமாக திடீரென மரம் அறுக்கும் மில்லில் தீ விபத்து ஏற்பட்டது. அங்கு இருந்த வர்கள் தீயை அணைக்க முயற்சி செய்தனர். இருப்பி னும் தீயை அணைக்க முடியவில்லை. தீ வேகமாக பரவ ஆரம்பித்தது.
இது குறித்து சாமிநாதன் வேலாயுதம்பாளையம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தார். தகவலின் அடிப்படையில் நிலைய அலுவலர் கோமதி தலைமையிலான தீய ணைப்பு வீரர்கள் சம்பந்தப்பட்ட மரம் அறுப்பு மில்லுக்கு விரைந்து வந்து எரிந்து கொண்டிருந்த தீயை தண்ணீரை பீச்சி அடித்து அனைத்து கட்டுப்படுத்தி அருகில் உள்ள கடைகளுக்கு பரவாமல் தடுத்தனர்.
இதனால் பெரும் தீ விபத்து தவிர்க்கப்பட்டது. இருப்பினும் மரம் அறுப்பு மில்லில் இருந்து அறுப்பு மிஷின் மற்றும் பல்வேறு மரக்கட்டைகள் தீயில் எறிந்து நாசமாயின.
- 7,500-க்கும் மேற்பட்ட பணிக்காலி யிடங்களை அறி வித்துள்ளது.
- இத்தேர்வில் நாட்டில் உள்ள தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் அனை வரும் விண்ணப்பிக்கலாம்.
நாமக்கல்:
நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா பி.சிங் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு இருக்கிறார் அதில் அவர் குறிப்பிட்டு உள்ளதாவது :-
மத்திய பணியாளர்கள் தேர்வாணையம் நடத்தும் ஒருங்கிணைந்த பட்டதாரி நிலையிலானத் தேர்வு - 2023 தொடர்பான அறிவிப்பினை கடந்த 3-ந் தேதி வெளியிட்டுள்ளது.
அதில் மத்திய அரசின் பல்வேறு துறைகள்,நிறு வனங்கள் மற்றும் பல்வேறு அரசியலமைப்பு சார்ந்த அமைப்புகள், சட்டப்பூர்வ அமைப்புகள், தீர்ப்பாயங்கள் போன்றவற்றில் உள்ள குரூப் பி மற்றும் குரூப் சி நிலையில், 7,500-க்கும் மேற்பட்ட பணிக்காலி யிடங்களை அறி வித்துள்ளது. இத்தேர்வில் நாட்டில் உள்ள தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் அனை வரும் விண்ணப்பிக்கலாம்.
இப்பணிக்காலி யிடங்க ளுக்கு www.ssc.nic.in என்ற பணியாளர் தேர்வா ணையத்தின் இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும். கணினி அடிப்ப டையிலான இத்தேர்வு களுக்கு உரிய கட்டணத்து டன் இணைய வழியாக விண்ணப்பிக்க கடைசி நாள் 03.05.2023 மற்றும் ஆன்லைனில் கட்டணம் செலுத்துவதற்கான கடைசி நாள் 04.05.2023 ஆகும். கணினி அடிப்படையிலான தேர்வு, ஜூலை 2023-ல் தமிழ்நாட்டில் 7 மையங்களில் நடைபெற உள்ளது.
நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்படும் தன்னார்வப் பயிலும் வட்டங்களில் பணியாளர் தேர்வாணைய போட்டித் தேர்வுகளுக்கான கட்டண மில்லா பயிற்சி வகுப்புகள் நேரடியாக நடத்தப்படவுள்ளன.
இத்தேர்விற்கான பாடத்திட்டங்கள் மற்றும் பாடக்குறிப்புகள் தமிழ்நாடு அரசின் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் மெய்நிகர் கற்றல் இணையதளத்தில் (https://tamilnaducareerservices.tn.gov.in/) பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
மேலும், பயற்சி வகுப்பு கள் இணையதளத்தில் மற்றும் பதிவேற்ற செய்யப் பட்டு காணொளிகளை கண்டு பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்ப டுகிறது.
எனவே. இத்தேர்விற்கு விண்ணப்பித்த மற்றும் விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தினைத் தொடர்பு கொண்டு இப்பயிற்சி வகுப்புகளில் கலந்துகொண்டு பயனடையுமாறு நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா பி.சிங் தெரிவித்துள்ளார்.
- நாமக்கல் அருகே உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.டெக் இறுதி ஆண்டு படித்து வந்துள்ளார்.
- இவரும் அவரது நண்பர்கள் 8 பேருடன் நேற்று (சனிக்கி ழமை) காலை ஜேடர்பாளை யத்தில் உள்ள படுகை அணைக்கு சுற்றுலா வந்துள்ளனர்.
பரமத்திவேலூர்:
சேலம் மாவட்டம், ஆத்தூ ரைச் சேர்ந்தவர் ராம். இவரது மகன் பிரவீன் (வயது 20). இவர் நாமக்கல் அருகே உள்ள ஒரு தனியார் கல்லூரியில்
பி.டெக் இறுதி ஆண்டு படித்து வந்துள்ளார். இவரும் அவரது நண்பர்கள் 8 பேருடன் நேற்று (சனிக்கி ழமை) காலை ஜேடர்பாளை யத்தில் உள்ள படுகை அணைக்கு சுற்றுலா வந்துள்ளனர். பின்னர் படுகை அணை பகுதிக்குச் சென்று தனது நண்பர்க ளுடன் குளித்துக் கொண்டு இருந்தனர்.
அப்போது அங்கு குளித்துக் கொண்டி ருந்த பிரவின் மட்டும் காணா வில்லை. இதனால் நண்பர்கள் படுகை அணை யில் அவரை தேடி உள்ள னர். ஆனால் அவர் கிடைக்காததால், உடனடி யாக ஜேடர்பாளையம் போலீசருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
தகவல் அறிந்து அங்கு வந்த போலீ சார் அங்கிருந்த மீனவர்கள் உதவியுடன் படுகை அணை பகுதியில் தேடிவந்தனர். வெகு நேரம் தேடிய பிறகு படுகை அணை பகுதியில் மூழ்கி இறந்து கிடந்த பிரவீன் உடலை மீட்டனர். போலீசார் அவரது உடலை பரமத்தி வேலூர் அரசு மருத்துவ மனையில் பிரேத பரிசோத னைக்காக சேர்த்தனர்.
இச்சம்பவம் குறித்து ஜேடர்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.
- வஜ்ரவேல் பவ்யாவை தகாத வார்த்தைகளால் திட்டி உள்ளார். அப்போது இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.
- இதில் ஆத்திரம் அடைந்த வஜ்ரவேல் கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.
பரமத்தி வேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா கொந்தளம் அருகே பொன்மலர்பாளையம் பகுதியை சேர்ந்தவர் அண்ணாமலை. இவரது மகன் சிவகுருநாதன் (வயது 40). இவரது மனைவி பவ்யா (36). அதே பகுதியை சேர்ந்த சிவகுருநாதனின் அண்ணன் வஜ்ரவேல் (44).
இவர் சென்னை ஆலந்தூரில் உள்ள தனியார் வங்கியில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் வஜ்ரவேல் சென்னையில் இருந்து தனது சொந்த ஊரான பொன்மலர்பா ளையத்திற்கு வந்துள்ளார்.
நேற்று அவரது தம்பி சிவகுருநாதனின் வீட்டுக்கு சென்றுள்ளார். அப்போது வீட்டில் பவ்யா மட்டும் இருந்துள்ளார். அங்கு வந்த வஜ்ரவேல் பவ்யாவை தகாத வார்த்தைகளால் திட்டி உள்ளார். அப்போது இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த வஜ்ரவேல் கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.
இதுகுறித்து பவ்யா பரமத்தி வேலூர் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் குமார் வழக்கு பதிவு செய்து வஜ்ர வேலை கைது செய்து விசா ரணை நடத்தி பரமத்தி குற்ற வியல் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு நீதிபதியின் உத்தரவின் பேரில் சிறையில் அடைக்கப்பட்டார்.
- திருஞானசம்பந்தர் மடாலயத்தில் சித்திரை மாத சதய நட்சத்திரத்தை முன்னிட்டு திருநாவுக்கரசர் குருபூஜை விழா நடைபெற்றது.
- 18 வகையான வாசனைத் திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.
பரமத்தி வேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் திருஞானசம்பந்தர் மடாலயத்தில் சித்திரை மாத சதய நட்சத்திரத்தை முன்னிட்டு திருநாவுக்கரசர் குருபூஜை விழா நடைபெற்றது. விழாவின் நிகழ்வாக திருநாவுக்கரசர் உடன் அப்பூதியடிகள் மற்றும் சண்டிகேஸ்வர பெருமான் மற்றும் அனைத்து மும்மூர்த்திகளுக்கும் பால், தயிர், பன்னீர், இளநீர் ,சந்தனம், மஞ்சள், திருமஞ்சனம் ,பஞ்சாமிர்தம், விபூதி, தேன் ,கரும்புச்சாறு உள்ளிட்ட 18 வகையான வாசனைத் திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது .பின்னர் சிறப்பு அலங்காரத்தில் , அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர், திருநாவுக்கரசர் உடன் அப்பூதியடிகள் மற்றும் சண்டிகேஸ்வர பெருமான் பக்தர்களுக்கு காட்சியளித்தனர். இதில் சுற்றுவட்டார பகுதியில் உள்ள திரளான சிவனடியார்கள் மற்றும் பக்தர்கள் பலர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் அன்னதானமும், அருட்பிரசாதமும் வழங்கப்பட்டது. விழாவுக்கான ஏற்பாடுகளை திருஞானசம்பந்தர் மடாலயத்தை சேர்ந்த நிர்வாகிகள் செய்திருந்தனர்.
- 20 ஆண்டுகளுக்கும் மேலாக ஆக்கிரமிப்பு காரணமாக புதிய தார் சாலை அமைக்க முடியாமல் இருந்து வந்தது.
- நீதிமன்ற நடவடிக்கை மேற்கொண்ட நகராட்சி நிர்வாகத்தினர், அனைத்து வழக்குகளிலும் வெற்றி பெற்று, சாலை அமைக்க வரைபடம் மற்றும் திட்ட மதிப்பீடு ஆகியவற்றை அரசுக்கு அனுப்பி வைத்தனர்.
குமாரபாளையம்:
நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் அம்மன் நகரில் சுமார் 20 ஆண்டுகளுக்கும் மேலாக ஆக்கிரமிப்பு காரணமாக புதிய தார் சாலை அமைக்க முடியாமல் இருந்து வந்தது.
நீதிமன்ற நடவடிக்கை மேற்கொண்ட நகராட்சி நிர்வாகத்தினர், அனைத்து வழக்குகளிலும் வெற்றி பெற்று, சாலை அமைக்க வரைபடம் மற்றும் திட்ட மதிப்பீடு ஆகியவற்றை அர சுக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சாலை சம்பந்தமாக ஒவ்வொரு நகரமன்ற கூட்டத்திலும் பெரும் சர்ச்சை எழுந்து வருகிறது. இதன் பொருட்டு சென்னை நகராட்சி இயக்குனர் அலுவ லகம் சென்ற, குமாரபா ளையம் நகராட்சி சேர்மன் விஜய்கண்ணன், அம்மன் நகர் சாலை அமைக்கவும், பல வளர்ச்சித்திட்ட பணி கள் மேற்கொள்ளவும் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டி, நகராட்சி நிர்வாக இயக்கு னர் பொன்னையாவிடம் மனு கொடுத்தார்.
இந்த மனு தொடர்பாக பரிசீலித்து நடவடிக்கை எடுப்பதாக பொன்னையா கூறியுள்ளார். அப்போது கவுன்சிலர் ஜேம்ஸ் உள்ளிட்ட பலர் உடனி ருந்தனர்.
- இரவு பூங்கோதை குடும்பத்தினருடன் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தனர்.
- நள்ளிரவு வீட்டுக்கு முன் புறமாக வந்த மர்ம நபர்கள், கான்கிரீட் தரையின் மீது பெட்ரோல் நிரம்பிய பாட்டில்களை வீசியுள்ளனர்.
பரமத்தி வேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா ஜேடர்பாளையம் அருகே கரைப்பாளையத்தைச் சேர்ந்தவர் பூங்கோதை (வயது 50). விவசாயி.
பெட்ரோல் குண்டு வீச்சு
நேற்று முன்தினம் இரவு பூங்கோதை குடும்பத்தினருடன் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தனர். அப்போது நள்ளிரவு வீட்டுக்கு முன் புறமாக வந்த மர்ம நபர்கள், கான்கிரீட் தரையின் மீது பெட்ரோல் நிரம்பிய பாட்டில்களை வீசியுள்ளனர்.
மர்ம நபர்கள்
பாட்டில் உடையும் சத்தம் கேட்டு பூங்கோதை குடும்பத்தினர் வெளியே வந்து பார்த்தனர். அப்போது அங்கு நின்றிருந்த மர்ம நபர்கள் தப்பி ஓடினர்.
மர்ம நபர்கள் வீசிய பெட்ரோல் குண்டுகளால் தரையில் தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்தது. உடனடியாக தண்ணீரை ஊற்றி அணைத்ததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
மற்றொரு சம்பவம்
இதேபோல், அதே பகுதியில் விவசாயி குழந்தைவேல் (52) வீட்டிலும் மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசியுள்ளனர். காலை எழுந்து பார்த்தபோது வீட்டின் முன்பு பெட்ரோல் நிரப்பிய 2 பாட்டில்கள் கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். குழந்தைவேல் வீட்டில் வீசப்பட்ட பெட்ரோல் குண்டு வெடிக்காததால், அசம்பாவிதம் ஏதும் ஏற்படவில்லை.
போலீஸ் விசாரணை
இதுகுறித்து ஜேடர்பாளையம் போலீ சாருக்கு, பூங்கோதை மற்றும் குழந்தைவேல் ஆகியோர் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து நாமக்கல் மாவட்ட போலீஸ் சூப்பி ரண்டு கலைச்செல்வன், பரமத்திவேலூர் டி.எஸ்.பி. கலையரசன் மற்றும் போலீசார் சம்பந்தப்பட்ட பகுதிக்கு விரைந்து சென்று ஆய்வு செய்தனர்.
அப்போது வெடிக்காத பெட்ரோல் குண்டினை போலீசார் கைப்பற்றினர். பெட்ரோல் குண்டுகளை வீசிய மர்ம நபர்கள் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
தொடர் சம்பவம்
ஜேடர்பாளையம் சரளை மேடு, வடகரையாத்தூர், வி.புதுப்பாளையம், கரைப்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தீவைப்பு சம்பவங்களும், பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்களும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதையடுத்து, ஆங்காங்கே பாதுகாப்பிற்காக ஏராளமான போலீசார் நிறுத்தப்பட்டிருந்தும் இச்சம்பவங்களை போலீசாரால் தடுக்க முடியவில்லை.
சி.பி.சி.ஐ.டி
மேலும் கரைப்பாளை யத்தில் மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்ட இளம்பெண் சாவுக்கு காரணமான உண்மையான குற்றவாளிகளை போலீசார் கண்டுபிடிக்க வேண்டும் என கோரி பாதிக்கப்பட்ட பெண்ணின் உறவினர்களும் தொடர்ந்து போராடி வருகின்றனர். இதனால் இப்பகுதியில் தொடர்ந்து பதட்டம் நீடித்து வருகிறது.
- கோபால் நூற்பாலை தொழிலாளி நேற்று கோபாலின் மனைவி சுவாமி படத்திற்கு விளக்கேற்றி வழிபட்டுள்ளார்.
- அப்போது விளக்கின் தீ அருகில் இருந்த பூஜை பொருட்களில் பற்றி, வீடு முழுவதும் பரவியுள்ளது.
பள்ளிபாளையம்:
பள்ளிபாளையம் ஈஆர் தியேட்டர் ரோட்டில் வசிப்பவர் கோபால் நூற்பாலை தொழிலாளி நேற்று கோபாலின் மனைவி சுவாமி படத்திற்கு விளக்கேற்றி வழிபட்டுள்ளார். அப்போது விளக்கின் தீ அருகில் இருந்த பூஜை பொருட்களில் பற்றி, வீடு முழுவதும் பரவியுள்ளது. வீட்டில் இருந்து புகை வருவதை பார்த்த அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். வீட்டினுள் துணிமணிகள், அரிசி, மளிகை மற்றும் வீட்டு உப யோகப் பொருட்கள் அனைத்தும் எரிந்தது. பொதுமக்கள் தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தனர். இந்த தீவிபத்தில் வீட்டில் இருந்த பொருட்கள் அனைத்தும் எரிந்து சாம்பலானது.
விபத்து குறித்து தகவல் அறிந்த நகர்மன்ற தலைவர் செல்வராஜ், சம்பவ இடத்திற்கு சென்று கோபால் குடும்பத்துக்கு ஆறுதல் தெரிவித்து நிதியு தவி செய்தார். மாணவியின் பாடப்புத்தங்கள் தீயில் எரிந்து போனதை அறிந்த வர். மாற்று புத்தகம் வழங்க சிபாரிசு செய்தார். மேலும், வார்டு தி.மு.க. கவுன்சிலர் வினோத், ரூ.5 ஆயிரம் நிதிஉதவி வழங்கினார்.
- நாமக்கல் கல்லூரி மாணவியிடம் ஆன்லைனில் வேலை கிடைத்து விட்டதாக தகவல் வந்தது.
- ரூ.1 லட்சத்து 20 ஆயிரம் வரை, அவர்கள் கூறிய வங்கி கணக்கிற்கு ஆன்லைன் மூலம் அனுப்பி உள்ளார்.
நாமக்கல்:
நாமக்கல் நகரைச் சேர்ந்த வர் சாகுல்அமீது. இவரது மகள் ஷெலிகா பேகம் (வயது 20), என்ஜினீயரிங் கல்லூரி யில் படித்து வருகிறார்.
இவர் இன்டர்நெட் மூலம் ஆன்லைனில் பகுதி நேர வேலை தேடி வந்தார். சில நாட்களில் அவருக்கு ஆன்லைனில் வேலை கிடைத்து விட்டதாக தகவல் வந்தது. மேலும் அவர்கள் ஒரு வெப்சைட்டிற்கான லிங்க்கை அனுப்பி வைத்த னர்.
அந்த லிங்க்கில் கொடுக்கப்படும் டாஸ்க் மூலம் பணியை தொடர வேண்டும் என தெரி விக்கப்பட்டது. முதலில் டாஸ்கை செய்ய குறைந்த பட்ச தொகை டெபாசிட் செலுத்த வேண்டும் என அறிவிப்பு வந்தது. அந்த தொகையை செலுத்தி பணியை தொடர்ந்தார்.
இவ்வாறு 18 தவணைக ளாக சிறிய, சிறிய தொகையாக ஷெலிகா பேகம் ரூ.1 லட்சத்து 20 ஆயிரம் வரை, அவர்கள் கூறிய வங்கி கணக்கிற்கு ஆன்லைன் மூலம் அனுப்பி உள்ளார்.
இந்த நிலையில் பணியை தொடர மேலும் கூடுதலாக பணம் அனுப்ப வேண்டும் என தகவல் வந்தது. இதனால் சந்தேகப்பட்ட ஷெலிகா பேகம், தன்னிடம் இனி அனுப்புவதற்கு பணம் இல்லை, எனக்கு வேலை வேண்டாம், இதுவரை நான் அனுப்பிய பணத்தை திருப்பி அனுப்புங்கள் என கேட்டு உள்ளார்.
அதற்கு அவர்கள் எவ்வித பதிலும் தரவில்லை. மேலும் செல்போன் மூலமும் அவர்களை தொடர்பு கொள்ள முடிய வில்லை. தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த ஷெலிகா பேகம் இது குறித்து, நாமக்கல் மாவட்ட சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். அதன்பே ரில் போலீசார் வழக்குப்ப திவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.
- தமிழ் புத்தாண்டையொட்டி ஒரே கல்லினால் உருவான நாமக்கல் சாள கிராம மலையின் மேற்குப்பகுதியில், வரலாற்றுச் சிறப்பு மிக்க ஸ்ரீ ஆஞ்சநேயர் கோவில் உள்ளது.
- சாமிக்கு 1,008 வடை மலை அலங்காரம் நடைபெறும்.
நாமக்கல்:
நாமக்கல் நகரில் ஒரே கல்லினால் உருவான சாள கிராம மலையின் மேற்குப்ப குதியில், வரலாற்றுச் சிறப்பு மிக்க ஸ்ரீ ஆஞ்சநேயர் கோவில் உள்ளது.
இங்கு ஒரே கல்லினால் 18 அடி உயரத்தில் உருவான ஆஞ்சநேயர் சாமி சாந்த சொரூபியாக எதிரில், ஸ்ரீ நாமகிரித்தாயார் உடனுறை நரசிம்மர் கோவிலில் உள்ள ஸ்ரீ நரசிம்மரையும், சால கிராம மலையையும் வணங்கி நின்ற நிலையில் பக்தர்களுக்கு அருள்பா லித்து வருகிறார்.
தமிழகம் மட்டுமல்லாமல், பல்வேறு மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் தினசரி ஏராளமான பக்தர்கள் இங்கு வந்து சாமி தரிசனம் செய்து செல்கின்றனர்.
தினசரி சாமிக்கு 1,008 வடை மலை அலங்காரம் நடைபெறும். தொடர்ந்து சிறப்பு அபிசேகம் நடைபெறும். பின்னர் சுவாமிக்கு, வெள்ளிக்கவசம் மற்றும் தங்கக்கவசம் சாத்தப்பட்டு தீபாராதனை நடைபெறும். மாலையில் தங்கத்தேர் உற்சவம் மற்றும் சந்தனக்காப்பு, வெண்ணைக்காப்பு, மலர் அங்கி, முத்தங்கி போன்ற அலங்காரம் நடைபெறும்.
நேற்று தமிழ் புத்தாண்டை முன்னிட்டு, காலை 8 மணிக்கு ஸ்ரீ ஆஞ்சநேயருக்கு 1,008 வடைமாலை அலங்காரம் நடைபெற்றது. தொடர்ந்து 10 மணிக்கு மஞ்சள், குங்குமம், நல்லெண்ணெய், சீயக்காய்த்தூள், திருமஞ்சள், 1008 லிட்டர் பால், தயிர், வெண்ணெய், தேன், பஞ்சாமிர்தம் போன்ற வாசனை பொருட்களால் சிறப்பு அபிசேகம் நடைபெற்றது.
இதனையடுத்து சுவா மிக்கு 500 கிலோ எடை கொண்ட பல்வேறு வண்ண மலர்களால் புஷ்பாஞ்சலி நடைபெற்றது.
பின்னர் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
கட்டளைதாரரர்கள் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சி யில் தமிழகம் முழுவதும் இருந்து வந்திருந்த ஏராள மான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
- கார் வியாபாரிகள் மற்றும் ஆலோசகர் நல சங்க மாநில கூட்ட மைப்பின் மேற்கு மண்டல கூட்டம் நாமக்கல்லில் நடந்தது.
- போலி யான ஆன்லைன் வியா பாரத்தை தடுக்க மத்திய மாநில அரசுகள் நட வடிக்கை எடுக்க வேண்டும்.
நாமக்கல்:
தமிழ்நாடு கார் வியா பாரிகள் மற்றும் ஆலோசகர் நல சங்க மாநில கூட்ட மைப்பின் மேற்கு மண்டல கூட்டம் நாமக்கல்லில் நடந்தது. கூட்டத்திற்கு மாநில தலைவர் சிவக்குமார் தலைமை வகித்தார்.
கூட்டத்தில் நிறை வேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-
தமிழகத்தில் உள்ள ஆர்.டி.ஓ. அலுவலகங்களில் வாகனம் சம்பந்தமான சான்றுகளுக்கு விண்ணப் பித்தால் மிகுந்த தாமதமா கிறது. இதை விரைவு படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகம் முழுவ தும் பொதுமக்கள் ஆன்லைன் மூலம் வரும் போலியான விளம்பரத்தை நம்பி உபயோகப்ப டுத்தப்பட்ட காரை வாங்கு வதற்காக பணம் செலுத்தி ஏமாறு கின்றனர் .எனவே போலி யான ஆன்லைன் வியா பாரத்தை தடுக்க மத்திய மாநில அரசுகள் நட வடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும் சங்கத்தின் மூலம் ஒவ்வொரு மாவட்டத்திலும் உபயோக படுத்தப்பட்ட கார் விற்பனை மேளா நடத்த வேண்டும். கார் மற்றும் வாகன வியாபார தொழிலில் ஈடுபட்டுள்ள ஆயிரக்க ணக்கான வாகன ஆலோ சகர்கள் ஆன்லைன் வர்த்த கத்தால் மிகவும் நலிவடைந்து வருகின்றனர். எனவே இவர்களுக்கு ஒரு நல வாரி யம் அமைக்க அரசு நடவ டிக்கை எடுக்க வேண்டும். மேற்கண்டவை உள்பட பல தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன.






