என் மலர்tooltip icon

    நாகப்பட்டினம்

    நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த கோடியக்கரை வன விலங்குகள் சரணாலயத்தில் வன விலங்குகள் கணக்கெடுக்கும் பணி தொடங்கியது.

    வேதாரண்யம்:

    நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த கோடியக்கரை வன விலங்குகள் சரணாலயத்தில் வன விலங்குகள் கணக்கெடுக்கும் பணி தொடங்கியது. இந்த சரணாலயத்தில் வெளிமான், புள்ளிமான், நரி, முயல், காட்டுப்பன்றி, குரங்கு போன்ற விலங்குகள் உள்ளது. இந்த சரணாலயத்தில் ஆண்டுதோறும் வன விலங்குகள் கணக் கெடுக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு நேற்று கணக்கெடுக்கும் பணி தொடங்கியது.

    தஞ்சாவூர் வனமண்டலம் வனபாதுகாவலர் ராம சுப்பிரமணியன், நாகப்பட்டினம் வன உயிரின காப்பாளர் கலாநிதி, உத்தரவின் பேரில் வனவிலங்கு கணக்கெடுக்கும் பணி தொடங்கியது.

    கணக்கெடுக்கும் பணி நடைபெறுவதை படத்தில் காணலாம்.

    இப்பணியில் மயிலாடுதுறை ஏவிசி கல்லூரி மாணவ-மாணவிகள் பேராசிரியர் பாஸ்கரன், வேலுர் பல் கலைக்கழக மாணவ- மாணவிகள், பேராசிரியர் குமர குரு மற்றும் ஓய்வு பெற்ற வனச்சரக அலுவலர் சுப்பையா மற்றும் வன ஆர்வலர்கள், கோடியக்கரை வனச்சரக அலுவலர் அயூப்கான் தலைமையில் வனவர் சதிஷ்குமார், மற்றும் வனத்துறை பணியாளர்கள் ஆகியோர் ஈடுபட்டனர். வனவிலங்குகள் கணக்கெடுக்கும் பணி 14 வழித் தடங்களில் நடைபெற்று வருகிறது.

    நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் மகனின் காதலியை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த தந்தையை போலீசார் குண்டர் சட்டத்தில் கைது செய்தனர்.
    வேதாரண்யம்:

    வேதாரண்யம் தாலுக்கா நாலுவேதபதி கிராமத்தைச் சேர்ந்தவர் காளிமுத்து. இவரது மகள் சரண்யா (21). செம்போடை கிராமத்தைச் சேர்ந்த கருப்பு நித்யானந்தம் மகன் முகேஷ் கண்ணன் (20) இருவரும் தொழிற்கல்வி பயிலும் போதிலிருந்தே காதலித்து வந்தனர்.

    இருவரும் சென்னையில் தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வந்தனர். இதையறிந்த முகேஷ் கண்ணனின் தந்தை கருப்பு நித்தியானந்தம் சரண்யா வீட்டிற்கு சென்று என் மகனுக்கு உன்னை திருமணம் செய்து வைக்கிறேன் என கூறி கடத்தி சென்று, செம்போடை அருகில் உள்ள கடையில் வைத்து தாலி கட்டி, பாலியல் பலாத்காரம் செய்து, பின்பு அவரிக்காடு கிராமத்தில் உள்ள சக்திவேல் (47), அவரது மனைவி பவுன்ராஜவள்ளி வீட்டில் கொண்டு போய் அடைத்து வைத்து சித்ரவதை செய்துள்ளார்.

    இது குறித்து சரண்யா கொடுத்த புகாரின் பேரில் வேதாரண்யம் அனைத்து மகளிர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் பொறுப்பு சந்தானமேரி மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து கருப்பு நித்யானந்தம் (38), அவரிக்காடு சக்திவேல் (47), அவரது மனைவி பவுன் ராஜவள்ளி (38) ஆகிய மூவரையும் கைது செய்தனர். இந்நிலையில் சிறையில் உள்ள கருப்பு நித்யானந்தனை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் செல்வநாக ரெத்தினம் பரிந்துரையின் பேரில் நாகை மாவட்ட கலெக்டர் பிரவின்பிநாயர் குண்டர் சட்டத்தில் அடைக்க உத்தரவிட்டார்.

    இதற்கான உத்தரவை திருச்சி சிறையில் உள்ள நித்தியானந்ததிற்கு வேதாரண்யம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் அளித்தனர்.
    சீர்காழியில் குடும்ப பிரச்சினையில் ஓட்டல் தொழிலாளி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சீர்காழி:

    சீர்காழி பிடாரி வடக்கு வீதியை சேர்ந்தவர் அய்யப்பன் (வயது 25). இவர் அதே பகுதியில் உள்ள ஒரு ஓட்டலில் வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி ஆனந்தி. இவர்களுக்கு திருமணமாகி 1 ½ ஆண்டுகள் ஆகிறது.

    இந்த நிலையில் கணவன்- மனைவிக்கு இடையே குடும்ப பிரச்சனை காரணமாக தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால் மனமுடைந்த அய்யப்பன் நேற்று இரவு வீட்டில் யாரும் இல்லாதபோது தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார்.

    இதுகுறித்து தகவலறிந்த சீர்காழி போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிமாறன் , சப்- இன்ஸ்பெக்டர் ராஜா மற்றும் போலீஸார் சம்பவ இடத்திற்கு வந்து ஐயப்பன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக த சீர்காழி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    நாகையில் மீனவ பெண்கள் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் வேதாரண்யம் கடல் பகுதியில் தடை செய்யப்பட்ட சுருக்கு மடி வலைகளை பயன்படுத்தி மீன் பிடித்துக் கொண்டிருந்த கீச்சாங்குப்பம் மீனவர்களுக்கும், அதனை கேட்ட வெள்ளப்பள்ளம் கிராம மீனவர்களுக்கும் இடையே நேற்று முன்தினம் நடுக்கடலில் மோதல் ஏற்பட்டது.

    மீனவர்களின் மோதலில் இரு கிராமத்தை சேர்ந்தவர்கள் 20க்கும் மேற்பட்டோர் அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் நாகை மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட வலைகளை பயன்படுத்துபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதை மாவட்ட ஆட்சியர் பிரவின் நாயர் உத்தரவிட்டுள்ளார்.

    அதனைத் தொடர்ந்து மீன் துறை இணை இயக்குனர் அமல் சேவியர் தலைமையில் வட்டாட்சியர், கோட்டாட்சியர் உள்ளிட்ட அரசுத் துறை அதிகாரிகள் டிஎஸ்பி முருகவேல் தலைமையிலான நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் நாகை துறைமுகம் பகுதியில் அதிரடியாக நுழைந்தனர். போலீசாரை தடுத்து நிறுத்திய கீச்சாங்குப்பம் மீனவப் பெண்கள் தலையில் மண்ணெண்ணையை ஊற்றி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டனர்.

    இதனால் காவல் துறையினருக்கும் மீனவர்களும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. வலைகளை பறிமுதல் செய்ய அனுமதிக்கமாட்டோம் எனக்கூறி மீனவப் பெண்கள் தொடர்ந்து போலீசாருடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டு வருவதால் நாகை துறைமுகத்தில் பரபரப்பு நிலவி வருகிறது.

    நாகையில் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த சுமார் ரூ.5 கோடி மதிப்புள்ள 3 டன் கடல் அட்டைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
    நாகப்பட்டினம்:

    நாகை சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து தடை செய்யப்பட்ட கடல் அட்டைகளை வியாபாரிகள் வாங்கி வீட்டில் பதுக்கி வைத்து வெளிநாடுகளுக்கு கடத்தி வருவதாக தொடர் புகார்கள் வந்தன.

    இதையடுத்து நாகை கடலோர பாதுகாப்பு குழும போலீசார் கீச்சாங்குப்பம் பகுதியில் அதிரடி சோதனை மேற்கொண்டனர். அப்போது அதே பகுதியை சேர்ந்த ராமதாஸ் என்பவரது வீட்டில் சுமார் ரூ.5 கோடி மதிப்புள்ள 3 டன் கடல் அட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    போலீசார் வருவதை அறிந்த ராமதாஸ் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். இதையடுத்து கடலோர பாதுகாப்பு குழும போலீசார் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த கடல் அட்டைகளை பறிமுதல் செய்தனர்.

    முதற்கட்ட விசாரணையில் கடல் அட்டைகளை நாகையில் இருந்து தூத்துக்குடிக்கு கடத்திச் சென்று அங்கிருந்து வெளிநாடுகளுக்கு கொண்டு செல்ல இருந்தது தெரியவந்தது.
    நாகை அருகே வெள்ளப்பள்ளத்தில் நடுக்கடலில் மீனவர்களிடையே கடுமையாக தாக்கிக் கொண்டனர். இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட இரட்டை மடி மற்றும் சுருக்குமடி வலைகளை பயன்படுத்தி மீன் பிடிப்பதில் மீனவர்களுக்கு இடையே நடுக் கடலில் மோதல் ஏற்படுவது வாடிக்கை ஆகி வருகிறது.

    இந்நிலையில் நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த வெள்ளப்பள்ளம் அருகே கடலில் நேற்று மாலை 4 மணியளவில் கீச்சாங்குப்பம் மீனவர்கள் 120 பேர் விசைப்படகில் சென்று அரசால் தடை செய்யப்பட்ட சுருக்குமடி வலைகளை பயன்படுத்தி மீன் பிடித்துக்கொண்டு இருந்துள்ளனர்.

    இதுகுறித்து அறிந்த வெள்ளப்பள்ளம் பகுதி மீனவர்கள் 50-க்கும் மேற்பட்டோர் பைபர் படகில் கடலுக்கு விரைந்து சென்றனர். பின்னர் சுருக்குமடி வலைகளை பயன்படுத்தி மீன்பிடித்துக் கொண்டிருந்த விசைப் படகை சுற்றி வளைத்தனர்.

    அப்போது கீச்சாங்குப்பம் மீனவர்களிடம் தடை செய்யப்பட்ட சுருக்குமடி வலைகளை பயன்படுத்தக்கூடாது என்று கூறி தடுத்துள்ளனர். அப்போது இருதரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் முற்றி கடலிலேயே மோதல் ஏற்பட்டு உள்ளது.

    இதில் ஆத்திரமடைந்த கீச்சாங்குப்பம் பகுதி மீனவர்கள் தாங்கள் வந்த விசைப் படகால் வெள்ளப்பள்ளம் மீனவர்களின் பைபர் படகு மீது ஆக்ரோ‌ஷமாக மோதியுள்ளனர்.மேலும் கற்கள் மற்றும் பாட்டில்களை வீசியும் வெள்ளப்பள்ளம் மீனவர்கள் மீது கடும் தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர்கள் தங்கள் கிராமத்தை சேர்ந்த மற்ற மீனவர்களுக்கு இதுபற்றி உடனடியாக தகவல் தெரிவித்துள்ளனர்.

    இதையடுத்து வெள்ளப்பள்ளம் கிராமத்தை ஏராளமான மீனவர்கள் கடலுக்கு படகுகளில் விரைந்து வந்து கீச்சாங்குப்பம் மீனவர்கள் வந்த விசைப்படகை சுற்றி மறித்தனர்.

    பின்னர் மீண்டும் இருதரப்பினரும் கடுமையாக தாக்கிக் கொண்டனர். இந்த மோதலில் வெள்ளப் பள்ளம் மீனவர்கள் பிரசாந்த் (வயது19), ஆனந்த வேல்(18), தினேஷ்(21), விஜய்(25), முத்துவேல்(41), முருகானந்தம்(20) ஆகிய 6 பேரும்.

    கீச்சாங்குப்பத்தை சேர்ந்த மீனவர் அஜித்(25) ஆகிய ஒருவரும் படுகாயமடைந்தனர். படுகாயமடைந்த 7 மீனவர்களும் நாகை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    இதுகுறித்து தகவலறிந்த நாகை வெளிப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து இருதரப்பு மீனவர்களிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்நிலையில் தாக்குதலை கண்டித்து வெள்ளப்பள்ளம் பகுதி மீனவர்கள் வேதாரண்யம்-நாகை சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து வேட்டைக்காரனிருப்பு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பேச்சு வார்த்தை நடத்தி கலைந்து போக செய்தனர்.

    இதனிடையே நாகை துறைமுகம் மற்றும் கீச்சாங்குப்பம், அக்கரைப்பேட்டை, செருதூர், விழுந்தமாவடி உள்ளிட்ட மீனவ கிராமங்களில் பதட்டம் நிலவுவதால் அப்பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    மயிலாடுதுறை அருகே தீ மளமளவென பரவி 4 வீடுகளும் முற்றிலும் எரிந்தது இதன் மதிப்பு சுமார் 10 லட்சம் இருக்கும் என தெரியவருகின்றது.

    மயிலாடுதுறை:

    மயிலாடுதுறை நகரின் மத்தியில் உள்ள கலைஞர்நகரை சேர்ந்தர் அன்புராஜா.. இவர் மது போதையில் தனது வீட்டை எரித்துள்ளார். அப்போது இவரின் வீடடின் அருகே இருந்த முத்துலெட்சுமி,கிரிஜா,மேரி என்பவர் வீடும் பற்றியது தீ மளமளவென பரவி 4 வீடுகளும் முற்றிலும் எரிந்தது இதன் மதிப்பு சுமார் 10 லட்சம் இருக்கும் என தெரியவருகின்றது.

    இதுகுறித்து தகவல் அறிந்ததும் மயிலர்டுதுறை தீயணைப்பு நிலைய அலுவலர் முத்துகுமார் அவர்கள் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து மேலும் தீ பரவாமல் தடுத்தனர். சம்பவ இடத்திற்கு வட்டாச்சியர் முருகானந்தம் ஆர்.ஐ. ராஜேஷ்குமார் மற்றும் அரசு அலுவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.

    வேதாரண்யம் அருகே இரும்பு கம்பியால் தாக்கி முதியவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வேதாரண்யம்:

    நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே வாய்மேடு காவல் சரகத்திற்குட்பட்ட தகட்டூர் சுப்பிரமணியபுரம் பகுதியை சேர்ந்தவர் முருகையன் (வயது 68), இவரது மனைவி கமலம், இவர்களது மகன் அன்பு என்கிற அன்பழகன் (48), இவருக்கு சித்ரா என்ற மனைவியும், யமுனா என்கிற மகளும் உள்ளனர். முருகையன் லோடுமேன் வேலை பார்த்து வருகிறார்.

    இந்நிலையில் அன்பழகனுடன் ஏற்பட்ட தகராறில் அவரது மனைவி சித்ரா மகள் யமுனாவுடன் தனது தாய்வீட்டிற்கு சென்று விட்டார். மனைவியை பிரிந்து வாழும் அன்பழகன் தனது தாய்வீட்டில் தங்கி வாழ்ந்து வருகிறார்.

    அன்பழகன் தான் சம்பாதிக்கும் பணத்தை வீட்டிற்கு கொடுக்காமல் ஊதாறிதனமாக செலவழித்து வந்ததால் அதனை தட்டிக்கேட்ட அவரது தந்தை முருகையனுக்கும், அன்பழகனுக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டுவந்தது.

    இந்நிலையில் நேற்று இரவு வேலை முடிந்து வீட்டிற்கு வந்த அன்பழகனுக்கும் அவரது தந்தை முருகையனுக்கும் மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது முருகையன் இரும்பு கம்பியை எடுத்து மகனை தாக்க முயன்றுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த அன்பழகன் தனது தந்தை தாக்கவந்த இரும்பு கம்பியை பிடுங்கி முருகையனை தாக்கியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த முருகையனை அக்கம்பக்கத்தினர் மீட்டு திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்சில் கொண்டு சென்றனர். அப்போது செல்லும் வழியிலேயே முருகையன் பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து வாய்மேடு போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்தானமேரி வழக்குப்பதிவு செய்து அன்பழகனை தேடி வருகின்றனர்.

    நாகை அருகே இரண்டு இடங்களில் 5 கோடி ரூபாய் மதிப்பிலான கடல் அட்டைகள் அடுத்தடுத்து பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினத்தில் தொடர்ந்து அரசால் தடை செய்யப்பட்ட கடல் அட்டைகள் பதுக்கி வைத்து இருப்பதும், வெளி நாடுகளுக்கு சட்ட விரோதமாக விற்பனை செய்து வருவதும் தொடர்கதையாக வருகிறது.

    இந்த நிலையில் நாகப்பட்டினம் மாவட்டம் அக்கரைபேட்டை திடீர்குப்பம் பகுதியில் இரு இடங்களில் பல கோடி ரூபாய் மதிப்பிலான அரசால் தடை செய்யப்பட்ட கடல் அட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக வனத்துறை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    இதைததொடர்ந்து வன அலுவலர் கலாநிதி தலைமையிலான அதிகாரிகள் அக்கரைபேட்டை மற்றும் திடிர்குப்பம் ஆகிய பகுதிகளில் அதிரடி ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அக்கரை பேட்டை பகுதியில் செண்பகம் என்பவரது வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டு இருந்த 1 டன் எடையிலான கடல் அட்டைகளை பறிமுதல் செய்தனர். அதனை தொடர்ந்து திடீர் குப்பம் பகுதியில் சோதனை மேற்கொண்ட வனத்துறை காவலர்கள் முருகானந்தம் என்பவருக்கு சொந்தமான குடோனில் பதுக்கி வைக்கப்பட்டு இருந்த 2 டன் எடையிலான கடல் அட்டை களையும் மற்றும் பொருட்களையும் பறிமுதல் செய்தனர். கருவேல காட்டில் பதுக்கி வைத்திருந்த கடல் அட்டைகளை பறிமுதல் செய்த வனத்துறை அதிகாரிகள் முருகானந்தம் மற்றும் செண்பகம் ஆகிய இருவரை கைது விசாரணை நடத்தி வருகின்றனர்.

    குத்தாலம் அருகே வீட்டின் மேற்கூரையை பிரித்து 9 பவுன் நகை - ரூ.3 லட்சம் கொள்ளையடித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    குத்தாலம்:

    நாகை மாவட்டம் குத்தாலம் தாலுகா நெய்குப்பை கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி கண்ணன் (வயது 44).

    இந்த கிராமத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட நகரில் இடம் வாங்கி கூறைவீடு கட்டி இவரும், இவரது மனைவி மற்றும் 2 குழந்தைகளும் வசித்து வருகின்றனர். புதிதாக உருவாகிய நகர் என்பதால் இப்பகுதிக்கு இன்னமும் மின் இணைப்பு வழங்கப்படவில்லை. மேலும் இப்பகுதியில் ஆள் நடமாட்டமும் மிகக் குறைவு.

    தனது வீட்டில் சோலார் மூலம் மின்வசதி ஏற்படுத்தியிருந்த விவசாயி கண்ணன், சோலார் மின்சக்தி இன்றி விளக்குகள் மற்றும் மின்விசிறி அணைந்ததால், வீட்டை பூட்டிவிட்டு, தனது குடும்பத்தினருடன் வீட்டு வாசலில் படுத்து உள்ளனர்.

    இந்நிலையில், அப்பகுதியில் ஆள்நடமாட்டம் இல்லாதததைப் பயன்படுத்தி மர்மநபர்கள், கண்ணனின் வீட்டு பின்பக்கம் வழியாக கூரைமேல் ஏறி, கூறையைப் பிரித்து வீட்டுக்குள் இறங்கி, அவர் வீட்டில் வைத்திருந்த 9 பவுன் நகை மற்றும் ரூ.3 லட்சம் ரொக்கப்பணத்தை திருடிச் சென்றுள்ளனர்.

    இதுகுறித்து, பெரம்பூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். நள்ளிரவில் நடைபெற்ற இந்த கொள்ளைச் சம்பவம் கிராம மக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது.

    கொள்ளிடம் அருகே பன்னங்குடி கிராமத்தில் போடப்பட்டு மூன்றே மாதத்தில் மோசமான சாலையால் மக்கள் அதிருப்தியடைந்ததால் சம்மந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்டது.

    சீர்காழி:

    நாகை மாவட்டம் கொள்ளிடம் அருகே சீயாளம் கிராமத்திலிருந்து பன்னங்குடி கிராமத்துக்கு செல்லும் 4 கிலோமீட்டர் தூர சாலை கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு போடப்பட்டது.

    கடந்த 10 வருடங்களுக்கு முன்பு போடப்பட்டிருந்த தார் சாலை மிகவும் மோசமானதால் சுற்றுப்புற கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள், மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் சார்பில் கோரிக்கை விடப்பட்டிருந்தது.

    இச்சாலை பணிக்காக டெண்டர் விடப்பட்டு மோசமான சாலையை மேம்படுத்தும் வகையில் தார் சாலை போடும் பணி நடைபெற்றது பணியும் நிறைவுற்றது.

    ஆனால் போடப்பட்டு மூன்றே மாதம் ஆன நிலையில் சாலை பழைய நிலைமைக்கே வந்து விட்டது. இதனால் கிராம மக்களும் மாணவர்களும் மிகுந்த அதிருப்தியடைந்துள்ளனர்.

    இந்த சாலை மேம்படுத்தப்படும் என்று எதிர்பார்த்து காத்திருந்த நிலையில், பெயரளவுக்கு சாலை போடப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. இந்த சாலை போடப்பட்டதற்கான தொகை பெருமளவில் கையாடல் செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. சீயாளத்திலிருந்து கற்பள்ளம் வரை போடபப்ட்ட 4 கிலோ மீட்டர் தூர தார் சாலை போடப்பட்ட மூன்றே மாதத்தில் மிகவும் மோசமாகி விட்டதால் இச்சாலையின் வழியே செல்லும் மாணவர்கள், விவாசாயிகள் மிகுந்த அவதியடைந்து வருகின்றனர்.

    எனவே அரைகுறையாக சாலை போடும் பணியை மேற்கண்ட ஒப்பந்ததாரர் மற்றும் தொடர்புடைய அதிகாரிகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுத்து , மீண்டும் உடனடியாக சாலையை மேம்படுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பன்னங்குடி கிராமத்தைச் சேர்ந்த சிவராமன் மாவட்ட கலெக்டருக்கு கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிவித்தார்.

    நெல் சேமிப்பு கிடங்கில் வெளியூர் லாரிகள் நெல்மூட்டைகளை இறக்க எதிர்ப்பு தெரிவித்து லாரி உரிமையாளர்கள் தர்ணாவில் ஈடுபட்டனர்.
    சீர்காழி:

    நாகை மாவட்டத்தில் நடப்பு பருவமான சம்பா சாகுபடி முடிந்து நெல் அறுவடை நடந்துவருகிறது. அறுவடை செய்யப்படும் நெல்லை அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் விவசாயிகளிடம் இருந்து வாங்கி நெல் சேமிப்பு கிடங்குகளில் சேமிக்கப்பட்டு வருகிறது.

    இந்நிலையில் மயிலாடுதுறை தாலுகாவிலிருந்து திடீரென வெள்ளிக்கிழமை 30 லாரிகளில் நெல் மூட்டைகளை ஏற்றிக்கொண்டு எடமணல் சேமிப்பு கிடங்குக்கு நெல் இறக்க வந்தது.

    இதனால் சீர்காழி பகுதியில் உள்ள லாரிகள் வேலை இன்றி நிறுத்தி வைக்கப்படும் சூழல் உருவாகும் என்றும், உள்ளூர் லாரி உரிமையாளர்கள் மற்றும் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்றுக்கூறி சீர்காழி தாலுக்கா லாரி உரிமையாளர்கள் அதன் தலைவர் வேலு தலைமையில் நெல் சேமிப்பு கிடங்கில் வெளியூர் லாரிகள் நெல்மூட்டைகளை இறக்க எதிர்ப்பு தெரிவித்து எடமணல் கிடங்கு முன்பு திடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    தொடர்ந்து அவர்கள் சீர்காழிக்கு வட்டாசியர் அலுவலகத்திற்கு வந்து அங்கும் தர்ணாவில் ஈடுபட்டனர்.

    இதன்பின்னர் லாரி உரிமையாளர்களுடன் சமூக பாதுகாப்பு நல தாசில்தார் மலர் விழி தலைமையில், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக மண்டல மேலாளர் சண்முகநாதன் முன்னிலையில் அமைதி பேச்சு வார்த்தை நடந்தது.

    இதில் மயிலாடுதுறையில் இருந்து லாரிகளில் ஏற்றிவரும் நெல் மூட்டைகளை மயிலாடுதுறை லோடு மேன்களை கொண்டு இறக்கிக்கொள்வது என்றும், சீர்காழி லாரிகள் மூலமாக இந்த நெல்மூட்டைகளை வெளியில் எடுத்து செல்வது, சீர்காழி இருந்து நெல் ஏற்றி வரும் நெல்லை சீர்காழி லோடுமேன்களை கொண்டு விரைவாக இறக்குவது, சீர்காழி ரெயில் தளத்தில் 42சரக்கு பெட்டிகளை வைத்து நெல்லை ஏற்றி அனுப்ப நடவடிக்கை எடுப்பதென தீர்மானிக்கப்பட்டது.

    இந்த பேச்சுவார்த்தையில் லாரி உரிமையாளர்கள் சங்கத் தலைவர் வேலு, செயலாளர் வெங்கடேசன், துணை தலைவர் உலகநாதன் ஆகியோர் பங்கேற்றனர்.
    ×