என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    மகனின் காதலியை பலாத்காரம் செய்த தந்தை குண்டர் சட்டத்தில் கைது

    நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் மகனின் காதலியை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த தந்தையை போலீசார் குண்டர் சட்டத்தில் கைது செய்தனர்.
    வேதாரண்யம்:

    வேதாரண்யம் தாலுக்கா நாலுவேதபதி கிராமத்தைச் சேர்ந்தவர் காளிமுத்து. இவரது மகள் சரண்யா (21). செம்போடை கிராமத்தைச் சேர்ந்த கருப்பு நித்யானந்தம் மகன் முகேஷ் கண்ணன் (20) இருவரும் தொழிற்கல்வி பயிலும் போதிலிருந்தே காதலித்து வந்தனர்.

    இருவரும் சென்னையில் தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வந்தனர். இதையறிந்த முகேஷ் கண்ணனின் தந்தை கருப்பு நித்தியானந்தம் சரண்யா வீட்டிற்கு சென்று என் மகனுக்கு உன்னை திருமணம் செய்து வைக்கிறேன் என கூறி கடத்தி சென்று, செம்போடை அருகில் உள்ள கடையில் வைத்து தாலி கட்டி, பாலியல் பலாத்காரம் செய்து, பின்பு அவரிக்காடு கிராமத்தில் உள்ள சக்திவேல் (47), அவரது மனைவி பவுன்ராஜவள்ளி வீட்டில் கொண்டு போய் அடைத்து வைத்து சித்ரவதை செய்துள்ளார்.

    இது குறித்து சரண்யா கொடுத்த புகாரின் பேரில் வேதாரண்யம் அனைத்து மகளிர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் பொறுப்பு சந்தானமேரி மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து கருப்பு நித்யானந்தம் (38), அவரிக்காடு சக்திவேல் (47), அவரது மனைவி பவுன் ராஜவள்ளி (38) ஆகிய மூவரையும் கைது செய்தனர். இந்நிலையில் சிறையில் உள்ள கருப்பு நித்யானந்தனை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் செல்வநாக ரெத்தினம் பரிந்துரையின் பேரில் நாகை மாவட்ட கலெக்டர் பிரவின்பிநாயர் குண்டர் சட்டத்தில் அடைக்க உத்தரவிட்டார்.

    இதற்கான உத்தரவை திருச்சி சிறையில் உள்ள நித்தியானந்ததிற்கு வேதாரண்யம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் அளித்தனர்.
    Next Story
    ×