search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குண்டும் குழியுமான சாலை"

    • இரு சக்கர வாகனங்களும், நான்கு சக்கர வாகனங்களும், செல்வதற்கு தகுதியற்ற முறையில் உள்ளது.
    • சாலையை சீர் செய்து தரமான சாலையாக அமைத்துக் கொடுக்க வேண்டும்.

     பாப்பிரெட்டிப்பட்டி,

    தருமபுரி மாவட்டம் பொம்மிடியில் இருந்து வே, முத்தம்பட்டி வழியாக நல்லம்பள்ளியை இணைக்கும் நெடுஞ்சாலை செல்கிறது,

    இந்த சாலையில் பொம்மிடி , வே.முத்தம்பட்டி, பாப்பிரெட்டிப்பட்டி, கடத்தூர், சேலம் மாவட்ட த்தின் மோரூர், கணவாய் புதூர் ,எஸ், பாளையம், ஏற்காடு மலை கிராமத்தை சார்ந்தவர்கள் என பல பகுதிகளில் இருக்கும் மக்கள் இருசக்கர வாகனம், நான்கு சக்கர வாகனம், சரக்கு கனரக வாகனங்கள் இந்த சாலை வழியாக நல்லம்பள்ளியில் உள்ள நான்கு வழி பாதையை சென்றடைகின்றனர்.

    இந்த சாலையில் தினமும் ஆயிரக்கணக்கான விவசாயிகளும் ,பொதுமக்களும் அன்றாட தேவைக்காக தருமபுரி, சேலம் போன்ற பகுதிகளுக்கு செல்வதற்கு இணைப்பு சாலையாகவும் இது உள்ளது.

    தற்போது அரூர் -தருமபுரி நான்கு வழி சாலை பணிகள் நடைபெற்று வருவதால் மேற்கண்ட பகுதி மக்கள் பெரும்பாலும் இந்த வே. முத்தம்பட்டி சாலையை பயன்படுத்தி வருகின்றனர்.

    இந்த சாலை வே. முத்தம்பட்டி அருகே உள்ள ரெயில் நிலையப் பகுதியில் இருந்து ஆஞ்சநேயர் கோவில், இந்தியன் ஆயில் நிறுவன கிடங்கு வரை செல்லக் கூடிய மலைப்பகுதியில் உள்ள சாலை மிகவும் பழுதடைந்து ஜல்லிக்கற்கள் பெயர்ந்த நிலையில் குண்டும் குழியுமாக இரு சக்கர வாகனங்களும், நான்கு சக்கர வாகனங்களும், செல்வதற்கு தகுதியற்ற முறையில் உள்ளது.

    பொதுமக்கள் வேறு வழியின்றி இந்த சிரமத்தையும் தாண்டி தருமபுரிக்கு செல்லும் நிலையில் உள்ளதால், இந்த சாலையில் இரு சக்கர வாகனங்கள், நான்கு சக்கர வாகனங்கள், மூலமாக செல்கின்றனர்.

    செல்லும் வழியில் ஜல்லிகளிலும் ,குண்டும் குழியிலும் மாட்டி வாகனங்கள் பழுதடைந்து ஆங்காங்கே நிற்பதை காண முடிகிறது.

    இதனால் நல்ல விஷயத்திற்கும், அவசர தேவைக்கும் செல்லும் மக்கள் தடைகள் ஏற்பட்டு மிகவும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர், அங்கிருக்கும் தொலைபேசி எண் மூலமாக பாவக்கல் பகுதியில் உள்ள பழுது நீக்கும் மெக்கானிக்கை வரவழைத்து வாகனத்தை சரி செய்து மீண்டும் எடுத்துச் செல்கின்றனர். இதனால் பொதுமக்கள் மன உளைச்சலுக்கும், நேர விரையத்தையும் சந்தித்து வருகின்றனர்.

    எனவே வனப்பகுதியில் உள்ள சுமார் எட்டு கிலோமீட்டர் நீளமுள்ள இந்த சாலையை சீர் செய்து தரமான சாலையாக அமைத்துக் கொடுக்க வேண்டும் என்று இப்பகுதியை சார்ந்த பொதுமக்கள், வாகன ஓட்டிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

    • பொதுமக்கள் வலியுறுத்தல்
    • வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாவதாக புகார்

    போளூர்:

    போளூலருந்து ஜவ்வாது மலைக்குச் செல்லும் பிரதான சாலை வீரப்பன் தெரு ஆகும். இந்த தெருவில் 10 இடங்களுக்கு மேல் குண்டும் குழியுமாக பல மாதங்களாக உள்ளன, இதனால் வாகன ஓட்டிகள் பாதசாரிகள் பெரும் அவதிக்குள்ளாகின்றன.

    தொடர் மழையால் குழிகளில் தண்ணீர் நிரம்பி உள்ளது சிலர் இரு சக்கர வாகனங்களில் சென்றபோது விழுந்து பலத்த காயம் அடைந்துள்ளனர்.

    எனவே இந்த ப் பிரதான சாலை விரைந்து சீரமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொது மக்களின் எதிர்பார்ப்பு.

    • காடாம்புலியூரில் கனமழை காரணமாக குண்டும் குழியுமான சாலையை இன்ஸ்பெக்டர் ராஜா தாமரை பாண்டியன் ஜே.சி.பி. எந்திரம் மூலம் சரி செய்தார்.
    • 10 ஆண்டுகளாக தொடங்கிய நிலையிலேயே இந்த பணி உள்ளது.

    கடலூர்:

    கடந்த 10ஆண்டுகளுக்கு முன்பு தேசிய நெடுஞ்சாலை தரம் உயர்த்தப்பட்டு நாற்கர சாலை அமைக்கும் பணி நடை பெற்று வந்தது. இந்த நாற்கர சாலை பணிக்காக சாலை ஓரங்களில் இருந்த வீடு, நிலங்கள் கையகப்படுத்தப்பட்டு சாலை போடும் பணிதொடங்கியது. ஆனால் 10 ஆண்டுகளாக தொடங்கிய நிலையிலேயே இந்த பணி உள்ளதால் சாலையில் குண்டும் குழி–யும் ஏற்பட்டு உயிர் பலி வாங்கும் சாலையாக இந்த பண்ருட்டி சென்னை சாலை மாறி உள்ளது.

    கடந்த 2 நாட்களாக பண்ரு–ட்டியில் மழை பெய்து வருவதால் இந்த குண்டும் குழியுமான சாலை சேரும் சகதியுமாக மாறி உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் சாலையில் உள்ள குழியில் விழுந்து செல்லும் காட்சி பரிதாபமாக  உள்ளது. எனவே கடலூர் கலெக்டர் உடனடி நடவடிக்கை எடுத்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளை அழைத்து பேசி இந்த போக்குவரத்துக்கு லாயக்கற்ற சாலையை சீரமைத்து தரவேண்டும். பண்ருட்டி-கும்பகோணம் சாலையில் சேரும் சகதியு மாகிய தேசிய நெடுஞ்சா லையில் உள்ள பள்ளத்தை இன்ஸ்பெக்டர் ராஜா தாமரை பாண்டியன் ஜே.சி.பி. எந்திரம் மூலம் சரி செய்தார்.

    • 97-வது வாவுபலி பொருட்காட்சி நாளை (13-ஆம் தேதி) தொடங்கி 20 நாட்கள் நடைபெற உள்ளது.
    • இச்சாலையை விரைந்து சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை

    கன்னியாகுமரி:

    குழித்துறை சந்திப்பிலிருந்து குழித்துறை தபால் நிலையம் சந்திப்பு -தாலுகா அலுவலகம் செல்லும் சாலை குண்டும், குழியுமாக சேதமடைந்து காணப்படுகிறது. இந்த சாலையை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சியினர் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் சாலையை சீரமைக்க எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை.

    இந்நிலையில் குழித்துறை நகராட்சியால் நடத்தப்படுகின்ற 97-வது வாவுபலி பொருட்காட்சி நாளை (13-ஆம் தேதி) தொடங்கி 20 நாட்கள் நடைபெற உள்ளது. அப்போது அப்பகுதியில் கடுமையான கூட்ட நெரிசல் ஏற்பட வாய்ப்புள்ளது. இதனால் அப்பகுதியில் பொதுமக்கள் சென்றுவர கடும் அவதிக்குள்ளாக நேரிடும். எனவே, இச்சாலையை விரைந்து சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×