என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொலை
    X
    கொலை

    வேதாரண்யம் அருகே இரும்பு கம்பியால் தாக்கி முதியவர் கொலை- மகனுக்கு போலீஸ் வலைவீச்சு

    வேதாரண்யம் அருகே இரும்பு கம்பியால் தாக்கி முதியவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வேதாரண்யம்:

    நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே வாய்மேடு காவல் சரகத்திற்குட்பட்ட தகட்டூர் சுப்பிரமணியபுரம் பகுதியை சேர்ந்தவர் முருகையன் (வயது 68), இவரது மனைவி கமலம், இவர்களது மகன் அன்பு என்கிற அன்பழகன் (48), இவருக்கு சித்ரா என்ற மனைவியும், யமுனா என்கிற மகளும் உள்ளனர். முருகையன் லோடுமேன் வேலை பார்த்து வருகிறார்.

    இந்நிலையில் அன்பழகனுடன் ஏற்பட்ட தகராறில் அவரது மனைவி சித்ரா மகள் யமுனாவுடன் தனது தாய்வீட்டிற்கு சென்று விட்டார். மனைவியை பிரிந்து வாழும் அன்பழகன் தனது தாய்வீட்டில் தங்கி வாழ்ந்து வருகிறார்.

    அன்பழகன் தான் சம்பாதிக்கும் பணத்தை வீட்டிற்கு கொடுக்காமல் ஊதாறிதனமாக செலவழித்து வந்ததால் அதனை தட்டிக்கேட்ட அவரது தந்தை முருகையனுக்கும், அன்பழகனுக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டுவந்தது.

    இந்நிலையில் நேற்று இரவு வேலை முடிந்து வீட்டிற்கு வந்த அன்பழகனுக்கும் அவரது தந்தை முருகையனுக்கும் மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது முருகையன் இரும்பு கம்பியை எடுத்து மகனை தாக்க முயன்றுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த அன்பழகன் தனது தந்தை தாக்கவந்த இரும்பு கம்பியை பிடுங்கி முருகையனை தாக்கியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த முருகையனை அக்கம்பக்கத்தினர் மீட்டு திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்சில் கொண்டு சென்றனர். அப்போது செல்லும் வழியிலேயே முருகையன் பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து வாய்மேடு போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்தானமேரி வழக்குப்பதிவு செய்து அன்பழகனை தேடி வருகின்றனர்.

    Next Story
    ×