search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கணக்கெடுக்கும் பணி"

    • ஓசூர் வனக்கோட்டத்தில் மொத்தம் 499 யானைகள் இருப்பதாக பதிவு செய்யப்பட்டது.
    • ஓசூர் மாவட்ட வன அலுவலகத்தில் கணக்கெடுப்பு எடுப்பதற்கான பயிற்சிகள் அளிக்கப்பட்டது.

     ஓசூர்,

    ஓசூர் வனக்கோட்டத்தில் இன்று (புதன்கிழமை) முதல் வருகிற 19-ந் தேதி வரை மூன்று நாட்களுக்கு யானைகள் கணக்கெடுப்பு பணி நடைபெறுகிறது.

    இது குறித்து மாவட்ட வனத்துறை அலுவலகம் சார்பில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    ஓசூர் வனக்கோட்டத்தில், காவிரி வடக்கு, தெற்கு வன உயிரின சரணாலயங்களில் அதிக எண்ணிக்கையில் யானைகள் உள்ளன. குறிப்பாக ஊடேதுர்க்கம், சானமாவு, நொகனூர், அய்யூர், ஜவளகிரி, பனை, உளிபண்டா, மகாராஜகடை, வேப்பனஹள்ளி, உடுபுராணி, நாட்றாம்பாளையம், பிலிகுண்டு, உரிகம், தக்கட்டி, கெஸ்தூர், மல்லஹள்ளி பகுதியில் ஏராளமான யானைகள் தற்போது முகாமிட்டுள்ளன. கடந்த 2017ம் ஆண்டு நடந்த ஒருங்கிணைந்த யானைகள் கணக்கெடுப்பில், ஓசூர் வனக்கோட்டத்தில் மொத்தம் 499 யானைகள் இருப்பதாக பதிவு செய்யப்பட்டது.

    இந்த தமிழகம், கர்நாடகா, கேரளா, ஆந்திர மாநிலங்களில் ஒருங்கிணைந்த யானைகள் கணக்கெடுப்பு பணி இன்று (புதன்கிழமை) தொடங்கி வருகிற 19-ந் தேதி வரை மூன்று நாட்கள் நடைபெறுகிறது. ஓசூர் வனக்கோட்டத்தில் உள்ள 40 வனக்காவல் சுற்று பீட்டுகளில் யானைகள் கணக்கெடுப்பு பணி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

    இதையடுத்து, சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திலிருந்து வந்த உயிரியலாளர் சக்திவேல் மூலம், ஓசூர் வனக்கோட்ட வன உயிரின காப்பாளர் கார்த்திகேயனி தலைமையில், உதவி வனப்பாதுகாவலர் ராஜமாரியப்பன், வனச்சரக அலுவலர்கள், வனப்பணியாள்களுக்கு, ஓசூர் மாவட்ட வன அலுவலகத்தில் கணக்கெடுப்பு எடுப்பதற்கான பயிற்சிகள் அளிக்கப்பட்டது.

    பணியில் ஈடுபடுபவர்களை ஒன்றிணைத்து, அவர்களுக்கு வழிகாட்ட ஏதுவாக, வாட்ஸ் அப் குழு ஒன்றும் உருவாக்கப்பட்டு, முதலுதவி பெட்டிகள் வழங்கப்பட்டன. இந்த குழுவினர் இன்று முதல் யானைகள் கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்ட உள்ளனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது,

    • மதுரை மாவட்டத்தில் சேதமடைந்த வீடுகள் கணக்கெடுக்கும் பணி மேற்கொள்ளப்பட உள்ளது.
    • இந்த தகவலை கலெக்டர் அனீஷ்சேகர் தெரிவித்துள்ளார்.

    மதுரை

    மதுரை மாவட்ட கலெக்டர் அனீஷ்சேகர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    மதுரை மாவட்டத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் கீழ் ஊரகப்பகுதிகளில் உள்ள கிராம ஊராட்சிகளில் வாழும் வீடு இல்லாத ஏழை குடும்பங்களுக்கு வீடு வழங்க பல்வேறு வீட்டு வசதி திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    ஆதிதிராவிடர் வீட்டு வசதி, இந்திரா நினைவு குடியிருப்புத் திட்டம் போன்ற பல்வேறு திட்டங்களின் கீழ் 1985 -86 முதல் 2010-11 வரை கட்டப்பட்ட கான்கிரீட் மேற்கூரை மிகவும் மோசமாக உள்ள வீடுகள், மோசமான நிலையில் வாழ தகுதியில்லாத வீடுகள் கணக்கெடுப்பு இன்று (8-ந் தேதி) முதல் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம், சமுதாய வள பயிற்றுநர் மூலம் Repairs to Rural Houses என்ற செல்போன் செயலி வாயிலாக கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட உள்ளது.

    அனைத்து ஊராட்சி மன்ற தலைவர்கள், துணை தலைவர்கள், ஊராட்சி செயலர்கள், வார்டு உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் இந்த கணக்கெடுப்பை சிறந்த முறையில் முடிக்க முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.
    • மாணவர் எண்ணிக்கை அடிப்படையாக கொண்டு புதிய பள்ளிகள் துவங்குவது குறித்து முடிவெடுக்கப்படும்.

    திருப்பூர் :

    திருப்பூர் மாவட்டத்தில், 2023 - 24 ம் கல்வியாண்டில் துவக்க பள்ளிகள் துவங்கும் பகுதிகள், நடுநிலைப்பள்ளிகளாக தரம் உயர உள்ள பள்ளிகள், குறித்த பட்டியல் தயாரிக்கும் பணி துவங்கியுள்ளது.

    வரும் கல்வியாண்டில் புதியதாக பள்ளிகள் துவங்க வேண்டிய பகுதிகள், நடுநிலைப்பள்ளியாக தரம் உயர்த்த வேண்டிய பள்ளிகள் குறித்த விபரங்களை ஒவ்வொரு மாவட்டத்திலும் சேகரித்து, பட்டியல் தயாரிக்க வேண்டுமென, தொடக்கக் கல்வி இயக்குனரகம், மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

    அதன் தொடர்ச்சியாக திருப்பூர், தாராபுரம், உடுமலை கல்வி மாவட்டத்தில் தொடக்க கல்வி அளவில் பணிகள் துவங்கியுள்ளது. மொத்தமுள்ள பள்ளிகள் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை கல்வி பயிலும் மாணவர்கள், 6முதல் 8-ம் வகுப்பு வரை படிப்போர் விபரம் சேகரிக்கப்படுகிறது. ஒரு பள்ளி அதன் அருகே உள்ள மற்றொரு பள்ளி (கி.மீ., அளவில்) விபரமும் சேர்க்கப்படுகிறது.

    இது குறித்து மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் அமுதாவிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:- ஒவ்வொரு தாலுகாவில் தரம் உயர்த்த வேண்டிய பள்ளிகள் குறித்த விபரம் கேட்கப்பட்டுள்ளது. பள்ளி பொறுப்பாளர்களின் விண்ணப்பம் அளிக்கப்பட்டு வருகிறது. மாணவர் எண்ணிக்கை, மக்கள் தொகை உள்ளிட்ட காரணிகளை அடிப்படையாக கொண்டு புதிய பள்ளிகள் துவங்குவது குறித்து முடிவெடுக்கப்படும். தற்போதைக்கு முதல்கட்ட பணி துவங்கியுள்ளது என்றார்.

    • புதுக்கோட்டை மாவட்ட வனத்துறை சார்பில் 20 ஈர நிலங்களில் பறவைகள் கணக்கெடுக்கும் பணி நடைபெற்றது
    • பறவைகளின் எண்ணிக்கை அதிகரிப்பு அல்லது குறைவிற்கான காரணம் குறித்து ஆராயப்பட்டது

    புதுக்கோட்டை:

    பல்வேறு வெளி நாடுகள் மற்றும் பிறமாநிலங்களிலிருந்து இனபெருக்கத்திற்காக பறவைகள் புதுக்கோட்டை மாவட்டத்திற்கு வருடம் தோறும் பறந்து வருகின்றன. இதனால் வடகிழக்கு பருவமழை தொடங்கும் காலமான செப்டம்பர்மாதத்திலும், வடகிழக்கு பருவமழை முடிவடையும் கால கட்டத்திலும் பறவைகள் கணக்கெடுப்புபணி நடைபெறும்வடகிழக்கு பருவ மழை முடிவடைந்துள்ள நிலையில் பறவைகள் கணக்கெடுக்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது.

    நேற்று (28ம் தேதி) தொடங்கிய இந்த பணியானது இன்றும் நடைபெற்றது. புதுக்கோட்டை வனசரகத்திற்குட்பட்ட அன்னவாசல் கண்மாய், ஆரியூர்கண்மாய், அரு வாக்குளம், கவிநாடு கண்மாய், அறந்தாங்கி வனசரகத்திற்குட்பட்ட பொன்பேத்தி ஏரி, செய்யா னம் ஏரி, கரகத்திக்கோட்டை கண்மாய், முத்துக்குடா கடல், கோடியக்கரை கடல், பொன்னமராவதி வனசரகத்திற்குட்பட்ட காரையூர்காரைகண்மாய், ஒலியமங்கலம்கண்மாய், ஏனாதி கண் மாய், கொன்னை கண்மாய், கீரனூர்வ னசரகத்திற்குட்பட்ட நீர்பழனி கண்மாய், ஔவையார்பட்டி கண்மாய், பேராம்பூர்கண்மாய், குளத்தூர்கண்மாய், திருமயம் வனசரகத்திற்கு ட்பட்ட தாமரை கண்மாய், பெல் ஏரி, நல்லம்மாள் சமுத்திரம் ஆகிய 20 இடங்களில் பறவைகள் கணக்கெடுப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டது.

    ஒவ்வொரு ஈர நிலத்திலும் மேற்கொள்ளப்படும் பறவைகள் கணக்கெடுப்புப் பணிகளில் ஒரு பறவைகள் நிபுணர், இரண்டு தன்னார்வலர்கள், 2 வனத்துறை அலுவலர்கள், ஒரு என்.ஜி.ஓ மற்றும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் இடம்பெற்றனர். இது குறித்து மாவட்ட வன அலுவலர் செ.பிரபா கூறும் போது, வடகிழக்கு பருவமழை காலங்களில் பறவைகளின் எண்ணிக்கை கணக்கிடப்பட்டு அவற்றின் எண்ணிக்கை அதிகரிப்பு அல்லது குறைவிற்கான காரணம் குறித்து ஆராயப்பட்டது. முன்னதாக இப்பணிகள் மூலம் பறவைகளுக்குத் தேவையான உணவு, நீர்மற்றும் இருப்பிடம் ஆகியவை போதுமான அளவில் கிடைக்கப் பெறுக்கின்றனவா என்பது குறித்து கணக்கிட முடியும் என்று அவர் கூறினார்.


    • பொதுமக்களின் வாழ்க்கை தரம் குறித்து தொடர் ஆய்வு நடந்தது.
    • நகர்புறத்தில் 243 வீடுகளும், கிராமபுறங்களில் 264 வீடுகள் என மொத்தம் 507 வீடுகள் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

    கிருஷ்ணகிரி, 

    கிருஷ்ணகிரி நகராட்சிக்கு உட்பட்ட வீரப்பநகரில் நேற்று மாவட்ட புள்ளியியல் துறை சார்பில், பொதுமக்களின் வாழ்க்கை தரம் குறித்து தொடர் ஆய்வு நடந்தது.

    இந்த பணிகளை புள்ளியியல் ஆய்வாளர்கள் கிருத்திகா, பார்த்திபன் ஆகியோர் மேற்கொண்டனர். இந்த பணிகளை மாவட்ட புள்ளியியல் துறை துணை இயக்குநர் குப்புசாமி ஆய்வு செய்தார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    இந்த ஆய்வு தமிழகத்தில் புள்ளியியல் துறை மற்றும் எம்.ஐ.டி.எஸ். எனப்படும் சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனம் இணைந்து மேற்கொண்டு வருகிறது.

    தமிழகத்தில் நகர்புறம், கிராமபுறங்களில் 20,539 வீடுகள் மக்களின் பொருளாதார மற்றும் சமூக அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு 12,632 வீடுகளில் ஆய்வு முடிவடைந்துள்ளது.

    மீதமுள்ள 7,907 வீடுகளில் கணக்கெடுக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. அதன்படி கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நகர்புறத்தில் 243 வீடுகளும், கிராமபுறங்களில் 264 வீடுகள் என மொத்தம் 507 வீடுகள் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

    இதில், நகர்புறத்தில் 95, கிராமபுறத்தில் 126 வீடுகளில் ஆய்வு நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள வீடுகளில் மக்களின் குடும்ப சூழ்நிலை, வறுமை, வேலைவாய்ப்பு, மருத்துவ செலவு, கல்வி, உணவு செலவு மற்றும் பிற அம்சங்கள் குறித்து விரிவான ஆய்வுகள் நடைபெற்று வருகிறது.

    தேர்வு செய்யப்பட்ட குடும்பங்களை சேர்ந்த பொதுமக்கள் இந்த ஆய்விற்கு ஒத்துழைப்பு வழங்கிட வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கற்றல் இழப்பை சரிசெய்ய இல்லம் தேடி கல்வி மூலம் தன்னார்வலர்களை கொண்டு சுமார் 353 மையங்களில் பயிற்சி நடைபெற்று வருகின்றது.
    • 15 வயது முதல் 35 வயது வரை முழுமையாக எழுத,படிக்க தெரியாதவர்கள் கணக்கெடுக்கும் பணி கடந்த ஏப்ரல் மாதம் முதல் நடைபெற்று வருகின்றது.

    சீர்காழி:

    கொள்ளிடம் ஒன்றியத்தில் கொரோனா காலத்தில் மாணவர்களிடம் ஏற்பட்ட கற்றல் இழப்பை சரிசெய்ய இல்லம் தேடி கல்வி மூலம் தன்னார்வலர்களை கொண்டு சுமார் 353 மையங்களில் பயிற்சி நடைபெற்று வருகின்றது.

    இதன் தொடர்ச்சியாக மயிலாடுதுறை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அவர்களின் உத்தரவின் படி 15 வயது முதல் 35 வயது வரை முழுமை யாக எழுத படிக்க தெரியாதவர்கள் கணக்கெடுக்கும் பணி கடந்த ஏப்ரல் மாதம் முதல் நடைபெற்று வருகின்றது. திருமுல்லைவாசல் கடைத்தெரு மற்றும் கடற்கரை பகுதியில் உள்ள மீன் விற்பனை செய்யும் இடத்தில் இதை சார்ந்து கணக்கெடுக்கும் பணி நடைபெற்றது. இப்பணியில் வட்டார வளமைய மேற்பார்வையாளர் ஞானபுகழேந்தி ஆசிரியர் பயிற்றுநர் ஐசக்ஞானராஜ் இல்லம் தேடி கல்வி தன்னார்வலர் அருட்செல்வி ஆகியோர் ஈடுபட்டனர்.

    ×