என் மலர்
நாகப்பட்டினம்
நாகை:
நாகை மாவட்டம் காமேஸ்வரம் ஊராட்சியில் துய்மை காவலராக பணியாற்றி வருபவர் துரைராஜ். இவர் காமேஸ்வரம் கிராம பகுதியில் சுகாதார பணியில் ஈடுபட்ட போது சாலையில் கிடந்த மதுபாட்டில்கள் அப்புறப்படுத்தி உள்ளார்.
இதனை கண்ட டிரைவர் பிரபு துரைராஜை திட்டி தாக்கியுள்ளார். அப்பகுதி மக்கள் அவரை மீட்டு நாகை அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுபற்றி கீழையூர் சப்- இன்ஸ்பெக்டர் ஜெயந்தி வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
குத்தாலம் அருகே திருவாலங்காட்டில் உள்ள சோதனை சாவடியில் குத்தாலம் வருவாய் ஆய்வாளர் சுந்தர் மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது தஞ்சையில் இருந்து சீர்காழி நோக்கி வந்த ஒரு காரை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் காரில் இருந்தவர்கள் போலி இ-பாஸ் வைத்து கொண்டு பயணம் செய்தது தெரியவந்தது.
இதுகுறித்து குத்தாலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கார் டிரைவர் தஞ்சை மாவட்டம் வல்லம் அர்னகுளசந்து பகுதியை சேர்ந்த ரமேஷ் (வயது 50), கார் உரிமையாளர் அதே பகுதியை சேர்ந்த ஞானபிரகாஷ் மகன் ஜார்ஜ் பெர்னாண்டஸ் (23) ஆகிய 2 பேரை கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து காரை பறிமுதல் செய்தனர்.
கொரோனா ஊரடங்கு 5-வது கட்டமாக 30-ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கில் சில தளர்வுகள் அளிக்கப்பட்டது. இதையடுத்து நாகை மாவட்டத்தில் நேற்று 68 நாட்களுக்கு பிறகு 60 சதவீத பயணிகளுடன் பஸ்கள் இயக்கின. அதன்படி நாகை பணிமனையில் இருந்து பஸ்களை ஓட்டும் டிரைவர்கள் பஸ்களுக்கு சூடம் ஏற்றி தங்களது பணிகளை தொடங்கினர்.
இந்தநிலையில் நாகை மண்டலத்தின் கீழ் செயல்படும் நாகை, மயிலாடுதுறை, வேதாரண்யம், சீர்காழி, பொறையாறு, திருத்துறைப்பூண்டி, நன்னிலம், திருவாரூர், மன்னார்குடி, சிதம்பரம், காரைக்கால் ஆகிய 11 பணிமனைகளில் 325 பஸ்கள் 60 சதவீத பயணிகளுடன் இயக்கப்பட்டன. குறிப்பாக நாகை மாவட்டத்தில் மட்டும் நாகை பணிமனையில் இருந்து 33 பஸ்களும், சீர்காழி பணிமனையில் இருந்து 23 பஸ்களும், மயிலாடுதுறை பணிமனையில் இருந்து 44 பஸ்களும், வேதாரண்யம் பனிமனையில் இருந்து 29 பஸ்களும், பொறையாறு பணிமனையில் இருந்து 14 பஸ்களும் இயக்கப்பட்டன. அப்போது பஸ்சில் பயணம் செய்தவர்கள் முக கவசம் அணிந்து, சமூக இடைவெளியை கடைபிடித்து பயணம் செய்தனர்.
இதேபோல் பொறையாறு அரசு போக்குவரத்து கழக பணிமனையில் உள்ள 14 பஸ்களில் கிருமி நாசினி மருந்து தெளித்து இயக்கப்பட்டன. இதில் பெரும்பாலான பஸ்கள், பஸ் நிலையத்திலிருந்து பயணிகள் இல்லாமல் காலியாக புறப்பட்டன. ஒரு சில பஸ்களில் மிக குறைவான அளவிலேயே பயணிகள் சென்றனர்.
நாகையை சேர்ந்த மாணிக்க சுந்தரம் (வயது 50). இவர் நாகை பெருமாள் கோவில் அருகே ஆட்டோ உதிரி பாகங்கள் விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார். நேற்று இரவு விற்பனை முடிந்து கடையை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்றார்.
இதனை நோட்டமிட்ட மர்ம நபர்கள் பூட்டை உடைத்து உள்ளே புகுந்தனர். கல்லா பெட்டியில் இந்த ரூ.90 ஆயிரம் ரொக்க பணத்தை கொள்ளையடித்து தப்பி ஓடி விட்டனர். இன்று காலை கடையை திறக்க வந்த மாணிக்க சுந்தரம் கடை திறந்து கிடைப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது பொருட்கள் சிதறி கிடந்தன. மர்ம நபர்கள் பணத்தை கொள்ளையடித்து சென்றது தெரிய வந்தது.
இது குறித்து அவர் நாகை நகர போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் வேல்முருகன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரித்தனர்.
அங்கு பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்ததில் 3 மர்ம நபர்கள் கடைக்குள் புகுந்து கொள்ளையடித்து சென்றது பதிவாகியிருந்தது. அதன் அடிப்படையில் போலீசார் வழக்குபதிவு செய்து மர்ம நபர்கள் 3 பேரை தேடி வருகின்றனர்.
வேதாரண்யத்தை அடுத்த கோடியக்கரை பகுதியில் பலத்த தெற்கு காற்று வீசிக் கொண்டிருக்கிறது. இதனால் கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது. இதனால் அப்பகுதி மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை.
தங்கள் படகுகளை பாதுகாப்பாக கரையில் நிறுத்தியுள்ளனர். ஆறுகாட்டுத்துறை, புஷ்பவனம், வெள்ளப்பள்ளம் மீனவர்கள் குறைந்த அளவே சிறு படகுகளை பயன்படுத்தி குறைந்த தூரம் கரையோரமாகச் சென்று மீன்பிடித்து வருகின்றனர்.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டம் செம்பனார்கோவில் பகுதி தலைச்சங்காடு காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் உலகநாதன்(வயது50). இவர் நேற்று தலைச்சங்காடு மேயின் ரோட்டில் நடந்து சென்றபோது மணல் லாரி மோதி படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே பலியானார்.
இதுகுறித்து அவரது மகன் சிலம்பரசன்(29) கொடுத்த புகாரின்பேரில் செம்பனார்கோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகினறனர்.
சீர்காழி:
நாகை மாவட்டம் சீர்காழியில் சட்டைநாத சுவாமி கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு சொந்தமான ஒரு இடத்தில் ஒருவர் குத்தகைக்கு எடுத்து சாகுபடி செய்து வந்த நிலையில் அவ்விடத்தில் வருவாய்த்துறை அனுமதி பெற்று வி.ஏ.ஓ ஒருவர் பண்ணைகுட்டை அமைப்பது தொடர்பாக பொக்லைன் மற்றும் லாரிகளை கொண்டு மண் எடுத்து விற்பனை செய்ததாக தெரிகிறது.
இதனையறிந்த சீர்காழி சட்டைநாதர் கோயில் நிர்வாகத்தினர் கோயில் இடத்தில் மண் எடுத்தவர்கள் மீதும் அதற்கு உறுதுணையாக இருந்த வருவாய்த்துறையினர் உள்ளிட்டவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்ககோரி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
மேலும் அதில், கோவில் இடத்திலிருந்து மண் எடுத்து அதற்கு நஷ்ட ஈடாக ரூ.1 கோடி ரூபாய் பெற்றுத்தரவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
நாகை மாவட்டம் கீவளூர் அருகே உள்ள குருக்கத்தி புதுதெருவை சேர்ந்தவர்கள் பைகர் சாதிக் (வயது 44), சுபீர் (37). இவர்கள் 2 பேரும் வீட்டில் இருந்து மோட்டார் சைக்கிளில் புறப்பட்டனர். அதே பகுதியில் பள்ளிவாசல்அருகே சென்றபோது திடீரென மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து சரிந்து விழுந்தது. இதில் தூக்கி வீசப்பட்ட 2 பேரும் பலத்த காயம் அடைந்தனர். அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டு நாகை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் சுபீர் இறந்தார். சாதிக் சிகிச்சை பெற்று வருகிறார்.
இது குறித்த புகாரின் பேரில் நாகை போலீஸ் இன்ஸ்பெக்டர் சுதா, சப்-இன்ஸ்பெக்டர் செந்தில் முருகன் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
நாகை மாவட்டம் சீர்காழியை அடுத்த கரைமேடு கிராமத்தை சேர்ந்தவர் குலசேகரன் விவசாயி. இவர் கடந்த 30 ஆண்டுகளாக தர்பூசணி சாகுபடி செய்து வருகிறார். வறட்சியான பகுதி என்பதால் நிலத்தடி நீரை கொண்டு விவசாயம் செய்யப்படுவதால் நீரை சேமிக்க ஆண்டுதோறும் தர்ப்பூசணி விதைகள் நடவு செய்தபின் அறுவடை வரை தினமும் ஆட்களை கொண்டு குடங்கள் மூலம் ஒவ்வொரு செடிக்கும் தண்ணீர் ஊற்றியே பயிர் செய்து வந்தார்.
இதனால் ஏற்பட்ட காலவிரயம் மற்றும் பண விரயத்தை தடுக்க மாற்று வழி தேடி சீர்காழி அரசு தோட்டக்கலை துறை அலுவலகத்தை நாடினார். அப்போது அதிகாரிகள் மானியத்துடன் கிடைக்கும் சொட்டு நீர் பாசன அமைப்பு குறித்தும் குறைந்த நீரில் அதிக மகசூல் பெறுவது குறித்தும் எடுத்துரைத்தனர்.
உடனே தனது நிலத்தில் சொட்டுநீர் பாசன அமைப்பு நிறுவ குலசேகரன் விண்ணப்பித்தார். அதன்படி கடந்த மார்ச் மாதம் தோட்டக்கலை துறை மூலம் அவரது நிலத்தில் சொட்டுநீர் பாசன அமைப்பு நிறுவப்பட்டது. தர்ப்பூசணி சாகுபடியை துவங்கினார் விவசாயி குலசேகரன்.
3 மாத கால பயிரான தர்பூசணி 65 நாட்களிலேயே அறுவடை பருவத்தை எட்டியதுடன் நல்ல மகசூலையும் கொடுத்துள்ளது. இதுவரை ஏக்கருக்கு 6 டன் மட்டுமே மகசூல் கிடைத்த நிலையில் இந்தாண்டு 12 டன் மகசூல் கிடைத்துள்ளதாகவும் ஒரு பழம் 15 கிலோ வரை எடை நிற்பதால் அதிக லாபம் கிடைத்ததாகவும் மகிழ்ச்சியோடு தெரிவிக்கிறார் குலசேகரன்.
சொட்டு நீர் பாசனம் மூலம் கடும் வறட்சி, தண்ணீர் சிக்கனம், உரங்கள் இடும் நேரம் குறைவு, ஆட்கள் பற்றாக்குறை என அனைத்து தடைகளையும் தாண்டி நல்ல மகசூல் பெறமுடியும் என நம்பிக்கை தெரிவித்த குலசேகரன் மற்ற விவசாயிகளும் சொட்டுநீர் பாசன முறையை பயன்படுத்த வேண்டும் எனவும் வலியுறுத்தினார். சுற்றியுள்ள வயல்கள் வறட்சியால் காய்ந்து கிடக்கும் நிலையில் சொட்டுநீர் பாசனம் மூலம் 15 கிலோ எடை கொண்ட பழங்களையும் ஏக்கருக்கு 12 டன் மகசூலையும் பெற்று சாதித்த விவசாயி குலசேகரனை தோட்டக்கலை துறை உதவி இயக்குனர் பொன்னி, உதவி அலுவலர் செல்வராஜ், குமரேசன் உள்ளிட்ட அதிகாரிகள் நேரில் சென்று வாழ்த்து தெரிவித்து பாராட்டினர்.
வேதாரண்யம் மின்சார வாரியத்தில் வேதாரண்யத்தை அடுத்த பெரியகுத்தகை கிராமத்தைச் சேர்ந்த திருச்செல்வம் (வயது 40) என்பவர் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிந்து வருகிறார்.
சம்பவத்தன்று இரவு தோப்புத்துறை தோப்புக்காட்டுத்தெரு பகுதியில் மின்சாரம் தடைபட்டு டிரான்ஸ்பார்மர் பழுதடைந்ததால் அதை சரிசெய்ய வரும்படி மின்சார வாரியத்திற்கு தோப்புத்துறை மீராசுல்தான் (50) என்பவர் தகவல் தெரிவித்துள்ளார்.
சுரேஷ் மின்வாரிய பணியாளருடன் ஒப்பந்த பணியாளர் திருச்செல்வமும் இரவு சென்றுள்ளனர். அப்போது மீராசுல்தான் ஏன் இவ்வளவு கால தாமதமாக வருகிறீர்கள் என்று கேட்டு நாங்களே சரிசெய்து விட்டோம் என்று கூறியுள்ளார்.
அதற்கு திருச்செல்வம் சரிசெய்ததை எங்களுக்கு தெரிவித்திருந்தால் இந்த இரவு நேரத்தில் நாங்கள் வந்திருக்க வேண்டியதில்லை என்று கூறியுள்ளார். அதில் ஆத்திரமடைந்த மீராசுல்தான் திருச்செல்வத்தை தரக்குறைவாக திட்டி கையால் தாக்கி மிரட்டல் விடுத்துள்ளார். இது குறித்த புகாரின் பேரில் வேதாரண்யம் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் மதியழகன் வழக்கு பதிவு செய்து மீராசுல்தானை கைது செய்து விசாரணை செய்து வருகின்றார்.






