என் மலர்

  செய்திகள்

  கைது
  X
  கைது

  போலி இ-பாஸ் மூலம் காரில் பயணம் செய்த 2 பேர் கைது

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  குத்தாலம் அருகே போலி இ-பாஸ் மூலம் காரில் பயணம் செய்த 2 பேரை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து காரை பறிமுதல் செய்தனர்.
  பாலையூர்:

  குத்தாலம் அருகே திருவாலங்காட்டில் உள்ள சோதனை சாவடியில் குத்தாலம் வருவாய் ஆய்வாளர் சுந்தர் மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது தஞ்சையில் இருந்து சீர்காழி நோக்கி வந்த ஒரு காரை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் காரில் இருந்தவர்கள் போலி இ-பாஸ் வைத்து கொண்டு பயணம் செய்தது தெரியவந்தது.

  இதுகுறித்து குத்தாலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கார் டிரைவர் தஞ்சை மாவட்டம் வல்லம் அர்னகுளசந்து பகுதியை சேர்ந்த ரமேஷ் (வயது 50), கார் உரிமையாளர் அதே பகுதியை சேர்ந்த ஞானபிரகாஷ் மகன் ஜார்ஜ் பெர்னாண்டஸ் (23) ஆகிய 2 பேரை கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து காரை பறிமுதல் செய்தனர்.
  Next Story
  ×