என் மலர்tooltip icon

    மயிலாடுதுறை

    • மயிலாடுதுறை வருவாய் மாவட்ட அளவிலான 17 வயதுக்கு உட்பட்ட மாணவர்களுக்கான ஹாக்கி போட்டியில் முதலிடம் பிடித்து தகுதி பெற்றனர்.
    • சீர்காழி சபாநாயக முதலியார் இந்து மேல்நிலைப் பள்ளியை சேர்ந்த ஹாக்கி வீரர்கள் மயிலாடுதுறை வருவாய் மாவட்டத்திற்காக கலந்து கொள்ள இருக்கின்றனர்.

    சீர்காழி:

    சீர்காழி சபாநாயக முதலியார் இந்து மேல்நிலைப் பள்ளியை சேர்ந்த 17 வயதிற்கு உட்பட்ட மாணவர்களுக்கான மாநில ஹாக்கி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர்.

    சென்ற மாதம் மயிலாடுதுறையில் நடைபெற்ற மயிலாடுதுறை வருவாய் மாவட்ட அளவிலான 17 வயதுக்கு உட்பட்ட மாணவர்களுக்கான ஹாக்கி போட்டியில் முதலிடம் பிடித்து தகுதி பெற்றனர்.

    தருமபுரி மாவட்டத்தில் அமைந்துள்ள டான் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் தமிழக அரசு பள்ளிக்கல்வித்துறை சார்பில் 17 வயது உட்பட்ட பிரிவு மாணவர்களுக்கான மாநில குழு விளையாட்டுப் போட்டிகள் நடைபெற இருக்கின்றன.

    இந்த விளையாட்டுப் போட்டியில் 38 மாவட்ட அணிகளும் மேலும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் (SDAT) அணியும் ஆக 39 அணிகள் பங்கு பெற உள்ளது.

    இந்த மாநில அளவிலான குழு விளையாட்டு போட்டியில் சீர்காழி சபாநாயக முதலியார் இந்து மேல்நிலைப் பள்ளியை சேர்ந்த ஹாக்கி வீரர்கள் மயிலாடுதுறை வருவாய் மாவட்டத்திற்காக கலந்து கொள்ள இருக்கின்றனர்.

    இச்சாதனை புரிந்த புரிந்த மாணவர்களுக்கு பயிற்சி அளித்த உடற்கல்வி இயக்குனர்.முரளிதரன், உடற்கல்வி ஆசிரியர்கள்.முரளி, .மார்கண்டன், .சக்திவேல், ஹரிஹரன், ராகேஷ் ஆகியோர்களை பள்ளியின் முன்னாள் செயலர்.பாலசுப்பிரமணியன், பள்ளியின் செயலர் .இராமகிருஷ்ணன், பள்ளியின் குழு தலைவர் சொக்கலிங்கம், பள்ளி தலைமையாசிரியர் .அறிவுடைநம்பி, உதவி தலைமை ஆசிரியர்கள்.

    துளசிரங்கன், .வரதராஜன், பள்ளியை சேர்ந்த ஆசிரியர்கள், அலுவலர்கள் மற்றும் பள்ளி மாணவ மாணவிகள் பாராட்டி வழி அனுப்பி வைத்தனர்.

    • மயிலாடுதுறையில் 1500 ஆண்டுகள் பழமைவாய்ந்த மாயூரநாதர் கோவில் உள்ளது.
    • சிறப்புகளையுடைய இக்கோயிலில் மார்கழி மாத பிரதோஷ வழிபாடு நடைபெற்றது.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையில் 1500 ஆண்டுகள் பழமைவாய்ந்த மாயூரநாதர் கோவில் உள்ளது.

    இக்கோவிலில் தட்சனின் யாகத்தில் கலந்து கொண்ட குற்றம் நீங்க உமையவள் அபயாம்பிகை மயில் உருவம் கொண்டு சிவபெருமானை பூஜித்து புகழ்பெற்ற தலமாகும்.

    பல்வேறு சிறப்புகளையுடைய இக்கோயிலில் மார்கழி மாத பிரதோஷ வழிபாடு நடைபெற்றது.

    கொடிமரம் முன்பு எழுந்தருளியுள்ள நந்திக்கு பால், தயிர், தேன், சந்தனம், மஞ்சள்பொடி, திரவியபொடி உள்ளிட்ட பல்வேறு திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.

    பின்னர் நந்தி அலங்காரம் செய்யப்பட்டு மகாதீபாரதனை நடைபெற்றது.

    பிரசாதமாக அபிஷேகம் செய்யப்பட்ட சந்தனம் பக்தர்களுக்கு வழங்கப்பட்டது.

    ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு கண்டு தரிசனம் செய்தனர்.

    • செல்முத்துக்குமாரருக்கு 21 வகையான வாசனை திரவிய பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகம்.
    • பின்பு, சண்முகார்ச்சனை செய்து மகாதீபாராதனை காட்டப்பட்டது.

    சீர்காழி:

    சீர்காழி அடுத்த வைத்தீஸ்வரன்கோவிலில் தருமபுரம் ஆதீனத்திற்கு உட்பட்ட தையல்நாயகிஅம்மன் உடனாகிய வைத்தியநாதசுவாமி கோயில் உள்ளது.

    இக்கோயிலில் செல்வமுத்துக்குமாரசுவாமிக்கு கிருத்திகை வழிபாடு நடைபெற்றது.முன்னதாக கிருத்திகை மண்படம் எழுந்தருளிய வள்ளி, தெய்வானை உடனாகிய செல்முத்துக்குமாரசுவாமிக்கு 21வகையான வாசனை திரவியப்பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்ப்பபட்டு சண்முகார்ச்சனை செய்து மகாதீபாராதனை காட்டப்பட்டது.

    இதில் தருமபுரம் ஆதீனம் 27-வது குருமகாசந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்தபரமாச்சாரிய சுவாமிகள் பங்கேற்று தரிசனம் செய்தார்.தொடர்ந்து அடிபிரதட்சனம் செய்து தருமபுரம் ஆதீனம் வழிபாடு மேற்கொண்டார்.

    • தற்போது ஜனவரி 31-ம் தேதி வரை காலநீட்டிப்பு செய்துள்ளது.
    • மின்இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணி சிறப்பு முகாம் தொடங்கி நடந்தது.

    சீர்காழி:

    சீர்காழியில் மின் இணைப்புடன் ஆதார் எண் இணைக்கும் பணியினை மின்வாரிய அதிகாரி ஆய்வு செய்தார்.மின் இணைப்பு எண்ணு டன் ஆதார் எண்ணை இணைக்கவேண்டும் என மின்சார வாரியம் அறிவித்துள்ளது.

    கடந்த டிசம்பர் 31-ம் தேதிக்குள் இணைக்கவேண்டும் என முன்பு அறிவிப்பு வெளியிட்டிருந்த நிலையில் தற்போது ஜனவரி 31-ம் தேதி வரை காலநீட்டிப்பு செய்து மின்வாரியத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி அறிவித்துள்ளார்.

    இதனையடுத்து மீண்டும் சிறப்பு முகாம்கள் அமைத்து ஆதார் எண் இணைக்கும் பணி துரிதப்படுத்தப்பட்டுள்ளது.

    இதனிடையே சீர்காழி வாணிவிலாஸ் துவக்கப்பள்ளியில் மின்சாரவாரியம் சார்பில் மின் நுகர்வோர்கள் மின்இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணி சிறப்பு முகாம் தொடங்கி நடந்தது.

    இந்த பணியை மின்வாரிய செயற்பொறியாளர் லதாமகேஸ்வரி திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

    அப்போது மின்வாரிய துணை நிதி கட்டுப்பாட்டு அலுவலர் ஜெயசித்ரா, உதவி கணக்கு அலுவலர் (பொ) செந்தாமரை, உதவி பொறியாளர் முத்துக்குமார், மின்வாரிய பணியாளர் ஆனத்தக்குமார் ஆகியோர் உடனிருந்தனர்.

    • மழைக்கால நிவாரணமாக ரூ. 5 ஆயிரம் வழங்க உத்தரவிட்டுள்ளது.
    • மண்பாண்ட தொழிலாளர்கள் 12 ஆயிரம் பேர் மட்டுமே நிவாரணம் பெற்று வருகின்றனர்.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் பகுதியில் உள்ள கொள்ளிடம், திருமயிலாடி, ஆச்சாள்புரம், வேட்டங்குடி, மாதிர வேளூர் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட மண்பாண்ட தொழிலாளர்கள் வசித்து வருகின்றனர்.

    பொங்கல் பண்டிகை நெருங்கி வருவதால் பொங்கல் பானை, சட்டி உள்ளிட்ட மண் பாண்டங்கள் செய்து அதை சுடும் பணியும் நடைபெற்று வருகிறது.

    இதுகுறித்து கொள்ளிடம் அருகே வேட்டங்குடி கிராமத்தை சேர்ந்த நெடுஞ்சாலைதுறையில் பணிபுரிந்து வரும் மாரிமுத்து என்பவரின் மகன் ஏரோநாட்டிகல் பட்டதாரியான துளசேந்திரன் கூறும்போது,

    மண்பாண்டங்களை பயன்படுத்தி அதில் சமைத்து உண்பதன் மூலம் உடலுக்கு நல்ல ஆரோக்கியத் தன்மை உருவாகிறது. நமது பாரம்பரிய தொழிலாக இருந்து வந்த இந்த மண்பாண்ட தொழில் கடந்த 15 ஆணடுகளில் நசிந்து வருகிறது.

    சில்வர் மற்றும் அலுமினியம் ஆகியவற்றால் செய்யப்பட்ட பாத்திரங்கள் எளிதில் கிடைப்பதாக நினைத்து அதனை வாங்கி பயன்படுத்தி வருகின்றனர்.

    மண்பானை செய்து, அதனை சூலையில் வைத்து சுடுவதற்கு மூல மூலப் பொருட்களான வைக்கோல், வராட்டி, தென்னை மட்டை போன்ற பொருட்களின் விலையும் கடுமையாக உயர்ந்துள்ளது.

    மழைக்கால நிவாரனமாக ரூ.5000 வழங்க உத்தரவிட்டுள்ளது.

    ஆனால் இந்த நிவாரணம் போதாத நிலையில் அதை உயர்த்தி 10 ஆயிரமாக வழங்கவேண்டும். பொங்கல் பண்டிகைக்கு முன்கூட்டியே மண்பாண்ட தொழிலாளர்களிடம் மண்பானை, அடுப்பு, சட்டி உள்ளிட்ட பொருட்களை உரிய விலை நிர்ணயம் செய்து கொள்முதல் செய்து அதனை அரசு தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள நியாயவிலை கடைகள் மூலமும், கூட்டுறவு சங்கங்களின் கட்டுப்பாட்டில் உள்ள நியாய விலை கடைகள் மூலமும் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு வங்கிகள் மூலம் மானியத்துடன் கூடிய வங்கி கடன் வழங்க வேண்டும்.

    தற்போது தமிழகத்திலேயே எங்களைப் போன்ற மண்பாண்ட தொழிலாளர்கள் 12000 பேர் மட்டுமே நிவாரணம் பெற்று வருகின்றனர். மீதமுள்ள அனைவரையும் கணக்கெ டுப்பு செய்து அனைத்து தொழிலாளர்களுக்கும் நிவாரணம் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

    • 8 அடிக்கு 1 அடி இடைவெளி விட்டு பாத்தி நடவு செய்ய வேண்டும்.
    • விளக்கு பொறி அமைத்து தாய்ப்பூச்சிகளின் நடமாட்டத்தை கண்காணித்து அழிக்கலாம்.

    சீர்காழி:

    சீர்காழி வட்டாரம் அகணி கிராமத்தில் புகையன் தாக்கிய வயலை பார்வையிட்டு சீர்காழி வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் ராஜராஜன் ஆய்வு செய்தார்.

    பின்னர் அவர் புகையான் தாக்குதலில் இருந்து நெற்பயிரை காப்பாற்றும் வழிமுறை குறித்து விளக்கமளித்துள்ளார்.

    தற்பொழுது சீர்காழி வட்டாரத்தில் இரவில் வெப்ப நிலை குறைவாகவும், பகலில் மந்தமான சூரிய வெளிச்சம் இருப்பதினாலும் சம்பா, தாளடி நெற்பயிரில் பரவலாக புகையான் பூச்சி வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன.

    பூச்சிகள் வேர்களின் அடிப்பாகத்தில் இருந்து கொண்டு சாற்றை உறிஞ்சுவதால் பயிர் மஞ்சள் நிறமாக மாறும் பின்னர் பழுப்பு நிறமாக மாறும்.

    பாதிக்கப்பட்ட வயல் ஆங்காங்கே வட்ட வட்டமாக புகைந்தது போல காணப்படுவது தாக்குதலின் அறிகுறியாகும். இதனை கட்டுப்படுத்த நடவு வயலில் 8 அடிக்கு 1 அடி இடைவெளி விட்டு பாத்தி நடவு செய்ய வேண்டும்.

    மண் பரிசோதனை பரிந்துரைப்படி தழைச்சத்து இடும்பொழுது 3 – 4 முறையாக பிரித்து இடவேண்டும்.

    களை செடிகளை அகற்றி விடவேண்டும்.புகையான் பூச்சி தாக்குதலுக்கு எதிர்ப்பு திறன், தாங்கும் திறன் கொண்ட ரகங்களை பயிரிடலாம்.

    விளக்குப் பொறி அமைத்து தாய்ப்பூச்சிகளின் நடமாட்டத்தைக் கண்கா ணித்து அழிக்கலாம்.

    மஞ்சள் நிற ஒட்டுப்பொறிகளை ஹெக்டேருக்கு 12 என்ற அளவில் அமைக்கலாம். வயலில் புகையானின் இயற்கை விரோதிகளான சிலந்தி, பச்சை மிரிட் நாவாய்ப் பூச்சி, புள்ளி வண்டு, தட்டான், ஊசித் தட்டான் போன்ற இரை விழுங்கிகளும், அனேக்ரஸ், ஒலிகோசிட்டா போன்ற முட்டை ஒட்டுண்ணிகளும் இப்பூச்சியைப் பெரும் அளவில் கட்டுப்படு த்துகின்றன. பொருளாதார சேத நிலையை எட்டியவுடன் கீழ்க்கண்ட பூச்சிக் கொல்லிகளுள் ஏதேனும் ஒன்றை ஒரு ஹெக்டேருக்கு தெளிக்க வேண்டும்.

    குளோரன்டிரினிலிப்ரோல் 18.5 எஸ்சி – 150 மி.லி. அல்லது இமிடாகுளோபிரிட் 17.8 எஸ் எல் – 100 மி.லி. அல்லது ப்யூப்ரோபெசின் 25 எஸ்சி 652 மி.லி. புகையானின் மறு உற்பத்தியை பெருக்கும் மீதைல்பாரத்தியான் மற்றும் செயற்கை பைரித்ராய்டு மருந்துகளை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும் என தெரிவித்தார்.

    • பெருமாள் தங்கரெத்தின அங்கியில் உள்பிரகாரத்தில் ஊர்வலமாக எழுந்தருளினார்.
    • சொர்க்கவாசல் திறக்கப்பட்டு, பெருமாள் வசந்த மண்டபத்திற்கு எழுந்தருளினார்.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை, திருஇந்தளூரில் அமைந்துள்ள பரிமளரெங்கநாதர் கோவில், பெருமாள் பள்ளிகொண்ட நிலையில் அருள்புரியும் ஸ்ரீரெங்கம் உள்ளிட்ட பஞ்ச அரங்க கோவிலில் இது ஐந்தாவது கோவிலாகும். திருமங்கையாழ்வார் உள்ளிட்ட ஆழ்வார்களால் பாடல்பெற்ற 1,500 ஆண்டுகள் பழைமை வாய்ந்த இந்த கோவில், சந்திரனின் சாபம் தீர்த்ததும், 108 வைணவ திவ்ய தேசங்களில் 22வதுமான இந்த கோவிலில் ஏகாதேசியை முன்னிட்டு, இன்று அதிகாலை சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

    இதனை முன்னிட்டு பெருமாள் தங்க ரெத்தின அங்கியில் உள் பிரகாரத்தில் ஊர்வ லமாக எழுந்தருளினார்.

    அதனைத்தொடர்ந்து சிறப்பு ஆராதனைகளுக்குப்பின், பெருமாள் பாசுரங்களை பட்டாச்சாரியார்கள் பாடினர் தொடர்ந்து மகா தீபாராதனை நடைபெற்றது.

    அதனை அடுத்து பரமபத வாசல் எனப்படும் சொர்க்கவாசல் திறக்க ப்பட்டு, பெருமாள்வசந்த மண்டபத்திற்கு எழுந்தரு ளினார். திரளான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.

    இந்நிகழ்ச்சியில் நிர்வாக அலுவலர் ரம்யா, உதவி அலுவலர் விக்னேஷ், மற்றும் போலீசார்கள் அரசியல் பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

    • சொர்க்கவாசலுக்கு சிறப்பு வழிபாடுகள் செய்து தீபாராதனை காட்டப்பட்டது.
    • ஒருநாள் மட்டும் தரிசிக்க கூடிய பெருமாளின் வலது திருவடியை இன்று மட்டுமே வணங்க முடியும்.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் திருமங்கை ஆழ்வாரால் மங்களாசாசனம் செய்துவைக்கப்பட்ட 108 திவ்யதேசங்களில் 28-வது ஸ்தலமான ஸ்ரீ திருவிக்கிரம நாராயணபெருமாள் எனும் தாடாளன் பெருமாள் கோயில் அமைந்துள்ளது.

    இக்கோயிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு பெருமாளுக்கு அதிகாலை சிறப்பு திருமஞ்சனம், சாத்துமுறை நடைபெற்றது.

    தொடர்ந்து ஸ்ரீதேவி, பூதேவியருடன் பெருமாள் ரத்தின அங்கி அலங்காரத்தில் கோயில் வசந்த மண்டபத்தில் எழுந்தருள திருமங்கை யாழ்வாரின் மங்களாசாசன பாசுரங்கள் பாடப்பட்டு சிறப்பு ஆராதனைகள் நடைபெற்றது.

    பின்னர் மேள, தாளங்கள் முழங்க ஸ்ரீதேவி, பூதேவி சமேத தாடாளன்பெருமாள் சொர்க்கவாசல் அருகே எழுந்தருளினார். அங்கு சொர்க்கவாசலுக்கு சிறப்பு வழிபாடுகள் செய்து, தீபாராதனை காட்டப்பட்டது.

    பின்னர் சொர்க்க வாசல் திறக்கப்பட்டு அவ்வழியே ஸ்ரீதேவி, பூதேவி தாயாருடன், பெருமாள் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

    ஆண்டுக்கு ஒருநாள் மட்டும் தரிசிக்க கூடிய பெருமாளின் வலது திருவடியை இன்று மட்டுமே வணங்க முடியும் என்பதால் அதிகாலை முதலே பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று தரிசனம் செய்து வருகின்றனர்.

    இந்நிலையில் கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா காலகட்டத்தில் கட்டுபாடுகளுடன் பக்தர்கள் இன்றி சொர்க்கவாசல் திறப்பு விழா நடைபெற்ற நிலையில் இன்று கட்டுபாடுகள் ஏதும் இல்லாததால் அதிக அளவு பக்தர்கள் வந்து வழிபாடு செய்து பெருமாளை சேவித்தனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இலங்கை கடற்படையினர் மயிலாடுதுறை மீனவர்கள் 4 பேரையும் கடல் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி கைது செய்தனர்.
    • மயிலாடுதுறை மீனவர்கள் 4 பேரும் இலங்கை காங்கேசன் துறைமுகத்திற்கு அழைத்து செல்லப்பட்டனர். மீனவர்களின் படகும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

    சீர்காழி:

    நாகப்பட்டினம் மற்றும் மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்ந்த மீனவர்கள் 60க்கும் மேற்பட்டோர் சுமார் 15க்கும் மேற்பட்ட படகுகளில் கடந்த 27-ந்தேதி மீன் பிடிக்க கடலுக்கு சென்றனர்.

    இதில் மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்ந்த பாண்டியன், சக்திவேல், திருச்செல்வன் மற்றும் சக்திவேல் ஆகிய 4 பேரும் ஒரு படகில் மீன் பிடிக்க சென்று இருந்தனர். இந்நிலையில் அவர்கள் மீன் பிடிக்க கடலில் வலை வீசி காத்திருந்தனர். அப்போது திடீரென வலைகள் அறுந்து சென்று உள்ளது.

    இதைத் தொடர்ந்து மீனவர்கள் வலையை எடுக்கும் முயற்சியில் கடலில் எல்லை தாண்டி சென்று உள்ளனர்.

    அப்போது அங்கு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இலங்கை கடற்படையினர் அவர்கள் 4 பேரையும் கடல் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி கைது செய்தனர். பின்னர் அவர்கள் 4 பேரும் இலங்கை காங்கேசன் துறைமுகத்திற்கு அழைத்து செல்லப்பட்டனர். மீனவர்களின் படகும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

    இதைத் தொடர்ந்து கைது செய்யப்பட்ட மீனவர்கள் பருத்தித் துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

    இந்நிலையில் இன்று பருத்தித்துறை நீதிமன்றத்தில் கைது செய்யப்பட்ட 4 மீனவர்கள் ஆஜர்படுத்தப்பட்டனர். இதைத் தொடர்ந்து நீதிபதி, மீனவர்கள் பாண்டியன், சக்திவேல், திருச்செல்வன், சக்திவேல் ஆகிய 4 பேரும் வருகிற 4-ந்தேதி வரை யாழ்பாணம் சிறையில் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார்.

    • மன்னம்பந்தலில் போலீசார் ரோந்து பணியில் ஈடுப்பட்டனர்.
    • நீடூர் ெரயில்வே கேட் பகுதியில் சாராயம் கடத்திய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை அருகே மன்னம்பந்தலில் உள்ள தனியார் கல்லூரியின் பின்புறம் சாராய விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    அதன்பேரில் மயிலாடுதுறை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மகாதேவன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அங்கு சாராயம் விற்ற தரங்கம்பாடி தாலுகா கஞ்சாநகரம் மெயின்ரோட்டை சேர்ந்த முத்துக்குமார் (வயது 34) என்பவரை கைது செய்து அவரிடம் இருந்து 110 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.

    இதேபோல மயிலாடுதுறை கூறைநாடு அறுபத்துமூவர் பேட்டை பகுதியில் சாராயம் விற்ற அதே பகுதியைச் சேர்ந்த கணேசன் (53), மயிலாடுதுறை திருவிழந்தூர் தீப்பாய்ந்த அம்மன் கோவில் அருகே சாராயம் விற்ற கூறைநாடு கிட்டப்பா பாலம் வேதம் பிள்ளை தெருவைச் சேர்ந்த அரவிந்தன் (21) ஆகிய 2 பேரையும் கைது செய்து அவர்களிடம் இருந்த சாராயத்தை பறிமுதல் செய்தனர்.

    நீடூர் ெரயில்வே கேட் பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்ட போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் சாராயம் கடத்தி வந்த மணல்மேடு மீன் தொட்டித் தெருவை சேர்ந்த ராஜா (29), முத்து (37) ஆகிய 2 பேரை கைது செய்து அவர்களிடம் இருந்த சாராயத்தை பறிமுதல் செய்தனர்.

    • கடும் பனிப்பொழிவு நிலவியதால் வாகன ஓட்டிகள் அவதி.
    • சம்பா நெற்பயிர்களில் புகையான் தாக்கம் ஏற்பட வாய்ப்பு இருக்கும்.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி, பூம்புகார், திருவெண்காடு, கொள்ளிடம் அதன் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை பெய்யாமல் வெயில் அடித்தது. ஆனால் இரவில் பனிப்பொழிவு நிலவி வருகிறது. காலை 8 மணி வரையும் பனிப்பொழிவு நிலவி வருகிறது.

    இதனால் எதிரே வரும் வாகனங்கள் தெரியாததால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர். இதன் காரணமாக வாகனங்களில் முகப்பு விளக்குகளை எரியவிட்டு செல்கின்றனர்.

    பனிப்பொழிவு காரணமளாக நடைபயிற்சி செய்பவர்கள், கடைவீதிக்கு பொருட்கள் வாங்க வரும் பொதுமக்கள் குறைந்த அளவே காணப்பட்டனர். சீர்காழி சுற்றுவட்டாரப் பகுதிகளில் முழுவதுமாக கடும் பனிப்பொழிவு நிலவி வருவதால் சம்பா நெற்பயிர்களில் புகையான் தாக்கம் ஏற்பட வாய்ப்பு அதிகமாக இருக்கும் என விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

    • ரூ.14 ஆயிரம் செலவில் நீர் உரிஞ்சும் குழி அமைக்கும் பணி.
    • ரூ.4.08 லட்சம் செலவில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணி.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை ஊராட்சி ஒன்றியத்தில் ரூ.41.83 லட்சம் மதிப்பீட்டில் கிராம ஊராட்சியில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப் பணிகளை கலெக்டர் லலிதா பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    சித்தர்காடு கிராம ஊராட்சியில் கிளிண்டன் கார்டனில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தின் 2022-23 கீழ் ரூ.8.27 லட்சம் செலவில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணி, கணபதி நகரில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தின் கீழ் ரூ.8.08 லட்சம் செலவில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணி, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதித் திட்டத்தின் கீழ் ரூ.14 ஆயிரம் செலவில் நீர் உரிஞ்சும் குழி அமைக்கும் பணி, சோழியத் தெருவில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தின் கீழ் ரூ.4.08 லட்சம் செலவில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணி உள்பட பணிகளை ஆய்வு செய்து சித்தர்காடு முதன்மைச் சாலையில் உள்ள பாசன வாய்க்கால் தூர்வாரும் பணியையும் மற்றும் அங்கன்வாடி மையத்தில் குழந்தைகளுக்கு வழங்கப்படும் உணவு பொருட்களின் தரத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    மேலும், பணிகளை விரைவாகவும் தரமாகவும் அமைக்க சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

    ஆய்வின்போது மயிலாடுதுறை ஆணையர் அன்பரசன், வட்டார வளர்ச்சி அலுவலர்மஞ்சுளா (கி.ஊ), உதவி பொறியாளர் பூங்குழலி, உதவி செயற்பொறியாளர் பொறுப்பு ராஜேஷ் கண்ணன், மண்டல வட்டார வளர்ச்சி துணை அலுவலர் பரமேஸ்வரி, ஊராட்சி மன்ற தலைவர் வேலு-ரெத்தினவேல் வருவாய் ஆய்வாளர் முத்துசாமி, ஊராட்சி செயலர் வெங்கடேசன், துணைத் தலைவர் ரமணி தனபால் மற்றும் வார்டு உறுப்பினர்கள் உடன் இருந்தனர்.

    ×