என் மலர்
மயிலாடுதுறை
- மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரித்துக் கொடுக்க வேண்டும்.
- 1939 -ன் படி நீதிமன்ற வழக்கு தொடர்வது உடன் அபராதமும் விதிக்கப்படும்.
சீர்காழி:
சீர்காழி நகராட்சி ஆணையர் வாசுதேவன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியதாவது :-
சீர்காழி நகரில் உள்ள பொதுமக்கள் தங்கள் வீட்டை சுத்தம் செய்து குப்பைகளை போகிப் பண்டிகை நாளில் கொளுத்தக்கூடாது.
தங்கள் பகுதியில் வரும் தூய்மை பணியாளர்களிடம் குப்பைகளை மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரித்துக் கொடுக்க வேண்டும்.
வீடுகள் மற்றும் நிறுவனங்கள் மூலம் வெளியேற்றப்படும் குப்பைகளை பொது இடங்களில் கொட்டினால் பொது சுகாதார சட்டம் 1939 -ன் படி நீதிமன்ற வழக்கு தொடர்வது உடன் அபராதமும் விதிக்கப்படும். மேலும் தங்களின் வீடுகள் தேடி வரும் தூய்மை பணியாளர்களிடம் மட்டுமே தர வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- பாரதி மேற்கோள்காட்டிய புலவர்களிலேயே முதலிடத்தை பெறுபவர் கம்பர்.
- கம்பர் சிலையின் முன்பு தமிழர்கள் அவருக்கு புகழாரம் சூட்டி பேசினார்.
குத்தாலம்:
யாமறிந்த புலவர்களிலே கம்பனைப் போல், வள்ளுவனை போல், இளங்கோவை போல் பூமி தன்னில் யாங்கெனுமே பிறந்ததில்லை என பாரதி மேற்கோள்காட்டிய புலவர்களிலேயே முதலிடத்தை பெறுபவர் கம்பர்.
கம்பன் வீட்டுக் கட்டுத்தறியும் கவி பாடும் என்பார்கள்.
இத்தகைய சிறப்புகள் பல பெற்ற கம்பர் பிறந்தது மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள தேரழுந்தூர்.
இவரது பிறந்த நாளை அரசு விழாவாக கொண்டாட வேண்டும் என தமிழ் ஆர்வலர்கள் பலரும் அரசுக்கு கோரிக்கை விடுத்து வரும் நிலையில், ஆண்டுதோறும் அவரது பிறந்த நாள் விழா தேரழுந்தூர் கம்பர் கழகம் மற்றும் புதுக்கோட்டை கம்பன் கழகம் சார்பில் கொண்டாடப்பட்டு வருகிறது.
அவ்வகையில் 93-ஆம் ஆண்டு கம்பர் விழா நேற்றுமுன்தினம் தொடங்கியது.
தேரழுந்தூர் கம்பர் கோட்டத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியின் தொடக்கமாக தேரழுந்தூர் ஆமருவியப்பன் கோயிலில் கம்பர் வழிபாடு நடைபெற்றது.
தொடர்ந்து கம்பர் இயற்றிய கம்பராமாயண புத்தகங்களையும், சீர் வரிசைகளையும் தமிழ் அறிஞர்கள் தங்கள் தலைகளில் சுமந்து வீதி உலாவாக கம்பர் கோட்டத்தை அடைந்தனர்.
அங்கு அமைந்துள்ள கம்பர் சிலையின் முன்பு தமிழர்கள் அவருக்கு புகழாரம் சூட்டி பேசினார்.
தொடர்ந்து நடைபெற்ற விழாவில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த தமிழறிஞர்கள் வழக்காடு மன்றம், சொற்பொழிவு, உள்ளிட்ட நிகழ்வுகளில் கலந்து கொண்டு கம்பரின் புகழ்பாடினர்.
இதில், எழுத்தாளர் இந்திரா சௌந்தரராஜன், புதுச்சேரி கம்பன் கழக செயலாளர் சிவக்கொழுந்து, உயர்நீதிமன்ற நீதிபதி சுரேஷ்குமார், புதுக்கோட்டை கம்பன் கழகம் ராமசாமி, ராமச்சந்திரன், ராமேஸ்வரம் கம்பன் கழக தலைவர் முரளிதரன், தேரழுந்தூர் முத்துசானகிராமன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
- சுற்றியுள்ள கிராமங்களுக்கு சென்று தமிழர் மரபு கலையான சிலம்பகலையை பயிற்றுவித்து வருகிறார்.
- புளிச்சக்காடு கிராமத்தில் சமத்துவ பொங்கல் திருவிழாவை கொண்டாடினர்.
சீர்காழி:
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த புளிச்சக்காடு கிராமத்தை சேர்ந்தவர் இயற்கை விவசாயி தினேஷ் இவர் தனது ஓய்வு நேரத்தில் சுற்றியுள்ள கிராமங்களுக்கு சென்று தமிழர் மரபுக் கலையான சிலம்பகலையை பயிற்றுவித்து வருகிறார்.
கடந்த 2019ஆம் ஆண்டு முதல் ஏற்பட்ட கொரோனா தொற்று விடுமுறையில் ஏழை, எளிய மாணவர்களை ஊக்குவிக்கும் விதமாக அந்தந்த கிராமங்களுக்கே சென்று சிலம்ப கலையை உண்மையான முறையில் இலவசமாக பயிற்றுவித்து வருகிறார்.
இந்நிலையில் மாவீரன் சிலம்பாட்ட கழகம் மற்றும் பொதுநல அறக்கட்டளை இணைந்து புளிச்சக்காடு கிராமத்தில் சமத்துவ பொங்கல் திருவிழாவை கொண்டாடினர்.
சீர்காழியை சுற்றியுள்ள கீழச்சாலை, கேவரோடை, புத்தூர், கொள்ளிடம், பாதரக்குடி, முதலைமேடு உள்ளிட்ட 20 க்கும் மேற்பட்ட கிராமங்களை 300 சிலம்பாட்ட மாணவ, மாணவிகள், பெற்றோர் மற்றும் கிராமவாசிகள் கலந்து கொண்டனர்.
இஸ்லாமியர் உள்ளிட்ட அனைத்து மதத்தினர் இணைந்து பொங்கல் வைக்கும் வைபவத்துடன் துவங்கிய விழாவில் சிலம்பாட்டம், ஒற்றைகம்பு, இரட்டைகம்பு, புளியாட்டம், வாள்வீச்சு உள்ளிட்ட வீர விளையாட்டுகளும், ஆடல் பாடல் கலைநிகழ்ச்சிகளும் நடைபெற்றது.
அதனை தொடர்ந்து நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் மாநில அளவில் வெற்றிபெற்ற சிலம்பாட்ட மாணவ, மாணவிகளுக்கு சீர்காழி காவல் துணை கண்காணிப்பாளர் லாமேக், தீயணைப்பத்துறை அலுவலர் ரமேஷ், அரசு கல்லூரி பேராசிரியர் முனைவர்.சத்தியமூர்த்தி ஆகியோர் பங்கேற்று கோப்பைகளை வழங்கி பாராட்டினர்.
இவ்விழாவில் அனைத்து சமூக மக்களும் கலந்து கொண்டு சமத்துவ பொங்கலிட்டு மகிழ்சியுடன் கொண்டாடினர்.
- கூழையாறு,தொடுவாய், வானகிரி உள்ளிட்ட மூன்று இடங்களில் ஆமை குஞ்சுகள் பொறிப்பகம் அமைக்கப்பட்டுள்ளது.
- 45 நாட்கள் முதல் 50 நாட்களுக்குப் பின்னர் வெளிவரும் ஆமைக்கு ஞ்சுகள் பாதுகாப்பாக கடலில் விடப்படும்.
சீர்காழி:
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை அடுத்த பழையாறு,தொடுவாய்,திருமுல்லைவாசல், கூழையாறு,வானகிரி, தரங்கம்பாடி வரையிலான கடலோரப் பகுதிகளில் அரிய வகை ஆமை இனமான ஆலிவர் ரெட்லி ஆமைகள் முட்டையிடுவதற்காக இக்கடற்கரையோர பகுதிகளுக்கு வருவது வழக்கம்.
ஆண்டுதோறும் டிசம்பர் மாதம் முதல் மார்ச் மாதம் வரை கடற்கரையோர பகுதிகளில் தஞ்சமடையும் ஆமைகள் கடற் பரப்பு மற்றும் அருகிலுள்ள காப்பு க்காடுகளில் முட்டைகளை இட்டு மீண்டும் கடலுக்கு சென்று விடும். இவற்றை அப்பகுதியில் உள்ள விலங்குகள் மற்றும் பறவைகளிடமிருந்து பாதுகாத்து வைப்பதற்காக வனத்துறையின் சார்பாக கூழையாறு,தொடுவாய், வானகிரி உள்ளிட்ட மூன்று இடங்களில் ஆமை குஞ்சுகள் பொறிப்பகம் அமைக்கப்பட்டுள்ளது.
ஆண்டுதோறும் டிசம்பர் மாதம் முதல் மார்ச் மாதம் வரை கடலோரப் பகுதிகளில் வனத்துறையினர் மூலம் சேகரிக்கப்படும் முட்டைகள் அந்தந்த பகுதியில் உள்ள பொறுப்பாகங்களில் பாதுகாக்கப்பட்டு 45 நாட்கள் முதல் 50 நாட்களுக்குப் பின்னர் வெளிவரும்
ஆமைக்குஞ்சுகள் பாதுகாப்பாக கடலில் விடப்படும்.
இந்த ஆண்டு தற்போது வரை 3265 ஆலிவர் ரெட்லி ஆமை முட்டைகள் சேகரிக்கப்பட்டு ஆமைக்குஞ்சு குறிப்பகத்தில் பாதுகாக்கப்பட்டு வருகிறது.இத்தகவலை சீர்காழி வனச்சரகர் டேனியல் தெரிவித்துள்ளார்.
- பா.ஜனதா சார்பில் அரசு கவன ஈர்ப்பு கண்டன ஆர்ப்பாட்டம் மாநில விவசாய அணி தலைவர் நேதாஜி தலைமையில் நடைபெற்றது.
- 2 ஆயிரம் தேங்காய்களை கொண்டு வந்து அங்கிருந்த பொதுமக்களுக்கு வழங்கினர்
சீர்காழி:
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி பழைய பேருந்து நிலையம் அருகே பொங்கல் பரிசு தொகுப்பில் தேங்காயை சேர்த்து வழங்கிடவும், தென்னை விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த வலியுறுத்தி பா.ஜனதா சார்பில் அரசு கவன ஈர்ப்பு கண்டன ஆர்ப்பாட்டம் மாநில விவசாய அணி தலைவர் நேதாஜி தலைமையில் நடைபெற்றது.
முன்னாள் மாவட்ட த்தலைவர்கள் வெங்கடேசன், சேதுராமன்,நகர தலைவர் பிரேம்சங்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட தலைவர் க.அகோரம் கண்டன உரையாற்றினார். பொங்கல் பரிசு தொகுப்பில் தேங்காயை சேர்க்க வலியுறுத்தி தேங்காயை சாலையில் கொட்டி கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து லாரியில் 2 ஆயிரம் தேங்காய்களை கொண்டு வந்து அங்கிருந்த பொதுமக்களுக்கு வழங்கி நூதன முறையில் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
- நவம்பர் 11-ம் தேதி மட்டும் 52 சென்டிமீட்டர் மழை அளவு பதிவானது.
- சீர்காழி, தரங்கம்பாடி வட்டங்களில் உள்ள குடும்பங்களுக்கு தலா ரூ. 1000 நிவாரணம்.
தரங்கம்பாடி:
மயிலாடுதுறை மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழையால் பாதிக்கப்பட்ட விவசாய நிலங்கள் சேதமடைந்து பாதிக்கப்பட்டதன் அடிப்படையில் 40031 விவசாயிகளுக்கு, ரூ.43.92 கோடி இடுபொருள் நிவாரண தொகையினை கொள்ளிடம் ஊராட்சி கடவாசல், சீர்காழி ஊராட்சி ஒன்றியம் பெருந்தோட்டம், செம்பனார்கோயில் ஊராட்சி ஒன்றியம் கீழையூர் உப்புச் சந்தை மாரியம்மன் கோயில் ஆகிய இடங்களில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைச்சர்சிவ.வீ.மெய்யநாதன் வழங்கினார். பின்னர் அவர் கூறியதாவது:
தமிழ்நாடு முதல்-அமைச்சரின் வழிகாட்டு தலின்படி வடகிழக்கு பருவமழையால் பாதிக்க ப்பட்ட விவசா யிகளுக்கு இடுபொருள் நிவாரணத் தொகை வழங்கப்படுகிறது. வடகிழக்கு பருவமழையால் மயிலாடுதுறை மாவட்டம் மிகவும் பாதிப்புக்கு உள்ளானது.
கடந்த நவம்பர் 11ஆம் தேதி 24 மணி நேரத்தில் 52 சென்டிமீட்டர் மழை அளவு ஒரே இரவில் பதிவானது. இதனால் மிகுந்த சேதம் ஏற்பட்டுது. குறிப்பாக கொள்ளிடம்சீர்காழி, தரங்கம்பாடி ஆகிய பகுதிகளில் மழை நீர் சூழப்பட்டு பாதிப்புக்குள்ளானது.
பாதிப்புகளை சரி செய்ய முதலமைச்சரின் உத்தரவுபடி அமைச்சர்கள் இப்பகுதியில் முகாமிட்டு 72 மணி நேரத்தில் மின் துண்டிப்பு மற்றும் அனைத்து பாதிப்புகளும் சரிசெய்யப்பட்டன. இந்தியாவில் தலைசிறந்த சிறந்த முதலமைச்சராக நமது தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் திகழ்கிறார்.
முதலைமேடு திட்டு, நாதல்படுகை ஆகிய இடங்களில் தலா ரூ.3 கோடி செலவில் புயல் பாதுகாப்பு மையம் அமைக்க ஏற்பாடுகள் செய்யப்படும். இந்தியாவில் வேளாண்மைக்கென்று தனி பட்ஜெட் கொண்டுவந்தவர் நமது தமிழக முதல்வர் ஆவார். வேளாண்மைக்கு மட்டும் ஆண்டுக்கு 36 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. மக்களை பாதுகாக்கும் முதல் - அமைச்சராக நமது தமிழக முதலமைச்சர் உள்ளார்.
வடகிழக்கு பருவமழையால் மயிலாடுதுறை மாவட்டம் மிகவும் பாதிப்புக்கு உள்ளானது. 122 ஆண்டுகள் இல்லாத கனமழை பெய்தது. குறிப்பாக சீர்காழி, தரங்கம்பாடி, வட்டங்களில் விவசாய நிலங்கள் மிகவும் சேதமடைந்தன சேதம் அடைந்த பகுதிகளை உடனடியாக தமிழ்நாடு முதலமைச்சர் கடந்த (14-11-2022) நேரில் ஆய்வு மேற்கொண்டார்கள். தமிழக முதல்வர் அவர்கள் ஆய்வு மேற்கொண்டு சென்னை திரும்புவதற்கு முன்பாகவே சீர்காழி, தரங்கம்பாடி வட்டங்களில் உள்ள குடும்பங்களுக்கு தலா ரூபாய் 1000 நிவாரண உதவி தொகை அறிவித்தார்கள். உடனடியாக நிவாரணத் தொகை வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
இந்நிகழ்ச்சியில் கலெக்டர் லலிதா, மயிலாடுதுறை நாடாளுமன்ற உறுப்பினர் ராமலிங்கம், எம்.எல்.ஏ.க்கள் நிவேதா எம்.முருகன், பன்னீர்செல்வம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
- திருமுல்லைவாசல் ஊராட்சியிலும் சாலை அமைக்கும் பணிகளை பார்வையிட்டார்.
- கூரை வீடுகள் கணக்கெடுக்கும் பணி ஆய்வு.
சீர்காழி:
சீர்காழி அடுத்த கொள்ளிடம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட ஆரப்பள்ளம் ஊராட்சியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் சிமெண்ட் சாலை அமைக்கும் பணி, நெற்களம் அமைக்கும் பணி, பள்ளிகளில் கழிவறை கட்டிடம் கட்டும் பணிகளை ஊரக வளர்ச்சித் துறை இணை இயக்குனர் ஸ்ரீலேகா பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பணிகளை தரமாகவும், விரைந்து முடித்திடவும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்–தினார். தொடர்ந்து திருமுல்லைவாசல் ஊராட்சியிலும் சாலை அமைக்கும் பணிகளை பார்வையிட்டார்.
அதே போல் கூரை வீடுகள் கணக்கெடுக்கும் பணியையும், 15-வது நிதி குழு மானிய திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் பணிகளையும் ஸ்ரீலேகா பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
ஆய்வின் போது கொள்ளிடம் ஒன்றிய ஆணையர் ரெஜினா ராணி, வட்டார வளர்ச்சி அலுவலர் அருள்மொழி, ஒன்றிய பொறியாளர்கள் தாரா, பலராமன் ஓவர்சியர் அமலா ராணி, ஆரப்பள்ளம் ஊராட்சி தலைவர் வனிதா ஆகியோர் உடன் இருந்தனர்.
- பணிகளை விரைவாகவும், தரமாகவும் முடிக்க சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
- வகுப்பறையில் பயிலும் மாணவர்களிடம் படிப்பு சம்பந்தமாக கலந்துரையாடினார்.
தரங்கம்பாடி:
மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுக்கா, செம்பனார்கோயில் ஒன்றியம், இளையாளூர் ஊராட்சியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.7.12 இலட்சம் செலவில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் சைக்கிள் நிறுத்தும் கூடம் கட்டும் பணியும், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.8.70 இலட்சம் செலவில் இ.ஏ.ஹச் நகரில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணியையும், பள்ளிக் கட்டடங்கள் மேம்பாட்டுத் திட்டத்தில் ரூ.17.32 இலட்சம் செலவில் அகரங்குடி ஊராட்சி ஒன்றிய உதவிபெறும் பள்ளியில் இரண்டு வகுப்பறை கட்டடம் கட்டி முடிவு பெற்றதை பார்வையிட்டு வகுப்பறையில் பயிலும் மாணவர்களிடம் படிப்பு சம்பந்தமாக கலந்துரையாடல் செய்தனர்.
15-வது மானிய நிதி குழுத் திட்டத்தின் கீழ் (வி.பி.) ரூ.7.25 இலட்சம் செலவில் அகரங்குடி ஊராட்சி காயித மில்லத் தெருவில் தார்சாலை அமைக்கும் பணியினையும், அரங்கக்குடியில் ஊரா ட்சி ஒன்றிய உதவிபெறும் பள்ளியில் மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவின் தரத்தினை சாப்பிட்டு ஆய்வு செய்தும், பள்ளிக் கட்டடங்கள் மேம்பாட்டுத் திட்டங்கள் (2021-2022) திட்டத்தின் கீழ் ரூ.94 ஆயிரம் செலவில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் இரண்டு வகுப்பறை கட்டடம் பழுது பார்க்கும் பணி என பல்வேறு வளர்ச்சித்திட்டப் பணிகளை பார்வையிட்டு பணிகளை விரைவாகவும், தரமாகவும், துரிதமாகவும் முடிக்க சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
ஆய்வின் போது செம்பனார்கோயில் வட்டார வளர்ச்சி அலுவலர் விஜயலட்சுமி, ஒன்றிய ஆணையர் மீனா, வட்டார வளர்ச்சி துணை அலுவலர் ஜனகர், ஊராட்சி மன்ற தலைவர் சுக்ரியா பர்வீன் தமிமுல் அன்சாரி, சம்பந்தப்பட்ட அரசுத்துறை அலுவலர்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
- மூலவருக்கும், உற்சவருக்கும் பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.
- மலர் அலங்காரம் செய்து தீபாரதனை காண்பிக்கப்பட்டது.
தரங்கம்பாடி:
மயிலாடுதுறை மாயூரநாதர் கோவிலில் ஆருத்ரா தரிசன விழா சிறப்பாக நடைபெற்றது.
விழாவில் திருவெம்பாவை பாராயணம் செய்யப்பட்டு கோவிலில் தனி சன்னதியில் உள்ள நடராஜர் மூலவருக்கும், உற்சவருக்கும் பால், சந்தனம், விபூதி உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிஷேகம், மலர் அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
இதில் கோவில் கண்காணிப்பாளர் குருமூர்த்தி, துணை கண்காணிப்பாளர் கணேசன், காசாளர் வெங்கடேசன் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
- காலவரையின்றி முடக்கி வைக்கப்பட்டுள்ள சரண்டர் உடனடியாக வழங்க வேண்டும்.
- பழைய பென்ஷன் திட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும்.
தரங்கம்பாடி:
மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஜாக்டோ ஜியோ அமைப்பி னர் 8 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் செய்தனர்.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழகம் மாவட்ட தலைவர் கலைவாணன், இளவரசன் தலைமை தாங்கினர்.
அரசு ஊழியர் சங்க செயலாளர் அசோக்குமார், மாநில துணைத்தலைவர்.தமிழ்நாடு உயர்நிலை பள்ளி மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் கழகம் மாநில தீர்ப்பு குழு உறுப்பினர் தமிழ்நாடு வெங்கட்டு ஆகியோர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.மாவட்ட செயலாளர் சண்முகம் சுந்தரம் வரவேற்றார்.
அப்போது தமிழக அரசு பழைய பென்ஷன் திட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும், முடக்கப்பட்ட அகவிலைப்படி நிலுவைத் தொகையை காலவரையின்றி முடக்கி வைக்கப்பட்டுள்ள சரண்டர் ஆகியவற்றை உடனடியாக வழங்க வேண்டும், என்பன உள்ளிட்டபல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பி கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டம் செய்தனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் ஜாக்டோ ஜியோ அமைப்பைச் சேர்ந்த 400-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
- மூங்கில் மரத்தாலான படகு ஒன்று கரை ஒதுங்கியது.
- ஒரு பொம்மையும் உட்கார்ந்து வருவது போல் அழகான அமைப்புகளும் செய்யப்பட்டிருந்தது.
தரங்கம்பாடி:
மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி கடற்கரையில் மர்மமான முறையில் நேற்று மூங்கில் மரத்தாலான படகு ஒன்று மிதந்து வந்து கரையில் ஒதுங்கி உள்ளது.
இதனை கண்ட மீனவர்கள் ஆச்சரியத்துடன் மீட்டு அதை பார்த்து வருகின்றனர்.
இது சம்பந்தமாக கடலோர பாதுகாப்பு படையினரும் பொறையார் காவல் நிலைய போலீசாரும் அதில் விசாரணை செய்தனர்.
அதில் ஒரு பொம்மையும் உட்கார்ந்து வருவது போல் அழகான அமைப்புகளும் செய்யப்பட்டிருந்தது கண்டு ஆச்சரியம் அடைந்தனர்.
இது எந்த நாட்டில் இருந்து வந்தது என்பது தெரியாமல் இருந்து வருகின்றனர்.
- வயல்களில் புகையான்கள் வேர்களின் அடிப்பாகத்தில் இருந்து கொண்டு சாற்றை உறிஞ்சுவதால் பயிர் மஞ்சள் நிறமாக மாறுகிறது.
- மீதைல்பாரத்தியான் மற்றும் பைரித்ராய்டு மருந்துகளை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.
குத்தாலம்:
மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக நெற்பயிர்களில் புகையான் தாக்குதல் அதிகரித்து காணப்படுகிறது. இதையடுத்து, மயிலாடுதுறை மாவட்ட வேளாண் இணை இயக்குநர் சேகர், ஆடுதுறை தமிழ்நாடு நெல் ஆராய்ச்சி நிலைய இயக்குநர் கா.சுப்பிரமணியன் அறிவுறுத்தலின்படி ஆடுதுறை தமிழ்நாடு நெல் ஆராய்ச்சி நிலைய விஞ்ஞானிகள் ராஜப்பன் (பயிர் நோயியல்), ஆனந்தி (பூச்சியியல்) குத்தாலம் வேளாண்மை உதவி இயக்குநர் வெற்றிவேலன் உள்ளிட்டோர் அடங்கிய குழுவினர் சேத்திரபாலபுரம், பழையகூடலூர் பகுதிகளில் விளைநிலங்களில் கள ஆய்வு மேற்கொண்டனர்.
பின்னர், இது குறித்து குழுவினர் தரப்பில் கூறியதாகவது:-
சுவர்ணா சப்-1, ஆடுதுறை-51 மற்றும் பிபிடி 5204 போன்ற நெல் ரகங்களில் பாதிப்பு காணப்படுகிறது. பாதிக்கப்பட்ட வயல்களில் புகையான்கள் வேர்களின் அடிப்பாகத்தில் இருந்து கொண்டு சாற்றை உறிஞ்சுவதால் பயிர் மஞ்சள் நிறமாக மாறுகிறது.
பின்னர் பழுப்பு நிறமாக மாறும். இது தத்துப்பூச்சி எரிப்பு எனப்படும். பாதிக்கப்பட்ட வயல்களில் ஆங்காங்கே வட்ட வட்டமாக புகைந்தது போல காணப்படுவது தாக்குதலின் அறிகுறியாகும் எனத் தெரிவித்தனர்.
மேலும், இப்பூச்சிகளை கட்டுப்படுத்த ஆடுதுறை ஆராய்ச்சி நிலைய விஞ்ஞானிகள் அறிவுரைகள் வழங்கினர்.
விவசாயிகள் தழைச்சத்து உரங்களை அதிகமாக இடுவதை தவிர்க்க வேண்டும். 8 அடிக்கு 1 அடி இடைவெளி பட்டம் வீட்டு நெற்பயிரை நடவு செய்ய வேண்டும்.
புகையான் தாக்குதல் அதிகம் உள்ள இடங்களில் புகையான் பூச்சிக்கு எதிர்ப்பு திறன் உடைய ரகங்களை நடவு செய்ய வேண்டும்.
நெல் நாற்றுகளை நெருக்கமாக நடுவதை தவிர்க்க வேண்டும். புகையான் பாதித்த பகுதிகளில் பட்டங்களுக்கு இடையே உள்ள நெற்குத்துக்களை நன்கு விலக்கிவிட்டு சூரிய ஒளி மற்றும் காற்றோட்டம் பெற வசதி செய்ய வேண்டும். வயலில் நீர் தேங்காமல் உடன் நீரை வடியச்செய்ய வேண்டும். நீர் வடிந்த வயல்களில் மருந்துகளை நன்கு அடியில் உள்ள தூர்களில் நனையும்படி தெளிக்க வேண்டும்.
மருந்து தெளிக்கும் போது மருந்தினை ஏக்கருக்கு 200 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்க வேண்டும். ஏக்கருக்கு இமிடாகுளோபிரிட் 17.8 எஸ்.எல்- 40 மிலி அல்லது ப்யூப்ரோ பெசின் 25 எஸ்.சி., 300 மிலி, அல்லது பிப்ரோனில் 5எஎப்சி -400 மிலி அல்லது கார்போசல்பான் 25 ஈ.சி., 300 மிலி, தண்ணீரில் கலந்து தெளிக்க வேண்டும்.
விளக்கு பொறி அமைத்து தாய்ப்பூச்சிகளின் நடமாட்டத்தை கண்காணித்து அழிக்கலாம்.
மஞ்சள் நிற ஒட்டுப்பொறிகளை ஹெக்டேருக்கு 12 என்ற அளவில் அமைக்கலாம். புகையானின் மறு உற்பத்தியை பெருக்கும் மீதைல்பாரத்தியான் மற்றும் பைரித்ராய்டு மருந்துகளை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.






