என் மலர்tooltip icon

    மயிலாடுதுறை

    • ஆக்கூர் கடைவீதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.
    • தமிழக ஆளுநரின் நடவடிக்கைகளுக்கு கண்டனம் தெரிவித்தும், தமிழகத்தை விட்டு வெளியேற வேண்டும் என வலியுறுத்தியும் ஆர்ப்பாட்டம் நடந்தது.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுக்கா, செம்பனார் கோயில் ஒன்றியம், ஆக்கூர் கடைவீதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.

    ஆர்ப்பாட்டத்திற்க்கு கட்சியின் செம்பனார்கோவில் ஒன்றியச் செயலாளர் கே.பி.மார்க்ஸ் தலைமை வகித்தார்.

    மாவட்டச் செயலாளர் பி.சீனிவாசன், மாவட்டக்குழு உறுப்பினர்கள் வீ.எம்.சரவணன், கண்ணகி, ஒன்றியக்குழு உறுப்பினர்கள் கலந்துக்கொண்டு கண்டன உரையாற்றினர்.

    தமிழ்நாடு என்று சொல்ல மறுக்கும், தமிழ்நாட்டு மக்களையும், மரபுகளையும் மதிக்காத, அரசியலமைப்புச் சட்டத்தை அவமதிக்கும் வகையில் நடந்து கொள்ளும் தமிழக ஆளுநரின் நடவடிக்களுக்கு கண்டனம் தெரிவித்தும், அவர் தமிழகத்தை விட்டு வெளியேற வேண்டும் என வலியுறுத்தியும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானோர் கலந்துக்கொண்டு கண்டன உரையாற்றினர்.

    • தென்கொரியாவில் இருந்து ஜோதிட நிபுணர் பேராசிரியர் ஹவாய் வாஸ்செல் என்பவர் வருகை தந்தார்.
    • அவருக்கு கோயில் அர்ச்சகர் பாலச்சந்தர் சிவாச்சாரியார் சிறப்பு பூஜைகள் செய்து வழிபாடு செய்தனர்.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை டவுன், தர்மபுரம் ஆதீனத்துக்கு சொந்தமான சேந்தங்குடியில் உள்ள ஸ்ரீ ஞானாம்பிகை உடனாகிய வதான்யேஸ்வர சுவாமி என்கின்ற வள்ளலார் கோயிலில் அமைந்துள்ள ஸ்ரீ மேத்தா தக்ஷிணாமூர்த்தி என்ற பெயரில் குரு பகவான் கோயில் உள்ளது.

    இங்கு தென்கொரியாவில் இருந்து ஜோதிட நிபுணர் பேராசிரியர் ஹவாய் வாஸ்செல் என்பவர் வருகை தந்தார்.

    அவர் தமிழ் கலாச்சா ரத்தின் மேல் பற்று கொண்டு இந்து மதத்தில் மாறி தமிழ் பெயரான திருஞானசம்பந்தர் என பெயர் மாற்றிக் கொண்டு அஸ்ட்ராலஜி படித்து ஜோதிடராக பணிபுரிந்து வருகிறார்.

    நந்தி மேல் அமைந்து குருபகவான் காட்சி அளிப்பது இந்தியாவிலேயே வள்ளலார் கோயில் தான் என்பதை புரிந்து கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்து வழிப்பாடு செய்தனர்.

    அவருக்கு கோயில் அர்ச்சகர் பாலச்சந்தர் சிவாச்சாரியார் சிறப்பு பூஜைகள் செய்து வழிபாடு செய்தனர்.

    இத்தலம் குருபகவானின் பரிகாரத்தலமாக விளங்கி வருவதால் வியாழன் தோறும் குரு பகவானுக்கு சிறப்பு பூஜைகளும் அபிஷேகமும் நடைபெற்று வருகிறது பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு வழிபட்டு வருகின்றனர்.

    • சீர்காழி விளந்திடசமுத்திரம் முதல் பள்ளிவாசல் வரை சுமார் 800 மீட்டர் தூரம் உள்ள சாலை பணிகள் நடைபெற்று வருகிறது.
    • சாலையின் இருபுறமும் கூடுதலாக அகலப்படுத்தப்பட்டு முழுமையாக தார்சாலை அமைக்கப்படுகிறது.

    சீர்காழி:

    சீர்காழி விளந்திடசமுத்திரம் முதல் பள்ளிவாசல் வரை சுமார் 800 மீட்டர் தூரம் உள்ள சாலை கைவிடப்பட்ட தேசிய நெடுஞ்சாலைத்திட்டத்தின் கீழ் விரிவாக்கம் செய்யும் பணிக்காக ரூ.1.90கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    இதில் சாலையின் இருபுறமும் கூடுதலாக அகலப்படுத்தப்பட்டு முழுமையாக தார்சாலை அமைக்கப்படுகிறது.

    இந்த பணிகளை சீர்காழி நெடுஞ்சாலைத்துறை உதவி பொறியாளர் சசிகலாதேவி திடீர் ஆய்வு செய்தார்.

    அப்போது பணிகளை துரிதமாக முடிக்க அறிவுறுத்தினார்.

    அப்போது சாலை ஆய்வாளர் பிரபு உடனிருந்தார்.

    • மயிலாடுதுறையில் அரசுத்துறை ஊர்தி ஓட்டுனர் சங்க மாவட்ட பொதுக்குழு கூட்டம் ஊராட்சிஒன்றிய அலுவலகத்தில் நடை பெற்றது.
    • புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறையில் அரசுத்துறை ஊர்தி ஓட்டுனர் சங்க மாவட்ட பொதுக்குழு கூட்டம் ஊராட்சிஒன்றிய அலுவலகத்தில் நடை பெற்றது. கூட்டத்திற்கு மாவட்டத்தலைவர் அன்பழகன் தலைமை தாங்கினார்.

    மாவட்ட செயலாளர் பாலு முன்னிலை வகித்தார். மாவட்ட தலைவர்கள் தஞ்சை ரவிச்சந்திரன், திருவாரூர் வன்னியநாதன், நாகை அருண்சடேசன், கடலூர் அமானுல்லா ஆகியோர் கலந்துகொண்டு சங்க செயல்பாடுகள் குறித்து பேசினர்.

    சங்க மாவட்ட அமைப்பு செயலாளராக விஜயபாலன் செயற்குழு உறுப்பினர்களாக சந்துரு, ரம்யா, ரவி, மாவட்ட கொள்கை பரப்பு செயலாளராக பிரபாகரன் ஆகியோர் ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டனர்.

    இதில் அரசுத்துறையில் ஒப்பந்த அடிப்படையில் என்.எம்.ஆர். முறையில் ஊதியம் பெறும் ஓட்டுனர்களுக்கு காலமுறை ஊதியத்தில் பணிநிரந்தரம் செய்ய வேண்டும், சமவேலைக்கு சம ஊதியம் என்ற அடிப்படையில் தரஊதியம் என்ற அடிப்படையில் தரஊதிய பிரச்னைகளுக்கு தீர்வுகார வேண்டும், புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், ஓட்டுனர்களாக பணியாற்றும் படித்த இளைஞர்களுக்கு கல்விக்தகுதிக்கு ஏற்ப பதவி உயர்வு வழங்க அரசை கேட்டுக்கொள்வது, அரசுத்துறைகளில் காலியாக உள்ள ஓட்டுனர் பணியிடங்களை காலமுறை ஊதியத்தில் நிரப்பிட தமிழக அரசை கேட்டுக்கொள்வது, அரசுத்துறை ஓட்டுனர்களை முன்களப்பணியாளர்களாக அறிவிக்க வேண்டும், சென்னையில் நடத்தப்பட உள்ள பேரணியில் மயிலாடுதுறை மாவட்டத்தில் இருந்து திரளானோர் கலந்துகொள்வது என்பன போன்ற பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    • புராதன ஜெயின் மதத்தினரின் புண்ணிய ஸ்தலங்களான, சம்மேத சிகர்ஜி, பாலிதானா மற்றும் கிர்னார்ஜி ஆகிய ஆலயங்கள் சுற்றுலா மையமாக மத்திய அரசு சமீபத்தில் அறிவித்தது.
    • அறிவிப்பை திரும்ப பெற கோரி ஜெயின் சமூகத்தினர் கடைகளை அடைத்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    தரங்கம்பாடி:

    ஜெயின் சமூகத்தினரின் புண்ணிய ஸ்தலங்களை சுற்றுலா மையங்களாக அறிவித்த மத்திய அரசை கண்டித்து மயிலாடுதுறை மாவட்டத்தில் ஜெயின் சமூகத்தினர் 500-க்கும் மேற்பட்டோர் கடைகளை அடைத்து, அமைதி பேரணியாக ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

    புராதன ஜெயின் மதத்தினரின் புண்ணிய ஸ்தலங்களான ஜார்கண்ட் மாநிலத்தில் அமைந்துள்ள சம்மேத சிகர்ஜி, குஜராத் மாநிலம் பாலிதானா மற்றும் கிர்னார்ஜி ஆகிய ஆலயங்கள் உள்ள பகுதிகளை சுற்றுலா மையமாக மத்திய அரசு சமீபத்தில் அறிவித்தது.

    இந்த அறிவிப்பை திரும்ப பெற கோரி ஜெயின் சமூகத்தினர் மயிலாடுதுறை மாவட்டத்தில் மயிலாடு–துறை, சீர்காழி, செம்ப–னார்கோயில், குத்தாலம், வைத்தீஸ்வரன் கோயில் உள்ளிட்ட பகுதிகளில் 300-க்கும் மேற்பட்ட கடைகளை அடைத்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    மேலும் கோரிக்கைகளை வலியுறுத்தி ஜெயின் சங்கம் சார்பில் ரமேஷ் ஜெயின் தலைமையில் விபின் ஜெயின், ராஜூவ் ஜெயின், ரஞ்ஜித் ஜெயின், ரௌனிஸ் ஜெயின், உள்ளிட்ட ஜெயின் சமூகத்தினர் அமைதி பேரணி நடத்தினர்.

    மயூரநாதர் தெற்கு வீதியில் இருந்து துவங்கிய அமைதி பேரணி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முடிவடைந்தது. தொடர்ந்து கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் பாலாஜியிடம் மனு அளிக்கப்பட்டது.

    பேரணியில் பங்கேற்ற–வர்கள் தங்கள் கோரிக்கைகளை வலி–யுறுத்தியும், பதாகைகளை ஏந்தியும் கோஷங்களை எழுப்பியும் கலந்து கொண்டனர்.

    • இருசக்கர வாகனத்தில் செல்பவர்களுக்கு திடீர் அதிர்ச்சி ஏற்பட்டு தடுமாறி கீழே விழும் நிலை.
    • காற்று ஒலிப்பான்களால் விபத்துகளும் நடைபெற்றதோடு காது சம்பந்தப்பட்ட பாதிப்பு ஏற்பட்டது.

    சீர்காழி:

    சீர்காழி நகரில் அதிக ஒலி எழுப்பி சென்று வந்த 20க்கும் மேற்பட்ட தனியார் மற்றும் அரசு பேருந்துகளில் இருந்து காற்று ஒலிப்பான்களை சீர்காழி மோட்டார் வாகன ஆய்வாளர் விஸ்வநாதன் பறிமுதல் செய்து எச்சரித்தார்.

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் அதிக ஒலி எழுப்பும் காற்று ஒலிப்பான்கள் தனியார் மற்றும் அரசு பேருந்துகளில் பயன்படுத்தி வந்தனர்.

    இதனால் போக்குவரத்து மிகுந்த சாலைகளில் அதிக ஒலி எழுப்பும் காற்று ஒலிப்பான்கள் பயன்படுத்தும் போது சாலையில் நடந்து செல்பவர்கள் மற்றும் இருசக்கர வாகனத்தில் செல்பவர்களுக்கு திடீர் அதிர்ச்சி ஏற்பட்டு தடுமாறி கீழே விழும் நிலை ஏற்படுகிறது.

    காற்று ஒலிப்பான்களால் விபத்துகளும் நடைபெற்றதோடு காது சம்பந்தப்பட்ட பாதிப்பு ஏற்பட்டது.

    இதனால் காற்று ஒழிப்பான்களை பறிமுதல் செய்ய வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தினர்.

    அதன் படி மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் லலிதா உத்தரவின்படி வட்டாரப் போக்குவரத்து அலுவலர் நாகராஜன் அறிவுறுத்தலை பேரில் சீர்காழியில் மோட்டார் வாகன ஆய்வாளர் விஸ்வநாதன் தனியார் மற்றும் அரசு பேருந்துகளில் காற்று ஒலிப்பான்களை பயன்படுத்தப்படுவது குறித்து திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

    ஆய்வின் செய்த போது இருபதுக்கு மேற்பட்ட தனியார் மற்றும் அரசு பேருந்துகளில் பயன்படுத்தப்பட்ட காற்று ஒலிபான்களை பறிமுதல் செய்து இதுபோன்று தொடர்ந்து பயன்படுத்தினால் ஓட்டுநர் உரிமம் ரத்து செய்ய வட்டாரப் போக்குவரத்து அலுவலக பரிந்துரை செய்யப்படும் என எச்சரித்து அனுப்பினார்.

    • பழைய கழிவுகள், பிளாஸ்டிக், துணிகள் போன்றவற்றை எரிப்பதை தவிர்க்க வேண்டும்.
    • பொதுமக்களுக்கு துண்டு பிரசுரம் விநியோகிக்கப்பட்டது.

    தரங்கம்பாடி:

    புகையில்லாபோகி பண்டிகை கொண்டாட வேண்டி மயிலாடுதுறை நகராட்சி சார்பில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

    தியாகி நாராயணசாமி மேல்நிலைப்பள்ளியில் இருந்து பேரணியை நகர்மன்ற தலைவர் குண்டாமணி என்ற செல்வராஜ் கொடியசைத்து தொடங்கிவைத்தார்.

    பேரணிக்கு நகராட்சி ஆணையர் செல்வபாலாஜி தலைமை தாங்கினார்.

    நகர்நல அலுவலர் லெஷ்மி நாராயணன், நகர்மன்ற துணை தலைவர் சிவக்குமார், சுகாதார ஆய்வாளர்கள் ராமையன், பிச்சமுத்து, டேவிட் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    பேரணியில் ஞானாம்பிகை கல்லூரி மாணவிகள், தியாகி நாராயணசாமி மேல்நி லைப்பள்ளி மாணவர்கள், டி.பி.டி.ஆர். மாணவர்கள் கலந்து கொண்டு பொது இடங்களில் பழைய கழிவுகள், பிளாஸ்டிக், துணிகள் போன்றவற்றை எரிப்பதை தவிர்க்க வேண்டியும், வடிகால்களில் திடக்கழிவுகள் கொட்டுவதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

    பொதுமக்கள் தங்களது திடக்கழிவுகளை நகராட்சி தூய்மை பணியாளரிடம் வழங்கி புகையில்லா போகி பண்டிகையை கொண்டாட வேண்டும் என்றனர்.

    நகராட்சி சார்பில் பொது மக்களுக்கு துண்டு பிரசுரம் விநியோ கிக்கப்பட்டது.

    பேரணியில் மயிலாடு துறை மிட்டவுன் ரோட்டரி சங்கத்தினர் கலந்து கொண்டனர்.

    • உளுந்து மற்றும் பாசிப்பயறு விதைகள் வேளாண்மை விரிவாக்க மையங்களில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது.
    • வேளாண்மை இடுபொருள் தயாரிக்கும் உத்திகள் போன்றவை அட்மா திட்டத்தின் மூலம் விவசாயிகளுக்கு வழங்கப்படும்.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை வட்டம், வோண்மை உதவி இயக்குநர் அலுவலகத்தில் அட்மா திட்ட வட்டார விவசாய ஆலோசனை குழு மற்றும் வட்டார தொழில்நுட்ப குழு கூட்டம் மயிலாடுதுறை வேளாண்மை உதவி இயக்குநர் சுப்பையன் தலைமையில் நடைப்பெற்றது.

    இந்த கூட்டத்திற்கு துணை வேளாண்மை அலுவர் பிரபாகரன், பன்னீர்செல்வம் முன்னிலை வகித்தனர். வட்டார தொழில்நுட்ப மேலாளர் ச. திருமுருகள் அனைவரையும் வரவேற்றார்.

    கூட்டத்தில் தற்பொழுது ஆண்டிற்கான 2022-23 இரண்டாம் கட்ட நிதி இலக்கில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்ட கிராம்களில் 80 விழுக்காட்டிற்கு மேல் இலக்கிளை மேற்கொள்ள வேண்டும் என கேட்டுக்கொண்டனர்.

    மேலும் நடப்பு பருவத்திற்கு தேவையான உளுந்து மற்றும் பாசிப்பயறு விதைகள் வேளாண்மை விரிவாக்க மையங்களில் 50 சத மானியத்தில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது.

    விவசாயிகள் வாங்கி பயன் அடையுமாறு கேட்டுக்கொண்டனர்.

    இக்கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட வேளாண்மை இணை இயக்குநரும், அட்மா திட்ட இயக்குநர் ஜெ.சேகர் பசுமை போர்வை திட்டத்தில் விவசாயிகள் அனைவரும் பங்கேற்க்க வேண்டும்.

    உழவன் செயலில் பதிவு செய்து மாரக்கன்றுகளை முன்னுரிமை அடிப்படையில் பயன் பெருமாறும் இயற்கை வேளாண்மை பின்பற்ற வேண்டும் என கேட்டுக்கொண்டனர்.

    இதற்கு தேவையான பயிற்சி மற்றும் இயற்கை வேளாண்மை இடுபொருள் தயாரிக்கும் உத்திகள் போன்றவை அட்மா திட்டத்தின் மூலம் விவசாயிகளுக்கு வழங்கப்படும் என்று தெரிவித்தார்.

    இக்குழு கூட்டத்தின் தலைவர் என்.இளையபெருமாள் கூறும் போது அரசு ஏராளமான நலதிட்டங்களை விவசாயிகளுக்கு வழங்கிவருகிறது.

    அந்த வகையில் தற்பொழுது முடிந்த வடகிழக்கு பருவமழையில் ஏற்ப்பட்ட பாதிப்புகளுக்கு உடனடியாக மாநிலத்திலே அதிகபடியான நிதியை நமது மாவட்டத்திற்கு ஒதுக்கீடு செய்த தமிழ்நாடு முதல்வருக்கும் வேளாண்மை உழவர்நலத்துறை அமைச்சர் மற்றும் மாவட்ட ஆட்சியருக்கும் நன்றியை தெரிவித்தார்.

    குழு உறுப்பினர்கள் அனைவரும் வேளாண்துறையின் மூலம் செல்ப்படுத்தப்படும் திட்டங்களை விவசாயிகளுக்கு கொண்டு சேர்க்க வேண்டும் என கேட்டுக் கொண்டனர்.

    இக்கூட்டத்தில் தோட்டக்கலைத்துறை, வேளாண் வணிகம் மற்றும் அனைத்து சகோதரத்துறை அலுவலர்கள் அனைவரும் கலந்து கொண்டார்கள்.

    நிறைவாக அட்மா திட்ட உதவி தொழில்நுட்ப மேலாளர் விஜய் நன்றி கூறினார்.

    இக்கூட்டத்திற்க்கான ஏற்பாடுகளை அட்மா திட்ட தொழில்நுட்ப உதவி மேலாளர் மதுமனா செய்திருந்தார்கள்.

    • மண்டல அளவில் 8 வகையான போட்டிகள் நடத்தப்பட உள்ளது.
    • கையுந்துபந்து மற்றும் செஸ் ஆகிய போட்டிகள் பிப்ரவரி 21-ந் தேதி அன்று நடத்தப்பட உள்ளது.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் 2022-23 ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள் நடத்துவது மற்றும் இணையதளம் வழியாக பதிவு செய்வது குறித்து, மாவட்ட அளவிலான ஆலோசனை குழு கூட்டம் நடைபெற்றது.

    இந்த கூட்டத்தில் கலெக்டர் லலிதா தலைமை தாங்கி பேசியதாவது ;-

    இந்த கூட்டத்தில் போட்டிகள் நடத்துவது குறித்து விவாதிக்கப்பட்டது. முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள் 5 பிரிவுகளுக்கு மாவட்ட அளவில் 42 வகையான போட்டிகளும், மண்டல அளவில் 8 வகையான போட்டிகளும் நடத்தப்பட உள்ளது.

    பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு (12 முதல் 19 வயது வரை) கபடி, சிலம்பம், தடகளம், கூடைப்பந்து, இறகுபந்து, கால்பந்து, வளைகோல்பந்து, நீச்சல், கையுந்துபந்து மற்றும் மேசைப்பந்து ஆகிய போட்டிகள் 2.2.2023 முதல் 4.2.2023 வரை தேதிகளிலும்,

    கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கு (17 முதல் 25 வயது வரை) கபடி, சிலம்பம், தடகளம், கூடைப்பந்து, இறகுபந்து, கால்பந்து, வளைகோல்பந்து, நீச்சல், கையுந்துபந்து மற்றும் மேசைப்பந்து ஆகிய போட்டிகள், 13.02.2023 மற்றும் 14.02.2023 ஆகிய தேதிகளிலும் நடைபெறுகிறது.

    பொதுப்பிரிவினர் ஆடவர் மற்றும் மகளிருக்கு (15 முதல் 35 வயது வரை) கபடி, சிலம்பம், தடகளம், இறகுபந்து மற்றும் கையுந்துபந்து ஆகிய போட்டிகள் 23.02.2023 அன்றும், மாற்றுத் திறனாளிகள் ஆடவர் மற்றும் மகளிருக்கு (வயது வரம்பு இல்லை) மாற்றுத்திறனாளிகளுக்கு 50 மீ ஓட்டம் மற்றும் இறகுபந்து போட்டிகளும், பார்வைத்திறன் மாற்றுத் திறனாளிகளுக்கு 100 மீ ஓட்டம் அடாப்டட் வாலிபால் போட்டிகளும், மனவளர்ச்சி குன்றியோருக்கு 100 மீ ஓட்டம், எறிபந்து போட்டிகளும், செவிதிறன் மாற்றுத்திறனாளிகளுக்கு 100 மீ ஓட்டம், கபடி ஆகிய போட்டிகள் 17.02.2023 அன்றும் நடைபெற உள்ளது.

    அரசு ஊழியர்கள் ஆடவர் மற்றும் மகளிருக்கு (வயது வரம்பு இல்லை) கபடி, தடகளம், இறகுபந்து, கையுந்துபந்து மற்றும் செஸ் ஆகிய போட்டிகள் 21.02.2023 அன்றும் நடத்தப்படவுள்ளது. மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெறுபவர்களுக்கு ரொக்கப்பரிசு வழங்கப்படும்.

    மாவட்ட மற்றும் மண்டல அளவிலான போட்டிகளில் தனிநபர் பிரிவில் முதலிடம் பெறுபவர்களும், குழு போட்டிகளில் தேர்வு செய்யப்படுபவர்களும் மாநில அளவிலான போட்டிகளில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவர். மேற்படி போட்டிகளில் கலந்து கொள்ள www.sdat.tn.gov.in என்ற இணையதளம் மூலம் பதிவு செய்ய வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார். இக்கூட்டத்தில் மாவட்ட விளையாட்டு அலுவலர்குமரன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தங்கவேல் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • மாணவர்களால் உருவாக்கப்பட்ட உயர்திறன் தொலைநோக்கி பார்வைக்காக வைக்கப்பட்டிருந்தது.
    • தொலைநோக்கியின் மூலம் காண வேண்டிய அம்சங்களையும், விளக்கங்களையும் மாணவர்களுக்கு விளக்கினார்.

    சீர்காழி:

    சீர்காழி சுபம் வித்யா மந்திர் பள்ளியில் சாராபாய் விண்வெளி கழகத்தின் சார்பில் அதிநவீன தொலைநோக்கி மூலம் சிறப்பு விண்வெளி காணொளி காட்சி பள்ளியில் இரண்டாவது முறையாக நடைபெற்றது.

    இந்த பள்ளி மாணவ- மாணவிகளால் உருவாக்கப்பட்ட உயர் திறன் தொலைநோக்கி பார்வைக்காக வைக்கப்பட்டிருந்தது.

    இதன் மூலம் இரவில் அனைவரும் முழு சந்திரனையும் விண்வெளி கோள்கள் மற்றும் கிரகங்களையும் கண்டு வியப்புற்றனர். சங்கத்தின் முதல் கூட்டத்தின் ஒரு அங்கமாக இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

    சங்கத்தின் வழிகாட்டியும் இஸ்ரோ விஞ்ஞானியுமான இங்கர்சால், தமிழ்நாடு அறிவியல் பேரவை தலைவர் விழிநாதன் மற்றும் ராஜேந்திரன் கலந்து கொண்டு விண்வெளியில் அதிசயங்களையும் தொலைநோக்கின் மூலம் காண வேண்டிய அம்சங்களையும் அதற்கான விளக்கங்களையும் மாணவ -மாணவியர்களுக்கு விளக்கி அவர்களின் சந்தேகங்களை அறிவியல் பூர்வமாக தெளிவுபடுத்தினர்.

    இது போன்ற விண்வெ ளியை, தொலைநோக்கி மூலம் பார்க்கும் நிகழ்வுகள் மாதம் ஒருமுறை விண்வெளியை காணும் உகந்த நேரங்களில் ஏற்பாடு செய்யப்படும் என்று பள்ளியின் தாளாளர் சுதீஷ் தெரிவித்தார்.

    நிகழ்ச்சியில் பள்ளி முதல்வர் வித்யா, முதுகலை ஆசிரியர்கள் மற்றும் நிர்வாக அதிகாரி அன்பழகன் கலந்து கொண்னர்.

    சுபம் வித்யா மந்திர் பள்ளி சாராபாய் விண்வெளி சங்கத்தின் தலைவர் மாணவர் விஷ்வந்த், 9-ம் வகுப்பு மற்றும் மாணவர் மணிகண்டன் ஆகியோர் முதுகலை ஆசிரியர் ரியாஸ் மற்றும் முதுகலை ஆசிரியர் சுப்ரமணியம் ஆகியோரின் வழிகாட்டலில் கழக உறுப்பினர்களை கொண்டு இந்நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தனர்.

    • தொடர்ந்து இரண்டு மணி நேரம் பல்வேறு வகையான சிலம்பம் சுற்றி உலக சாதனை.
    • 6 முதல் 60 வயது வரை உள்ள சிலம்பம் கற்றவர்கள் ஒரே இடத்தில் கூடி இம்மாபெரும் உலக சாதனையை நிகழ்த்தினர்.

    சீர்காழி:

    சீர்காழியில் பழமை வாய்ந்த வீரத்தமிழர் சிலம்பாட்டக் கழகம் இயங்கி வருகிறது.

    இதன் நிறுவனர் மற்றும் பயிற்றுநராக சிலம்பாட்ட ஆசான் சுப்ரமணியன் இருந்து வருகிறார்.

    இம்மாணவர்கள் தமிழகம், வெளிமாநிலம் உட்பட வெளிநாட்டுகளிலும் சிம்பாட்ட போட்டிகளில் பங்கேற்று பல்வேறு பதக்கங்களை பெற்றுள்ளனர்.

    இந்நிலையில் வீரத்தமிழர் சிலம்பாட்ட சார்பாக மாபெரும் உலக சாதனை நிகழ்ச்சி தனியார் பள்ளி மைதானத்தில் நடைபெற்றது.

    இதில் வீரத்தமிழர் சிலம்பாட்ட கழக மாணவ, மாணவிகள் யோகேஸ்வரன் 3 விதமான ஆயுதம் 6 மணிநேரம் சுற்றியும், கலைமொழி, இனியவளவன், நித்திஸ், அண்டரசன், ஸ்ரீநிவாஸ், கிஷோர், விமல் உள்ளிட்ட 25 பேர் தனிநபர் உலக சாதனை முயற்சியில் ஈடுப்பட்டுள்ளனர்.

    6 மணி நேரம் முதல் 24 மணிநேரம் வரை ஒற்றைக்கம்பு, இரட்டை கம்பு, வாள் வீச்சு, சுருள்வாள், வேல் கம்பு, கரலாக்கட்டை உள்ளிட்ட ஆறு வகையான ஆயுதங்களை பயன்படுத்தி உலக சாதனை செய்தனர்.

    மேலும் தமிழகம் முழுவதும் இருந்து 340 சிலம்பாட்ட மாணவ, மாணவிகள் தொடர்ந்து இரண்டு மணி நேரம் பல்வேறு வகையான சிலம்பம் சுற்றி உலக சாதனை செய்தனர்.

    குறிப்பாக 6 வயது சிறுவன் முதல் 60 வயது வரை சிலம்பம் கற்றவர்கள் ஒரே இடத்தில் கூடி இம்மாபெரும் உலக சாதனையை நிகழ்த்தினர்.

    இவர்களின் சாத னையை ஜாக்கி புக் ஆப் வேர்ல்ட் ரெக்கார்ட்ஸ் அமைப்பை சேர்ந்த ஜேக்கப்ஞா னசெல்வன் ஆகியோர் நேரில் பார்வையிட்டு அங்கீகரித்து சான்றிதழ்கள் மற்றும் கேடயங்களை வழங்கினர்.

    அப்போது வீரத்தமிழர் சிலம்பாட்ட கழக கௌர வத்தலைவர் சரண்ராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    • புனிதநீர் யானை மேல் ஏற்றிக்கொண்டு வரப்பட்டு யாகசாலை அமைத்து பூஜிக்கப்பட்டது.
    • புனித நீர் கொண்டு யானை அபயாம்பிகைக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றது.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை அபயாம்பி–கை உடனாகிய மயூரநாதர் கோவிலுக்கு 1972 ஆம் ஆண்டு 3 வயது குட்டியாக அபயாம்பிகை என பெயரிட்டு யானை அழைத்துவரப்பட்டது.

    இந்த யானை மயிலாடுதுறைக்கு வருகை புரிந்து 50 ஆண்டுகள் நிறைவு பெற்றதை பொன்விழாவாக கொண்டாடினர்.

    இரண்டு நாள் நடைபெற்ற நிகழ்ச்சியில் காவிரி ஆற்றுயிலிருந்து புனித நீர் யானை மேல் ஏற்றிக்கொண்டு வரப்பட்டு யாகசாலை அமைத்து அதில் புனித நீர் அடங்கிய கடங்களில் வைத்து பூஜிக்கப்பட்டது.

    சிவாச்சாரியார் சுவாமிநாதன் தலைமையில் இரண்டு கால யாகசாலை பூஜைகள் செய்யப்பட்டு யாகத்தில் வைத்து பூஜிக்கப்பட்ட புனித நீர் கொண்டு யானை அபயாம்பிகைக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றது.

    நிகழ்ச்சியில் திருவாவடுதுறை ஆதீன மடாதிபதி ஸ்ரீலஸ்ரீ அம்பலவான தேசிக பரமாச்சாரியார் சுவாமிகள், கோயில் கண்காணிப்பாளர் குருமூர்த்தி, துணைக் கண்காணிப்பாளர் கணேசன், காசாளர் வெங்கடேசன், ராஜகுமார் எம்.எல்.ஏ, நகர் மன்ற தலைவர் செல்வராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    ×