என் மலர்
மயிலாடுதுறை
- போலீசார் கடலங்குடி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
- அவர்கள் போலீசாருக்கு கொலை மிரட்டல் விடுத்தனர்.
தரங்கம்பாடி:
மணல்மேடு அருகே கடலங்குடி பகுதியில் பணம் வைத்து சூதாடுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் மணல்மேடு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மங்களநாதன் மற்றும் போலீசார் கடலங்குடி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது கடலங்குடி அரண்மனை தெரு பகுதியில் பணம் வைத்து சீட்டு விளையாட்டிக்கொண்டிருந்தவர்களை போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர். இதனால் அவர்கள் போலீசாருக்கு கொலை மிரட்டல் விடுத்தனர்.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து பந்தநல்லூர் மேல செல்லப்பன் பேட்டையை சேர்ந்த கதிரேசன் (வயது37), திருக்கோடிக்காவலைசேர்ந்த தமிழரசன் (40), பந்தநல்லூர் நெய்குப்பையை சேர்ந்த முத்துக்குமார் (38), திருவிடைமருதூர் முல்லங்குடி காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்த முனியப்பன் மகன் கார்த்திகேயன் (34), திருவிடைமருதூரை சேர்ந்த முகமது ரபீக் (47), திருச்சியை சேர்ந்த முஸ்தபா (60), அத்திகடையை சேர்ந்த அனிபா (40), மன்னார்குடி அரிசி கடை தெருவை சேர்ந்த ராஜேந்திரன் (48), காரைக்காலை சேர்ந்த சதீஷ்குமார் (50), ஆகிய 9 பேரையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து ரூ.3 லட்சத்தை பறிமுதல் செய்தனர்.
- பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ள நபரை மர்ம கும்பலால் வெட்டி கொலை செய்யப்பட்டார்.
- மயிலாடுதுறை தனிப்படை போலீசார் முத்துப்பாண்டியை கைது செய்து சீர்காழி போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
சீர்காழி:
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை அடுத்த கொண்டல் வடக்கு தெருவை சேர்ந்தவர் தினேஷ். ரவுடியான இவர் மீது சீர்காழி, புதுப்பட்டிணம், செம்பனார்கோவில் உள்ளிட்ட காவல் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது.
இவர் கடந்த மாதம் 25-ந்தேதி மர்ம கும்பலால் வெட்டி கொலை செய்யப்பட்டார்.
இது குறித்து சீர்காழி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட நிலையில் தப்பி ஓடிய மர்ம கும்பலை தனிப்படைகள் அமைத்து முக்கிய குற்றவாளியான அதே பகுதியை சேர்ந்த அரவிந்தன், மயிலாடுதுறை பகுதியை சேர்ந்த சார்லஸ், மணிகண்டன் முகேஷ் சிலம்பரசன் ஆகிய 5 பேரை கைது செய்தனர். மேலும் இக்கொலை தொடர்பாக பாரதி, கீர்த்திகரன் விழுப்புரம் நீதிமன்றத்தில் சரணடைந்தனர்.
வந்து செல்லும்போது நீதிமன்றத்தின் வெளியில் காத்திருந்த மயிலாடுதுறை தனிப்படை போலீசார் முத்துப்பாண்டியை கைது செய்து சீர்காழி போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
- மொத்தம் 125 மனுக்கள் பெறப்பட்டு, அதில் 53 மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன.
- 10 விவசாயிகளுக்கு வேளாண் இடுபொருட்கள் வழங்கல்.
தரங்கம்பாடி:
மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி வட்டம் செம்பனார்கோயில் அருகே மேலையூர் கிராம ஊராட்சியில் மக்கள் தொடர்பு முகாம் நடைபெற்றது. முகாமிற்கு மாவட்ட கலெக்டர் லலிதா தலைமை தாங்கினார். பூம்புகார் எம்எல்ஏ நிவேதா முருகன் முன்னிலை வைத்தார். சமூக பாதுகாப்புத் திட்ட தனித்துணை கலெக்டர் கண்மணி வரவேற்றார். முகாமில் மாவட்ட கலெக்டர் லலிதா, எம்எல்ஏ நிவேதா முருகன் ஆகியோர் 78 பயனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினர். அப்போது கலெக்டர் பேசும்போது கூறியதாவது:-
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவுபடி மயிலாடுதுறை மாவட்டத்தில் மக்கள் தொடர்பு முகாம் மாதம், மாதம் ஒவ்வொரு ஊராட்சியிலும் நட த்தப்படுகிறது. இம்முகாம் மூலம் தமிழ்நாடு அரசின் சார்பில் என்னென்ன திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன என்பதை இங்கு கண்காட்சிகள் மூலம் விளக்கப்படுகிறது. குறிப்பாக வேளாண்மை த்துறையின் மூலம் செயல்படு த்தப்படும் திட்டங்கள் பற்றி செயலி அறிமுக ப்படுத்த ப்பட்டுள்ளது.
தமிழ்நாடு முதலமைச்ச ரின் உயரிய நோக்கம் அனைவ ருக்கு ம் அனைத்தும் கிடைக்க வேண்டும் என்பது தான். முதலமைச்சர் பொறுப்பே ற்றவுடன் 4 முறை நடத்த ப்பட்ட கிராம சபைக்கூட்டம் தற்போது 6 முறையாக மாற்றி நடத்தப்படு கிறது. கிராம சபைக் கூட்டத்தில் வாசிக்கின்ற வரவு, செலவு திட்டங்களை தெரிந்து கொள்ள வேண்டும். பொதுமக்க ளுக்கு ஏற்படும் சந்தே கங்களை கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும். பொதுமக்கள் அனைவரும் அரசின் திட்டங்களை பெற்று வாழ்க்கையில் முன்னேற வேண்டும். இவ்வாறு கலெக்டர் பேசினார்.
முகாமில் இலவச வீட்டுமனைப்பட்டா, பட்டா மாறுதல், சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் மாதாந்திர உதவித்தொகை மற்றும் இதர மனுக்கள் என மொத்தம் 125 மனுக்கள் பெறப்பட்டு, அதில் நேற்று 53 மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன. மீதமுள்ள 72 மனுக்கள் பரிசீலனைக்கு வைக்க ப்பட்டுள்ளன.மேலும் தோட்டக்கலைத்துறையின் சார்பில் 4 பயனாளிகளுக்கு மரக்கன்றுகளும், ஆதிதி ராவிடர்நலத்துறை யின் சார்பில் 9 பயனாளி களுக்கு பட்டாவும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் 2 மாற்றுத்திறனாளிகளுக்கு மடக்கு சக்கர நாற்காலியும், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் சார்பில் 10 விவசாயிகளுக்கு வேளாண் இடுபொருட்களும் வழங்க ப்பட்டன.
இதில் வேளா ண்மைத்துறை இணை இயக்குநர் சேகர், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் முத்தமிழ்ச்செல்வன், தரங்கம்பாடி தாசில்தார் புனிதா, சமூக நலத்துறை தாசில்தார் சுந்தரி, சீர்காழி ஆதிதிராவிடர் நலத்துறை தாசில்தார் இளங்கோவன், ஊராட்சி மன்றத் தலைவர் நளினி ராதாகிருஷ்ணன் மற்றும் ஒன்றிய கவுன்சிலர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், அனை த்துத்துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
- மழைநீரில் கொசு உற்பத்தியாகி தொற்று நோய்கள் பரவும் அபாயம் உள்ளது.
- வாய்க்காலின் வலுவிழந்த கரைகளை வலுப்படுத்த வேண்டும்.
சீர்காழி:
சீர்காழி அருகே வைத்தீஸ்வரன் கோவில் பகுதியில் திருநகரி வாடிகால் வாய்க்கால் உள்ளது.
பொதுப்பணித்துறைக்கு சொந்தமான இந்த வாய்க்கால் வைத்தீஸ்வரன்கோவில் பேரூராட்சி பகுதியின் முக்கிய வடிகாலாக உள்ளது. வாய்க்கால் முறையாக தூர்வாரப்படாததால் ஆண்டுதோறும் மழைக்காலங்களில் வைத்தீஸ்வரன் கோவில் பகுதியில் உடைப்பு ஏற்பட்டு விளக்கதெரு, தெற்குவெளி, கலைஞர் காலனி, ரெயில்வே ரோடு, இந்திரா நகர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் சூழ்ந்து நிற்கிறது. இதனால் அப்பகுதி மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
மேலும் குடியிருப்பு பகுதிகளில் தேங்கும் மழைநீரில் கொசு உற்பத்தியாகி அந்த பகுதி மக்களுக்கு டெங்கு உள்ளிட்ட தொற்று நோய்கள் பரவும் அபாயம் உள்ளது.
இந்த வாய்க்காலில் ஆகாயத்தமாரை செடிகள் வளர்ந்து புதர் மண்டி கிடக்கிறது. தண்ணீரே தெரியாத அளவுக்கு ஆகாயத்தாமரை செடிகள் வளர்ந்துள்ளதால் இந்த குளத்தை பொதுமக்கள் பயன்படுத்துவதில்லை.
எனவே திருநகரி வடிகால் வாய்க்காலில் உள்ள ஆகாயத்தாமரை செடிகளை அகற்றி முழுமையாக தூர்வார வேண்டும், வலுவிழந்த கரைகளை வலுப்படுத்த வேண்டும் என அந்த பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- சமத்துவம், சகோதரத்துவம், மனிதநேயம் நிலைத்திட சிறப்பு பிரார்த்தனை.
- மத நல்லிணக்கத்தோடு புனித அந்தோணியார் திருத்தல ஆண்டு திருவிழா கொண்டாடப்பட்டது.
தரங்கம்பாடி:
மயிலாடுதுறையில் பிரசித்தி பெற்ற புனித பதுவை மற்றும் வனத்து அந்தோணியார் திருத்தல ஆண்டு திருவிழா கடந்த 7-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
தொடர்ந்து பத்து நாட்கள் மன்றாட்டு மாலை, நவநாள் ஜெபம், திருப்பலி உள்ளிட்ட பல்வேறு வழிபாட்டு நிகழ்வுகள் நடைபெற்றன.
விழாவின் முக்கிய நிகழ்வான திருவிழா திருப்பலி மற்றும் திருத்தேர் பவனி நடைபெற்றது.
புனித அந்தோணியார் திருத்தல பங்குத்தந்தை ஜான்பிரிட்டோ அடிகளார் தலைமையில், மயிலாடுதுறை மறைவட்டஅதிபர் பங்குத்தந்தை தார்சிஸ் ராஜ் அடிகளார், குத்தாலம் பங்குத்தந்தை ஜெர்லின் கார்ட்டர் அடிகளார், மணவா ளநல்லூர் பங்குத்தந்தை ஜான் அமலதாஸ் அடிகளார், பில்லாவடந்தை பங்குத்தந்தை சாலமோன் அடிகளார், மணல்மேடு பங்குத்தந்தை ஆனந்தராஜ் அடிகளார், மயிலாடுதுறை உதவி பங்குத்தந்தை மைக்கில் டைசன் அடிகளார் ஆகியோர் இணைந்து திருப்பலியை நிறைவேற்றினர்.
எங்கேயும் பார்க்க முடியாத தன் மதிப்பை சிலுவை எனும் முகக்கண்ணாடிக்கு முன்பு தான் ஒரு மனிதனால் பார்க்க முடியும் என்ற இறைவார்த்தையை மையப்படுத்தி நாகை மறைவட்ட அதிபர் பன்னீர்செல்வம் அடிகளார் திருவிழா மறையுரை யாற்றினார்.
இந்த சிறப்பு திருப்பலியில் உலக அமைதிக்காகவும், மக்களை அச்சுறுத்தி வரும் கொரோனா நோய் தொற்று முற்றிலும் ஒழிய வேண்டியும், சமத்துவம், சகோதரத்துவம், மனிதநேயம் நிலைத்திடவும் சிறப்பு பிரார்த்தனை வழிபாடுகள் நடைபெற்றது.
கிறிஸ்தவர்கள் மட்டு மின்றி பிற சமயத்தவரும் இணைந்து நல்லிணக்கத்தோடு கொண்டாடும் புனித அந்தோணியார் திருத்தல ஆண்டு திருவிழா திருத்தேர்ப வனி நடைபெற்றது.
வான வேடிக்கை, இன்னிசை முழங்க புனித மைக்கேல் சம்மனசு, புனித ஆரோக்கியநாதர், புனித செபஸ்தியார், புனித ஆரோக்கியமாதா, புனித பதுவை மற்றும் வனத்து அந்தோணியார்களின் திருஉருவம் தாங்கிய ஐந்து தேர்கள் பவனியாக ஆலய வளாகத்தில் தொடங்கி, கொண்டாரெட்டித்தெரு, அழகப்ப செட்டித்தெரு உள்ளிட்ட வீதிகள் வழியாக மீண்டும் ஆலயத்தை வந்தடைந்தது.
திருப்பலி மற்றும் தேர்பவனி நிகழ்வுகளில் அருட்தந்தையர்கள், அருட்சகோதரிகள், அன்பிய குழுவினர், பங்கு மக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
கொடியேற்றத்துடன் தொடங்கி 10 நாட்கள் நடைபெற்ற திருவிழாவில் திருப்பலி, தேர்பவனி உள்ளிட்ட நிகழ்வுகளையடுத்து, திருவிழா நிறைவுத் திருப்பலி நடைபெற்றது.
புனித அந்தோணியார் திருத்தல பங்குத்தந்தை ஜான்பிரிட்டோ அடிகளார் சிறப்பு மறையுரையாற்றினார். திருப்பலியைத் தொடர்ந்து கொடியிறக்கத்துடன் விழா நிறைவு பெற்றது.
விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் பங்குத்தந்தை தலைமையில் விழாக்குழுவினர் ஏற்பாடு செய்திருந்தனர்.
- மாடுகள், குதிரைகள் ஆறு வகைகளாக பிரிக்கப்பட்டு போட்டிகள் நடைப்பெற்றது.
- 2,3 -ம் இடம் பிடித்த மாடு, குதிரைகளுக்கு பல்வேறு பரிசுகள் வழங்கப்பட்டது.
தரங்கம்பாடி:
மயிலாடுதுறை மாவட்டம், திருக்கடையூரில் தில்லையாடி உத்திராபதியார் 43-ம் ஆண்டு, நாராயணசாமி 10-ம் ஆண்டு நினைவையொட்டி மாடு, குதிரை எல்கை பந்தயம் காணும் பொங்கல் விழாவில் நடைப்பெற்றது.
நிகழ்ச்சிக்கு திருக்கடையூர் ஊராட்சி மன்ற தலைவர் ஜெயமாலதி சிவராஜ் தலைமை தாங்கினார்.
செம்பனார்கோயில் ஒன்றிய குழு தலைவர் நந்தினி ஸ்ரீதர், தரங்கம்பாடி பேரூராட்சி தலைவர் சுகுணசங்கரி குமரவேல், திருக்கடையூர் முன்னாள் ஊராட்சி தலைவரும், திமுக மத்திய ஒன்றிய செயலாளருமான அமுர்த விஜயகுமார், ஒன்றியக் குழு துணைத் தலைவர் மைனர் பாஸ்கரன், ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் சிம்சன் வரவேற்று பேசினார்.
விழாவில் பூம்புகார் எம்.எல்.ஏ நிவேதா முருகன் கலந்து கொண்டு மாடு மற்றும் குதிரை எல்கை பந்தயத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
தொடர்ந்து திருக்கடையூரில் உள்ள தில்லையாடி நுழைவு வாயில் அருகிலிருந்து போட்டி அனந்தமங்கலம் மற்றும் தரங்கம்பாடி வரை நடைபெற்றது. மாட்டிற்கான எல்கை பந்தயம் 6கி.மீ தூரம் உள்ள அனந்தமங்கலம் வரையும், குதிரைக்கான எல்கை பந்தையம் 8கி.மீ தூரம் உள்ள தரங்கம்பாடி வரையும் சென்று திருக்கடையூர் திரும்பும்படி நிர்ணயிக்கப்பட்டது.
சின்னமாடு, நடுமாடு, பெரிய மாடு, கரிச்சான் குதிரை, நடுக்குதிரை, பெரிய குதிரை ஆகிய மாடுகள் மற்றும் குதிரைகள் பந்தயத்திற்கு அனுமதிக்கப்பட்டு பின்னர் அவைகள் மாடுகள், குதிரைகள் ஆறு வகைகளாக பிரிக்கப்பட்டு போட்டிகள் நடைப்பெற்றது.
போட்டியில் வெற்றிப்பெற்ற சின்னமாட்டிற்கு ரூ.8 ஆயிரம், நடுமாட்டிற்கு ரூ.10 ஆயிரம், பெரிய மாட்டிற்கு ரூ.12 ஆயிரம், கரிச்சான் குதிரைக்கு ரூ.15 ஆயிரம், நடுக்குதிரைக்கு ரூ.18 ஆயிரம், பெரிய குதிரைக்கு ரூ.20 ஆயிரம் மற்றும் நினைவு பரிசுகள் வெற்றிப்பெற்ற மாடு, குதிரை உரிமையாளர்களுக்கு முதல் பரிசு வழங்கப்பட்டது.
மேலும் இரண்டாம் மூன்றாம் இடம் பிடித்த மாடு, குதிரைகளுக்கும் பல்வேறு பரிசுகள் விழாக்குழுவினரால் வழங்கப்பட்டது.
போட்டிகளில் தஞ்சாவூர், திருச்சி, கடலூர், கோயம்புத்தூர், நாகை, திருவாரூர், மயிலாடுதுறை, காரைக்கால் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த மாடு, குதிரைகள் போட்டியில் பங்கேற்றன.
பல்லாயிரக்கணக்காண பொதுமக்கள் கலந்து கொண்டு போட்டியை பார்த்து ரசித்தனர். நிறைவாக பந்தயக்குழு நிர்வாகி பாலசுப்பிரமணியன் நன்றி கூறினார்.
அசம்பாவிதம் நடைபெறாமல் இருக்க ஏராளமான போலீசார் பாதுகாப்பில் ஈடுபட்டனர்.
- ஜடாரிக்கு சிறப்பு திருமஞ்சனமும், தீர்த்தவாரி நிகழ்ச்சியும் நடைபெற்றது.
- ஐந்து வகையான உணவை பறவைகளுக்கு அன்னம் இட்டு வழிபாடு.
சீர்காழி:
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுக்கா திருநகரி கிராமத்தில்கல்யாண ரங்கநாதர் கோவில் அமைந்துள்ளது.
இக்கோவிலில் கனுப் பொங்கலை முன்னிட்டு ஆண்டாள் புறப்பாடு நடைபெற்றது.
ஆண்டாள் ஹலாதினி புஷ்கரணியில் எழுந்தருளி பிறந்த வீடு மற்றும் உடன் பிறந்தவர்கள் நலம் பெற பறவைகளுக்கு அன்னமிடும் வைபவம் நடைபெற்றது.
தொடர்ந்து தாயாரின் திருவடி நிலையான ஜடாரிக்கு சிறப்பு திருமஞ்சனமும், தீர்த்தவாரி நிகழ்ச்சியும் நடைபெற்றது.
அதனை அடுத்து ஆண்டா ளுக்கு மகா தீபாராதனை செய்து வைக்கப்பட்டது.
ஆண்டாள் அண்ணமிடும் நிகழ்ச்சியில் திரளான பெண்கள் கலந்துகொண்டு தங்களது பிறந்த வீடும் உடன் பிறந்தவர்களும் நலமுடன் வாழ தாங்கள் கொண்டு வந்த ஐந்து வகையான உணவை பறவைகளுக்கு அன்னம் இட்டு வழிபாடு செய்தனர்.
- ஒவ்வொரு வர்ணஜாலங்களில் கோலமெட்டு வருவதை அவ்வழியே செல்பவர்கள் வியப்புடன் பார்த்து செல்கின்றனர்.
- கோலம் போடுவதில் எனக்கு மிகுந்த ஆர்வம் இருந்து வருகிறது.
சீர்காழி:
மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் ரெயில்வே சாலையை சேர்ந்தவர் கயல்விழி வினோதினி.
இவர் மார்கழி மாதம் பிறந்த நாளிலிருந்து தினந்தோறும் வகை வகையான வண்ண வண்ண கோலங்கள் போட்டு அவ்வழியே செல்பவர்களை கவரும் வகையில் கோலமிட்டு வருகிறார்.
மார்கழி மாதம் தொடங்கிய முதல் நாள் அதிகாலை மார்கழி மாதத்தை வரவேற்கும் விதமாக வரைந்திருந்த கோலம் அனைவரையும் கவர்ந்தது.
இதே போல் ஒவ்வொரு நாளும் அதிகாலை வேளையில் ஒவ்வொரு வர்ணஜாலங்களில் கோலமெட்டு வருவதை அவ்வழியே செல்பவர்கள் வியப்புடன் பார்த்துச் செல்கின்றனர்.
தொடர்ந்து அதிகாலை வேளையில் கோலமிட்டு வரும் கயல்விழி வினோதினி புத்தாண்டை வரவேற்கும் விதமாக வாசலில் அழகிய கோலமிட்டு இருந்தார்.
இதேபோல் தைப்பொங்கல் அன்று வாசல் முன்பு போட்ட கோலமும் பார்ப்பவர்களை வெகுவாக கவர்ந்ததாக அமைந்தது.
இந்நிலையில் மாட்டுப்பொங்கல் விழாவை முன்னிட்டு நேற்று காலை கயல்விழி வினோதினி போட்ட கோலம் வித்யாசமாக அமைந்திருந்தது.
பட்டுப் புடவையை தரையில் விரித்து வைத்தது போல் போடப்பட்ட கோலம் அதில் அந்தப் புடவையின் விலையையும் குறிப்பிட்டு இருப்பது அனைவரையும் கவர்ந்தது.
இதை பார்ப்பவர்கள் கோலம் என்பதற்கு பதிலாக பட்டுப் புடவை தரையில் கிடப்பதாக எண்ணி ஏமாந்து பின்னர் தான் அது கோலம் என்று கண்டுபிடித்தனர்.
அந்த அளவுக்கு பட்டுப் புடவை கோலம் அமைந்திருந்தது.
இதுகுறித்து கயல்விழிவினோதினி கூறுகையில், கோலம் போடுவதில் எனக்கு மிகுந்த ஆர்வம் இருந்து வருகிறது.
எனது கோலங்கள் அழகாக இருப்பதால் அரசு விழாக்கள் நடக்கும் இடங்களுக்கும் நான் சென்று கோலம் போட்டு வருகிறேன். தொடர்ந்து வருடத்தில் உள்ள அனைத்து நாட்களிலும் கோலம் போடுவதற்கு ஆசை தான்.
ஆனால் விருப்பம் இருந்தாலும் அந்த முழு கலை திறனை மார்கழி மாதத்தில் மட்டுமே சிறப்பாக வெளிப்படுத்துவதற்கு வாய்ப்பு அமைந்துள்ளது.
இதனால் கோலங்களை ஆர்வத்துடன் வாசலில் போட்டு வருகிறேன்.
இந்த கோலத்தை பார்ப்பவர்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்து வாழ்த்தி விட்டுச் செல்கின்றனர். வாசலில் கோலம் போடுவது ஒரு கலையாக இருந்து வருகிறது.
- சீர்காழி வட்டாரத்தில் கடந்த நவம்பர் 11ஆம் தேதி வரலாறு காணாத வகையில் மழை பெய்தது.
- வயல்களில் தண்ணீர் வடிந்த பிறகு கணக்கெடுப்பு செய்து பாதிக்கப்பட்ட பெயர்களுக்கு ஹெட்ருக்கு ரூ. 13 500 நிவாரணத்தொகை தமிழக அரசு அறிவித்தது.
சீர்காழி:
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மயிலாடுதுறை மாவட்ட செயலாளர் சீனிவாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;-
சீர்காழி வட்டாரத்தில் கடந்த நவம்பர் 11ஆம் தேதி வரலாறு காணாத வகையில் மழை பெய்தது.
இதனால் சீர்காழி, தரங்கம்பாடி தாலுக்காவில் பயிரிடப்பட்டுள்ள நெற்பயிர்கள் சேதம் ஏற்பட்டு பெரும் பாதிப்பு ஏற்பட்டது.
பாதிப்பு குறித்து தமிழகம் முதல்வர் மு.க. ஸ்டாலின் நேரில் வருகை புரிந்து பார்வையிட்டு ஆய்வு செய்து இரண்டு வட்டங்களிலும் உள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ. ஆயிரம் நிவாரணத்தொகை வழங்கினார்.
வயல்களில் தண்ணீர் வடிந்த பிறகு கணக்கெடுப்பு செய்து பாதிக்கப்பட்ட பெயர்களுக்கு ஹெட்ருக்கு ரூ. 13 500 நிவாரணத்தொகை தமிழக அரசு அறிவித்தது.
இந்தத் தொகை பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு எந்த வகையிலும் போதாது.
தமிழக முதல்வர் நடப்பு ஆண்டுக்கு பயிர் காப்பீட்டு தொகை வழங்குவதற்கு அரசாணை வெளியிட்டு தொடங்கி வைத்தார்.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி ஒன்றியத்தில் 29 வருவாய் கிராமங்களுக்கும் செம்பனார்கோயில் ஒன்றியத்தில் 15 வருவாய் கிராமங்களுக்கும், கொள்ளிடம் ஒன்றியத்தில் 43 வருவாய் கிராமங்களக்கும் பயிர் காப்பீடு வழங்கப்படவுள்ளது சீர்காழி, தரங்கம்பாடி வட்டத்தில் 153 வருவாய் கிராமங்களில் 87 வருவாய் கிராமங்களுக்கு மட்டுமே நடப்பு ஆண்டு பயிர் காப்பீடு வழங்கப்படுகிறது.
இதனால் மீதமுள்ள 65 வருவாய் கிராம விவசாயிகள் பெரும் பாதிப்புக்கு உள்ளாவர் ஆகையால் மீதமுள்ள 65 கிராமங்களுக்கும் பாரபட்சமின்றி நடப்பாண்டு பயிர் காப்பீடு வழங்கிட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் .
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- மயிலாடுதுறை பழைய பஸ் நிலையம் அருகே சாலை பாதுகாப்பு வாரத்தை முன்னிட்டு ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
- ஹெல்மெட் அணியாமல் வந்தவர்களை நிறுத்தி தலைக்கவசம் உயிர்க்கவசம் என்பதை வலியுறுத்தியும் போலீஸ் சூப்பிரண்டு வலியுறுத்தினார்.
தரங்கம்பாடி:
மயிலாடுதுறை பழைய பஸ் நிலையம் அருகே சாலை பாதுகாப்பு வாரத்தை முன்னிட்டு ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்து பொதுமக்களுக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நிஷா தலைமையில் போலீசார் துண்டு பிரசுரங்களை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
ஹெல்மெட் அணியாமல் வந்தவர்களை நிறுத்தி தலைக்கவசம் உயிர்க்கவசம் என்பதை வலியுறுத்தியும் போலீஸ் சூப்பிரண்டு வலியுறுத்தினார்.
ஹெல்மெட் அணிந்து வந்தவர்களுக்கு இனிப்பு மற்றம் பேனா வழங்கி பாராட்டு தெரிவித்தார்.
தொடாந்து விழிப்புணர்வு பேரணியை அவர் கொடியசைத்து தொடக்கி வைத்தார்.
இப்பேரணியில் போக்குவரத்து மற்றும் சட்ட ஒழுங்கு போலீசார் ஹெல்மெட் அணிந்து இருசக்கர வாகனத்தில் நகரின் முக்கிய வீதிகளின் வழியே வலம் வந்து சாலை பாதுகாப்பு குறித்து விழிப்பணர்வு ஏற்படுத்தினர்.
இந்நிகழ்ச்சியில் மயிலாடுதுறை துணை போலீஸ் சூப்பிரண்டு வசந்தராஜ், இன்ஸ்பெக்டர் செல்வம், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
- மயிலாடுதுறையில் சாராயம் விற்ற 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
- அவர்களிடமிருந்து 330 லிட்டர் சாராயம் பறிமுதல் செய்யப்பட்டது.
மயிலாடுதுறை:
மயிலாடுதுறை அருகே மாப்படுகை ெரயில்வே கேட் பகுதியில் சாராய விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் மயிலாடுதுறை போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் செல்வம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர்.
அப்போது அங்கு சாராய விற்பனையில் ஈடுபட்ட ஒருவரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர், மயிலாடுதுறை அருகே மாப்படுகை சாந்துக்காப்புத் தெருவைச் சேர்ந்த ஆனந்தன் (வயது 40) என்பது தெரியவந்தது.
இதேபோல திருவிழந்தூர் தீப்பாய்ந்தாள் அம்மன் கோவில் அருகில் காவிரி கரையோரம் சாராய விற்ற அதே பகுதியைச் சேர்ந்த நாகராஜ் மகன் விமல்ராஜ் (20), பல்லவராயன்பேட்டை பகுதியில் சாராய விற்ற மயிலாடுதுறை திருவாரூர் சாலை கண்ணாரத் தெருவை சேர்ந்த சேட்டு மகன் பாலாஜி (26) ஆகிய 2 பேரையும் ைகது செய்தனர்.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்யப்பட்ட 3 பேரிடமும் இருந்து தலா 110 லிட்டர் வீதம் 330லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.
- காசிக்கு அடுத்தப்படியாக அஷ்ட பைரவருக்கு தனி சன்னதி இங்குதான் உள்ளது
- கோவிலில் திருப்பணிகள் நடைபெற்று வருகிறது.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் சட்டைநாதர் கோவில் உள்ளது.
தேவாரப் பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் 14-வது தலமாக விளங்குகிறது. இக்கோவிலில் பிரம்ம தீர்த்தம் உள்ளிட்ட 22 தீர்த்தங்கள்
அமைந்துள்ளன. இந்த தலத்தில் சாமி பிரம்மபுரீஸ்வரர், தோனியப்பர், சட்டைநாதர் என மூன்று நிலைகளில் எழுந்தருளி பக்தர்களுக்கு
அருள்பாலிக்கிறார். மேலும் காசிக்கு அடுத்தப்படியாக அஷ்ட பைரவருக்கு தனி சன்னதி இங்குதான் உள்ளது என்பது சிறப்பு
அம்சமாகும். பல்வேறு சிறப்புகள் பெற்ற இந்த கோவிலில் குடமுழுக்கு நடத்த முடிவு செய்யப்பட்டு திருப்பணிகள் நடைபெற்று
வருகின்றன.
இந்த நிலையில் நேற்று கோவிலுக்கு வந்த தருமபுரம் ஆதீனம் மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியா சுவாமிகள் தரிசனம்
செய்தார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
சீர்காழியில் சட்டை நாதர் கோவிலில் திருப்பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகள் முடிவடைந்து வருகிற மே மாதம் 24-ந்தேதி
குடமுழுக்கு விழா நடக்கிறது. முன்னாக 20-ந்தேதி யாகசாலை பூஜைகள் தொடங்கப்பட்டு 22-ந் தேதி பரிவார மூர்த்திகளுக்கு
குடமுழுக்கும், 24-ந் தேதி காலை 9 மணி முதல் 10.30 மணிக்குள் பிரம்மபுரீஸ்வரர் கோவில் குடமுழுக்கும் நடைபெற உள்ளது. இதில்
18 ஆயிரம் பக்கம் 16 தொகுப்புகளாக திருமுறையும், 14 சாஸ்திரங்கள் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் வெளியிடப்பட உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
இதை தொடர்ந்து சீர்காழி தமிழ்ச் சங்கத்தை ஆதீனம் தொடங்கி வைத்தார். பேட்டியின் போது தருமபுரம் ஆதீன கட்டளை சிவகுருநாத
தம்பிரான் சுவாமிகள், கோவில் நிர்வாகி செந்தில், ம.தி.மு.க. மாவட்ட செயலாளர் மார்கோனி, இந்து முன்னணி மாவட்ட தலைவர்
சரண்ராஜ், முன்னாள் நகர் மன்ற உறுப்பினர் மாரிமுத்து, பாலசுப்பிரமணியன், கோவி நடராஜன் உள்பட பலர் உடன் இருந்தனர்.
தொடர்ந்து கோவில் வளாகத்தில் உள்ள நந்தவனத்தில் ஒவ்வொரு நட்சத்திரத்திற்கான பூச்செடிகளை ஆதீனம் நட்டு வைத்தார்.






