

சீர்காழி:
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுக்கா திருநகரி கிராமத்தில்கல்யாண ரங்கநாதர் கோவில் அமைந்துள்ளது.
இக்கோவிலில் கனுப் பொங்கலை முன்னிட்டு ஆண்டாள் புறப்பாடு நடைபெற்றது.
ஆண்டாள் ஹலாதினி புஷ்கரணியில் எழுந்தருளி பிறந்த வீடு மற்றும் உடன் பிறந்தவர்கள் நலம் பெற பறவைகளுக்கு அன்னமிடும் வைபவம் நடைபெற்றது.
தொடர்ந்து தாயாரின் திருவடி நிலையான ஜடாரிக்கு சிறப்பு திருமஞ்சனமும், தீர்த்தவாரி நிகழ்ச்சியும் நடைபெற்றது.
அதனை அடுத்து ஆண்டா ளுக்கு மகா தீபாராதனை செய்து வைக்கப்பட்டது.
ஆண்டாள் அண்ணமிடும் நிகழ்ச்சியில் திரளான பெண்கள் கலந்துகொண்டு தங்களது பிறந்த வீடும் உடன் பிறந்தவர்களும் நலமுடன் வாழ தாங்கள் கொண்டு வந்த ஐந்து வகையான உணவை பறவைகளுக்கு அன்னம் இட்டு வழிபாடு செய்தனர்.