சீர்காழி ரவுடி கொலை வழக்கில் மேலும் ஒருவர் கைது

பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ள நபரை மர்ம கும்பலால் வெட்டி கொலை செய்யப்பட்டார்.மயிலாடுதுறை தனிப்படை போலீசார் முத்துப்பாண்டியை கைது செய்து சீர்காழி போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
சீர்காழி ரவுடி கொலை வழக்கில் மேலும் ஒருவர் கைது
Published on

சீர்காழி:

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை அடுத்த கொண்டல் வடக்கு தெருவை சேர்ந்தவர் தினேஷ். ரவுடியான இவர் மீது சீர்காழி, புதுப்பட்டிணம், செம்பனார்கோவில் உள்ளிட்ட காவல் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது.

இவர் கடந்த மாதம் 25-ந்தேதி மர்ம கும்பலால் வெட்டி கொலை செய்யப்பட்டார்.

இது குறித்து சீர்காழி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட நிலையில் தப்பி ஓடிய மர்ம கும்பலை தனிப்படைகள் அமைத்து முக்கிய குற்றவாளியான அதே பகுதியை சேர்ந்த அரவிந்தன், மயிலாடுதுறை பகுதியை சேர்ந்த சார்லஸ், மணிகண்டன் முகேஷ் சிலம்பரசன் ஆகிய 5 பேரை கைது செய்தனர். மேலும் இக்கொலை தொடர்பாக பாரதி, கீர்த்திகரன் விழுப்புரம் நீதிமன்றத்தில் சரணடைந்தனர்.

வந்து செல்லும்போது நீதிமன்றத்தின் வெளியில் காத்திருந்த மயிலாடுதுறை தனிப்படை போலீசார் முத்துப்பாண்டியை கைது செய்து சீர்காழி போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com