என் மலர்
உள்ளூர் செய்திகள்

பொன்விழா கொண்டாடிய அபயாம்பிகை யானை.
மாயூரநாதர் கோவில் அபயாம்பிகை யானையின் பொன்விழா கொண்டாட்டம்
- புனிதநீர் யானை மேல் ஏற்றிக்கொண்டு வரப்பட்டு யாகசாலை அமைத்து பூஜிக்கப்பட்டது.
- புனித நீர் கொண்டு யானை அபயாம்பிகைக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றது.
தரங்கம்பாடி:
மயிலாடுதுறை அபயாம்பி–கை உடனாகிய மயூரநாதர் கோவிலுக்கு 1972 ஆம் ஆண்டு 3 வயது குட்டியாக அபயாம்பிகை என பெயரிட்டு யானை அழைத்துவரப்பட்டது.
இந்த யானை மயிலாடுதுறைக்கு வருகை புரிந்து 50 ஆண்டுகள் நிறைவு பெற்றதை பொன்விழாவாக கொண்டாடினர்.
இரண்டு நாள் நடைபெற்ற நிகழ்ச்சியில் காவிரி ஆற்றுயிலிருந்து புனித நீர் யானை மேல் ஏற்றிக்கொண்டு வரப்பட்டு யாகசாலை அமைத்து அதில் புனித நீர் அடங்கிய கடங்களில் வைத்து பூஜிக்கப்பட்டது.
சிவாச்சாரியார் சுவாமிநாதன் தலைமையில் இரண்டு கால யாகசாலை பூஜைகள் செய்யப்பட்டு யாகத்தில் வைத்து பூஜிக்கப்பட்ட புனித நீர் கொண்டு யானை அபயாம்பிகைக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் திருவாவடுதுறை ஆதீன மடாதிபதி ஸ்ரீலஸ்ரீ அம்பலவான தேசிக பரமாச்சாரியார் சுவாமிகள், கோயில் கண்காணிப்பாளர் குருமூர்த்தி, துணைக் கண்காணிப்பாளர் கணேசன், காசாளர் வெங்கடேசன், ராஜகுமார் எம்.எல்.ஏ, நகர் மன்ற தலைவர் செல்வராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.