என் மலர்tooltip icon

    மயிலாடுதுறை

    • இன்னிசை நிகழ்ச்சி, நாமசங்கீர்த்தனம், ஆஞ்சநேய உற்சவம் ஆகியவை நடைபெற்றது.
    • விஷ்ணுசகஸ்ரநாம பாராயணம், அஷ்டபதிபஜனை ஆகியோருக்கு விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறையில் வடக்குராமலிங்க அக்ரஹாரம் சார்பில் ஆண்டுதோறும் ராதாகல்யாண மகோத்சவம் நடத்தப்பட்டு வருகிறது.

    அதன்படி 68-ம் ஆண்டு ராதா கல்யாண மகோற்சவம் மற்றும் ஸ்ரீவாஞ்சியம் ராமச்சந்திர பாகவதர் நூற்றாண்டு விழா கடந்த 24-ந் தேதி தொடங்கியது.

    விழாவின் கடைசி நாளில் விஷ்ணுசகஸ்ரநாம பாராயணம், அஷ்டபதிபஜனை, திவ்யநாம பஜனை, மதியம் பலராமகன்பாகவதர், சுப்ரமணிய பாகவதர் ஆகியோருக்கு விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது.

    பின்னர் ஸ்ரீ ராதாகல்யாண மகோற்சவம் நடைபெற்றது.

    மாலையில் ஸ்பூர்த்திராவ் குழுவினரின் இன்னிசை நிகழ்ச்சியும், கடையநல்லூர் ராஜகோபால்தாஸ் குழுவினரின் நாமசங்கீர்த்தனம், ஆஞ்சநேய உற்சவம் ஆகியவை நடைபெற்றது.

    இதற்கான ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்தனர்.

    • மோட்டார் சைக்கிளில் வந்த நபரை நிறுத்தி போலீசார் விசாரணை செய்தனர்.
    • 21 மோட்டார் சைக்கிள்களை திருடி பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை மாவட்டத்தில் பலபகுதிகளில் மோட்டார் சைக்கிள்கள் தொடர்ந்து திருட்டு போனது.

    இது குறித்து போலீசாருக்கு புகார் வந்தது.

    இதைத் தொடர்ந்து மயிலாடுதுறை காவல் நிலையத்தில் தனிப்படை அமைக்கப்பட்டு அதிரடி சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன.

    இந்நிலையில் கால் டாக்ஸி பகுதியில் சப்- இன்ஸ்பெக்டர் இளைய ராஜா தலைமையில் போலீசார்கள் நரசிம்ம பாரதி. ரமேஷ்குமார்.

    அசோக் குமார் செந்தில்குமார் கார்த்திக் விஜயகுமார் உட்பட தனி பிரிவினர் சோதனை மேற்கொண்டனர்.

    அப்போது மயிலாடுதுறை நோக்கி மோட்டார் சைக்கிளில் வந்த நபரை சந்தேகத்தின் பேரில் நிறுத்தி விசாரணை செய்தனர்.

    விசாரணையில் அவர் கீழையூர் சதீஷ்குமார் (வயது 28) என்பதும், மயிலாடுதுறை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மோட்டார் சைக்கிள் திருட்டில் ஈடுப்பட்டதும் தெரிய வந்தது.

    மேலும் விசாரணையில் 21 மோட்டார் சைக்கிள்கள் சுமார் 20 லட்சத்திற்கு மதிப்புடைய திருடி பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்தது. தொடர்ந்து அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.

    • மர்ம நபர்கள் பெண்ணின் கழுத்தில் கிடந்த 6 பவுன் தங்க நகையை பறித்தனர்.
    • போலீசார் கொள்ளை சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா அன்னவாசல் ஊராட்சி கழனிவாசல் மெயின் ரோட்டை சேர்ந்தவர் சோமசுந்தரம் (வயது 58) விவசாயி.

    இவரது மனைவி அருள்செல்வி (55). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.

    இந்நிலையில் வழக்கம்போல இரவு வீட்டின் கதவை சாத்தி விட்டு அறையில் தூங்கி கொண்டிருந்தனர்.

    அப்போது வீட்டில் வாசல் கதவு வழியாக வீட்டிற்க்குள் வந்த மர்ம நபர்கள் அருள்செல்வி கழுத்தில் கிடந்த சுமார் 6 பவுன் தங்க நகையை பறித்தனர்.

    இதனால் அருள்செல்வி எழுந்து திருடன், திருடன் என சத்தம் போட்டார்.

    அவரது சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்தனர், ஆனால் அதற்குள் மர்மநபர்கள் தப்பியோடி விட்டனர்.

    இது குறித்து தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு வந்த குத்தாலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசார் கொள்ளை சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அருள்செல்வியின் கழுத்தில் லேசானகாயம் உள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

    • பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை அட்சதை தூவி கண்ணீர் மல்க ஆசீர்வதித்தனர்.
    • மாணவர்கள் மத்தியில் தன்னம்பிக்கை ஏற்படுத்துவதாக அமைந்தது.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறையில் தருமபுரம் ஆதீனத்துக்கு சொந்தமான ஸ்ரீகுருஞானசம்பந்தர் மேல்நிலைப்பள்ளி உள்ளது.

    இப்பள்ளியில் நிகழாண்டு 200 மாணவர்கள் 10 மற்றும் 12-ஆம் வகுப்பு பொது தேர்வு எழுத உள்ளனர்.

    மாணவர்கள் மாதா, பிதா, குரு மற்றும் தெய்வத்திடம் ஆசிபெறும் ஆசிர்வாத திருநாள் நிகழ்ச்சி பள்ளியின் சார்பில் நடத்தப்பட்டது.

    பள்ளி செயலர் திருநாவுக்கரசு தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மாணவர்கள் தங்கள் தாய்தந்தையருக்கு பாத பூஜை செய்து வழிபட்டனர் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை அட்சதை தூவி கண்ணீர் மல்க ஆசீர்வதித்தனர்.

    தொடர்ந்து ஆசிரியர்கள் வரிசையாக நின்று மாணவர்களுக்கு மலர் தூவி வாழ்த்து தெரிவித்தனர்.

    பின்னர் பள்ளியின் முகப்பில் வைக்கப்பட்டிருந்த தருமபுரம் ஆதீனம் 27-வது ஒரு மகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் மற்றும் சரஸ்வதி தேவி படங்களின் முன்பு வணங்கி ஆசீர்வாதம் பெற்றனர்.

    பின்னர் சுவாமிக்கு மகாதீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    பள்ளியில் முதல்மு றையாக நடைபெற்ற நிகழ்வு மாணவர்கள் மத்தியில் தன்னம்பிக்கையை ஏற்படுத்துவதாக அமைந்தது.

    • பெண்கள் பால், பழம் கொடுத்து ஆரத்தி எடுத்து சம்பிரதாய திவ்யநாமம் நடைபெற்றது.
    • சாமிக்கு மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாரதனை காண்பிக்கப்பட்டது.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே தென்பாதியில் கோதண்டராமர் சாமி கோவிலில் அமைந்துள்ளது.

    இக்கோவிலில் 8 ஆம் ஆண்டு ஸ்ரீ ராதா கல்யாண நிகழ்வு நடைபெற்றது.

    காலை தென்பாதி விநாயகர் கோவிலில் இருந்து திருமணத்திற்கான சீர்வரிசை பொருட்களை மங்கல வாத்தியங்கள் முழங்க பெண்கள் ஊர்வலமாக எடுத்து வந்து கோவிலை வந்தடைந்தனர்.

    தொடர்ந்து ராதா, கிருஷ்ணன் சுவாமிகள் ஊஞ்சலில் எழுந்தருள பெண்கள் பால், பழம் கொடுத்து ஆரத்தி எடுத்து சம்பிரதாய திவ்யநாமம் நடைபெற்றது.

    அதன் பின்னர் நடைபெற்ற ஆஞ்சநேயர் உற்சவத்தில் திரளான ஆண்கள் மற்றும் பெண்கள் ஒன்றுகூடி கோலாட்டம் மற்றும் நடனத்துடன் ராதா கல்யாண விழா களை கட்டியது.

    அதனை தொடர்ந்து விழாவின் முக்கிய நிகழ்வான ராதா கல்யாண உற்சவம் மங்கள வாத்தியங்கள், வேத மந்திரங்கள் முழங்க நடைபெற்றது.

    பின்னர் சுவாமிக்கு மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாரதனை கட்டப்பட்டது.

    இதில் திரளான பக்தர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    மாலை நடராஜ.சட்டையப்பன் குழுவினரின் நாட்டியாஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது.

    • போதிய இடம் இல்லாததால் விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யும் பணி தடை பட்டுள்ளது.
    • நெல்மூட்டைகளை விற்பனை செய்ய முடியாமல் தவிக்கும் நிலை.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை மாவட்ட த்தில் மயிலாடுதுறை, தரங்கம்பாடி, சீர்காழி, குத்தாலம் ஆகிய தாலுக்கா களில் மொத்தமாக 170-க்கும் மேற்பட்ட நேரடி நெல்கொள்முதல் நிலையங்கள் நடப்பு பருவத்தில் இயங்கி வருகிறது.

    100-க்கும் குறைவான நிலையங்களுக்கு மட்டுமே சொந்த கட்டிடம் இருப்பதால் பெரும் பகுதி கொள்முதல் நிலையங்கள் திறந்தவெளியில், கோயில்கள், சமுதாயக்கூடம், ஊர் பொது இடங்கள் ஆகியவற்றில் செயல்படுகிறது.

    தற்போது ஒவ்வொரு நெல் கொள்முதல் நிலைய ங்களிலும் 8ஆயிரத்திலிருந்து 10 ஆயிரத்துக்கும் மேல் நெல் மூட்டைகள் தேங்கி கிடக்கிறது.

    நெல்மூ ட்டைகளை கிடங்குகளுக்கு எடுத்துச்செல்ல போதுமான லாரிகளை ஒவ்வொரு மையத்திற்கும் வராததால் தேங்கிக் கிடப்பதாக கூறப்படுகிறது.

    பல மையங்களில் மூட்டைகளை அடுக்கி வைக்க போதிய இடம் இல்லாததால் விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யும் பணியும் தடைப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

    இது குறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மயிலாடுதுறை மாவட்ட செயலாளர் எஸ்.துரைராஜ் கூறியதாவது:-

    கடுமையான மழை வெள்ள பாதிப்பு, அதன் பிறகு அறுவடைக்கு தயாராக இருந்த போது பாதிப்பு என விவசாயிகள் பெரும்பாடுப்பட்டு அறுவடை செய்து நேரடி நெல் கொள்முதல் நிலையங்களுக்கு எடுத்து வந்தால் அடுக்கி வைக்க இடம் இல்லாமலும்,ஏற்கனவே அடுக்கி வைத்துள்ள நெல்மூட்டைகளை விற்பனை செய்ய முடியாமலும் தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

    போதுமான லாரிகளை ஒவ்வொரு மையத்திற்கும் முறையாக அனுப்பாததே முக்கிய காரணமாக உள்ளது என்றார்.

    எனவே உடனடியாக மாவட்ட கலெக்டர் இந்த பிரச்சனையில் தலையிட்டு மாவட்டம் முழுவதும் தேங்கி கிடக்கும் ஆயிரக்கணக்கான நெல்மூட்டைகள் நுகர்வோர் வணிப கழக குடோனுக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

    • விழிப்புணர்வு பரப்புரை பிரச்சாரத்தை மேற்கொண்டுள்ளார்.
    • இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    குத்தாலம்:

    பொங்கு தமிழ் வளர்ச்சி அறக்கட்டளையின் சார்பில் அதன் நிறுவனர் டாக்டர். ராமதாஸ் தமிழ்நாட்டில் அனைத்து துறைகளில் இருந்தும் காணாமல் போன "தமிழை தேடி" என்ற தலைப்பில் விழிப்புணர்வு பரப்புரை பிரச்சாரத்தை மேற்கொண்டுள்ளார்.

    சென்னை வள்ளுவர் கோட்டத்தில் தொடங்கிய இந்த பிரச்சார பயணத்தின் ஒரு பகுதியாக மயிலாடுதுறை அருகே குத்தாலம் கடைவீதியில் நேற்று நடைபெற்ற பிரச்சாரத்துக்கு பொங்கு தமிழ் வளர்ச்சி அறக்கட்டளை தலைவர் ஜி.கே.மணி தலைமை தாங்கினார். திமுக முன்னாள் எம்எல்ஏ குத்தாலம் பி.கல்யாணம், தமிழ் அறிஞர்கள் முத்துசானகிராமன், விழிகள் சி.ராஜ்குமார் உட்பட பலர் முன்னிலை வகித்தனர்.

    இக்கூட்டத்தில் பொங்கு தமிழ் வளர்ச்சி அறக்கட்டளை நிறுவனர் டாக்டர். ராமதாஸ் கூறியதாவது:-

    தமிழைத் தேடிக் கொண்டு செல்வது பெருமை ப்படக்கூடிய ஒன்று அல்ல. அது நமக்கு தலைகுனிவு என்றார்.

    நமது அடையாளம் மற்றும் அன்னை தமிழை நாம் இழந்து விட்டோம் என்று அவர் பேசினார்.இக்கூட்டத்தில், பாமக மாவட்ட செயலாளர் லண்டன் அன்பழகன், மாவட்ட செயலாளர் சித்தமல்லி பழனிசாமி, இளைஞரணி துணைத் தலைவர் விமல், மூத்த நிர்வாகிகள் குத்தாலம் கணேசன், தங்கஅய்யாசாமி, வக்கீல் சுரேஷ் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    • ஏழை, எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டது.
    • ஜெயலலிதாவின் திருவுருவ படத்திற்கு மலர்கள் தூவி மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நகர செயலாளர் எல்.வி.ஆர்.வினோத் தலைமையில் நடைபெற்றது.

    சீர்காழி:

    சீர்காழியில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த நாள் விழா பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாடப்பட்டது.

    சீர்காழி புதிய பேருந்து நிலையம் எதிரே மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் திருவுருவ படத்திற்கு மலர்கள் தூவி மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நகர செயலாளர் எல்.வி.ஆர்.வினோத் தலைமையில் நடைபெற்றது.

    முன்னாள் நகர செயலாளர் பக்கரிசாமி, ஜெ.பேரவை செயலாளர் ஏவி.மணி, நிர்வாகிகள் அம்சேந்திரன் முன்னாள் தகவல் தொழில் நுட்பபிரிவு மாவட்ட செயலாளர் நாடி.செல்வமுத்துக்குமரன், வழக்குரைஞர்கள் ஸ்ரீதர், நெடுஞ்செழியன், ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    தொடர்ந்து பொதுமக்களுக்கு அன்னதானம், இனிப்புகளை இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை பி.வி.பி. கார்த்தி மற்றும் நிர்வாகிகள் வழங்கினர். ஏழை, எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டது.

    இதில் அதிமுக நிர்வாகிகள் இறைஎழில், கல்யாணசுந்தரம், சுரேஷ், பரணிதரன், ரவி சண்முகம், விஜயக்குமார், மாலினி, தெட்சிணாமூர்த்தி, ரத்தினவேல், உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    • சிலம்பாட்ட மாணவர்கள் சிலம்பம், குஸ்தி, சுருள் வாள் உள்ளிட்ட சிலப்பக்கலைகளை சுற்றி சிறப்பு வரவேற்பு அளித்தனர்.
    • மூவரின் சிலைகளு–க்கு செய்யப்ப ட்டிருந்த சிறப்பு அலங்கா ரத்தினை பார்வையிட்டு வணங்கினார்.

    சீர்காழி:

    பொங்கு தமிழ் வளர்ச்சி அறக்கட்டளை நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தமிழைத்தேடி விழிப்புணர்வு பரப்புரை பயணத்தை கடந்த 23-ம் தேதி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் தொடங்கி 28-ம் தேதி மதுரையில் விழிப்புணர்வு பயணத்தை நிறைவு செய்கிறார்.

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் 4-வது நாளான வெள்ளிக்கிழமை டாக்டர் ராமதாஸ்க்கு மாவட்ட ஆரம்ப எல்லையான கொள்ளிடத்தில் பொங்கு தமிழ் வளர்ச்சி அறக்கட்டளை நிர்வாகிகள் மற்றும் தமிழ் ஆர்வலர்களால் சிறப்பு வரவேற்பு
    அளிக்கப்பட்டது.

    தொடர்ந்து சீர்காழி தமிழிசை மூவர் மணிமண்டபத்திற்கு வருகை புரிந்து டாக்டர்.ராமதாஸ் வாகனத்திலிருந்தவாறே, முத்து தாண்டவர், அருணாச்சல கவிராயர், மாரிமுத்தா பிள்ளை உள்ளிட்டமூவரின் சிலைகளுக்கு செய்யப்பட்டிருந்த சிறப்பு அலங்காரத்தினை பார்வையிட்டு வணங்கினார்.

    மூவர் மணிமண்டபம் எதிரே கூடியிருந்த அறக்கட்டளை உறுப்பினர்கள் லண்டன்.ரெ.அன்பழகன், சின்னையன், நகர்மன்ற உறுப்பினர் வேல்முருகன், ஜி.வி.முருகவேல், பாலதண்டாயுதம், தேனூர்.ரவி மற்றும் தமிழ் ஆர்வலர்கள் வரவேற்பு அளித்தனர். முன்னதாக சிலம்பாட்ட மாணவர்கள் சிலம்பம், குஸ்தி, சுருள் வாள் உள்ளிட்ட சிலப்பக்கலைகளை சுற்றி சிறப்பு வரவேற்பு அளித்தனர்.

    • கோடியக்–கரைக்கு தென்கிழக்கே 44 நாட்டிக்கல் மைல் தொலைவில் கடலில் மீன்பிடித்து கொண்டிருந்தனர்.
    • மீன்பிடி உபகரணங்களை பறித்து கொண்டதுடன் கொடூரமாக தாக்கியுள்ளனர்.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடியை சேர்ந்த வேல்முருகன், பாலசுப்பிரமணியன், அருண்குமார், மாதவன், கார்த்தி, முருகன் ஆகிய 6 பேரும் பைபர் படகில் நேற்று அதிகாலை கோடியக்கரைக்கு தென்கிழக்கே 44 நாட்டிக்கல் மைல் தொலைவில் கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் மீனவர்களின் அனைத்து மீன்பிடி உப–கரணங்களையும் பறித்துக் கொண்டதுடன், இரும்பு பைப்பால் கொடூ–ரமாக தாக்கியுள்ளனர்.

    இதில் 6 மீனவர்களும் காயமடைந்தனர். தொடர்ந்து உடலில் ரத்த கட்டுக்கள் ஏற்பட்டதுடன் ஒரு மீனவருக்கு லேசான எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது.

    நேற்று கரை திரும்பிய மீனவர்கள் தரங்கம்பாடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதலுதவி சிகிச்சை மேற்கொண்ட பின்பு மேல் சிகிச்சைக்காக பொறையாறு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

    அங்கிருந்து மீனவர் முருகன் தவிர்த்த மற்ற 5 மீனவர்களும் மயிலாடுதுறை அரசினர் பெரியார் மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு ள்ளனர்.

    அவர்களை மாவட்ட கலெக்டர் மகாபாரதி, போலீஸ் சூப்பிரண்டு நிஷா, வருவாய் கோட்டாட்சியர் யுரேகா, தரங்கம்பாடி தாசில்தார் புனிதா, பேரூராட்சி தலைவர் சுகுண சுந்தரி ஆகியோர் சந்தித்து விவரங்களை கேட்டறிந்து ஆறுதல் கூறினர்.

    • மத்திய அரசின் செல்வமகள் சேமிப்பு திட்டம் குறித்து பேசினார்.
    • மோடி பிரதமர் ஆன பிறகு உலக நாடுகளில் இந்தியாவின் மதிப்பு உயர்ந்துள்ளது.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி பழைய பஸ் நிலையத்தில் பா.ஜ.க. மகளிர் அணி சார்பில் மத்திய அரசு பட்ஜெட் குறித்த தெருமுனை பிரசாரக் கூட்டம் நடைபெற்றது.

    மாவட்ட மகளிர் அணி தலைவி ராஜலெட்சுமி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் மாவட்ட செயலாளர் ஆர்த்தி, மாவட்ட பொதுச்செயலாளர் சுதா, மாநில செயற்குழு உறுப்பினர் மகாலட்சுமி, மாவட்ட பொருளாளர் அமுதா உள்ளிட்ட மகளிர் அணி நிர்வாகிகள் கலந்து கொண்டு மத்திய பட்ஜெட் குறித்து கூட்டத்தில் பேசினர்.

    மேலும் மத்திய அரசின் செல்வமகள் சேமிப்பு திட்டம், மோடி பிரதமர் ஆன பிறகு உலக நாடுகளில் இந்தியாவின் மதிப்பு பன்மடங்காக உயர்ந்துள்ளதாகவும், தொலைநோக்கு பார்வையில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருவதாகவும் கூட்டத்தில் பேசினர்.

    இந்நிகழ்ச்சியில் சீர்காழி நகர செயலாளர் சங்கர், மாவட்ட செயலாளர் வெற்றிலை முருகன், கொள்ளிடம் கிழக்கு ஒன்றியம் செல்வ முத்து, இளைஞர் அணி தலைவர் ஹரி, அருள்அழகன், உள்ளிட்ட பாஜக நிர்வாகிகள் சிறப்பு அழைப்பாளராக கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

    • கனபொருள் செலவு கொடுக்காததை கண்டித்து ஆர்ப்பாட்டம்.
    • தொழிலாளர்கள் மீதான தொழிற்சங்க விரோத போக்கை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.

    தரங்கம்பாடி:

    அகிலஇந்திய கிராமிய அஞ்சல் ஊழியர்கள் சங்கம் சார்பில் மயிலாடுதுறை தலைமை தபால் நிலையம் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் செய்தனர்.

    சீர்காழி கிளை தலைவர் தாஸ் தலைமை தாங்கினார்.கோட்ட செயலர் மதியழகன், தில்லை வேலன், செந்தில்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    முன்னாள் கோட்ட பொருளர் சாருமதி வரவேற்றார்.

    ஆர்ப்பாட்டத்தில், கிராமப்புற அஞ்சல் மூத்த அலுவலர்களுக்கு கமலேஷ் சந்திரா கமிட்டி பரிந்துரை செய்த கனபொருள் செலவு கொடுக்காததை கண்டித்தும், எட்ட முடியாத அளவிற்கு இலக்கு நிர்ணயம் செய்து புதிதாக கணக்கு பிடிக்கச் சொல்லி ஊழியர்களை மன உளைச்சலுக்கு ஆளாக்கிவருவதை கண்டித்தும், தொழிலா ளர்கள் மீதான தொழிற்சங்க விரோதப் போக்கினைக் கண்டித்தும் கோஷங்கள் எழுப்பப்பட்டன.

    இதில்கோட்ட தலைவர் சத்தியசீலன், சீர்காழி துணைத் தலைவர் கண்ணன் உள்ளிட்ட பலர்கலந்து கொன்டனர். முடிவில் கோட்ட உதவி பொருளாளர் மணிகண்டன் நன்றி கூறினார்.

    ×