search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கொள்முதல் நிலையங்களில் தேங்கி கிடக்கும் நெல் மூட்டைகள்
    X

    தேங்கி கிடங்கும் நெல் மூட்டைகள்.

    கொள்முதல் நிலையங்களில் தேங்கி கிடக்கும் நெல் மூட்டைகள்

    • போதிய இடம் இல்லாததால் விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யும் பணி தடை பட்டுள்ளது.
    • நெல்மூட்டைகளை விற்பனை செய்ய முடியாமல் தவிக்கும் நிலை.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை மாவட்ட த்தில் மயிலாடுதுறை, தரங்கம்பாடி, சீர்காழி, குத்தாலம் ஆகிய தாலுக்கா களில் மொத்தமாக 170-க்கும் மேற்பட்ட நேரடி நெல்கொள்முதல் நிலையங்கள் நடப்பு பருவத்தில் இயங்கி வருகிறது.

    100-க்கும் குறைவான நிலையங்களுக்கு மட்டுமே சொந்த கட்டிடம் இருப்பதால் பெரும் பகுதி கொள்முதல் நிலையங்கள் திறந்தவெளியில், கோயில்கள், சமுதாயக்கூடம், ஊர் பொது இடங்கள் ஆகியவற்றில் செயல்படுகிறது.

    தற்போது ஒவ்வொரு நெல் கொள்முதல் நிலைய ங்களிலும் 8ஆயிரத்திலிருந்து 10 ஆயிரத்துக்கும் மேல் நெல் மூட்டைகள் தேங்கி கிடக்கிறது.

    நெல்மூ ட்டைகளை கிடங்குகளுக்கு எடுத்துச்செல்ல போதுமான லாரிகளை ஒவ்வொரு மையத்திற்கும் வராததால் தேங்கிக் கிடப்பதாக கூறப்படுகிறது.

    பல மையங்களில் மூட்டைகளை அடுக்கி வைக்க போதிய இடம் இல்லாததால் விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யும் பணியும் தடைப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

    இது குறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மயிலாடுதுறை மாவட்ட செயலாளர் எஸ்.துரைராஜ் கூறியதாவது:-

    கடுமையான மழை வெள்ள பாதிப்பு, அதன் பிறகு அறுவடைக்கு தயாராக இருந்த போது பாதிப்பு என விவசாயிகள் பெரும்பாடுப்பட்டு அறுவடை செய்து நேரடி நெல் கொள்முதல் நிலையங்களுக்கு எடுத்து வந்தால் அடுக்கி வைக்க இடம் இல்லாமலும்,ஏற்கனவே அடுக்கி வைத்துள்ள நெல்மூட்டைகளை விற்பனை செய்ய முடியாமலும் தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

    போதுமான லாரிகளை ஒவ்வொரு மையத்திற்கும் முறையாக அனுப்பாததே முக்கிய காரணமாக உள்ளது என்றார்.

    எனவே உடனடியாக மாவட்ட கலெக்டர் இந்த பிரச்சனையில் தலையிட்டு மாவட்டம் முழுவதும் தேங்கி கிடக்கும் ஆயிரக்கணக்கான நெல்மூட்டைகள் நுகர்வோர் வணிப கழக குடோனுக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

    Next Story
    ×