என் மலர்
உள்ளூர் செய்திகள்

ஆர்ப்பாட்டம் நடந்தது.
கிராமிய அஞ்சல் ஊழியர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
- கனபொருள் செலவு கொடுக்காததை கண்டித்து ஆர்ப்பாட்டம்.
- தொழிலாளர்கள் மீதான தொழிற்சங்க விரோத போக்கை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.
தரங்கம்பாடி:
அகிலஇந்திய கிராமிய அஞ்சல் ஊழியர்கள் சங்கம் சார்பில் மயிலாடுதுறை தலைமை தபால் நிலையம் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் செய்தனர்.
சீர்காழி கிளை தலைவர் தாஸ் தலைமை தாங்கினார்.கோட்ட செயலர் மதியழகன், தில்லை வேலன், செந்தில்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
முன்னாள் கோட்ட பொருளர் சாருமதி வரவேற்றார்.
ஆர்ப்பாட்டத்தில், கிராமப்புற அஞ்சல் மூத்த அலுவலர்களுக்கு கமலேஷ் சந்திரா கமிட்டி பரிந்துரை செய்த கனபொருள் செலவு கொடுக்காததை கண்டித்தும், எட்ட முடியாத அளவிற்கு இலக்கு நிர்ணயம் செய்து புதிதாக கணக்கு பிடிக்கச் சொல்லி ஊழியர்களை மன உளைச்சலுக்கு ஆளாக்கிவருவதை கண்டித்தும், தொழிலா ளர்கள் மீதான தொழிற்சங்க விரோதப் போக்கினைக் கண்டித்தும் கோஷங்கள் எழுப்பப்பட்டன.
இதில்கோட்ட தலைவர் சத்தியசீலன், சீர்காழி துணைத் தலைவர் கண்ணன் உள்ளிட்ட பலர்கலந்து கொன்டனர். முடிவில் கோட்ட உதவி பொருளாளர் மணிகண்டன் நன்றி கூறினார்.






