ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் தரங்கம்பாடி மீனவர்களுக்கு கலெக்டர் ஆறுதல்

கோடியக்–கரைக்கு தென்கிழக்கே 44 நாட்டிக்கல் மைல் தொலைவில் கடலில் மீன்பிடித்து கொண்டிருந்தனர்.மீன்பிடி உபகரணங்களை பறித்து கொண்டதுடன் கொடூரமாக தாக்கியுள்ளனர்.
சிகிச்சை பெற்று வரும் மீனவர்களுக்கு கலெக்டர் மகாபாரதி ஆறுதல் கூறினார்.
சிகிச்சை பெற்று வரும் மீனவர்களுக்கு கலெக்டர் மகாபாரதி ஆறுதல் கூறினார்.
Published on

தரங்கம்பாடி:

மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடியை சேர்ந்த வேல்முருகன், பாலசுப்பிரமணியன், அருண்குமார், மாதவன், கார்த்தி, முருகன் ஆகிய 6 பேரும் பைபர் படகில் நேற்று அதிகாலை கோடியக்கரைக்கு தென்கிழக்கே 44 நாட்டிக்கல் மைல் தொலைவில் கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் மீனவர்களின் அனைத்து மீன்பிடி உப–கரணங்களையும் பறித்துக் கொண்டதுடன், இரும்பு பைப்பால் கொடூ–ரமாக தாக்கியுள்ளனர்.

இதில் 6 மீனவர்களும் காயமடைந்தனர். தொடர்ந்து உடலில் ரத்த கட்டுக்கள் ஏற்பட்டதுடன் ஒரு மீனவருக்கு லேசான எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது.

நேற்று கரை திரும்பிய மீனவர்கள் தரங்கம்பாடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதலுதவி சிகிச்சை மேற்கொண்ட பின்பு மேல் சிகிச்சைக்காக பொறையாறு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

அங்கிருந்து மீனவர் முருகன் தவிர்த்த மற்ற 5 மீனவர்களும் மயிலாடுதுறை அரசினர் பெரியார் மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு ள்ளனர்.

அவர்களை மாவட்ட கலெக்டர் மகாபாரதி, போலீஸ் சூப்பிரண்டு நிஷா, வருவாய் கோட்டாட்சியர் யுரேகா, தரங்கம்பாடி தாசில்தார் புனிதா, பேரூராட்சி தலைவர் சுகுண சுந்தரி ஆகியோர் சந்தித்து விவரங்களை கேட்டறிந்து ஆறுதல் கூறினர்.

X

Maalai Malar
www.maalaimalar.com