என் மலர்tooltip icon

    மயிலாடுதுறை

    • வீட்டின் வெளியே படுத்திருந்த பாக்கியத்தின் தலையில் குழவிக்கல்லை போட்டார்.
    • மயிலாடுதுறை போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை அருகே அப்பங்குளம் கிராமத்தை சேர்ந்தவர் பிரபாகரன் (வயது 30) கூலி தொழிலாளி.

    இவரது மனைவி மாலதி (25).

    இவர்கள் இடையே குடும்பதகராறு ஏற்பட்டது.

    இதனால் மாலதி கணவ ரிடம் கோ பித்து கொண்டு அதே பகுதியில் உள்ள தனது தந்தை பாக்கியம் (65) என்பவரின் வீட்டில் வசித்து வந்தார்.

    இந்நிலையில் நேற்று பிரபாகரன் தனது மனைவியை கூப்பிட மாமனார் வீட்டிற்கு வந்தார்.

    அப்போது மாலதிக்கும், பிரபாகரனுக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது.

    இதனால் பாக்கியம் அவர்கள் இடையே சமாதனம் செய்ததாக கூறப்படுகிறது.

    இதைத் தொடர்ந்து மாலதி கணவருடன் செல்ல மறுத்து விட்டார். இதனால் பிரபாகரன் தனியாக வீட்டிற்கு சென்றார்.

    இந்நிலையில் நேற்றிரவு மீண்டும் பிரபாகரன் தனது மாமனார் வீட்டிற்கு வந்தார்.

    அங்கு வீட்டின் வெளியே படுத்தி ருந்த பாக்கியத்தின் தலையில் குழவி கல்லை போட்டார்.

    இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து தகவல் அறிந்ததும் மயிலாடுதுறை போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வம் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பிரபாகரனை கைது செய்தார்.

    மேலும் பாக்கியத்தின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.

    இது குறித்து மயிலாடுதுறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

    • பக்தர்கள் ஸ்ரீனிவாச பெருமாளுக்கு அர்ச்சனை செய்து வழிபட்டனர்.
    • ஏராளமான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை அருகே பல்லவராயன் பேட்டையில் புகழ்பெற்ற தென் திருப்பதி ஸ்ரீ வேங்கடாஜலபதி ஸ்ரீனிவாச பெருமாள் கோவில் அமைந்துள்ளது.

    இந்த திருக்கோயிலின் ஆண்டு பிரம்மோற்சவம் கடந்த 19 -ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி நடைபெற்று வருகிறது.

    பிரம்மோற்சவ விழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருக்கல்யாண வைபவம் நேற்று முன்தினம் நடைபெற்றது.

    இதன் தொடர்ச்சியாக விழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருத்தேர் பவனி நேற்று காலை துவங்கியது.

    ஸ்ரீனிவாச பெருமாள் ராஜ அலங்காரத்தில் தாயாருடன் திருத்தேருக்கு எழுந்தருளி னார் அங்கு மகாதீபாரதனை செய்யப்பட்டது.

    பக்தர்கள், பொதுமக்கள் தேர் வடம் பிடித்து இழுத்தனர்.

    அப்போது கோவிந்தா கோவிந்தா என்ற பக்தி கோஷத்துடன் திரளான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

    பல்லவராயன் பேட்டையில் துவங்கிய தேர் வீதி உலா திருஇந்தளூர் பரிமள ரெங்கநாதர் கோயில் நான்கு ரத வீதிகள் வழியே நடைபெற்றது. வீடுகள் மட்டும் வணிக நிறுவனங்க ளில் வாசலில் பக்தர்கள் ஸ்ரீனிவாச பெருமாளுக்கு அர்ச்சனை செய்து வழிபாடு நடத்தினர்.

    இதில் ஏராள மான பக்தர்கள் திருத்தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

    இந்நிகழ்ச்சியில் திரு இந்தளூர் பட்டர் சுவாமிகள் மற்றும் விழா குழுவினர்கள் சந்தானகிருஷ்ணன், மகாதேவன், ரெங்கநாதன், லெட்சுமி நாராயணன் ஆகியோர் நிகழ்ச்சி ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

    நாளை மாலை மணியளவில் பல்லவராயன் பேட்டை திருகுளத்தில் சுவாமி தெப்ப திருவிழா நடைபெற உள்ளது.

    • கடல் அலைகள் காரணமாக கடல் அரிப்பு ஏற்பட்டது.
    • ரூ. 6 கோடியே 83 லட்சம் மதிப்பில் மீன் இறங்கு தளம் அமைக்க உள்ளது.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி அருகே குட்டியாண்டியூர் மீனவர் கிராமம் அமைந்துள்ளது.

    இந்த மீனவர் கிராமத்தில் 300க்கும் மேற்பட்ட மீனவர்கள் பைபர் படகுகள் மற்றும் விசைப்படகுகள் மூலம் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர் .

    தரங்கம்பாடியில் மீன் பிடி துறைமுகம் அமைக்கப்பட்ட நிலையில் அருகில் உள்ள குட்டியாண்டியூர் கிராமத்தில் கடல் அலைகள் காரணமாக கடல் அரிப்பு ஏற்பட்டது.

    இதனால் கரையில் படகுகளை நிறுத்த முடியாத நிலைமை உண்டானது. கரை அரிப்பை தடுக்கும் வகையில் கருங்கல் தடுப்புச் சுவர் அமைக்க வேண்டும் என்று மீனவர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.

    அதனை ஏற்று தமிழக அரசு மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில் 6 கோடியே 83 லட்ச ரூபாய் ஒதுக்கீடு செய்தது.

    கரையில் கருங்கல் கொட்டி தடுப்புச் சுவர் அமைக்கப்படுவது உடன் மீன் இறங்க தளமும் அமைக்கப்பட உள்ளது.

    இதற்கான பூமி பூஜை குட்டியாண்டியூர் கடற்கரையில் நடைபெற்றது.

    இந்நிகழ்ச்சியில் தரங்கை பேரூராட்சி தலைவர் சுகுண சங்கரி, மீன்வளத்துறை செயற்பொறியாளர் பாலசுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதா முருகன் பங்கேற்று பூமி பூஜை செய்து அடிக்கல் நாட்டினார்.

    உதவி செயற்பொறியாளர் ரவீந்திரன் மற்றும் மீனவ கிராம பஞ்சாயத்தார்கள் பங்கேற்றனர்.

    • மக்கும் மற்றும் மக்காத குப்பைகளை பிரித்தெடுக்கும் முறை.
    • மறுசுழற்சி செய்வது அதன் பயன்பாடு குறித்து விழிப்புணர்வு.

    சீர்காழி:

    சீர்காழி நகராட்சி சார்பில் தனியார் பாரா மெடிக்கல் பயிலும் மாணவியர்களுக்கு மக்கும் மற்றும் மக்காத குப்பைகளை பிரித்தெடுக்கும் முறை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தபட்டது.

    இதில் இயற்கை உரம் தயாரிக்கும் முறை, குப்பைகளை எவ்வாறு கையாளுவது, மக்காத குப்பைகளை எவ்வாறு மறுசுழற்சி செய்வது அதன் பயன்பாடு குறித்து நகராட்சி ஆணையர் ஹேமலதா தலைமையில் நகர்மன்ற தலைவர் துர்காபரமேஸ்வரி முன்னிலையில் மாணவியர்களுக்கு விழிப்புணர்வு கொடுக்கப்பட்டது. 19-வது வார்டு நகர்மன்ற உறுப்பினர் ஏ.பி.எஸ்.பாஸ்கரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    • வாலிபர் படுகாயத்துடன் ஆற்றின் மணல் பரப்பில் இறந்து கிடந்ததை கண்டுபிடித்தனர்.
    • ரெயிலில் சென்ற போது படிக்கட்டில் இருந்து நிலை தடுமாறி பாலத்தில் மோதி உயிரிழந்தார்.

    சீர்காழி:

    சென்னையில் இருந்து திருச்செந்தூர் செல்லும் செந்தூர் எக்ஸ்பிரஸ் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை அடுத்த கொள்ளிடம் ஆற்றின் பாலத்தில் நேற்று இரவு சென்று கொண்டிருந்தது.

    அப்போது முன்பதிவு செய்யாத பெட்டியின் படிக்கட்டில் அமர்ந்து பயணித்த வாலிபர் ஒருவர் திடீரென தவறி கீழே விழுந்தார்.

    இதனால் அதிர்ச்சியடைந்த சக பயணிகள் சீர்காழி ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    அதன்பேரில் ரெயில்வே போலீசார், தீயணைப்பு மீட்பு துறையினரின் உதவியுடன் கொள்ளிடம் பாலத்தில் ஆய்வு செய்தனர். அங்கு வாலிபர் படுகாயத்துடன் ஆற்றின் மணல் பரப்பில் இறந்து கிடந்ததை கண்டுபிடித்தனர்.

    பின்னர் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    அதில் ரெயிலில் இருந்து தவறி விழுந்து இறந்தவர் திருநெல்வேலி மாவட்டம் திருவாலபுரம் கிராமத்தைச் சேர்ந்த அப்பாஸ் (வயது 21) என்பதும் , சென்னையில் இருந்து தஞ்சை மாவட்டம் பாபநாசத்துக்கு பெயிண்டிங் வேலைக்கு ரெயிலில் சென்ற போது படிக்கட்டில் இருந்து நிலை தடுமாறி பாலத்தில் மோதி ஆற்றினுள் விழுந்து உயிரிழந்ததும் தெரியவந்தது.

    • போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு பொதுமக்கள் பாதிப்படைந்து வந்தனர்.
    • ரூ.4 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் தொடங்கியது.

    சீர்காழி:

    சீர்காழி நகராட்சி 13-வது வார்டு பழைய பஸ் நிலையம் பகுதியில் உள்ள சிறுபாலம் மற்றும் கழிவுநீர் கால்வாய் குறுகலாக இருப்பதால் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு பொதுமக்கள் பாதிப்படைந்து வந்தனர்.

    இதனிடையே பொது மக்களின் கோரிக்கையை ஏற்று அதனை உடனடியாக சீரமைத்து சரிசெய்திட நகராட்சி மற்றும் நெடுஞ்சா லைத்துறை யினருக்கு மாவட்ட கலெக்டர் மகாபாரதி உத்தரவிட்டார்.

    இதனையடுத்து பழைய பஸ் நிலையம் மடவிளாகம் பகுதியில் உள்ள கழிவுநீர் கால்வாய் அகலப்படுத்தி கான்கிரீட் மூடியமைத்திட ரூ.4லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் தொடங்கியது.

    பொக்லைன் எந்திரம் கொண்டு பள்ளம் வெட்டும் பணி நடைபெற்று வருகிறது.

    இந்த பணியினை நகர்மன்ற உறுப்பினர் முபாரக் பார்வையிட்டார்.

    ஒப்பந்த தாரர் பிரவீன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

    • 50-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்தனர்.
    • காது, மூக்கு, தொன்டை மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

    தரங்கம்பாடி:

    தரங்கம்பாடி தாலுக்கா கிளியனூர் கிராமத்தில் அல்-ஹிதானா மெட்ரிகு லேசன் பள்ளியில், புதிய பாதை அறக்கட்ட ளையும், விநாயகா மிஷன் மருத்துவ கல்லூரியும் இணைந்து இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது.

    மருத்துவ முகாமிற்கு கிளியனூர் முத்தவல்லி அபுல் ஹசன் தலைமை வகித்தார்.

    ஜாமியா மஸ்ஜித் நாட்டாமை எம்.பி.ஹலில், பா.ம.க மாநில துணை பொதுச்செயலாளர் சித்தமல்லி பழனிசாமி, விடுதலை சிறுத்தை கட்சி இஸ்லாமிய சனநாயக பேரவை மாநில துணைச் செயலாளர் ஆயப்பாடி முஜிபுர் ரகுமான் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    ஊராட்சி மன்ற தலைவர் முகமது ஹாலிது வரவேற்றார்.

    இதில், பொது மருத்துவம், மகப்பேறு மருத்துவம், சர்க்கரை நோய் மருத்துவம், கண் மருத்துவம், பல்ம ருத்துவம், அறுவை சிகிச்சை மருத்துவம், குழந்தை மருத்துவம், தோல் நோய் மருத்துவம், காது- மூக்கு- தொன்டை மருத்துவம், எலும்பு மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

    விநாயக மிஷன் மருத்துவ கல்லூரி முதல்வர் டாக்டர் குணசேகரன் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட மருத்துவர்களும் செவிலியர்களும் பங்கேற்று மருத்துவ பரிசோதனை செய்து சிகிச்சை அளித்தனர்.

    இதற்கான ஏற்பாடுகளை புதியபாதை அறக்கட்டளை பொறுப்பாளர்கள் செல்வேந்திரன், ரகோத்குமார் அன்பழகன் ஆகியோர் செய்திருந்தனர்.

    • தனியே நடந்து செல்லும் பெண்களிடம் நகை பறிப்பு சம்பவங்கள் நடை பெற்றது.
    • சிசிடிவி பதிவுகளின் அடிப்படையில் விசாரணை நடைபெற்றது.

    குத்தாலம்:

    மயிலாடுதுறை அருகே பூட்டிக்கிடக்கும் வீடுகளை குறிவைத்து நோட்டமிட்டு இரவு நேரங்களில் கொள்ளையிலும், சாலையில் தனியே நடந்து செல்லும் பெண்களிடம் செயின் பறிப்பு சம்பவங்களும் தொடந்து நடைபெற்று வந்தது.

    இது தொடர்பான புகார்கள் மாவட்ட குற்றபிரிவு போலீசாருக்கு சென்றது.

    இதைத் தொடர்ந்து தனிப்படை அமைக்கப்பட்டு குற்றவாளிகளை தேடி வந்தனர்.

    கொள்ளை சம்பவம் நடந்த பகுதியில் உள்ள சிசிடிவி பதிவுகளின் அடிப்படையில் விசாரணை நடைபெற்றது.

    மயிலாடுதுறை மாவட்டம் தனிப்படை போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் இளையராஜா தலைமையில் சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் ரமேஷ், தலைமை காவலர்கள் நரசிம்மபாரதி, அசோக் உள்ளிட்ட தனிப்படை போலீசார், மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் காவல் சரகத்துக்கு உட்பட்ட அஞ்சார்வார்த்தலை பகுதியில் கொள்ளையர்கள் சுற்றித்திரிவதாக கிடைத்த தகவலின்பேரில் அங்கு சென்று வாகன சோதனை மேற்கொண்டனர்.

    அப்போது, அவ்வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த கொள்ளையர்கள் இருவரும் போலீசாரைக் கண்டதும் மோட்டார் சை்கிகளை நிறுத்தாமல் வேகமாக சென்றனர்.

    அவர்களை தனிப்படை போலீசார் விரட்டிப்பிடித்து கைது செய்தனர்.

    விசாரணையில், அவர்கள் கள்ளக்குறிச்சி மாவட்டம் கொங்கராம்பாறை பகுதியை சேர்ந்த தர்மராஜ் (40) மற்றும் பெரம்பலூர் மாவட்டம் மேட்டூரை சேர்ந்த செல்வம் என்கிற முனியப்பிள்ளை என்பதும், இவர்கள் இருவரும் மயிலாடுதுறை மாவட்டத்தில் மறையூர் கிராமத்தில் விவசாயி ஒருவரின் பூட்டிய வீட்டை உடைத்து 2 சவரன் நகை மற்றும் ரூ.10,000/- ரொக்கம் திருடிய சம்பவத்திலும், பெரம்பூர் கிராமத்தில் சாலையில் சென்று கொண்டிருந்த பெண்ணிடம் 5 சவரன் தாலி சங்கிலி பறிப்பு உள்ளிட்ட பல்வேறு குற்றச்ச ம்பவங்களில் ஈடுபட்டதும் தெரியவந்தது.

    அவர்களி டமிருந்து 7 சவரன் நகைகளை பறிமுதல் செய்யப்பட்டது.

    இதையடுத்து தனிப்படை போலீசார் அவர்களை குத்தாலம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

    இவர்கள்மீது தமிழ்நாடு முழுவதும் பல்வேறு குற்ற வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

    • மயிலாடுதுறையில் நுகர்வோர் பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம் நடந்தது.
    • அதி வேகமாக செல்லும் வாகனத்தால் விபத்து ஏற்படுகிறது.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறையில் நுகர்வோர் பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது.

    கருத்தங்கத்திற்கு மாநில அமைப்பாளர் ராஜா தலைமை தாங்கினார்.

    மாநிலத் துணைச் செயலாளர் ராஜாராமன் தஞ்சை மாவட்ட அமைப்பாளர் ஜெயசங்கர் மாவட்ட ஆட்சி மன்ற குழு அமைப்பாளர் அன்வர் சுல்தான் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    செல்வமுத்து குமணன் வரவேற்றார்.

    சிறப்புரையாக பட்டிம ன்றம் நடுவர் சரவணன், முனைவர் தனவேலன், முருகானந்தம், மாவட்ட செயலாளர் கனகசபை, ஆகியோர் நுகர்வோர் பாதுகாப்பு விழிப்புணர்வை பற்றி விளக்கி கூறினர்.

    கருத்தரங்கில் இரு சக்கரம், நான்கு சக்கரம் வாகனங்களை செல்லும் சிலர் அதி வேகமாக வாகனங்களை இயக்கி சாலையில் செல்லும் பொது மக்கள் மாணவ மாணவிகள் மீது மோதி விபத்தை ஏற்படுத்துகின்றனர் அவர்கள் மீது வாகனத்தை பரிமுதல் செய்து சட்டரீதியான கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    பல மாவட்ட கிராமங்களில் உள்ள நெடுஞ்சாலைத்துறை சாலைகள், ஊராட்சி ஒன்றியத்திற்கு கட்டுப்பட்ட சாலைகள் பல இடங்களில் சேதம் அடைந்து உள்ளது.

    அதனை சீரமைத்து தர வேண்டும்.

    மயிலாடு நகராட்சி நகர பகுதிகளில் பாதாள சாக்கடை பல இடங்களில் உடைப்புகள் ஏற்பட்டு சாலைகளில் கழிவு நீர் தேங்கி கிடக்கிறது தொற்றுநோய் பரவி வரும் சூழ்நிலையில் சம்பந்தப்பட்ட நிர்வாகம் உடனடியாக சரி செய்து தர வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்ற ப்பட்டது.

    இந்நிகழ்ச்சியில் கலிய மூர்த்தி, சுவாமிநாதன், தர்மரா ஜன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

    நிகழ்ச்சியின் முடிவில் குருமூர்த்தி நன்றி கூறினார்.

    • திருக்குறள் பேரவை 9-ம் ஆண்டு விழா நடந்தது.
    • சிறந்த மாணவர்களுக்கு ஊக்கத்தொகையும் வழங்கப்பட்டது.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறையில் திருக்குறள் பேரவை 9-ம் ஆண்டு விழா நடைபெற்றது.

    இந்த விழாவிற்கு தலைவர் சிவசங்கரன் தலைமை தாங்கினார்.

    பேரவையின் பொருளாளர் ராமச்சந்திரன் முன்னிலை வகித்தனர்.

    செயலாளர் நல்லாசிரியர் செல்வகுமார் அனைவரையும் வரவேற்றார்.

    விழா தொடக்கத்தில் துறை சந்தானலெட்சுமி தமிழ் தாய் வாழ்த்தும், வழக்கறிஞர் கிருட்டிணமூர்த்தி வாழ்த்துரை வழங்கினர்.

    காரைக்கால் அரசு மகளிர் கல்லூரி உதவி பேராசிரியர் வண்டார்குழலி தொடக்க உரையாற்றினார்.

    வஃக்பு வாரிய தலைவரும், முன்னாள் எம்.பி.யும்மான அப்துல் ரகுமான் மகிழ்உரையும், தமிழ் மையம் நிறுவனர் ஜெகத்கஸ்பர் நிறைவு பேருரையாற்றினார்.

    அப்போது திருக்குறளை படித்து அதன்படி நடந்து கொண்டால் உலகத்தில் உள்ள அனைத்தையும் பெற்று மகிழ்ச்சியுடன் வாழலாம்.

    திருக்குறளின் பெருமைகளை புகழ்ந்து பேசினர்.

    பின்னர் உலக திருக்குறள் இயக்கம் சார்பில் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு திருக்குறள் புத்தகம் வழங்கப்பட்டது.

    பள்ளியில் படிக்கும் சிறந்த மாணவர்களுக்கு ஊக்கத்தொகையும் வழங்கினர்.

    இந்நிகழ்ச்சியில் தமிழ் சங்கத் தலைவர் ஜெனிபர் பவுல்ராஜ், பேரவை துணைத் தலைவர் செல்லத்துரை, தேசிய நல்லாசிரியர் மனோகரன், கொள்கை விளக்க செயலாளர்கள் குரளன்பன், ராமலிங்கம், உள்ளீட்ட ஏராளமான தமிழ் பற்றாளர்கள் ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் அரசு ஊழியர்கள் என திரளாக கலந்து கொண்டனர்.

    முடிவில் ஆசிரியர் முத்துக்கன்னியன் நன்றி கூறினார்.

    • கிடைக்கும் வருமானத்தை மட்டுமே வைத்து திருப்தியுடன் வாழ்ந்து வருவதாக தெரிவித்தார்.
    • பள்ளி மாணவர்களுக்காக மலிவு விலையில் தின்பண்டங்கள் விற்பனை செய்து வருகிறார்.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை மாவட்ட த்தை சேர்ந்தவர் தையல்நா யகி (வயது 60). இவர் ஆக்கூர் அரசு மேல்நிலை ப்பள்ளி வாசலில் சிறு குடிசையாக தனது கடையை தொடங்கி 30 வருடமாக நடத்தி வருகிறார்.

    ஆரம்பத்தில் 25 பைசாவுக்கு பஜ்ஜும், போண்டாவும் விற்பனை செய்துள்ளார்.

    தற்போது விண்ணை முட்டும் அளவு விலைவாசி உயர்ந்தாலும், பள்ளி மாணவர்களின் பசியை போக்கும் வகையில் ரூ.1-க்கு பஜ்ஜி போண்டாவும், 10 ரூபாய்க்கு தயிர் சாதம், புளி சாதம் எலுமிச்சை சாதமும் விற்பனை செய்து வருகிறார்.

    எப்படி இது சாத்தியம் என்று தையல்நாயகி இடம் கேட்டபோது, அரசு பள்ளியில் தற்போது ஏழை விவசாய குடும்பத்தைச் சேர்ந்த மாணவர்கள் மாணவிகள் மட்டுமே படித்து வருவதாகவும், படிக்கும் பிள்ளைகளுக்கு தினமும் வீட்டில் இரண்டு ரூபாய் முதல் பத்து ரூபாய் வரை மட்டுமே செலவுக்கு பணம் தருவார்கள்.

    மதிய நேரத்தில் அவர்கள் பெரும் செலவு செய்ய முடியாத நிலையில்லாப நோக்கம் ஏதும் இன்றி தின்பண்டங்களை விற்பனை செய்து வருவதாகவும் இதில் கிடைக்கும் வருமானம் மட்டுமே தனது வாழ்வாதாரமாக உள்ள நிலையில் இருப்பதைக் கொண்டு திருப்தியுடன் வாழ்ந்து வருவதாகவும் தெரிவித்தார்.

    இவரது கணவர் கலியபெரு மாள் சில வருடங்களுக்கு முன்பு இயற்கை எய்திய நிலையில் தனது ஒரே மகனுடன் வசித்து வருவதாகவும் வாழ்நாள் வரை யாருக்கும் பாரமில்லாமல் உழைத்து வருவதாகவும் அதே நேரம் தன்னால் முயன்ற சிறு உதவியாக படிக்கும் மாணவர்க ளுக்கு மலிவு விலையில் தின்ப ண்டங்க ளை விற்பனை செய்து வருவ தாகவும் நெகி ழ்ச்சியுடன் தெரிவித்தார்.

    • ஆந்திராவில் தினமும் ரூ.600 ஊதியத்துடன் மாதம் ரூ. 18,000.
    • பணி நாட்கள் உயர்த்தி அதிகரிக்கப்படும் என்றும் உறுதி அளிக்கப்பட்டுள்ளது.

    தரங்கம்பாடி:

    தமிழ்நாடு முழுவதும் சுமார் 16 ஆயிரம் ஊர்க்காவல் படையினர் உள்ளனர்.

    ஆண்கள் மட்டும ல்லாமல் பெண்களும் இணைந்து பணியாற்றி வருகிறார்கள்.

    தமிழ்நாடு காவல்துறை க்கு உதவியாக சாலை பாதுகாப்பு, போக்குவ ரத்து சீரமைப்பு, திருவிழாக்கள, அரசியல் கட்சிகளின் பொதுக் கூட்டங்கள், பேரிடர் காலங்களில் உதவிடுதல், பொது மக்களுக்கு விழிப்புணர்வுகளை ஏற்படுத்துதல் உள்ளிட்ட சேவையை ஆற்றுகின்றனர்.

    ஆனால் அவர்களுக்கு தமிழ்நாட்டில் பணி நாள் மற்றும் ஊதியம் மிக குறைவு.

    ஆந்திராவில் தினமும் ரூ.600 ஊதியத்துடன் மாதம் ரூ. 18,000, கேரளாவில் தினமும் ரூ.626 ஊதியத்துடன் ரூ. 18780, பாண்டிச்சேரியில்791 ஊதியத்துடன் ரூ.23730, கர்நாடகாவில் 400 ஊதியத்துடன் ரூ.12000பெறுகிறார்கள்.

    அவ்வாறு இருக்கின்ற பொழுது தமிழ்நாட்டில் மட்டும் வெறும் ஐந்து பணி நாட்களுடன், நாள் ஒன்றுக்கு ரூ.560 வீதம் மாதம் ரூ.2800 ஊதியம் என்பது மிகவும் குறைவானதாகும்.

    மேலும் அவர்களின் முழு கவனமும் இப்பணியைச் சார்ந்தே இருப்பதினால், அவர்களைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டியது அரசின் முழுமுதற் கடமையாக்கும்.

    குறிப்பாக தி.மு.க. தேர்தல் வாக்குறுதியில் கூட ஊர்க்காவல் படை யினரின் நலன் காக்கப்படும் என்றும்,அவர்களின் பணி நாட்கள் உயர்த்தி அதிகரிக்கப்படும் என்றும் உறுதி அளிக்கப்பட்டுள்ளது.

    எனவே அந்த வாக்குறுதியை காப்பாற்ற முதல்- அமைச்சர் நடவடிக்தகை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர் அப்பர்சுந்தரம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    ×